Wednesday, 22 December 2010

இப்படியும் நடக்குமோ!!!..

'கிடைச்சிருக்கிற தகவல் சரிதானா??.. உறுதிப்படுத்திக்கிட்டீங்களா'

'நூறுசதவிகிதம் உண்மைதான்.. இந்தமுறை நாம ஏமாறமாட்டோம் சார்'

'போனதடவைமாதிரி அங்க போனப்புறம் ஒண்ணுமில்லைன்னு தெரிஞ்சது... அப்றம் உங்க எல்லாருக்கும் இருக்குது'

'இல்ல்ல சார்..'

'ஜீப்பை ரெடி பண்ணச்சொல்லுங்க.. ஆயுதமெல்லாம் பக்காவா எடுத்து வெச்சிட்டீங்கல்ல'

'எல்லாம் ரெடி சார்.'

'ஓ.கே... ஜீப்புல ஒரு பத்துபேர் போதும்... பில்டிங்கை சுத்தி மத்தவங்களை நிப்பாட்டுங்க.. முக்கியமா பால்கனி பக்கம். அங்கிருந்து கீழே குதிச்சு தப்பிச்சு போயிட வாய்ப்பிருக்கு'

' நம்ம கபாலி கிட்டயிருந்து மீன்பிடிக்கிற வலையை இரவல் வாங்கிட்டு வந்துருக்கேன் சார்'

'அய்யோ... என் புத்திசாலி'  வழிச்சு முறிச்சதில் படபடன்னு உடைஞ்சு போகுது திருஷ்டியெல்லாம்.

'கமான்.. ஃபாலோ மீ'

தடதடவென எல்லோரும் ஏறிக்கொண்டபின் எல்லோரும் ஏறியாச்சான்னு உறுதிப்படுத்தியபின் அதிகாரி ஏறி உட்கார்ந்தார்.

'உய்ங்..உய்ங்..உய்ங்....'

'சைரனை நிறுத்துங்கப்பா.. உஷாராகிடப்போறாங்க'

வண்டி மெதுவாக கட்டிடத்தின் முன் வந்து நின்றது. ஜீப்பிலிருந்து எல்லோரும் இறங்கினார்கள்.

'நாலு பேரு அப்படி போங்க.. நாலுபேரு இப்படி போங்க.. மீதியிருக்கிறவங்க என்பின்னாடி வாங்க'

டிங்க்.... டாங்..... அழைப்புமணி அடித்தது.

கதவை திறந்த பெண், வாசலில் நின்றுகொண்டிருந்த இருவரையும் பார்த்துவிட்டு.'யெஸ்' என்றாள்.

'மேடம்... உங்க வீட்டுல சட்டவிரோதமா பதுக்கல்பொருள் இருக்கிறதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு. சோதனை போட வந்திருக்கோம்' என்றார் ஆபீசர்.

'அதுக்கு ஏன் பழைய பேப்பர் வாங்குறவரையும் கூட்டிட்டு வந்திருக்கீங்க.. எங்க வீட்டுல அப்படி எதுவும் பதுக்கி வைக்கலை.. நம்புங்க'

பின்னால் திரும்பிப்பார்த்தவர் ஜெர்க்கானார். நீ போப்பா என்று பேப்பர்காரரை அனுப்பிவிட்டு, 'பாவிப்பசங்க.. வழக்கம்போல காலைவாரிட்டாங்க' என்று மனதுக்குள் பொருமியபடியே,

'மேடம்.. நாங்க O.C.+B&Iலேர்ந்து வந்திருக்கோம்' என்றபடி அடையாள அட்டையை எடுத்து நீட்டினார்.

வேறுவழியில்லாமல் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டியதாயிற்று அந்தப்பெண்ணுக்கு.

நேராக பால்கனிக்கு சென்று அங்கிருந்து கீழே நின்றுகொண்டிருந்த மற்றவர்களுக்கு குரல்கொடுப்பதற்காக சென்றவர் கண்களில் அது பட்டுவிட்டது.

'ஹெ..ஹெ..ஹெ.. என் கழுகுக்கண்ணுலேர்ந்து எதுவுமே தப்பமுடியாது' என்று தன்னைத்தானே பாராட்டிக்கொண்டவர், வீட்டின் உள்புறமாக திரும்பி

'எதுவுமே பதுக்கிவைக்கலைன்னு சும்மாதானே சொன்னீங்க...அப்படீன்னா இது என்னாது!!!.. அரசாங்கத்துக்கு தெரியாம இதையெல்லாம் வளர்க்குறது சட்டப்படி விரோதம். கவர்மெண்டைதவிர யாருக்கும் இதை வெச்சுக்கிற உரிமை கிடையாது. இதை இப்பவே நீங்க அரசாங்கத்துக்கிட்ட சரண்டர் பண்ணனும்'

அடடா!!.. தப்பிக்க முடியாதோ..

