ரெண்டு மண்டபங்களும்..
சிகாகோவில் நடந்த மாநாட்டில் சொற்பொழிவு ஆற்றுவதற்கு முன்னால விவேகானந்தர் இங்கே கடலில் குதித்து, நீந்தி வந்து... மூன்றுபகல், மூன்று இரவுகள் தியானம் செஞ்சிருக்கார். அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியத்தாய்க்கு, தான் என்ன கைமாறு செய்யவேண்டும் என்ற ஞானோதயம், அவருக்கு இங்கேதான் கிடைச்சிருக்கு. அதற்கு, அவர் குமரித்தாயின் பாதம்பட்ட இடத்தை தேர்ந்தெடுத்தது பொருத்தம்தான். அவரோட சிகாகோ சொற்பொழிவு மிகவும் புகழ்பெற்றது.
விவேகானந்தர் நினைவு மண்டப முகப்பு.
யானைகள் காவலிருக்கும் நினைவு மண்டபத்தில் நுழைஞ்சதும், ஏதோ ஓர் இனம் புரியாத உணர்வு. நுழைவாசல் அஜந்தா,எல்லோரா குகைகளைப்போலவும், நினைவுமண்டபம் பேலூர் ராமகிருஷ்ணா கோவிலைப்போலவும் வடிவமைக்கப்பட்டிருக்கு. உள்ளே சுவாமிஜியின் ஆளுயர வெண்கலச்சிலை கம்பீரமா நிற்குது. முதலில், தியானம் செய்யும் அமர்ந்த நிலையில்தான் சிலை செய்ய ஆலோசிக்கப்பட்டிருக்கு. ஆனால், ரானடே அவர்கள்தான், தியானம் முடிஞ்சு இந்தியாவுக்காக சேவைசெய்ய புறப்பட்ட நிலையில், ஓரடி முன்னே எடுத்து வெச்சமாதிரி வேணும்ன்னு சொல்லி, நிறுவப்பட்டிருக்கு. முதல்ல, மண்டபமெல்லாம் கட்டுற ஐடியா கூட இல்லையாம். கடல்காத்துலேர்ந்தும், விஷமிகள் கிட்டேர்ந்தும் பாதுகாப்பு வேணும்ன்னுதான் மண்டபம் கட்டப்பட்டிருக்கு.
மண்டபத்தில் நிறைய சிற்ப வேலைப்பாடுகள் மனசை நிறைக்குது. கிருஷ்ணர், மயில்ன்னு ஏகப்பட்டது இருக்கு. எருதின் தலையும் யானையின் தலையும் சேர்ந்தமாதிரி ஒரு சிற்பம் கோயில்களில் காணப்படும் . அதுவும் இங்கே நாலஞ்சு இருக்கு. நுழைவாயிலின் அருகே, குருஜி, குருபத்னியான ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாதேவி இவங்களுக்கும் சன்னிதி இருக்கு. கடல் நடுவே இருக்கிறதால ஈரமான உப்புக்காத்தால, சிலையோ, கிரானைட் கற்களோ பாதிக்காம இருக்க ஒரு கெமிக்கலை தினமும் தடவி, அப்புறம் நல்ல தண்ணீரால துடைப்பாங்களாம். இந்த வேலை தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்குதாம். தூண் ஓரத்தில கறுப்பு பெயிண்ட் மாதிரியான சில கெமிக்கல் டப்பாக்கள் இருந்திச்சு. நாகர்கோவில்லயே கிடைக்குதாம்.
ஆச்சரியமா இருக்கு!!!! இவ்வளவு கிரானைட் கற்களையும் தயார் செஞ்சு, படகில் ஏத்திக்கொண்டு வந்து, இங்கே பொருத்தறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க. பக்கவாட்டு வாசல் வழியா வெளிய வந்தா பின்பக்கம் தியான மண்டபத்துக்கு வந்துடலாம். தியானம் செய்ய விரும்புறவங்களுக்கு அருமையான இடமிது. இது, இங்கே கட்டப்பட்டதுக்கும் காரணமிருக்கு. நினைவுமண்டபத்துக்கு பின்பக்கம் பெரிய பள்ளமிருந்திருக்கு. அதை நிரப்ப பொருள் செலவு ஆகும், அதைவிட இந்த இடத்தில் ஒரு ஹால் கட்டீட்டா, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கலாம்ன்னு (சீசனுக்கேத்த 'பழ'மொழி) இங்கே கட்டியிருக்காங்க. பையர் உள்ளேபோய் தியானம் செய்யப்போயிட்டார். கடலைப்பார்த்துக்கிட்டிருக்கிறதை தியானம்ன்னு சொல்லலாம்னா... நான் ஆழ்ந்த தியானத்தில்....
