Thursday, 29 April 2010

விவேகானந்தர் நினைவுச்சின்னம் ஓர் வரலாறு-3


விவேகானந்தர் பாறை.. ஒரு பறவைப்பார்வை.

கரையிலிருந்து பார்த்தாலே.. கம்பீரமா காட்சி தரும் விவேகானந்தர் பாறையையும் , திருவள்ளுவரையும், கிட்டக்க போய் தரிசிக்கணும்ன்னு ஆசைப்படாதவங்க யாரும் இருக்கமுடியாது. கடலில் வெறுமனே இருந்த ரெண்டு பாறைகளுக்கும், இவங்களாலே இப்போ மவுசு கூடிப்போச்சு. பல்வேறு தடைகளையும் கடந்துதான் விவேகானந்தருக்கான நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டிருக்கு. ஸ்ரீ ஏக்நாத் ரானடே அவர்கள் இதற்கான முழு முயற்சியையும் எடுத்துக்கொண்டு செய்து முடிச்சிருக்கார்.

ஆனந்தரும், வள்ளுவரும் வருவதற்கு முன்பு...

ஜனவரி 1963 முதல், ஜனவரி 1964 வரையிலான அந்த ஆண்டு முழுவதும் ,சுவாமி விவேகானந்தரின் நூறாவது பிறந்த நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சுவாமிஜி சிகாகோ போகும்முன்பு, கன்யாகுமரி வந்து கடலின் நடுவே இருக்கும் பாறையொன்றில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டதும், தன் வாழ்க்கையின் லட்சியம் என்னவென்று கண்டு கொண்டதும், அதன்பின் ,அவர் சிகாகோவில் ஆற்றிய உலகப்புகழ் பெற்ற சொற்பொழிவும் ,நமக்கெல்லாம் தெரிந்ததுதான். அந்தப்புண்ணிய பூமியில், அவருக்கொரு நினைவுச்சின்னத்தை எழுப்புவதே, அவருடைய நூற்றாண்டை நன்முறையில் பொருத்தமாக கொண்டாடுவதாகும் ...என்று முடிவு செய்யப்பட்டது.

தேவி கன்னியாகுமரி, சிவபெருமானின் கரம் பற்றுவதற்காக, தன் பாதம்பதித்து கடும்தவம் செய்ததால் 'ஸ்ரீ பாதப்பாறை' என்று அழைக்கப்பட்ட பாறையைத்தான் சுவாமிஜி தானும் தவம் செய்வதற்காக தேர்ந்தெடுத்தார் என்று அறிந்ததும், நாமும் அங்கே சென்று அந்த புண்ணியபூமியை தரிசிக்கவேண்டும் என்று எல்லோருக்கும் ஆவல் வந்தது. குமரி மக்கள் பாறையின் அருகாமையில் இருந்ததாலும், பாறை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்ததாலும், இத்திட்டத்தை அவர்களே முன்னின்று நிறைவேற்றி வைக்க முனைந்தனர். குழு ஒன்று அமைக்கப்பட்டது.அவர்கள் நினைத்ததெல்லாம் ஒரு நினைவுச்சின்னமும், பாறைக்கு சென்றுவர ஒரு பாதையும் வேண்டும் என்பதுதான்..

கன்யாகுமரிக்குழுவினரும், சென்னை அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஆலோசனை தொடங்கியதும், விவேகானந்தப்பாறையில், நினைவுச்சின்னம் அமைக்கப்படவிருக்கும் செய்தி எங்கும் பரவியது. சில எதிர்ப்புகளும் அங்குள்ள மக்களிடமிருந்து வந்தது. அதே நேரத்தில், கன்யாகுமரி தேவியின் பாதச்சின்னம் அந்தப்பாறையில் இருந்ததால், அந்தப்பாறை தங்களது சொத்து என கன்யாகுமரி தேவஸ்வம் போர்டும் உரிமை கொண்டாடியது. ஆகஸ்ட் மாதத்தில் அமைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டக்குழு , முதல்வேலையாக பாறையில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கும், கரையிலிருந்து பாறைக்கு ஒரு பாலம் அமைப்பதற்கும் அனுமதி வேண்டியும், தற்காலிகமாக இலவச படகுப்போக்குவரத்து ஆரம்பிப்பதற்கும், தேவஸ்வம் போர்டுக்கு விண்ணப்பித்தது.

