Wednesday, 1 December 2010

ஐயாம் ரிட்டர்ன்ஸ்...

வணக்கம்... ஹாய்... ஹலோ... நல்லாருக்கீங்களா?. சின்ன வெக்கேஷனா இருக்கும்ன்னுதான் நினைச்சேன்.. ஒரு லாங்ஹாலிடேயா ஆகிட்டுது.

அன்னிக்கு திடீர்ன்னு பயங்கரமா, புயல்மாதிரி காத்து வீச ஆரம்பிச்சுது.. தமிழ் நாட்டுல பயங்காட்டிக்கிட்டு இருந்த 'ஜல்' திசைமாறி இங்கே வீச ஆரம்பிச்ச மாதிரியானதொரு காத்து.. 'தடால்'ன்னு ஒரு சத்தத்தோட பால்கனியில இருந்த பூந்தொட்டி கீழேவிழுந்து உடையுது. போயி சுத்தம் பண்ணலாம்ன்னா கண்ணாடிக்கதவை திறக்கமுடியாம அந்தப்பக்கமிருந்து பயங்கரமான வேகத்தோட வீசுது. ஒரு வழியா ரெண்டுமணி நேரத்துக்கப்புறம் ஓய்ஞ்ச பேய்க்காத்து, இண்டர்னெட்டுக்கான ஒயர்களையெல்லாம் பிடுங்கிப்போட்டுட்டு போயிருந்தது.

ஒருவழியா நாலஞ்சு நாளா போன்பண்ணி, அவங்க உசிரை வாங்கினப்புறம் ஆட்கள் வந்து சரி செஞ்சுட்டுப்போனாங்க. இந்த இடைவெளியில கம்ப்யூட்டருக்கு காய்ச்சல் வந்துட்டது. நெட் கனெக்ஷன் இருக்குது.. ஆனா, இல்ல. அதாவது லாகின் செய்ய முடியலை. safe modeல் மட்டும்தான் வலைதிறக்குது. டாக்டர் கிட்ட கொண்டுபோனாத்தான் சரியாகும் போலிருக்கு.  ரெகுலரா வலைப்பக்கம் வரமுடியலை. சரி செஞ்சப்புறம் வழக்கமான அட்டெண்டென்ஸ் தொடரும்.

*************************

இந்ததடவை பிட்போட்டியில் முதல்முறையாக என்னுடைய பங்களிப்பு இரண்டாம் இடத்தை வென்றுள்ளது.. வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி..


*************************
இந்த இடுகையை ஞாபகமிருக்கா... சாக்லேட் என்றபெயரில் அல்வா கொடுப்பதைப்பத்தி எழுதியிருந்தேன்.. நாம கொடுத்தாலும் வாங்குறாங்களான்னு பரிசோதிச்சு பார்க்கணும்ன்னு ரொம்ப நாளா வாய்ப்பு தேடிக்கிட்டிருந்தேன். சோதனையா, பர்சிலிருந்து காசை எடுக்கிறப்ப அம்பது காசு நாணயமும் சேர்ந்து வந்துடும்.. பிறகென்ன?? சாக்லெட் கொடுக்க வாய்ப்பே இல்லாம இருந்திச்சு.

போனவாரம், ஷாப்பிங் போனப்ப ,  பில்லை மானிட்டரில் பார்த்ததுமே சாக்லெட்டை எடுத்து ரெடியா வெச்சுக்கிட்டேன். ரெண்டு ரூபா அம்பது காசு இருக்குமான்னு கேட்டப்ப, ரெண்டு ரூபாய் நாணயத்தையும், அம்பது காசுன்னு சொல்லி சாக்லெட்டையும் கொடுத்தேன். மறுபேச்சு பேசாம வாங்கிப்போட்டுக்கிட்டார் பணியாளர். ஹைய்யா!!, வெற்றி..

*************************

ஒரு நாள் மார்க்கெட்டுக்கு போயிட்டு வீட்டுக்கு வரும்போது, சுமைகள் கூடிப்போனதால் ஆட்டோவில் போயிடலாம்ன்னு தோணிச்சு. அங்கே நின்னுக்கிட்டிருந்த ஆட்டோக்காரர் கிட்ட, வாடகையை விசாரிச்சப்ப முப்பது ரூபாய் ஆகும்ன்னார். ஷாக்காயிட்டேன்..  "இங்கே, பக்கத்துல இருக்கிற இடத்துக்கு முப்பது ரூபாயா??.. அதுவுமில்லாம, வரும்போது இருபது ரூபாய்தானே கொடுத்தேன்"ன்னு கேட்டப்ப,

அமைதியா சொன்னாரு..."கூடை வெச்சிருக்கவங்களுக்கெல்லாம் முப்பது ரூபாய்தாங்க"

"என்னாது!!"