நினைவு மண்டபத்துக்கு பின்னால, சூரியனின் பாதையை கல்லில் வடிச்சு வெச்சிருக்காங்க. உத்தராயணத்தில் ஆரம்பிச்சு தட்சிணாயணம் வரை போறார். காலை நேரம்ங்கிறதால அவ்வளவா வெயில், சூடு இல்லை. பாறையில் அங்கங்கே solar reflective paint-ஆல் பாதை வரைஞ்சு வெச்சிருக்காங்க. அதுமேல நடந்து போனா சூடு தெரியாதாம். தியான மண்டபத்துக்கு வெளிய அந்தப்பாதை ஜில்லுன்னு இருந்தது.. என்னன்னு பாத்தா அப்பத்தான் அடிச்ச ஈரமான பெயிண்ட் மேல நடந்திருக்கேன். போகட்டும்.. என்னோட பாதச்சின்னமும் அங்கே இருக்குன்னு பசங்க கிட்டே பெருமையடிச்சிக்கிட்டேன்.
நினைவு மண்டபத்துக்கு எதிரேதான் புகழ்பெற்ற ஸ்ரீபாத மண்டபம் இருக்கு. 'பொண்ணுங்க ஒத்தைக்காலில் நிற்கக்கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்களே ஏன்னு தெரியுமா'ன்னு அங்குள்ள ஊழியர் கேட்டார். பொண்ணு இடவலமா தலையை ஆட்டுனா. கதைன்னதும் பையரும் ஓடிவந்து நின்னுக்கிட்டார்.குமரியன்னை சிவபெருமானை கரம்பிடிக்க இங்கேதான் ஒத்தைக்காலில் நின்னாங்களாம். சிவனும் ஒத்துக்கிட்டாராம். கல்யாணம் நடந்தா, கடல்கோள் வந்து, நாடு அழிஞ்சிடும் என்பது விதி. உலகத்தை காப்பாத்தணுமேன்னு நினைச்ச நாரதர், அம்மா சார்பில் தூது போய், கணுவில்லாத கரும்பு, கண்ணில்லாத தேங்காய், நரம்பில்லாத வெற்றிலை, இன்னும் இரண்டு பொருட்கள் இதெல்லாம் கல்யாணச்சீரா கொண்டுக்கிட்டு, நடு நிசி முஹூர்த்தத்துக்கு வரணும்ன்னு, சிவன் கிட்ட போய் சொல்லீட்டார். அவரும் ஒத்துக்கிட்டு, இதையெல்லாம் கஷ்டப்பட்டு சேகரிச்சிக்கிட்டு, கிளம்பினார்.
கல்யாணம் நடந்துட்டா, கடல்கோள் வந்துடுமேன்னு பயந்த முருகன், சேவல் உருவெடுத்து, மருங்கூரில் நின்னு கூவினார். பொழுதுவிடிஞ்சாச்சு, முஹூர்த்தம் தவறிப்போச்சுன்னு நினைச்ச சிவன் மறுபடி சுசீந்திரத்துக்கே திரும்பிட்டார். ஏமாந்துபோன கன்யாகுமரி, சமைச்சு வெச்சிருந்த விருந்துச்சாப்பாட்டையெல்லாம் தூக்கி வீசிட்டு, தானும் சிலையா நின்னுட்டாங்களாம். அதனாலதான் கடற்கரை மணலெல்லாம், அரிசி, பருப்பு, கடுகு மாதிரி பல்வேறு நிறங்களிலும், உருவங்களிலும் இருக்குதாம். ஏற்கனவே கேட்ட கதைதான்னாலும் யாராவது கதை சொன்னா கேக்க சுவாரஸ்யமா இருக்குதில்லையா!! அதனால ஒத்தைக்காலில் நின்னா பொண்ணுங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகாதாம். நல்ல கதையா இருக்கே!!!! அப்படீன்னா இப்போ சுனாமி ஏன் வந்தது?.. அவங்க தவம் முடிஞ்சு போச்சா!!!.. சுனாமி வந்த நாளா என் தலைக்குள், இந்தக்கேள்விதான் சுனாமி அடிக்குது.
