Friday, 22 October 2010

சுட்டாலும் ருசி தரும்...

"கொழு கொழுன்னு நல்ல கலரோட, எவ்ளோ அழகா இருந்திச்சு தெரியுமா?"

"அப்றம்??"

"வீட்டுக்கு கொண்டுவந்து, தீயில வாட்டி, தோலை உரிச்சுட்டேன்"

"ஐயய்யோ!!!.. ஏன்ப்பா?"

"அப்பத்தானே கறி பண்ணமுடியும்"

"என்னாது!!! கறியா?"

"ஆமா.. சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்ப்பா. வீட்டுக்கு கொண்டு வந்ததும், மேல லேசா எண்ணையை தடவி, தணல்ல காட்டி.. நல்லா வாட்டி எடுக்கணும்"

" உசிரோடவா?"

"மார்க்கெட்டுக்கு வந்தப்புறம், ஏது உசிர் இருக்கப்போவுது..வாட்டி எடுத்ததை ரெண்டு நிமிஷம் ஆற வெச்சு, தோலை உரிச்செடுத்துடணும். அப்றம் கையாலயே சின்னச்சின்ன துண்டுகளா பிச்சு வெச்சுக்கணும்"

"எனக்கு அழுகையா வருது"

"வெங்காயம் வெட்டும்போது அழுகை வரத்தான் செய்யும் :-)). ரெண்டு வெங்காயத்தை பொடிப்பொடியா நறுக்கி வெச்சுக்கணும். நாலஞ்சு பல் பூண்டையும், நாலு பச்சைமிளகாயையும், ஒரு இஞ்ச் இஞ்சியையும் சேர்த்து அரைச்சு வெச்சுக்கணும். அப்றம், அடுப்புல எண்ணையை ஊத்தி சூடாக்கணும்"

"அடுத்தது கும்பிபாகமா?"

"கும்பிபாகமோ, நளபாகமோ!!..ஏதோ ஒரு சுயம்பாகம்..சூடாக்கின எண்ணையில ஒரு ஸ்பூன் கடுகையும், ஒரு ஸ்பூன் சீரகத்தையும் போட்டு லெட்சுமி வெடியாட்டம் வெடிக்க விடணும். அதுல வெங்காயத்தையும் போட்டு  பொன் முறுகலா வதக்கணும். அதுல இஞ்சி,பூண்டு,மிளகாய் பேஸ்டை போட்டு பச்சைவாசனை போகிறவரைக்கும் வதக்கணும். அப்றம் பிச்சு வெச்சிருக்கிற கத்தரிக்காயை.."

"என்னாது!! இவ்ளோ நேரம் கத்தரிக்காயை சமைக்கிறதைப்பத்தியா சொன்னே???"

"ஆமா.. வேறென்ன நெனைச்சே.. ஐப்பசி மாசத்துல கொலைப்பசி நேரத்துல, குறிப்பு சொன்னா,..என்ன சமையல்ன்னுகூடவா கேட்டுக்க மாட்டே??.. சரி சரி,.. அப்றம், எங்கே விட்டேன்..."

"அடுப்பிலே கத்திரிக்காயை விட்டே"

"ஆங்.. கத்தரிக்காயை போட்டு லேசா வதக்கி, சிட்டிகை மஞ்சள்தூளும், ருசிக்கேற்ப உப்பும் போட்டு, மூடிபோட்டு அஞ்சு நிமிஷம் வெச்சுட்டு அப்றம் தட்டு போட்டுடவேண்டியதுதான்"

"தட்டு எதுக்கு?.. அதான் மூடி போட்டிருக்கே!!"

" நாஞ்சொல்ற தட்டு, சாப்பாட்டுத்தட்டு. சூடா கத்தரிக்காய் கறியும், சப்பாத்தியும், கொஞ்சூண்டு பருப்பு சாதமும் என்ன அருமையான காம்பினேஷன் தெரியுமா.. இத சாப்டா.."

"நல்லா ஆரோக்கியமா இருக்கலாம்.. அதானே?"