"நெசமாத்தாங்க.. பாக்கெட்டுகளை இங்கியே விட்டுட்டு வர்றதாயிருந்தா இருபது ரூபாய்க்கே சவாரி வரும்"

(அப்ப, லக்கேஜு கிட்ட அட்ரஸை சொல்லிட்டா, தானாவே வீட்டுக்கு நடந்து வந்துடுமா......... டவுட்ட்ட்ட்ட்டு) , -- எனக்குத்தான்.

போய்ய்ய்ய்யான்னுட்டு அடுத்தாப்ல நின்னுட்டிருந்த ஆட்டோவுல இருபது ரூபாய் கொடுத்து வீடு வந்து சேர்ந்தோம். ஆட்டோவுல வரும்போது நினைச்சு நினைச்சு ஒரே சிரி....  நாங்க பேசிக்கிட்டதை, மொழிபுரியாததால மௌனமா கேட்டுக்கிட்டிருந்த அம்மாகிட்ட வீட்டுக்கு வந்ததும் நடந்ததை சொன்னேன். பசங்களும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. என்னோட இருபத்தோரு வருஷ மும்பை வாழ்க்கையில், இதுவரை லக்கேஜுக்கு பணம்கேட்ட ஆட்டோ ட்ரைவரை பார்த்ததேயில்லை. குறையை தீர்த்துவெச்ச இறைவனுக்கு நன்றி :-)







51 comments:

Chitra said...

welcome!

Mukil said...

பிட் புகைப்பட போட்டியில் இரண்டாம் இடம் பெற்றமைக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்! :-))

அப்போ, 10 ரூபா தர்றேன் பாக்கெட்ட மட்டும் ஏத்திக்க ன்னு சொல்ல வேண்டியதுதானே... ஆனா, நாங்க நடக்கற வேகத்துக்குத்தான் வண்டி ஓட்டனும்னு சொல்லிடுங்க... :-)

Mukil said...

உங்க தலைப்புல இலக்கணபிழை இருக்குதோ ன்னு தோணுது...

ஹேமா said...

வாங்கோ வாங்கோ....நான் சுகம்.நீங்க சுகம்தானே !

திடீர்ன்னு காணாமப் போனதுக்கு இத்தனை சாட்டுக்களா சாரல் !

சரி சரி....கூடை வச்சிருந்தா
30 ரூபாதான் !

Anonymous said...

வாங்க வாங்க.. :)
//ஹைய்யா!!, வெற்றி.//
சக்சஸ்.. ரொம்ப நாள் காத்திருப்பு இல்ல ;)
//கூடை வெச்சிருக்கவங்களுக்கெல்லாம் முப்பது ரூபாய்தாங்க"//
ஹா ஹா

ஆமினா said...

பிட் புகைப்பட போட்டியில் இரண்டாம் இடம் பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

அந்த சாக்லேட் மேட்டர நானும் ட்ரை பண்ணியிருக்கேன் :) ஆனா வாங்காம மிச்ச சில்லரைய குடுத்துடுவாங்க :))

ராமலக்ஷ்மி said...

நல்ல தொகுப்பு. ரசித்தேன்! சாக்லேட் மேட்டருக்கு ஒரு பலே:)!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

hahaha. சூப்பருங்க..

உங்க வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

என்னது கூடை வச்சிருக்கவங்களுக்கு பெட்ரமாக்ஸ் தரதில்லயா..;)))

Anonymous said...

அடங்கொக்கமக்கா. லக்கேஜுக்கு பத்து ரூபாவா? விளங்கிடும்

வெங்கட் நாகராஜ் said...

வெல்கம் பேக்... பிட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

தில்லியில் அம்பது காசு செல்லாது என்று வாங்குவதில்லை. 23.50 என்று எதாவது ஒரு பொருளின் விலை இருந்தால், அவர் வாங்குவது 24/- சோ, சாக்லேட்டும் கிடையாது :(

kavisiva said...

போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

//..."கூடை வெச்சிருக்கவங்களுக்கெல்லாம் முப்பது ரூபாய்தாங்க"//


:)))

சாக்லேட் முயற்சி வெற்றியா! சபாஷ் :)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சென்றவார நட்சத்திரமே,

வரவேற்புக்கு நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முகிலரசி,

சொல்லலாம்தான்.. அப்படியே நடந்துவர்றப்ப இன்னும் கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சாப்லயும் ஆச்சு :-))))

தலைப்பு வெறுமே நகைச்சுவைக்காக வைக்கப்பட்டது :-))

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எஸ்.கே,

வந்தேன்,.. வந்தேன் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

ரொம்பவே மிஸ் பண்ணேன் உங்களையெல்லாம்..

