குங்குமம் தோழியில் "கண்கள்" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக்கண்ணால் பார்த்து மகிழ்ந்த காட்சிகளை மூன்றாவது கண்ணான காமிராக்கண்ணால் படம் பிடித்துப் பத்திரப்படுத்தும் மகளிரை இந்தப் பகுதியில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்த மாதம் குங்குமம் தோழி இதழில் நான் எடுத்த படங்களில் சிலவற்றுடன் என்னுடைய பேட்டியும் வந்திருக்கிறது. உங்கள் அனைவருடனும் இந்த சந்தோஷமான நிகழ்வைப் பகிர்ந்து கொள்வதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி :-)). பேட்டியை வாசிக்கத் தோதாக ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனியாகவும் பகிர்ந்திருக்கிறேன்.
இந்த சந்தோஷமான நிகழ்வை குங்குமம் தோழி ஃபேஸ்புக்கிலும் அவர்களின் பக்கத்தில் பிரத்தியேகமான செய்தியாக வெளியிட்டது.
ஊக்குவித்து உற்சாகமளித்த குங்குமம் தோழிக்கு நன்றி.









