Thursday, 30 December 2010

நினைவில் நின்றவை..

'ஏதாவது ஒன்றை பெறவேண்டுமானால் ஒன்றை இழக்கத்தான் வேண்டும்'ன்னு சொல்லுவாங்க. ரொம்ப கரெக்ட். பழைய வருஷத்தை இழந்தாத்தான் புதுவருஷம் கிடைக்கும்.. 2010 போனாத்தான் 2011 வரும்.. வெங்காயத்தை வெட்டினாத்தான் பஜ்ஜி சாப்பிடமுடியும். இந்தமாதிரி தத்துவமெல்லாம் வருஷக்கடைசி ஆகும்போதுதான் எக்கச்சக்கமா கொட்டுது. உங்களுக்கு தெரிஞ்ச தத்துவங்களையும் எடுத்துவுடுங்க :-)))))

புதுவருச கொண்டாட்டத்துக்கான இறங்குமுக எண்ணிக்கை அதான் கவுண்டவுன் இஸ்டார்ட் ஆகிடுச்சு. நாளைக்கு சாயங்காலத்துலேர்ந்து ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். இங்கே, அனேகமா ஒவ்வொரு அபார்ட்மெண்டுலயும் விழாக்கள் நடைபெறும். விருந்தும் இருக்கும். அதனால புதுவருஷத்தை கொண்டாடுறதுக்குன்னு ஸ்பெஷலா வெளியே எல்லாம் போறதில்லை.

இப்படித்தான், 2002 டிசம்பர் 31ஐ கொண்டாடணும்ன்னு நாங்க ஆறு பெண்கள் சேர்ந்து, ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சோம். அப்புறம், நிதி வசூலிச்சு அபார்ட்மெண்ட் மொத்தமும் கொண்டாடலாம்ன்னு திட்டம் விரிவாச்சு. அபார்ட்மெண்டில் பொதுவா ஒருத்தருக்கொருத்தர் அவ்வளவு ஈஸியா அறிமுகம் ஆகமாட்டாங்க. அதனால, ஒரு ஐடியா செஞ்சோம். குழந்தைகளோட கலை நிகழ்ச்சிகள் முடிஞ்சதும், ஒவ்வொரு குடும்பமா முன்வந்து, தன்னையும் குடும்பத்தினர்களையும் அறிமுகப்படுத்திக்கணும்ன்னு சொன்னதுக்கு ரொம்பவே வரவேற்பு கிடைச்சது. அப்படியே கையோட ஒரு நினைவுப்பரிசும் கொடுத்ததும் அவங்களுக்கு ரொம்பவே சந்தோஷம் . மொட்டைமாடியில் விழா நடந்துச்சு. கேட்டரிங்கில் சொல்லி டின்னரும் ஏற்பாடாகியிருந்தது.

காத்து சும்மா பிச்சுக்கிட்டு போகுது. மார்கழிக்குளிருக்கு கேக்கவா வேணும். எல்லோரும் குளிரில் நடுங்கிக்கிட்டிருக்க, நான் குளிரிலும் கைவலியிலும் நடுங்கிக்கிட்டிருந்தேன். ஏன்னா, முந்தின நாள்தான் பாத்ரூம் தரையில் சிந்தியிருந்த ஆலா கரைசலில் கால்வழுக்கி கையை உடைச்சுக்கிட்டேன். எலும்பு முறியாம தசை மட்டும் முறிஞ்சு, முழங்கையிலிருந்து மணிக்கட்டுவரைக்கும் அங்கங்கே ஸ்பீட்ப்ரேக்கர்மாதிரி வீக்கங்கள். ஆனாலும், விடாப்பிடியா விழாவில் கலந்துக்கிட்டேன். இப்பவும் டாக்டரிடம் போகும்போது எப்போ அடிபட்டுச்சுன்னு கேட்டா, ஞாபகசக்திக்கு போட்டுக்கிட்ட முடிச்சுமாதிரி, நினைவுவர்றது அந்த புத்தாண்டுதான். அதுக்கப்புறம் எத்தனையோ புத்தாண்டுகள் வந்தாலும் இன்னிக்கும் எங்க பில்டிங்கில் அந்த முதல்புத்தாண்டைதான் பாராட்டுறாங்க.