'ஆப்பீசர்.. ஆப்பீசர்... இந்த ஒரு வாட்டி மன்னிச்சு விட்டுடுங்க.. இனிமே தெரிஞ்சு, இந்த தப்பை செய்யமாட்டேன், ப்ளீஸ்'

'அதெல்லாம் முடியாது..இதை கொண்டுபோறதை தவிர எங்களுக்கு வேற வழியில்லை'

'வேண்ணா, உங்களுக்கும் பங்கு தரேன் ஆப்பீசர்... ப்ளீஸ்'

'ம்ம்.. சரி. ரொம்ப கெஞ்சி கேக்குறதுனால மன்னிச்சு விட்டுடறேன். அறுவடையானதும், ஒழுங்கா எங்கவீட்டுக்கு அனுப்பிவைக்கணும். புரிஞ்சதா!!

'சரி ஆப்பீசர்.'


எவ்வளவோ ரகசியமாத்தான் இவனை வெச்சி பாதுகாத்துக்கிட்டு வர்றேன்.. யாரு போட்டுக்குடுத்ததுன்னு தெரியலியே....


டிஸ்கி: தலைப்பை மறுபடியும் படிங்க :-)))))





68 comments:

எல் கே said...

ஹஹாஹ் நடக்கலாம் சாரல்.

Unknown said...

haha...

nice one..

pudugaithendral said...

:))) paathu pathirma irunthukonga aama solliputen

Unknown said...

பதிவு மிக அருமை
இரண்டு வெங்காய தோசை பார்சல்.....
ப்ளீஸ்

Anonymous said...

ரைட்டு.. வெங்காயவிலை எப்படியெல்லாம் யோசிக்க வைக்குது :)

துளசி கோபால் said...

ஹா ஹா ஹா ஹா....

என் பங்கை எனக்கே அனுப்பி வச்சுருங்க!

sathishsangkavi.blogspot.com said...

Nice Post......

ஹுஸைனம்மா said...

வெங்காயம்!!

முதல்ல செடியைப் பாத்து ஒண்ணுமே புரியலை. வெங்காயச் செடின்னு உறைக்கலை; ஏதாவது ஏடாகூடமா இருக்குமோன்னு யோசிச்சு, அப்புறம்தான் டக்குனு பிடிபட்டுச்சு!!

பை தி வே, இன்னிக்கு எங்க வீட்டுல வெங்காய சாம்பார். அவர்கிட்டச் சொல்லிடாதீங்க, ப்ளீஸ்!!

ஆமா, அதென்ன O.C.+B&I ??

ராமலக்ஷ்மி said...

பங்கு தாரேன்னதும் சும்மாப் போயிட்டாரா பந்தாப் பண்ணின ஆப்பீசர்:)))! வெங்காயம்னா சும்மாவா? ஆசை யாரை விட்டது:)?

ஹுஸைனம்மா said...

Onion prices in UAE supermarkets hit record high - இது இன்னிக்கு எங்கூர் நியூஸ்பேப்பர்ல வந்த நியூஸ்!! இதுதான் கேயாஸ் தியரியா? ;-)))))

ஹேமா said...

வெங்காயம் இப்பிடியெல்லாம் கஸ்டம் குடுக்குதா !

ADHI VENKAT said...

எங்க வீட்டுல கூட பதுக்கி வெச்சுருக்கேன். போலீஸ் வந்துடப் போகுது. நல்ல கற்பனை.

அருண் பிரசாத் said...

இந்த முடிவை நான் எதிர்பார்த்தேன்... அனாலும் ஓவர் பில்டப்தான்

நானானி said...

பெரியார் இருந்திருந்தால் நொந்தே போயிருப்பார்! பார்ரா இதுக்கு வந்த வாழ்வைன்னு!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:)

Prathap Kumar S. said...

வாழ்க்கையே ஒரு வெங்காயம் தாங்க...உரிக்க உரிக்க உள்ள ஒண்ணுமே இருக்காது...:)

செடியோட படத்தை வச்சு எதோ கஞ்சா செடியைப்பத்திதான் எழுதுறீங்களோ நினைச்சேன்..:)))

ஆமினா said...

haa...haa....haa.....