"ஆமா.. அப்டியே ஒரு இடுகையும் தேத்தலாம்.. ஹி..ஹி..ஹி."

"யம்மாடி!!.. இந்த கலவரத்துல, தேவையான பொருட்கள் என்னன்னு கேக்க மறந்துட்டேன்.. லிஸ்ட் போட்டுக்கொடு, சந்தைக்கு போயி வாங்கியாரேன். நாளைக்கு எங்கூட்லயும் செய்யப்போறேன்ல்ல"

"அப்படியா!!,சரி.. சொல்றேன்"

வேணும்கிற பொருட்கள்:
தேங்காய் சைஸ்ல இருக்கிற கத்தரிக்காய் -1
பெரிய வெங்காயம் - 2
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
எண்ணைய் -கொஞ்சூண்டு
உப்பு - ருசிக்கேற்ப
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை.
பூண்டு - நாலஞ்சு பற்கள்
இஞ்சி - 1இஞ்ச் அளவு

டிஸ்கி: நான் வீட்ல சுட்டு வெச்சிருந்த கத்திரிக்காய் படம் காணாம போனதுனால கூகிளாண்டவர் கிட்டேர்ந்து சுட்டுட்டு வந்துட்டேன். கத்தரிக்காய் இங்கே இருக்கு. எடுத்துட்டுப்போயி சமைப்பீங்களாம்.. சரியா :-))))))
76 comments:

asiya omar said...

சுட்ட கத்திரிக்காய் என்றால் ருசியை சொல்லவும் வேண்டுமோ! அப்படியே எனக்கும் ஒரூ தட்டு போடுங்க.

அன்னு said...

kathirikkaai kaanamapochu asri, kuttu aavathu irukkaa illiyaa? azaga oru pathivai thethittiinga?? :)

நசரேயன் said...

//நான் வீட்ல சுட்டு வெச்சிருந்த கத்திரிக்காய் படம் காணாம போனதுனால //

சி.பி.ஐ விசாரணை வைக்கணுமா ?

Chitra said...

சுட்ட கத்திரிக்காய் ரெசிபி மற்றும் "சுட்ட" கத்திரிக்காய் படம் - எல்லாம் நல்லா இருக்குதுங்க.

DrPKandaswamyPhD said...

ஜோர். கேஸ் அடுப்பிலேயே சுட்டுட்டீங்களா?

LK said...

இப்படிக் கூட சமயல் குறிப்பு சொல்ல முடியுமா

எஸ்.கே said...

கதை கலந்த சமையல் குறிப்பாக! நல்லா இருந்ததுங்க!

துளசி கோபால் said...

ஜூப்பரு:-))))))))))))))))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த கத்திரிக்காயை எடுத்துட்டு போனா ரெசிப்பி வேணா ப்ளாக்ல எழுதலாம்..சமைச்சு சாப்பிடமுடியாது..நாங்க
மார்க்கெட்ல வாங்கியே சமைச்சிக்கிறோம்..
:))

அருண் பிரசாத் said...

நீங்க தந்த கத்திரிகாய வெச்சி கறி செஞ்சாச்சு இந்தாங்க எடுத்துக்கோங்க....

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல ரைட்டிங் ஸ்டைல்!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நல்ல ரெசிபி, அதோட நீங்க சொன்ன விதம் சூப்பருங்க......

வெங்கட் நாகராஜ் said...

”பேங்கன் கா பர்த்தா” [Bangon Ka Bartha] - துண்டு போட்டு வதக்கி பரிமாறாமல், கொஞ்சம் மைய அரைத்த மாதிரி செய்யும் இந்த டிஷ் இங்கே மிகவும் பாப்புலர், எனக்கும் ரொம்பப் பிடித்ததும் கூட. சொன்ன விதமும் பிடித்தது. நன்றி.

நாஞ்சில் பிரதாப் said...

