Monday, 6 December 2010

பேரன்புமிக்க பெரியோர்களே!!!!..

ஆகவே,.. என் இனிய தமிழ்மக்களே!!. இது நாள்வரை என்னுடைய இலக்கியக்காவியங்களை (மொக்கைகள்ன்னு ஆருப்பா கூவுறது??.. இந்தாப்பா, அவரை கொஞ்சம் நல்ல்ல்லா கவனியுங்க) பெரியமனசு செஞ்சு படிச்சு ரசிச்ச உங்களுக்கு இன்னொரு தலையாய கடமை காத்திருக்கிறது.

தமிழ்மணம் என்றொரு சாம்ராஜ்யத்தில் விருதுக்கிரீடங்களை வெல்ல ஒரு அரியவாய்ப்பு நமக்கெல்லாம் கிட்டியிருக்கிறது. அதாவது, உங்கள் சார்பில் எனக்கு :-)). எல்லாப்போட்டிகளிலும் நான் கலந்துகொண்டால் முதல்பரிசு எனக்கே கிடைப்பது உறுதி என்று கிளிஜோசியம் சொல்லிவிட்டது. என்றாலும், மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நான் மூன்றே மூன்று தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறேன். ஆகவே, என்னை டெபாசிட் இழக்கச்செய்யாமல், வெற்றியடையச்செய்யுமாறு வாக்காளர்களாகிய உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

தொகுதி எண் -1.
படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)

1.கணக்குகள் தப்பலாம்.
2.எதிர்காத்து.


தொகுதி எண்-2 

பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்
குழந்தைகள் பலவிதம்


தொகுதி எண்-3
பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
பாறையில் ரெண்டுமண்டபம்.

இதில் ரெண்டு கவிதைகளுக்குமிடையே உட்கட்சி பூசல் இருப்பதால், ஏதாவதொன்றை தேர்ந்தெடுக்க உதவுமாறு கேட்டுக்கொல்கிறோம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்தான் தேர்தலில் நிறுத்தப்படவுள்ளார். ரெண்டுமே நல்லாயில்லை என்று சொல்லும் உண்மையாளர்களுக்கும், ரெண்டுமே நல்லாருக்கு என்று நட்பை பெருமிதப்படுத்துபவர்களுக்கும் அவர்களின் கம்ப்யூட்டருக்கு 'bug' அனுப்பப்பட்டிருக்கிறது . சந்தேகமாயிருந்தால் மைக்ரோசாப்ட் word-ல் blank document ஒன்றை திறந்து அதில் =rand (200,99) என்று டைப் செய்து, எண்டர் தட்டவும். உதவிய chetan-க்கு நன்றி :-)). ஆகவே ஏதாவதொன்றை மட்டும் தேர்வு செய்பவர்களுக்கு bug-ஐ எப்படி சமாளிப்பது என்று டிஸ்கியில் சொல்லிக்கொடுக்கப்படும் :-)

கடைசியாக ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். தேர்தல்கள் வரலாம் , போகலாம். கிரீடங்களும் கைமாறிக்கொண்டே இருக்கலாம். மக்களின் இதயத்தைவிடவா பெரிய பதவி கிடைத்திடப்போகிறது. நம்முடையது ஓட்டுக்களுக்கும், பதவிகளுக்கும் அப்பாற்ப்பட்ட ஒரு நட்புவலையன்றோ!!!

ஒரு ஜோடா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்..

டிஸ்கி: bug-ன்னு சொன்னதும் நிறையப்பேருக்கு பக்குன்னு ஆயிடுச்சா. அது ஒண்ணுமில்ல. chetan bhagat-ன் One night @ the callcentre புத்தகத்தில் இதைப்படிச்சேன். சும்மா டைப் செஞ்சு பாருங்க. திடீர்ன்னு கம்ப்யூட்டர்ல 500-க்கும் மேற்பட்ட text வந்தா, அதைப்பார்த்து பயந்துடாதீங்க. அது M.S.WORD கூட இலவசமாவே கிடைக்கிற bug. தேர்தல்ன்னா இலவசமெல்லாம் கொடுக்கணுமில்ல.. மத்தபடி எனக்கு இந்த bug அனுப்பி சூனியம் வைக்கவெல்லாம் தெரியாது. அதனால, புல்டோசரெல்லாம் அனுப்பாதீங்க :-))
29 comments:

Chitra said...

