Sunday, 3 October 2010
பூமிக்கு வந்த புதிய மனிதன்..எந்திரன்.
ரஜினி..ரஜினி..ரஜினி..... படம் முழுக்க இந்த மூன்றெழுத்து காந்தத்தின் கவர்ச்சியே நிறைந்திருக்கிறது. வசீ, சிட்டி, இன்னும் கட்டக்கடைசி க்ளைமாக்சின் சண்டைக்காட்சிகளில் வரும் ரோபோக்கள் வரை எங்கும் எதிலும் ரஜினியே...
ஐஸ்வர்யா ராய் இனிமேல் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே, இனிமேல் ரஜினிக்கு வயசாகிவிட்டது, எனவே அவர் வயசுக்குத்தகுந்த வேடங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்... டீல் ஓகேயா :-)))))).
புதிய மனிதன் பூமிக்கு வரும் முதல் காட்சியில் ரஜினியின் பிரம்மாண்டமான அறிமுகக்காட்சி இல்லை... பஞ்ச் டயலாக் இல்லை.. ஹீரோவா லட்சணமா, கதாநாயகியை காப்பாற்ற நூறுபேருடன், கைகால் உதைத்து சண்டை போடவில்லை.. சண்டை போடக்கிடைத்த ஒரு வாய்ப்பிலும், கலாபவன் மணியின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்.. இப்படி படத்தில் நிறைய இல்லை, இல்லைகள் இருப்பதால் சில சமயங்களில் இது ரஜினி படம்தானா என்று சந்தேகம் வந்துவிடுகிறது.. சிட்டி வந்து காப்பாற்றுகிறார் :-))
சிட்டியை பார்க்கும்போது வருங்காலத்தில் நிஜமாகவே இப்படிப்பட்ட ரோபோக்கள் உருவானால் எப்படியிருக்கும் என்ற பயங்கலந்த ஆர்வம் தோன்றுகிறது.. மாமூல் வெட்டுவது என்றால் என்னவென்று செய்துகாட்டியிருப்பது அட.. அட.. அட!! போட வைக்கிறதென்றால், ஐஸ்வர்யாவின் டாய்ஃப்ரெண்டாக அறிமுகமாகி, பாய்ஃப்ரெண்டாக ஆசைப்படும் கட்டம் அழகு. பர்த்டே பார்ட்டிக்குபோக தயாராகும்போது சிட்டியிடம் தென்படும் ஆர்வமும், தன்னை அலங்கரித்துக்கொள்வதில் காட்டும் ஆசையும், அதனால் வசீகரனிடம் உருவாகும் பொஸஸிவ்னெஸ்ஸும்.. படம் இப்படித்தான் போகப்போகிறது என்று லேசாக கோடிகாட்டி விடுகிறது. அதையே கடைசிவரை நகர்த்திச்சென்றிருப்பது இயக்குனரின் திறமைக்குச்சான்று.
ரோபோக்களுக்கும், மனிதனுக்கும் உள்ள வேற்றுமையே ஆறாம் அறிவான பகுத்தறிவுதான். அது இருந்தால், மனிதனுக்குண்டான உணர்ச்சிக்கலவையாக ஒரு இயந்திரம் இருந்தால் என்னவாகும் என்பதுதான் படத்தின் கதை. ஆனாலும் அழகான ஐஸ்வர்யாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு, சிட்டி என்னும் இயந்திரத்தை மனிதனாக்க, ரஜினி முயற்சித்திருக்க வேண்டாம்.. தன் வினை தன்னையே சுட்டுவிடுகிறது :-))))
1989-ல் அஜ்னபி என்ற சீரியலில் பார்த்ததுபோலவே இப்பவும் டேனி டெங்க் சோ பா இருக்கிறார்... என்ன!! கொஞ்சம் வயசாகிவிட்டது அவ்வளவுதான். மற்றபடி குறை சொல்ல முடியாத நடிப்பு. ரோபோ பிரசவம் பார்த்ததை சிலாகித்துப்பேசிக்கொண்டிருக்கும் ரஜினியிடம் பேசிக்கொண்டே, 'இனிமேல்தான் எல்லாமே ஆரம்பமாகப்போகிறது' என்று போகிற போக்கில் எச்சரித்தாலும், அந்த ஆரம்பத்துக்கு வித்திட்டவர் அவர்தானே.. வழக்கமான வில்லன்களைப்போலவே அழிவுஆயுதங்களை தயாரித்து, வித்தியாசமாக பாதிப்படத்தில் மண்டையைப்போடுகிறார்.
