Thursday 20 January 2011

பாலக் பேட்டீஸ் கறி.

உடம்புல வேணுங்கிற ஹீமோக்ளோபின் இல்லைன்னா, அதாங்க.. இரும்புச்சத்து இல்லைன்னா டாக்டர்கள் மொதல்ல சொல்றது, 'ரொம்ப அனீமிக்கா இருக்கீங்க. நெறைய கீரைவகைகள் சாப்டுங்க, பேரீச்சம்பழம், வெல்லமெல்லாம் சாப்டுங்க'ன்னுதான். பேரீச்சம்பழமும் வெல்லமும் எப்படியாவது வயித்துக்குள்ள தள்ளிடலாம். இந்த கீரைவகைகள் இருக்கே.. சிலபேருக்கு இறங்கவே செய்யாது.பொரியல், மசியல்ன்னு சிலவெரைட்டிகள்தான் அதுல செய்யவும் முடியும். குழந்தைகளைப்பற்றி கேக்கவே வேணாம். கீரையை தட்டுல வெச்சாலே முகம் அஷ்டகோணலாகும்.  தெனமும் ஒரேமாதிரி செஞ்சா போரடிக்காதா என்ன!!.. கொஞ்சம் நடையை மாத்துங்க :-))) எங்கேயா??.. மார்க்கெட்டுக்குத்தான் ...

நல்லதா ரெண்டு கட்டு பசலைக்கீரை வாங்கிக்கோங்க. இதை ,  'பாலக்'ன்னும் சொல்லுவாங்க .ஒரு சின்னகட்டு வெந்தயக்கீரை வாங்கிக்கோங்க. (வீட்டுல ஒரு தொட்டியில வெந்தயத்தை கொஞ்சூண்டு தூவிவிட்டுட்டா முளைச்சுடும். தேவையானப்ப பறிச்சுக்கலாம்), அப்புறம் வீட்டுல வெங்காயம், தக்காளி,   இஞ்சி, கொத்தமல்லி இலையெல்லாம் இருக்குதுதானே.. இல்லைன்னா அதையும் வாங்கிடுங்க. அப்புறம் உருளைக்கிழங்கும் வேணும். எல்லாம் வாங்கியாச்சா..

ரைட்டு.. இப்ப.. ஒரு வெங்காயத்தை பொடியா நறுக்கிக்கோங்க. ஒரு தக்காளியும் பொடியா நறுக்கிக்கோங்க.  ஒரு ஸ்பூன் நறுக்குன இஞ்சியும் ரெடியா இருக்கட்டும். அப்புறம் பசலைக்கீரை, வெந்தயக்கீரையை நல்லா ஆய்ஞ்சு மண்ணெல்லாம் போக கழுவி, தண்ணீரை வடியவிடுங்க. அப்புறம் பசலைக்கீரையை ஒரு பாத்திரத்திலும், ரெண்டு உருளைக்கிழங்குகளை நறுக்கி, இன்னொரு பாத்திரத்திலும் போட்டு, குக்கரில் வெச்சு வேகவிடுங்க. கிழங்குகளை கழுவியதே போதும். மேற்கொண்டு தண்ணீர் சேர்க்கவேண்டாம். நல்லா மசியறவரை வெந்ததும் எடுத்து ஆறவையுங்க. அப்புறம் கீரையை நல்லா மசிச்சு வையுங்க. மிக்ஸியில் போட்டும் அரைச்சுக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை சூடாக்கி, அதில் கடுகு, சீரகம் போட்டு வெடிக்கவிடுங்க. இப்ப, வெங்காயம், இஞ்சியை போட்டு லேசா வதக்குங்க. கொஞ்சம் வாசனை வந்ததும், தக்காளியைப்போட்டு நல்லா கரையுறவரை வதக்குங்க. ஆச்சா!!.. இப்ப மசிச்ச கீரையை அதுல ஊத்துங்க. கீரை ரொம்ப கட்டியா இருந்தா அரைகப் தண்ணியும் சேத்துக்கலாம். இப்ப, அரைஸ்பூன் மிளகாய்த்தூளும், சிட்டிகை மஞ்சள்தூளும், ருசிக்கேற்ப உப்பும் போட்டு கிளறிவுடுங்க. அரைஸ்பூன் கரம்மசாலாவும் போட்டு கொதிக்கவிடுங்க. கொதிவந்ததும், அடுப்பை சிம்மில் ஐந்து நிமிடம் வெச்சாப்போதும். அவ்ளோதான்..