:-))

அமைதிச்சாரல் said...

சித்ரா,.. சும்மா சிரிச்சுட்டு போனா எப்படி. வேட்பாளர் யாருன்னு சொல்லிட்டுப்போங்க :-))))))

siva said...

ஒரு ஓட்டுக்கு எவ்ளோ கொடுப்பீங்க

வாழ்த்த வயது இல்லை...

வெற்றி பெற வாழ்த்துக்கள்
இந்த அணைத்து தொகுதியிலும்
சாரி பகுதிலும்
வெற்றிபெற வாழ்த்துக்கள்

வாழ்த்த வயது இல்லை...

ராமலக்ஷ்மி said...

அட்டகாசமான பதிவு:))! பதிவு முடிவுல ஜோடா ஏப்பம் ஜோராக் கேட்குது! தொகுதி எண்-1-ல் முதலாம் வேட்பாளார் நல்லவரு வல்லவருன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாய்ங்க. அவரையே நிறுத்துங்க.

//மக்களின் இதயத்தைவிடவா பெரிய பதவி கிடைத்திடப்போகிறது. நம்முடையது ஓட்டுக்களுக்கும், பதவிகளுக்கும் அப்பாற்ப்பட்ட ஒரு நட்புவலையன்றோ!!!//

அப்படிப் போடுங்க! சரியாச் சொன்னீங்க:)!

மூன்றுதொகுதிகளிலும் உங்க வேட்பாளார்கள் வெற்றிபெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சாரல்!

Mukilarasi said...

பதிவே பிரில... இன்னொருக்கா படிச்சுட்டு வார்ரேன்... :-)

Mukilarasi said...

அப்படியே எனக்கும் ஒரு கலர் ஜோடா குடுங்கப்பா...

Gopi Ramamoorthy said...

:)

அமைதிச்சாரல் said...

வாங்க சிவா,

இலவசப்பரிசு அனுப்பிச்சிருக்கேனே.. கிடைக்கலையா :-)))))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

ஜோடா ஜூப்பர் தரத்துல இருந்தது :-)))). முதல்வேட்பாளருக்கு ரெண்டு ஓட்டு விழுந்துருக்குது, ஆகவே அவர் முன்னணியில் இருக்கிறார். இன்னும் மற்ற தொகுதிகளிலும் வாக்கெடுப்பு முடிந்ததும் முடிவுசெய்யப்படும் :-)))

நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க முகிலரசி,

எனக்குமே பப்ளிஷ் கொடுத்தப்புறம், ரெண்டுதடவை வாசிச்சப்புறம்தான் புரிஞ்சது. அரசியல்ன்னாலே இதெல்லாம் சகஜமப்பா :-)))

ஜோடா என்னகலர்ல வேணும்ன்னு சொல்லுங்க. கழக கண்மணிகள் பெயிண்ட் டப்பாவோட காத்துட்டிருக்காங்க..

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க கோபி,

சிரிச்சு முடிச்சுட்டு ஏதாச்சும் சொல்லிப்போங்க :-))

நன்றி.

வித்யா said...

வெற்றிபெற வாழ்த்துகள்..

Mukilarasi said...

எதிர்காத்துக்குக் கூட கணக்குகள் தப்பலாம் ன்னே தலைப்பு வெச்சிருக்கலாமோ....