சந்தானமும், கருணாசும்... சிட்டியை ஒவ்வொரு முறையும் கலாய்த்து, ரஜினியிடம் திட்டுவாங்குவதைத்தவிர உருப்படியாக வேறொன்றும் செய்யவில்லை. அந்தக்குறை சிட்டி செய்யும் கலாட்டாக்களால் மறைந்துவிடுகிறது. சைக்கிள்செயின் மாலையணிந்து அவர் துர்க்காதேவியாக அவதாரமெடுக்குமிடத்தில், தமிழ்நாடாக இருந்திருந்தால் தியேட்டர் அதிர்ந்திருக்கும்.. நண்பனாக இருந்து, காதலுக்காக எதிரியாக மாறி க்ளைமாக்ஸில் க்ராபிக்ஸ் துணையுடன், தன்னைப்படைத்தவனுக்கெதிராக ஆடும் அதிரடி ஆட்டமும், அதை முறியடிக்க சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று, அதன் போனிடெயிலைப்பிடித்து உலுக்கும் ரஜினியுமாக எங்கெங்கு காணினும் ரஜினியடா.. (சண்டையின் நீளத்தையும், சத்தத்தையும் கொஞ்சம் குறைச்சிருந்தா இன்னும் ரசித்திருக்கலாம் :-)))). தன்னைத்தானே டிஸ்மேண்டில் செய்து கொள்ளும் காட்சி சூப்பர்.
பொதுவா, தமிழ்ப்பட ஹீரோயின்களுக்கு, படத்தில் முக்கியத்துவம் இருக்காது. ஆனா,.. இந்தப்படத்தில், ஹீரோவை விட ஐஸ்வர்யாவுக்கே முக்கியத்துவம் அதிகம்.. சந்தேகமா இருந்தா, கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க.. ஐஸ்வர்யா மேலுள்ள காதலால்தானே சிட்டி, வசீகரனுக்கெதிராக திரும்புகிறான். படமே நகருது.. இல்லைன்னா ரோபோ பிரசவம் பார்த்த கையோட, டேனியிடம் போய் 'நீ நல்ல ரோபோதான்' அப்படீன்னு சர்ட்டிபிகேட் வாங்கிட்டு இந்தியப்படையில் இல்ல போயிசேர்ந்திருக்கும் :-)))
டிஸ்கி : பாடல்களுக்கும், ஏ. ஆர். ரஹ்மானின் இசைக்கும், ஐஸ்வர்யா மற்றும் ரஜினியின் டான்சை பார்த்ததுக்கும், மற்றும் க்ளைமாக்ஸ் சண்டைக்குமே கொடுத்தகாசு செரிச்சுப்போச்சு. அதால இன்னொருக்கா எந்திரனை தமிழில் பார்க்கப்போறேன். ஏன்னா.. நேத்து பாத்துட்டு வந்தது இந்தி வெர்ஷன். என்ன பண்றது!! தமிழ்ல பார்க்கணும்ன்னா நவிமும்பையில் இருக்கும் வாஷிக்கு போகணும். எப்படியோ ரஜினி படத்தை முதல் நாளே பார்த்தாச்சு :-))
Subscribe to:
Post Comments (Atom)
37 comments:
//டாய்ஃப்ரெண்டாக அறிமுகமாகி, பாய்ஃப்ரெண்டாக //
super...