இன்னொரு சமயம்,.... அப்ப, நாங்க அலிபாக்கில் இருந்தோம். அந்தத்தடவை நியூ இயர் கொண்டாட்டத்தை நாங்க நண்பர்கள் மட்டும் தனியா கொண்டாடலாம்ன்னு கலந்துபேசி முடிவெடுத்தோம். ரங்க்ஸோட ஃப்ரெண்ட்ஸ் , நாங்க, அப்புறம் மேலதிகாரின்னு மொத்தம் ஆறு குடும்பங்கள். ரெண்டு ஜீப்புகள்ல புறப்பட்டோம். குட்டீஸெல்லாம் நண்டும் சுண்டுமா இருந்த சமயம். எங்கே போகலாம்ன்னு மட்டும் முடிவெடுக்கலை.

அலிபாக்கை சுத்தி நிறைய கடற்கரைப்பிரதேசங்கள் உண்டு. அப்படியே போயிக்கிட்டிருப்போம். எங்கே தோணுதோ அங்கே வண்டியை நிறுத்திக்கலாம்ன்னு பேச்சு. கொறிக்கிறதுக்கு ஏதாவது வேணுமில்லையா.. கொஞ்சம் பொரி, பொரிகடலை, நிலக்கடலை, ஓமப்பொடி, வெங்காயம்( அப்ப கிலோ ஒரு ரூபாய்க்கு வித்தது.. ஹூம்..), கொத்தமல்லி இலைன்னு பேல்பூரி செய்ய தேவையான எல்லாத்தையும் வாங்கி பாக்கெட் போட்டுக்கிட்டோம்.

வண்டியில போயிக்கிட்டிருக்கும்போதே, பேசிப்பேசி கடைசியில, 'மாண்ட்வா' போகலாம்ன்னு முடிவாச்சு. அங்கே பீச்சும் நல்லாருக்கும். அதேமாதிரி கடலுக்குள் கொஞ்சதூரம் நடந்து போகிறமாதிரி ஒரு பாலமும் உண்டு. அன்னிக்கு, பாலத்துல எக்கச்சக்க கூட்டம். சில இடங்களில் ஸ்டவ் வெச்சு, சமையல் நடந்துக்கிட்டிருக்குது. 'குடிமகன்'கள் வேணுங்கிறதையெல்லாம் வாங்கிட்டு வந்து அங்கியே சமைச்சு சாப்பிட்டு புத்தாண்டை வரவேற்றுக்கிட்டிருந்தாங்க.

நாங்க, பக்கத்துல இருந்த ஜெட்டில(jetty) அடைக்கலமாகிட்டோம். கொண்டுபோயிருந்த பெட்ஷீட்டுகள், நியூஸ்பேப்பர்களெல்லாம் விரிப்புகளாக அவதாரமெடுத்துச்சு. பக்கத்துல மணல்ல 'bonfire' ரெடிசெஞ்சது குளிருக்கு இதமாயிருந்தது. கொண்டுபோயிருந்த பெரிய பாத்திரத்துல, பேல்பூரிக்கான பொருட்களைக்கொட்டி, எலுமிச்சை சாறு கலந்து ரெடிபண்ணோம். பேச்சும் சிரிப்புமா, கடல்காத்தோட குளிர்ல நடுங்கிக்கிட்டே கொண்டாடிய புத்தாண்டு இன்னிக்கும் பசுமையா நினைவிருக்கு.

ஒவ்வொருத்தரா ட்ரான்ஸ்பர் ஆகி வெவ்வேறு ஊர்களுக்கு போயிட்டாலும், சிலகுடும்பங்கள் மட்டும் அவ்வப்போது சந்திச்சுப்போம். அதுமாதிரி சமயங்களில், அலிபாக் வாழ்க்கையை பத்திதான் கூடுதலும் பேசிப்போம். முக்கியமா, எல்லோரும் சேர்ந்து கொண்டாடிய பண்டிகைகளையும் விழாக்களையும்.. எத்தனையோ புத்தாண்டுகள் வந்தாலும் இது ரெண்டையும் மறக்கவேமுடியாது..

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
27 comments:

Balaji saravana said...

புத்தாண்டு இனிமையாய் அமைய நல்வாழ்த்துக்கள் :)

வெங்கட் நாகராஜ் said...

இனிய நிகழ்வுகள். பகிர்வுக்கு நன்றி.

//“வெங்காயத்தை வெட்டினாத்தான் பஜ்ஜி சாப்பிடமுடியும்”// இப்ப வெங்காயம் விக்கற விலைக்கு, முதல்ல யார் பாக்கெட்டையாவது வெட்டினாத்தான் வெங்காயமே வாங்க முடியும்... :)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பாரத்... பாரதி... said...