இப்ப, பேட்டீஸ் செய்யலாம்... பொடியாக நறுக்கப்பட்ட ஒரு வெங்காயம்(விக்கிற விலைக்கு ஒண்ணுபோதும் :-)), கால்கப் கொத்தமல்லி இலை,  நறுக்கிய வெந்தயக்கீரை,வெந்த உருளைக்கிழங்கு,அரை ஸ்பூன் நறுக்கிய இஞ்சி, அப்புறம் சிட்டிகை மஞ்சள்பொடி, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அதே அளவு உப்பு எல்லாத்தையும் கலந்து எலுமிச்சையளவு உருண்டைகளா பிடிச்சு, லேசா வடை மாதிரி தட்டிக்கோங்க. இந்த பேட்டீஸ்களை ரவையில் புரட்டி அடுக்கிவெச்சுக்கோங்க.

பேட்டீஸுக்கு தேவையானவை.

தயாரான பேட்டீஸ்.
அடுப்பில் லேசா குழிவான தோசைக்கல்லை(இதை அடைக்கல்லுன்னும் சொல்லுவாங்க)சூடாக்கி,  ரெண்டுமூணா பேட்டீஸ்களை அடுக்கி சுத்திலும் எண்ணெய்விட்டு, ரெண்டுபக்கமும் பொன்னிறமாகுறவரைக்கும் பொரிச்செடுங்க. டீப் ஃப்ரை செய்யவேணாம். பேட்டீஸ் உதிர்ந்து எண்ணெய் வேஸ்டாயிடும். shallow fryதான் இதுக்கு லாயக்கு.

பரிமாறும்வரைக்கும் ரெண்டும் தனித்தனியாத்தான் இருக்கணும். இல்லைன்னா, ரெண்டும் சேர்ந்து குழம்பிடும். சாப்பிடப்போகும்போது பேட்டீஸ்களை க்ரேவியில் போட்டாப்போதும். தனியா கிண்ணத்தில் பரிமாறுறதா இருந்தா பேட்டீஸைப்போட்டு, அது தலைல க்ரேவியை ஊத்திடுங்க.. சப்பாத்திக்கு அருமையான ஜோடி..
சப்ஜி ரெடி.
லிஸ்டை ஒருக்கா சரிபார்த்துக்கலாமா..
       
க்ரேவிக்கு:                                                                          :
பாலக்கீரை - ரெண்டு கட்டு 
ஒரு வெங்காயம்- நறுக்கியது
தக்காளி - 1 பொடியா நறுக்கியது.
இஞ்சி - நறுக்கியது அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள்- அரைடீஸ்பூன்,
மஞ்சள்தூள்- ஒரு சிட்டிகை
கரம்மசாலா- அரைடீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப.

பேட்டீஸுக்கு:
வெந்தயக்கீரை- ஒரு சிறுகட்டு
ஒரு வெங்காயம்- பொடியாக நறுக்கியது
கொத்துமல்லி இலை - கால்கப்
நறுக்கிய இஞ்சி - அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2.
ரவை- கொஞ்சூண்டு..
உப்பு- ருசிக்கேற்ப.

வெறுமனே பேட்டீஸ் மட்டும் செஞ்சுக்கிட்டு, அதை சாப்பாட்டுக்கு முன்னாடி ஸ்டார்ட்டராவும் வெச்சுக்கலாம்.



39 comments:

pudugaithendral said...

super செஞ்சிடலாம்.

துளசி கோபால் said...

செஞ்சு பார்த்துடலாமுன்னா தின்ன ஆள் இல்லை:(

வெங்காயம் விலை இப்போ கிலோ 35 தான் இங்கே.

sathishsangkavi.blogspot.com said...

படிக்கும் போதோ பசிக்குதுங்க...

எல் கே said...

இன்னிக்கு பாலக் தினமா ?? நிறைய இடங்களில் இதைப் பற்றியே இருக்கு

Chitra said...

Thank you for the recipe.