கொஞ்சம் கூட எதிர்பாக்கல!!!

இன்னும் கொஞ்ச நாள்ல இப்படியும் நடக்கலாம். நீங்களாம் ஆல்ரெடி வச்சுருக்கீங்களா? கில்லாடி தான் போங்க

வெங்கட் நாகராஜ் said...

அறுவடை முடிந்ததா? நல்ல பகிர்வு. நடந்தாலும் நடக்கலாம். வெங்காயத்துக்கு ரொம்ப பவர் அதிகம்தான்.

வல்லிசிம்ஹன் said...

வெங்காயச் செடியா வச்சிருக்கீங்க சாரல்?????? ஆஹா எதிர்காலக் கோடீஸ்வரிக்கு வணக்கம்.:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) என்ன தைரியம்..
ஆசை யாரை விட்டது..

Mukil said...

இனிமே யாரையும் வெங்காயமேன்னு திட்ட முடியாது!

தங்கம், செல்லம், பட்டு, வெங்காயம் அப்படின்னு கொஞ்சுறதுக்கு, பாராட்டுறதுக்கு வேணா பயன்படுத்தலாம்... :-))

அருமையான பதிவு சாரல்! :-))

தேவன் மாயம் said...

அய்யகோ!

தேவன் மாயம் said...

அய்யகோ!

அம்பிகா said...

\\வல்லிசிம்ஹன் said...
வெங்காயச் செடியா வச்சிருக்கீங்க சாரல்?????? ஆஹா எதிர்காலக் கோடீஸ்வரிக்கு வணக்கம்.:)\\
நானும் வெங்காயசெடி வளர்க்கப் போறேன்.

Asiya Omar said...

இதுவும் நடக்கலாம்...

நசரேயன் said...

நீங்க ஆப்பீசரா இருந்தா எதுவும் நடக்கும்

Admin said...

அப்படியெல்லாம் நடக்குதோ.... நடக்கட்டும்... நடக்கட்டும்...

மனோ சாமிநாதன் said...

கற்பனை அருமை! இப்படியும் நடக்கலாம் எதிர்காலத்தில்!!

vanathy said...

நல்லா விறுவிறுப்பா இருந்திச்சு!!!???

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹா ஹா ஹா.. படிக்க படிக்க சுவாரசியம். கலகலப்பா இருந்தது சாந்தியக்கா. ஆப்பீசர் ரொம்ப டெரரா இருப்பாரு போல... :))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா.. செம செம.. பேப்பர்காரனை பின்னாடி திரும்பி பார்த்து ஜெர்க் ஆனா இடம்... செம.. சிரிப்புங்க..

இப்படியும் நடக்கலாம்...போல இருக்கு நிலைமை.. :-))

ரசிச்சு படிச்சேன்.. :-))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா ... super...எங்க போனாலும் வெங்காய பதிவா பாத்து பாத்து... இதான் இருக்கும்னு அப்பவே நெனச்சேன் அமைதி அக்கோவ் ...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

இடுகைகள் நிறைய வர்றதைப்பார்த்து பயந்துபோய் விலையை குறைச்சிட்டாங்களாமே :-))))

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிவா,

வெங்காயம் விளைஞ்சதும் ஊத்தப்பமே சுட்டுத்தரேன் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

பேங்க் லாக்கர்ல கொண்டுபோயி வெச்சுடலாமான்னு ஒரு யோசனை :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாஜி,

இங்கே மிட்டாய்வாலாக்கள் பஜ்ஜி செய்யறதையே நிறுத்திவெச்சிருக்காங்க. காந்தாபஜ்ஜியும், பாவ்பாஜியும் இல்லாம மக்களெல்லாம் ஏங்கிப்போயிருக்காங்க தெரியுமா :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

வெளைஞ்சதும் அதுதான் முதல்வேலையே. கூலியா ரெண்டு கிலோ வெங்காயத்தை அவங்களுக்கு கொடுத்துடுங்க :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

நன்றி வரவுக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

அடடா!!... ஏற்கனவே மோப்பம் பிடிச்சு உங்கவீட்டுக்கு ஒரு பறக்கும்படையை அனுப்பிவெச்சுட்டுத்தான் இங்கே வந்திருக்காங்க ;-)

O.C.+B&I =Onion Culvitation+Bureau&Investigation department :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

ஆசையை முற்றும் துறந்தவர் புத்தர் மட்டும்தான் :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

ஹுஸைனம்மா,

தென்னை மரத்துல தேளுகொட்ட பனை மரத்துல நெறி கட்டின கதைதான் இது :-))

ஜெய்லானி said...