எனக்கு அழுவாச்சி வருது... இப்படி உலகத்தரத்துல ஒரு பதிவு உங்களால எப்படிங்க போட முடியுது....அடுத்த வாட்டி உருளைக்கிழங்க பத்தி போடுங்க... காத்திருக்கிறேன்:))

சந்தனமுல்லை said...

:-) ஹ்ம்ம் மீன் - னு ஆசையா இருந்தேன்!

சசிகுமார் said...

இவ்ளோ காமெடியா யாரும் சமையல் டிப்ஸ் சொல்லி தரல சூப்பர் நண்பா

கோவை2தில்லி said...

அருமையா இருந்தது கத்திரிக்காய். உடன் இரண்டு தக்காளியையும் அரைத்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம்மசாலா சேர்த்து கொதிக்க விட்டால் அது தான் வட இந்திய “பேங்கன் கி பர்த்தா” ரெசிபி.

kavisiva said...

சமையல் குறிப்பை இப்படியும் சொல்லலாமா?! ரசித்தேன் இன்னும் ருசிக்கவில்லை :)

Mrs.Menagasathia said...

ஆஹா சமையலை அழகா நகைச்சுவையோடு சொல்லிருக்கிங்க,சூப்பர்ர் அக்கா...

வல்லிசிம்ஹன் said...

ஆ!!கத்திரிக்காய்.
சுடுவதற்குக் கரியடுப்பு இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும். காஸ் பர்னர்ல சிலசமயம் ஒட்டிக் கொண்டுவிடும்:)
அராஜகமா பதிவை ஆரம்பிச்சுட்டு அழகாத் தட்டில பரிமாறிட்டீங்க சாரல். நல்லா இருந்திச்சு.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆசியா,

மொதல் பந்தியிலேயே தட்டுபோட்டு பரிமாறிவெச்சாச்சு :-)))))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க அன்னு,

சுட்ட கத்தரிக்காய் ரெசிப்பியின் எல்லா படங்களும் கேமராவிலேர்ந்து எப்டியோ டிலீட் ஆகிடுச்சு போலிருக்கு.. கறியைப்போலவே படங்களும் மிச்சமாகலை :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க நசரேயன்,

பத்தாது!!.. ஸ்காட்லண்ட் யார்ட் கிட்டயும் ரிப்போர்ட் செய்யப்போறேன் :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க சித்ரா,

நன்றிங்க :-))))))

அமைதிச்சாரல் said...

வாங்க டாக்டர் ஐயா,

தணல்ல சுட்டா இன்னும் வாசனையா இருக்கும்.ஆனாலும்,கேஸ் அடுப்பிலயும், நல்லாவே சுட முடியுது..

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

//இப்படிக் கூட சமயல் குறிப்பு சொல்ல முடியுமா//

யுமே.. :-)))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க எஸ்.கே,

நல்லாருந்ததுன்னு சொன்னதுக்கு ஒரு டாங்க்ஸ் :-))

அமைதிச்சாரல் said...

வாங்க துளசியக்கா,

நன்றிங்க :-))

அமைதிச்சாரல் said...

வாங்க முத்துலெட்சுமி,

உங்கூர்ல இன்னும் குண்டுகுண்டா, அழகா கிடைக்குமே..

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க அருண்பிரசாத்,

அட!!.. அதுக்குள்ள சமையலையே முடிச்சிட்டீங்களா?. வெரிகுட் :-))))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வசந்த்,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க நி.சி.முத்து,

கத்துக்குடுக்கிற விதத்துலயே,.. சமையல் செய்ற ஆசை புள்ளைங்களுக்கு வரணும். என்ன நாஞ்சொல்றது :-)))))

நன்றி.

மாதேவி said...

அசத்தல்.

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

இதையும் இங்கே 'பைங்கன் கா பர்த்தா'
ன்னுதான் சொல்லுவாங்க :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க நாஞ்சிலு,

யாஹ்ஹூ.. வசிஷ்டர் வாயாலயே ஒலகத்தர சர்ட்டிஃபிகேட் கிடைச்சுடுச்சே.. :-))))))))))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க முல்லை,

யூ மீன்.. சுட்டமீன்??. நோ..நோ.. இது சுட்ட கத்தரிக்காய். ஐ மீன் இட் :-)))))

அமைதிச்சாரல் said...