பெட்ரமாக்ஸ் தரலைப்பா :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாஜி,

பின்னே,.. அவ்ளோ ஈசியா விட்ருவோமா :-))))

நன்றி.

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் - பிட்டுக்கு! ட்ரீட் கொடுக்க சென்னைக்கு விரைவில் வரவும்..:-)

ஆனா, நீங்க போனா மாதிரியே தெரியலையே...ரிட்டர்னாகறதுக்கு...:-))

pudugaithendral said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள். லக்கேஜுக்கு
பணம் கேட்கும் அளவுக்கா மும்பை மோசமா போச்சு!! ம்ம் ஹைதைதான் மாறிப்போச்சுன்னு நினைச்சேன். அங்கயுமா!! எல்லாம் நம்ம சென்னை ஆட்டோ அண்ணாச்சிக்கள் உபயம்னு நினைக்கிறேன்.

Unknown said...

meeeeeeeeeee
the first..

வாங்க வாங்க ...

நலம் ..

கம்ப்யூட்டர் நலமாக பிராத்தனைகள்

ADHI VENKAT said...

போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ஆட்டோக்காரங்க இப்படித் தான் லொள்ளு பண்ணுவாங்க. பணம் அதிகமா கேட்பாங்க ஏன்னு கேட்டா திரும்பி வரும் போது தனியாதான வரணும்னு சொல்லுவாங்க. இதுக்காக நாம திரும்பி அவங்க கூட போயிட்டா வர முடியும்?

ரிஷபன் said...

அப்ப, லக்கேஜு கிட்ட அட்ரஸை சொல்லிட்டா, தானாவே வீட்டுக்கு நடந்து வந்துடுமா......... டவுட்ட்ட்ட்ட்டு) , -- எனக்குத்தான்

ஹா.. ஹா..
ஆட்டோல லக்கேஜா.. இது புதுசாத்தான் இருக்கு..

ம.தி.சுதா said...

ரசிக்கவும் ருசிக்கவும் வைத்துள்ளீர்கள் நன்றி

தங்களை அன்புடன் என் தளத்திற்கு அழைக்கிறேன்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/

ம.தி.சுதா said...

ரசிக்கவும் ருசிக்கவும் வைத்துள்ளீர்கள் நன்றி

தங்களை அன்புடன் என் தளத்திற்கு அழைக்கிறேன்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/

தாராபுரத்தான் said...

நல்வா இருக்குதுங்கோ.

சாந்தி மாரியப்பன் said...

எல்.கேயும்,ரமேஷும் போட்ட பின்னூட்டத்தை காக்கா வாயில இருந்து பிடுங்கிக்கொண்டாந்து ஒட்டியிருக்கேன் :-)))

LK has left a new comment on your post "ஐயாம் ரிட்டர்ன்ஸ்...":

வாழ்த்துக்கள் சகோ. ஆட்டோ கட்டணம் :))


றமேஸ்-Ramesh has left a new comment on your post "ஐயாம் ரிட்டர்ன்ஸ்...":

சாரல் அமைதியாக திரும்பியதுக்கு வாழ்த்துக்கள்
ஸ்டாட் மியூசிக்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

இப்ப சாக்லெட் கிடைக்கலைன்னு வருத்தப்படறீங்களா இல்ல, சில்லறை ஒழுங்கா கிடைக்குதுன்னு சந்தோஷப்படறீங்களா :-)))))

வாழ்த்துக்களுக்கு நன்றி.

துளசி கோபால் said...

ஆஹா.... அதனா... நம்ம வீட்டுலே ஒரு கை குறையுதேன்னு இருந்தேன்:-))))

மீண்டு வந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.

அப்படியே பிட்டில் ஜெயிச்சதுக்கு இனிய பாராட்டுகள்.

சாக்லேட், ஆட்டோ லக்கேஜ் எல்லாம் அதி சூப்பர்:-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

ஒரு மெழுகுவர்த்திகூட தரலைப்பா :-))))

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அனாமிகா,

ஷாக்கிங்கா இருந்துச்சுப்பா கேட்டவுடனேயே :-)))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

ஒரே இந்தியாவுல இப்படி ஒரோர் இடத்துக்கும், காசோட மதிப்பு வித்தியாசப்படறது கொஞ்சம் விசித்திரமாயிருக்கு. ரவுண்ட் செஞ்சு 24 ஆக்குறவங்க ஏன் 23ஆ வாங்கிக்கக்கூடாது??