ஸ்ரீபாத மண்டபத்தில் அம்மனோட பாதத்தை அழகா பூச்சரத்தால் அலங்கரிச்சு வெச்சிருக்காங்க. இங்கே விழும் காணிக்கையெல்லாம் தேவஸ்வம் போர்டுக்குத்தான் சேருமாம். சுத்திலும் பெரிய கல்திண்ணைகள். கடல்காத்தை உள்வாங்கி, குளிர்ச்சியும் ஈரமுமா இருக்கு. கடல்காத்து ஜிவ்வுன்னு அட்டகாசம் பண்ணுது. சுத்திலும் சிங்கங்கள் காவலிருக்க, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம். ரெண்டு மண்டபங்களுக்கும் நடுவால உள்ள முற்றம் போன்ற பகுதியில், திசைகள் குறிக்கப்பட்ட கிரானைட் பதிச்சிருக்காங்க. யாரும் அதுமேல நடந்து போய் பாழ்படுத்திடாம இருக்க பாதுகாப்பு இருக்கு.
விவேகானந்த கேந்திரம் சார்பில் இங்கே ரெண்டு ஸ்டாலும் இருக்கு. அவர் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், கீசெயின்கள், போஸ்டர்கள், இன்னும் என்னன்னவோ இருக்கு. விவேகானந்தர் பாறையிலிருந்து, இன்னொரு படகு திருவள்ளுவர் சிலைக்கு கூட்டிட்டு போகுது. படகுக்காக காத்திருக்கிற நேரத்தில் வெய்யில்ல நிற்க வேண்டாம். அருமையான கூரை போட்ட நடைபாதை இருக்கு.
அதிகாரிகளுக்குன்னு தனி படகு இருக்கு. அடிக்கடி வந்து நிலவரத்தை கவனிச்சுக்குவாங்களாம். கடலிலும் ஒரு பாய்மரப்படகு ஒன்னு சுத்திக்கிட்டே இருக்கு. செய்லிங் பண்ற படகு மாதிரி இருக்கேன்னு பாத்தா அது ரோந்துப்படகுன்னு ரங்க்ஸ் தகவல் கொடுத்தார்.
கொஞ்ச நேரத்துல எங்களுக்கான படகு வந்துசேர்ந்தது. இப்போ திருவள்ளுவரை பார்க்க போலாம்.
31 comments:
//என்னோட பாதச்சின்னமும் அங்கே இருக்குன்னு பசங்க கிட்டே பெருமையடிச்சிக்கிட்டேன். //
நான் போறப்ப உங்க பதம் இருக்கணு பார்க்கறேன் .
உங்க ப்ரென்ட் நல்ல இருக்காருங்க
படங்கள் மிக மிக அருமை
அன்பின் அமைதிச் சாரல் - சுற்றுலா சென்று வந்த பள்ளிக் குழந்தைகள் எழுதும் பயணக் கட்டுரை மாதிரி இல்லாது நகைச்சுவையுடன் எழுதப்பட்ட உரை.
நன்று நன்று - இரசித்தேன்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
உங்களோடு நாங்களும் வந்து உணர்வு. அருமையாய் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். முதலிரண்டு படங்கள் மிகப் பிடித்தன.
படங்களும் கட்டுரையும் அருமை. பாராட்டுக்கள்!
I remembered our trips to Kanyakumari.
கன்னியாக்குமரிக்குப் போய் ரொம்ப நாளாச்சி.. பகிர்வுக்கு நன்றி..
அருமை!
தொடருங்கள். :)
பயணத்தை மீட்கிறேன்.அருமை.
நல்ல பகிர்வு பாஸ்.. ;-)
வாங்க எல்.கே,
என் ஃப்ரெண்ட் கம்பீரமா இருக்காரில்லையா!!
அருமைன்னு சொன்னதுக்கு நன்றி.
வாங்க சீனா ஐயா,
பேராசிரியரே பாஸ்மார்க் போட்டப்புறம் அப்பீல் ஏது :-)). தெரிந்தவரை எழுதுகிறேன் அவ்வளவுதான்.