எதிர்காத்து நல்லா இருக்கு! :-)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்! :-))

கழகக் கண்மணிகளே! கலர் ஜோடாவுக்கு நொம்ப நன்னி! நன்னி!! நான் வரும்போதுதான் குடிச்சுட்டு வந்தேன்! அவ்வ்வ்....

siva said...

kidaikka villai..

idayyil yaroo abakarithuvittanar..

thirumba en blogla directa vanthu koduthudunga..

நாஞ்சில் பிரதாப்™ said...

நான் வாக்களிக்க போறதில்லை...ஆனா அதுக்கு பதிலா போட்டில நான் கலந்துக்கப்போறதில்லை.
அதுவே நீங்க பாதி ஜெயிச்ச மாதிரிதான்... :))

இப்போ சட்டமன்ற தேர்தல்ல போட்டியிடாம திமுக, அதிமுக,தேமுதிக விலகிடுச்சுன்னா ராமதாஸ் ஜெயிப்பாரே(அப்பவாச்சும் ஜெயிப்பாரா?) அதுமாதிரின்னு வச்சுக்கோங்களேன்...:))))

அப்பாவி தங்கமணி said...

ha ha...super...ஆனா இதுல ஒரு சிக்கல் இருக்கே அக்கா... நானும் raceல கலந்துக்கலாம்னு இருக்கேன்... நீயுமா? னெல்லாம் expression குடுத்து ஒரு வளரும் எழுத்தாளினிய பயபடுத்தகூடாது... ஆனா உங்களுக்கு இதுல ஒரு ஆறுதல் இருக்கு... இவ கலந்துக்கரப்ப நமக்கு கண்டிப்பா வோட்டு விழும்னு நீங்க தைரியமா இருங்க.... ஹும்...
இப்படிக்கு,
சொந்த டெபாசிட்டே இழக்க உழைப்போர் சங்கம்

மாதேவி said...

:)) வெற்றி .....

அமைதிச்சாரல் said...

வாங்க வித்யா,

நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

முகிலரசி அளித்த வாக்கு கணக்கில் சேர்க்கப்பட்டது :-))

அமைதிச்சாரல் said...

வாங்க சிவா,

இதைத்தான், போனாவராது.. பொழுதுபோனா திரும்பாதுன்னு சொல்றோம். கப்புன்னு பிடிச்சிக்கவேணாமா பரிசை :-))

நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க நாஞ்சில்,

ஆருமே போட்டிபோடலின்னாலும் எப்படியும் நாங்க கடைசிபரிசாவது வாங்குவோமில்ல :-)))

நன்றி..

வல்லிசிம்ஹன் said...

சாரல் ஒரு வோட்டுக்கு ஒரு மில்லியன் பா. ஸ்விஸ் எ/சில பணம் குறையுது. அனுப்பினதும் ஓட்டுப் அனுப்பிடறேன்.:)
வெற்றி பெற வாழ்த்துகள் பா.

ரிஷபன் said...

பரிசு அத்தனையும் உங்களுக்கே கிடைக்க நல்வாழ்த்துகள்

அமைதிச்சாரல் said...

வாங்க அப்பாவி,

நீங்க வேற.. எனக்குமே பயத்துல பல்லெல்லாம் தந்தியடிக்குது :-)).

நடுங்கிக்கொண்டே...நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

அடிக்கடி இப்படி கொஞ்சம் ஆறுதல் சொல்லுங்கப்பா..

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

எனக்கு ஸ்விஸ் சாக்லெட்தான் தெரியும்.. அதை வேண்ணா அனுப்பிவைக்கவா :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ரிஷபன்,

நல்வாழ்த்துக்களுக்கு நன்றி..

LK said...

போட்டின்னு வந்துட்ட சிங்கம் ... எல்லாமே அருமை ( அப்ப உனக்கு பரிசு இல்லைட கார்த்தி )

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

போட்டின்னு வந்துட்டா பயப்படப்படாது.. பயத்தை மறைக்க உதார் வுட்டுக்கணும்..என்னை மாதிரி :-))))

LinkWithin

Related Posts with Thumbnails