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிசிவா,

இப்பல்லாம் பர்சுக்குள்ள குறைஞ்சது ரெண்டு சாக்லெட்டாவது வெச்சிருக்கேன். ச்சான்ஸ் கிடைச்சா டபால்ன்னு நீட்டிடலாம்ன்னுதான் :-)))))

வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

எனக்கென்னவோ ரொம்ப நாளா உங்களையெல்லாம் பார்க்காத ஃபீலிங்க்ஸ் :-))

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

எனக்கும் மொதல்ல ஒருவேளை அவர் நம்மூர்க்காரரோன்னு தோணிச்சு.. பேசறதொனியை வெச்சு மும்பைக்கர்தான்னு உறுதிப்படுத்திக்கிட்டேன்.. ஒருவேளை நம்மூர்க்கு வந்து ட்ரெயினிங் எடுத்திருப்பாரோ என்னவோ. மத்தவங்களையும் அவர்மாதிரி கெடுக்காம இருந்தா சரி :-))

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிவா,

நன்றிகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

எங்கூர்க்காரங்க கொஞ்சம் நல்லவங்களாத்தான் இருக்காங்க இதுவரை, இனிமே எப்படியோ :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

ரயில்வே ஸ்டேஷன்ல கூட இப்படி லக்கேஜுக்குன்னு கேக்கறதில்லை, இவர் புதுசா இப்படி ஆரம்பிச்சு நோட்டம் பாக்கறார் போலிருக்கு..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுதா,

கண்டிப்பா வரேன் சகோ..

அழைப்புக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தாராபுரத்தான் ஐயா,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வடை ஸ்பெஷலிஸ்ட் எல்.கே,மற்றும் ரமேஷ்,

நன்றிகள்..

ஜெயந்தி said...

பிட் பட போட்டியில் வென்றதுக்கு வாழ்த்துக்கள்!
சாக்லேட்ட சென்னை பஸ் கண்டக்டர்கள்கிட்ட கொடுத்துப்பாருங்க தெரியும் சேதி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

ஜமா சேர்ந்தாச்சு :-))

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயந்தி,

நம்ம சிங்காரச்சென்னைல மீதிச்சில்லறையே கிடைக்காது. அப்றம் எங்கிருந்து சாக்லெட் கொடுக்கறது :-)))))

நன்றி, வாழ்த்துக்களுக்கு..

சுந்தரா said...

போட்டியில் வெற்றிபெற்றதற்கு வாழ்த்துக்கள் சாரல்!

//அமைதியா சொன்னாரு..."கூடை வெச்சிருக்கவங்களுக்கெல்லாம் முப்பது ரூபாய்தாங்க"//

ஆட்டோக்காரர் கவுண்டமணி படத்தைப் பாத்திருப்பாரோ? :)

ஸாதிகா said...

//போனவாரம், ஷாப்பிங் போனப்ப , பில்லை மானிட்டரில் பார்த்ததுமே சாக்லெட்டை எடுத்து ரெடியா வெச்சுக்கிட்டேன். ரெண்டு ரூபா அம்பது காசு இருக்குமான்னு கேட்டப்ப, ரெண்டு ரூபாய் நாணயத்தையும், அம்பது காசுன்னு சொல்லி சாக்லெட்டையும் கொடுத்தேன்// அட நல்ல ஐடியாகவா இருக்கே.

ஹுஸைனம்மா said...

”மம்மி ரிட்டர்ன்ஸ்” ரேஞ்சுல பயங்காட்டுறீங்களே!!

பிட்டுக்கு ஷொட்டு!!

சாக்லேட் ஆகிடுச்சு ஹிட்!!

ஆட்டோகாரருக்கு நோஸ் கட்!

(ஹி..ஹி.. எப்பூடி நம்ம ரைம்ஸ்?)

வல்லிசிம்ஹன் said...

இத்தனை விஷயம் படிக்காமல் இருந்திட்டேனே.:)

நல்ல நகைச்சுவை லக்கேஜ் பிரச்சினை:)
நீங்க சமாளிக்கற விதம் நல்லாவே இருக்கு. வெல்கம் பேக் சேம் ப்ளட்.:)

Unknown said...

பில்லா அஜித் மாதிரி ஐயம் பேக் -னு வந்து கலக்கீட்டிங்க

Unknown said...

welcome back!

மாதேவி said...

சூப்பர்.

LinkWithin

Related Posts with Thumbnails