ரோபோட் பார்த்த ஹிந்தி மக்கள் டாக் எப்படி சாரல் மேடம்?
காத்திருக்கவும் எனது பதிவிற்க்கு
நல்லாயிருக்குங்க விமர்சனம்!
எனது கருத்தை பார்க்கவும்
ரோபோ ஃபில்ம் கே பாரே மே ஆப் கா விஸ்லேஷண் பஹூத் அச்சா ஹை! ஜல்தி ஹீ ’எந்திரன்’ பீ தேக் கர் ஜரூர் லிக்கியே! My hindi is doing very well. :-)
டீல் ஓகே இல்லை.. நல்ல விமர்சனம்..
அட இது எப்பத்துலேருந்து...பாருங்கப்பா...
எந்திரன் மக்களை என்னபாடுபடுத்துதுன்னு..:))
சாரல்....டீல் OK.பேசும்போது அட....ரஜனி படமா எனக்குப் பிடிக்காதுன்னு சொன்னாலும் அவர் படம் வந்ததும் ஒரு பரபரப்பு.
இதுதான் அவரது சக்தி !
விமர்சனம் சூப்பர்.
Super Review...........
Enthiran on its way to break all INDIAN BOX OFFICE Records....
நீங்க வேற வில்லன் ரஜினி நடக்கற் நடைக்கே கொடுத்த காசு தீர்ந்து போச்சுங்க
நல்லாருக்கா...இல்லையா?
நான் இன்னும் பாக்கவில்லை. தோணவுமில்லை.
ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து எரிச்சலாக வருகிறது. ‘கல்யாணத்துக்கு வராதீர்கள்’ என்றதுக்கு படத்தை பஹிஷ்கரித்திருக்க வேண்டாமா?
என்னமோ போங்க!!!
Akka padam unaku pidichiruka,ooops it was a nightmare for me,i didnt expect a video game movie frm shankar and the movie is turning out to be biggest flop.
வித்தியாசமான பகிர்வு படங்களின்றி.
வாங்க வசந்த்,
பார்த்தவரையில் ரெஸ்பான்ஸ் நல்லாயிருக்கு.மல்டிப்ளெக்ஸ்களில் விசில், கைதட்டல், கமெண்ட் அடித்தல் போன்ற ஆரவாரங்கள் இருக்காது. ஆனா, இந்தப்படத்தில், அதுவும் சிட்டி வரும் காட்சிகளை மக்கள் நல்லாவே ரசிக்கிறாங்க.
பொதுவா மும்பையில் நம்மூர் படங்களை அவ்வளவு ஓடவிடமாட்டாங்க. ஆனா இப்ப அமிதாப் பச்சனின் மருமகள் இதில் நடிச்சிருக்கிறதால கை வைக்க யோசிக்கிறாங்க போலிருக்கு....
நன்றி.
வாங்க எல்.கே,
உங்க பதிவை படிச்சிட்டேன்..
நன்றி.
வாங்க ராமலஷ்மி,
நன்றிங்க..
வாங்க சேட்டைக்காரன்,
ஆப்கா ஹிந்தி தோ, ஏக்தம் டக்காடக்..:-)))).தமிழ் எந்திரன் தேக்னே கேலியே மோக்கா நஹி மில்ரஹா ஹை :-))))
ஷுக்ரியா...
வாங்க அஹமது,
ஐஸ் இன்னும் கொஞ்ச நாளுக்காவது நாயகியா நடிக்கட்டுமேங்கிறீங்களா :-)
வரவுக்கு நன்றி.
வாங்க பிரதாப்,
அதான் ரஜினி என்னும் காந்தத்தின் சக்தி :-)))
நன்றி.