வாங்க சசிகுமார்,

நன்றிங்க :-)))))

ஹுஸைனம்மா said...

நானும் மீனுன்னு ஆசைஆசையா (ஆச்சர்யமாவும்) வாசிச்சுட்டு வந்தேன்... சே...ஏமாத்திட்டீங்களே...

மனோ சாமிநாதன் said...

கதை போல சமையல் குறிப்பை சொன்ன விதம் அருமை! கதையும் சுவை!
சமையல் குறிப்பும் சுவை!!

Raja said...

எனக்கு ரெம்ப பிடிச்ச உணவு இது.
சிறு வயதில் இதை கத்தரிக்காய் கி(ச)ட்னி
என சொல்வேனாம்.

அஹமது இர்ஷாத் said...

different Post..

dineshkumar said...

கத்தரிக்கா கையாண்டவிதம் சூப்பர்

ஜிஜி said...

வித்தியாசமான சமையல் குறிப்போட சுட்ட கத்திரிக்காய் சூப்பர்.

ஈரோடு தங்கதுரை said...

அருமையான சமையல் குறிப்பு நண்பரே ... ! வாழ்த்துக்கள்.. !

ஜெயந்தி said...

புதுமையான சமையல் நிகழ்ச்சி. சொன்ன விதம் அருமை.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நல்ல ரெசிபி.. கூகுள்ளேர்ந்து சுட்ட கத்திரிக்காயும் நல்லாத்தான் இருக்கு ராஜி

அப்பாவி தங்கமணி said...

//நாஞ்சொல்ற தட்டு, சாப்பாட்டுத்தட்டு. சூடா கத்தரிக்காய் கறியும், சப்பாத்தியும், கொஞ்சூண்டு பருப்பு சாதமும் என்ன அருமையான காம்பினேஷன் தெரியுமா.. இத சாப்டா..//
பசி நேரத்துல காஞ்ச ரொட்டிய வெச்சுட்டு இதை படிச்சா stomach fire ஆகுது... உங்கள..........கர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர்....

//என்னாது!! இவ்ளோ நேரம் கத்தரிக்காயை சமைக்கிறதைப்பத்தியா சொன்னே???"//
விடிய விடிய என் ப்ளாக் படிச்சு இட்லிக்கும் தங்கமணிக்கும் அத்தன ரெம்ப பொருத்தமான்னு கேட்ட கதையா? ஹும்...

ஹா ஹா... வித்தியாசமான சமையல் குறிப்பு... சூப்பர் அக்கா...

அமைதிச்சாரல் said...

வாங்க கோவை2தில்லி,

உங்க ரெசிப்பிக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க கவிசிவா,

ரசித்து,ருசித்து,புசித்து..அப்றம் உங்கள் தேனான கருத்துக்களை சொல்லுங்க :-))))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மேனகாசத்யா,

நன்றிங்க :-))

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

கரியடுப்புல செஞ்சா வாசனை இன்னும் தூக்கலா இருக்கும்தான்.காஸ் அடுப்பிலும் நல்லாவே வந்திச்சு :-)).

நன்றிம்மா.

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

உங்க ஏமாத்தத்தை, எப்பவாவது நிவர்த்தி செய்யமுடியுமான்னு பார்க்கிறேன் :-)))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மனோ சாமிநாதன்,

மிகவும் நன்றி :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜா,

கிட்னி பெயர்க்காரணம் தெரிஞ்சுக்கலாமா?? எங்ககிட்ட பகிர்ந்துக்கோங்களேன் :-)

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க அஹமது,

நன்றிப்பா..

அமைதிச்சாரல் said...