முதல்வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாங்க ராமலஷ்மி,
இன்னும் இருக்கு. கூடவே வாங்க. படங்களை ரசித்தமைக்கு நன்றி.
படங்களும் கருத்தும் அருமை.
நிறைய விளக்கங்கள்!! எப்படி மறக்காம எழுதுனீங்க? நோட் பண்ணிருந்தீங்களா? (ஆமா, மனசுலன்னு சொல்லிறாதீங்க!!)
ARUMAI! ARUMAI!
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAAL PAIYYAN
அருமையான படங்களோட நல்லா இருக்கு பதிவு..
அன்பின் சாரல், கன்யாகுமாரியின் கதை எனக்கு எப்பவும் சோகம் கொடுக்கும்.
ஏம்பா இப்படியெல்லாம் கதைவிடறாங்க. என்னதான் சாமின்னாலும் அவங்களுக்கும் ஆத்திரம்,சோகம் உண்டு இல்ல.
என்னவோ போங்க.
ஆனா எடுத்த படங்கள் மனசுக்கு நிம்மதி கொடுக்குது.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் அங்க நின்னு காற்றை அனுபவித்தது நிழலாடுது மனசில். நீங்கள்
விளக்கி எழுதியிருக்கும் விதமும் சுவாரஸ்யம். அருமையா இருக்குப்பா.
வாங்க முகிலன்,
இந்தியாவுக்கு வரும்போது ஒரு நடை போய்வாங்க.ஜூனியருக்கு இந்தியாவை அறிமுகப்படுத்த வேண்டாமா..
வரவுக்கு நன்றி.
வாங்க ஷங்கர்,
நன்றிங்க. தொடர்ந்து வாங்க.
வாங்க மாதேவி,
இனிய பயண நினைவுகள் என்னிக்குமே மறக்காது. இல்லீங்களா?..
வரவுக்கு நன்றி.
வாங்க ராஜாராம் அண்ணா,
நன்றி பாஸ்.
வாங்க அக்பர்,
ரசிப்புக்கு நன்றிப்பா.
வாங்க ஹுஸைனம்மா,
கன்னியாகுமரியை பொறுத்தவரை, நான் சின்னவயசிலிருந்தே போய்வந்துக்கிட்டு இருக்கிறதால நிறைய விஷயங்கள் மறக்காது.
வருகைக்கு நன்றிப்பா.
வாங்க ஜூனியர் வால் பையன்,
ஹை.. இப்படி சொல்றதுகூட நல்லா இருக்கு. உங்களுக்கு ஆட்சேபணை இல்லியே?..
ரெண்டே மாசத்துல 100 அடிக்கப்போறீங்க போலிருக்கு. சீக்கிரமே உங்க வலைப்பூவுக்கு வரேன்.
முதல்வரவுக்கு நன்றி.
வாங்க சுசி,
முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வல்லிம்மா,
பேத்தி நலமா?.. மழலைமழை குளுமையா இருக்குமே :-)
என்னதான் சாமின்னாலும், சில சமயம் அவங்களும் மத்தவங்க கைப்பாவை ஆயிடறாங்கன்னுதான், நம்ம புராணக்கதைகளெல்லாம் சொல்லுதே :-(
வரவுக்கு நன்றிம்மா.
அருமை! புகைப்படங்களை சொல்வதா தங்கள் விவரிப்புகளைச் சொல்வதா என்று அசந்து நிற்கிறேன்! :-)
நானும் அங்க சென்று பார்த்திருக்கிறேன்.ஒரு வித அமைதியும் பிரமிப்பும் இருக்கும்.
வாங்க சந்தனமுல்லை,
கருத்துக்கும் வருகைக்கும் நன்றிப்பா.
வாங்க அம்மு,
ஆமாம். அங்கே எவ்வளவு நேரம் இருந்தாலும் போதமாட்டேங்குது மனசுக்கு.
முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
சாரல்,உங்க பதிவுகள் அனைத்துமே நிறைவைக் கொடுக்கின்றன. கடல் கவரும் விதமே தனிதானே,.
வாங்க வல்லிம்மா,
ஸாரிம்மா, லேட்டான பதிலுக்கு.
கடல் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது. ஒவ்வொரு அலையும் ஒரு புதுப்புது சேதியை கொண்டு வருவதுபோலவே இருக்கும் இல்லியா.
நன்றிம்மா.
Post a Comment