வாங்க ஹேமா,
உங்களுக்கு டீல் ஓகேயா.. ரைட்!!. அப்ப அடுத்த படத்துல ரஜினிக்கு அக்காவாகவோ, அண்ணியாகவோ நடிக்கும் யோகம் சீக்கிரமே ஐஸ்க்கு கிடைக்கட்டும் :-))
நன்றி.
வாங்க ஈரோடு தங்கதுரை,
நம்ம மக்கள் பொது ஊடகங்களில் வர ஆரம்பித்திருப்பது, உண்மையிலேயே பெருமையா இருக்கு. வரேன் உங்க தளத்துக்கு..
வருகைக்க் நன்றி.
வாங்க ஆசியா,
உங்க விமர்சனமும் படிச்சேன். கடைசியில கொடுத்திருந்த புள்ளிவிவரக்கணக்கு சூப்பருங்கோ..
நன்றி.
வாங்க கோபி,
நிச்சயமாக நீங்க சொன்னது பலிக்கும் :-))
நன்றி.
வாங்க அருண்பிரசாத்,
இந்தப்படத்தை பொறுத்தவரை அவர் கதாநாயகனாக வந்ததைவிட வில்லனாக வரும்போதுதான் தூள்கிளப்புகிறார்..
நன்றி.
விமர்சனம் அருமை .தங்களது பகிர்வை எனது ப்ளாகில் பகிர்ந்துள்ளேன்.நன்றி.
ஐஸ்வர்யா கிழவி தான்... ரஜிநி௦கு வயசாகாது... இது தான் உண்மை... என்ன பெரிய டீல்????
:) meeee the first..
வாங்க நானானிம்மா,
நீங்க சொன்னதுமாதிரி, தேவையற்ற ஆர்ப்பாட்டம் தவிர்க்கப்பட வேண்டியதுதான்.
நன்றி.
தில்லை,
இங்கே படம் சூப்பர்டூப்பர் ஹிட்.. பசங்களோட காலேஜ் ஃப்ரெண்ட்சுக்கும் ரொம்ப பிடிச்சிருக்குது.
கடைசியில் வரும் நீளமான க்ளைமாக்ஸில் கொஞ்சம் கத்திரி வெச்சிருந்தா வீடியோகேம் உணர்வை தவிர்த்திருக்கலாம்.
வரவுக்கு நன்றி.
வாங்க சசிகுமார்,
சும்மா,.. ஒரு மாறுதலுக்காக ;-))))
நன்றி.
வாங்க ஸ்வேதாக்கா,
உங்க அழைப்புக்கு நன்றிங்க.
வாங்க ஜிஜி,
உங்க ப்ளாக்குக்கு வரமுடியாம மால்வேர் விரட்டுதுப்பா :-((
பகிர்ந்ததுக்கும், வரவுக்கும் நன்றி.
வாங்க ப்ரேம்,
உண்மையை ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. (அதான் டீலே :-))
வாங்க சிவா,
youuuuu the முப்பதேய்ய் :-))
அடுத்ததடவை சீக்கிரம் வாங்க..
நல்ல விமரிசனம் கொடுத்திருக்கிறீர்கள் சாரல். ரஜினியின் வசீகரம் இருப்பது என்னவோ உண்மைதான்.
சத்தத்துக்குப் பயந்து நாங்கள் போகவில்லை. பெண்ணின் சிநேகிதி பார்த்துவிட்டு மிகவும் பிடித்ததாகத் தொலைபேசியில் சொன்னாள்.சூப்பர் ஹிட்தான்:)
வாங்க வல்லிம்மா,
சத்தம் சில தியேட்டர்களைப்பொறுத்து மாறுபடுது.. இங்கே சினிமேக்ஸில் சவுண்ட் சிஸ்டம் அருமையாயிருக்கும். அதனால பெருசா தலைவலி வரலை :-))
தமிழிலும் பார்த்தேன்.. எனக்கென்னவோ இந்தி வெர்ஷன் பிடிச்சிருக்கு :-)))
நன்றிம்மா.
Post a Comment