//வெங்காயத்தை வெட்டினாத்தான் பஜ்ஜி சாப்பிடமுடியும்//
காஸ்ட்லியான தத்துவம்.

பாரத்... பாரதி... said...

உங்களுக்கு
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் said...

நல்ல நினைவுகள்....


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

siva said...

பஜ்ஜி --enakuthan..:)

கோவை2தில்லி said...

புத்தாண்டு கொண்டாட்ட நினைவுகள் அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆமினா said...

//'ஏதாவது ஒன்றை பெறவேண்டுமானால் ஒன்றை இழக்கத்தான் வேண்டும்'ன்னு சொல்லுவாங்க. ரொம்ப கரெக்ட் ///

பெரிய பில்டப்பா இருன்துச்சேன்னு பாத்தேன். புது வருஷத்த தான் சொன்னீங்களா? ;)))

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

//2010 போனாத்தான் 2011 வரும்//

மிகப்பெரிய கண்டு பிடிப்பு நீங்க இங்க பொறக்க வேண்டிய ஆளே இல்லை

மாதேவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சேட்டைக்காரன் said...

//வெங்காயத்தை வெட்டினாத்தான் பஜ்ஜி சாப்பிடமுடியும்//

ரொம்ப காஸ்ட்லீ தத்துவமா இருக்கே? :-)

அலிபாக்-லே இருந்திருக்கீங்களா? நான் கூட அலிபாக் பக்கத்துலே இருக்கிற தரம்தர்-கிற ஊருலே இருக்கிற ஜெட்டியிலே கொஞ்சநாள் வேலைபார்த்தேன். அலிபாக் சின்ன ஊருன்னாலும், சுத்தி நிறைய கடற்கரை...புராதனமான கோட்டைகள் கூட இருக்கு! நினைவூட்டியமைக்கு நன்றி!

புத்தாண்டு வாழ்த்துகள்!

எல் கே said...

சுகமான நினைவுகள். 2000 வருடப் பிறப்புக்கு எங்கள் கல்லூரியில் நடந்த கொண்டாட்டம் எனக்கு நினைவிற்கு வருகிறது..

உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நாஞ்சில் பிரதாப்™ said...

//எக்கச்சக்கமா கொட்டுது. உங்களுக்கு தெரிஞ்ச தத்துவங்களையும் எடுத்துவுடுங்க //

ப்ரெயினை off பண்ணிவச்சாத்தான் சிலபதிவுகளை படிக்கமுடியும்...உங்க பதிவை சொல்லலை.:))

//2010 போனாத்தான் 2011 வரும்//

நல்லவேளை இப்பவாச்சும் சொன்னீங்களே... இல்லன்னா தெரியாமலே போயிருந்திருக்கும்....

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Mukilarasi said...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! :-))

ஹேமா said...

வெங்காயம்...?

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தோழி !

philosophy prabhakaran said...

உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

கவிதை காதலன் said...

நல்ல விஷயம்.. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

// எல்லோரும் சேர்ந்து கொண்டாடிய பண்டிகைகளையும் விழாக்களையும்.. //

ஆம், நினைவில் நிற்கும் அவை என்றும்.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சாரல்:)!

Gopi Ramamoorthy said...

நீங்க மும்பையா? நான் ஒரு மூணு வருஷம் அங்கே குப்பை கொட்டி இருக்கேன்.

புத்தாண்டு வாழ்த்துகள்!

vanathy said...

நல்லா இருக்கு உங்க அனுபவம்.

யோவ் said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அமைதி அப்பா said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நானானி said...

முழுசும் படிச்சிட்டு பிறகு வார்ரேன்.

இப்ப...

இனிய புத்..புத்..புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!

இளம் தூயவன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பாரத்... பாரதி... said...

அமைதிச்சாரல் அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

அமைதிச்சாரல் said...

வாங்க பாலாஜி,

வெங்கட் நாகராஜ்,

பாரத் பாரதி,

அருண் பிரசாத்,

சிவா,

கோவை2தில்லி,

ஆமினா,

[im]http://1.bp.blogspot.com/_8hljeHJGmRw/TQBrKDpGCFI/AAAAAAAABOE/FlDQhrKsxwM/s1600/Nandri.jpg[/im]

LinkWithin

Related Posts with Thumbnails