///வெறுமனே பேட்டீஸ் மட்டும் செஞ்சுக்கிட்டு, அதை சாப்பாட்டுக்கு முன்னாடி ஸ்டார்ட்டராவும் வெச்சுக்கலாம்.///

... sure. :-)

'பரிவை' சே.குமார் said...

படிக்கும் போதோ பசிக்குது.

raji said...

ஆஹா!பாத்தாலே சாப்டலாம்போல இருக்கே.நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்னு பெரியவங்க சொல்லிருக்காங்க
பெரியவங்க வார்த்தையை தட்டக்கூடாதுடா சாமி.அதனால இன்னிக்கே பண்ணி சாப்டுட வேண்டியதுதான்

raji said...

thanks for the recipe

Asiya Omar said...

அருமையான ரெசிப்பி, நன்றிமா.

அமுதா கிருஷ்ணா said...

செய்யணுமே.இப்படி அப்படி செய்து தானே பசங்களை ஏமாத்தனும்.

ADHI VENKAT said...

இது வித்தியாசமா இருக்கே. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.

ஆமினா said...

நல்ல ரெசிபி

Gayathri said...

கண்டிப்பா பண்ணிப்பார்க்றேன்...ஹீல்த்தி டிஷ் நன்றி

Angel said...

thanks a lot.
chappathikku pudhu side dish kidaichachu

குறையொன்றுமில்லை. said...

பரவால்லியே சமையலிலும் எக்ஸ்பர்ட்டா? கலக்குங்க.

Menaga Sathia said...

சூப்பர்ர்ர் அக்கா...செய்துடுவோம்...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

செஞ்சுடுங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

அண்ணா வந்தப்புறம் செஞ்சு கொடுங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

வீட்ல மேடம் கிட்ட செய்யச்சொல்லி சாப்டுங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

எல்லாத்துக்கும் ஒரு தினம் அனுசரிக்கிறப்ப பாலக்தினமும் இருந்துட்டுப்போட்டுமே :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

உங்க பார்ட்டி மெனுவில் இன்னொரு அயிட்டம் சேர்ந்தாச்சுன்னு சொல்லிக்கவா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

அந்த கடைசி படத்துல இருக்கிறது எல்லாமே உங்களுக்குத்தான். நல்லா சாப்டுங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜி,

சாப்டீங்களா... டேஸ்ட் பிடிச்சுருக்கும்ன்னு நினைக்கிறேன் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

ரங்க்ஸோட ஆபீசில் இதுக்கு ரொம்ப வரவேற்பு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமுதா,

கரெக்டுப்பா.. கீரைன்னாலே ஓடற என் பெண் இதை ரொம்பவே ரசிச்சு சாப்பிட்டா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

இப்போ மார்க்கெட்டில் பச்சைப்பசேல்ன்னு மலிஞ்சு கிடக்கு.. செஞ்சு குடுங்க.

தெய்வசுகந்தி said...

super recipe!! i'll try this.

கோமதி அரசு said...

நல்ல இருக்கும் போலேயே! செய்துப் பார்த்து விடுகிறேன்.

நன்றி அமைதிச்சாரல்.

Prabu Krishna said...

அப்படியே அனுப்பி வச்சா நல்லா இருக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க காயத்ரி,

கீரைல நிறைய சத்துகள் இருக்குப்பா.. ஆப்பிள் மட்டுமல்ல கீரையும் தினம் சாப்ட்டா உடம்புக்கு ரொம்ப நல்லது :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஏஞ்சலின்,

தினம் ஒரு வகையா செஞ்சாத்தான் சப்பாத்தி போரடிக்காது :-))

வரவுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

ஓரளவு சமைப்பேன்.. எக்ஸ்பர்டெல்லாம் கிடையாது :-))

நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மேனகா,

செஞ்சுட்டு சொல்லுங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தெய்வசுகந்தி,

ரொம்ப டேஸ்டான ரெசிப்பிங்க இது :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதி அரசு அம்மா,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பலேபிரபு,

இப்பவே அனுப்பறேன் :-))

சுந்தரா said...

வித்தியாசமான ரெசிபி

நன்றி சாரல்!

Jaleela Kamal said...

rompa nalla saththaana item iraNdum

LinkWithin

Related Posts with Thumbnails