தலைப்புக்கேத்த படமும் போட்டு அசத்திட்டீங்க ..சேம் கஞ்சா செடிக்குள்ள பில்டப்பு ஹா..ஹா..!! :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

நறுக்கினாலும் அழவைக்குது.. விலை கேட்டாலும் அழவைக்குது :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

அடுத்தாப்ல உங்க வீட்டுக்குத்தான் வந்துக்கிட்டிருக்காங்க.. பத்திரமா இருந்துக்கோங்க :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருண்பிரசாத்,

விலைக்கேத்தமாதிரி கொடுக்க வேண்டாமா :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நானானிம்மா,

ஆனா,.. இது இல்லாம சமையலாவே இல்லியே :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நண்டு,

சிரிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

அந்த ரேஞ்சுக்குத்தான் ஆகிப்போச்சு..இன்னும் கொஞ்ச நாள் விலை இறங்காம இருந்திருந்தா.. வெங்காயம் கடத்தல்.. லாரிகள் பறிமுதல்ன்னு செய்திவந்திருக்கும் :-))

அது எங்க வீட்டுச்செடி :-)
நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

எப்போ எது நடக்கும்ன்னு சொல்லமுடியலை.. எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கிறது நல்லது பாருங்க.

ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி சர்க்கரையும், தேங்காயும்கூட விலை ஏறிச்சு.அது ஞாபகம் வருது :-)

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

பவர் ரொம்பவே இருக்குப்பா.. ஆட்சியையே கவிழ்த்ததாச்சே :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

சைனீஸ் வகைகள் செய்யறப்ப ஒரு இலையை இணுங்கிக்கலாமில்லையா.. அதான் வளர்த்துக்கிட்டிருக்கேன். பெரிய கட்டு அடிக்கடி தேவைப்படறதில்லை :-)

நன்றி.

கோமதி அரசு said...

ஆஹா இதுதான் விலை குறைந்தற்கு காரணமா?

//நாமெல்லோரும் வெங்காயத்தைப்பத்தி இடுகை எழுதி போராட்டம் நடத்தினதால் தான் விலை குறைஞ்சிடுச்சு..கரெக்டா//

உண்மை இப்போதுதான் விளங்கியது அமைதிச்சாரல்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

ஒழிக்கணும்ன்னு நினைச்சாலும் முடியறதில்லியே.... ஆசையை :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வைகறை,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முகிலரசி,

ஒருவாசகம்ன்னாலும் திருவாசகம் சொன்னீங்க :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேவன்மாயம்,

இன்னும் விலை முழுசா இறங்கலைன்னு கேள்விப்படும்போது அப்படித்தான் சொல்லத்தோணுது :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

வாங்க.. கோடீஸ்வரிலிஸ்டுல உங்க பேரையும் எழுதிக்கோங்க :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

ஆரு கண்டா??.. நடந்தாலும் நடக்கலாம் :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

நான் ஆப்பீசரா இருந்தா வெலையை குறைச்சுட மாட்டேனா :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்ரு,

ஆமாங்க... கலி முத்திப்போச்சு :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ சாமிநாதன்,

சொல்றதுக்கில்லை :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வானதி,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்டார்ஜன்,

ஆளு பார்க்கத்தான் டெரரு.. பங்கு தரேன்னதும் வாபஸாகிட்டாரு பாத்தீங்களா :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

ஆஹா!!.. இந்த பொடியை நீங்க மட்டுந்தான் க.க.போங்கள் :-))))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தங்கமணி,

அடப்பாவி.... படிக்காமலேயே கண்டுபிடிச்சிட்டீங்களா!! நம்பிட்டேன் :-)))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

விலை குறையலைன்னா அதைமாதிரிதான் ரகசியமா வளர்க்கணும் :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதி அரசு,

இன்னும் முழுசா குறையலைம்மா.. மீண்டும் ஒரு போராட்டம் நடத்தணும் போலிருக்கு :-)))

நன்றி.

cheena (சீனா) said...

நான் அங்கேந்து நூல் பிடிச்சி வந்ததினால - ஒரு திரில்லும் இல்ல - வெங்காயம் ! நல்ல ஃபிக்ஷன் தான் - புதுசாப் படிச்சா - சரி சரி

LinkWithin

Related Posts with Thumbnails