வாங்க தினேஷ்குமார்,

நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க ஜிஜி,

ரொம்ப நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க ஈரோடு தங்கதுரை,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஜெயந்தி,

ஒரேமாதிரி சமையல் பண்ணா, நமக்கே போரடிச்சுடும் இல்லியா.. அதான் இப்படி ;-)))))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தேனம்மை,

நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க அப்பாவி,

உங்க ப்ளாக் பக்கம் கூட்டிட்டு வந்ததால்தான் பிரச்சினையே.. இட்லி செஞ்ச தங்கமணி மாதிரியே முழிச்சுக்கிட்டு இருக்காங்க :-))))

நன்றி.

துளசி கோபால் said...

இதுக்குத்தான் இதையெல்லாம் படிக்கக்கூடாதுங்கறது. பாருங்க நேத்து காய்கறி வாங்கப்போனப்ப..... பெரிய கத்தரிக்காய் ஒன்னு என்னை அறியாமலேயே வாங்கி வந்துருக்கேன்!

போய்ச் சுடப்போறேன்.

அதுக்குத் தொட்டுக்க இட்லி செய்யணும்:-))))))

மனசுக்குள்ளே வந்து மணைபோட்டு உக்காந்துருக்குப்பா இந்தப் பதிவு.:-)

அமைதிச்சாரல் said...

வாங்க துளசியக்கா,

உங்க அன்புக்கு ரொம்ப நன்றி.

சப்பாத்தியோடவும் ஒரு நாள் சாப்டுப்பாருங்க.. சிம்மாசனமே போட்டு உக்காந்துக்கும் இந்த டிஷ் :-))))))))

Sriakila said...

//:-) ஹ்ம்ம் மீன் - னு ஆசையா இருந்தேன்!

//

நானும் அப்படித்தான் ஆசையா மோப்பம் பிடிச்சிக்கிட்டே வந்தேன்..

சந்திர வம்சம் said...

ம்ம்ம்! ஏஏஏஏவ்வ்வ்வ்வ்!

முகுந்த் அம்மா said...

இப்படி எல்லாம் கூட ஒரு சமையல் குறிப்பு எழுதலாம்னு போட்டு கலக்கீடீங்க. சூப்பர்.

அன்புடன் மலிக்கா said...

சுட்ட கத்திரிக்காய் . சுடச்சுட
காமெடியில் ஓர் சமையல்குறிப்புன்னு கலக்கிட்டீங்க.. சூப்பர் அமைதிசாரல். ம்ஹும் அதிரடிசாரல்..

அமைதிச்சாரல் said...

வாங்க அகிலா,

அடடா!! ஏமாந்தவங்கள்ல நீங்களும் ஒருத்தரா :-)))

நன்றிங்க.. வரவுக்கு.

அமைதிச்சாரல் said...

வாங்க சந்திரவம்சம்,

பலமான சாப்பாடு போலிருக்கு :-))))))

[ma]வரவுக்கு நன்றி[/ma]

அமைதிச்சாரல் said...

வாங்க முகுந்த் அம்மா,

[ma]வரவுக்கு நன்றி[/ma]

அமைதிச்சாரல் said...

வாங்க மலிக்கா,

[ma]நன்றிங்க :-))[/ma]

cheena (சீனா) said...

தூள் கெளப்பி இருக்கிங்க - ம்ம்ம்ம் - எங்க வூட்லயும் வப்போம் - சூப்ப்ரா இருக்கும் தெரியுமா ? - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

அமைதிச்சாரல் said...

வாங்க சீனா ஐயா,

கரெக்டான முறையில் செஞ்சா ருசியில் மற்ற எந்த காய்களைவிடவும் குறைஞ்சதில்லை கத்தரிக்காய் :-))

நன்றிங்க.

malar said...

நாங்களும் கத்தரிகாய் செய்திருக்கிறோம் .இந்த ஸ்லாங்க்ல செய்யல்ல ...சொன்ன விதம் ரசிக்கும்படியாக இருந்தது...

அமைதிச்சாரல் said...

வாங்க மலர்,

இந்த முறையிலும் செஞ்சு பாருங்க. ருசி ச்சும்மா அள்ளிட்டுப்போகும் :-)

LinkWithin

Related Posts with Thumbnails