போர்டும் அனுமதி வழங்கியது. இப்பணிகள் முடிந்தபின் எல்லாவற்றையும் தேவஸ்வம் போர்டுக்கு கொடுத்து விடவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தனர்.கமிட்டியும் இதை ஏற்றுக்கொண்டது .கமிட்டியினர் படகுப்போக்குவரத்தை ஆரம்பிக்க, தூரத்திலிருந்து பார்த்து திருப்தி பட்டுக்கொண்டு,நம்மால் அங்கு செல்ல முடியாது என்று ஒதுக்கிவைக்கப்பட்ட பாறையை ,தினந்தோறும் மக்கள் சென்று பார்க்க ஆரம்பித்தனர்.

ஸ்ரீ ஏக்நாத் ரானடே, நினைவுச்சின்ன கமிட்டியின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். நிதி திரட்டுவதிலிருந்து, எதிர்ப்புகளை சமாளிப்பதுவரை அவர் பல நிலைகளை கடந்து வரவேண்டியிருந்தது. கடற்கரையில் நினைவுச்சின்னம் அமைத்துக்கொள்ளலாம். பாறையில் தேவையில்லை. அது இயற்கை அழகை கெடுத்து விடும் என்று அரசு தரப்பில் முதலில் ஆட்சேபணை கிளம்பினாலும், பிற்பாடு ஆட்சேபித்தவர்களே, ஆதரவும் காட்டினார்கள். நினைவுச்சின்னத்துக்கான கற்கள், பல நூற்றாண்டுகள் வரை தாக்குப்பிடிக்குமா என்று பரிசோதனை செய்து பார்க்கப்பட்டன. சாம்பல் நிறக்கற்கள் அம்பாசமுத்திரத்திலிருந்தும், சிவப்பு நிறக்கற்கள் தூத்துக்குடியிலிருந்தும்... கொண்டு வரப்பட்டன. காந்திமண்டபத்துக்கு முன்னாலிருந்த மைதானத்தில் ,கற்கள் மண்டபத்துக்கு வேண்டிய வகையில் செதுக்கப்பட்டு, படகில் கொண்டு செல்லப்பட்டன. பின்பு, அவை ஒன்றின்மீது ஒன்று அடுக்கப்பட்டு, நினைவாலயமும், ஸ்ரீ பாத மண்டபமும் கட்டப்பட்டன.

ஸ்தபதி திரு எஸ்.கே. ஆச்சாரி அவர்கள் இந்த நினைவாலயத்தை வடிவமைத்தார். ஸ்ரீ சோனா வாடேகர் அவர்கள், விவேகானந்தரின் திருவுருவச்சிலையை வடிவமைத்திருக்கிறார்.லட்சியத்தை அடைந்திட, தியானத்திலிருந்து எழும் சுவாமிஜியின் தோற்றம் தேர்ந்தெடுக்கப்பட்டது.இரண்டு சிலைகள் செய்யப்பட்டனவாம். இப்போது இருக்கும் சிலையில் உள்ள சுவாமிஜியின் கண்பார்வை ஸ்ரீபாதத்தில் விழும்படியாக வடிவமைக்கப்பட்டது. இன்னொரு சிலை சற்றே உயரம் கூடிப்போனதால் , பொருத்தமற்றுப்போனது. பின்னாளில் அது விவேகானந்தபுரத்தில் நிறுவப்பட்டது என்று செய்தி.

மிகுந்த உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தின் துவக்கவிழா 2-9-1970 அன்று நடைபெற்றது.

இவ்வளவு சிறப்புள்ள நினைவு மண்டபத்தை பாக்கத்தான் இப்போ போய்க்கிட்டிருக்கோம். கரையிலிருந்து 400 மீட்டர்கள் தொலைவுதான். மோட்டார்படகுகள் இல்லாத சமயத்தில் கட்டுமரத்தில்தான் வந்திருக்காங்க. எவ்வளவு த்ரில்லிங்கா இருந்திருக்கும்... சின்னப்புள்ளையில நானும், சும்மா ஜாலிக்காக இங்கே கட்டுமர சவாரி செஞ்சுருக்கேன். சும்மா.. மூணு, நாலு கட்டைகளை சேர்த்துக்கட்டுன படகுதான் அது.


விவேகானந்தர் பாறைக்கு பயணம். ரொம்ப கஷ்டப்பட்டு அப்லோட் செஞ்சது.

படகுலேர்ந்து இறங்கி, லைஃப் ஜாக்கெட்டை வீசிட்டு நுழைவுச்சீட்டு எடுக்கப்போனோம். பக்கத்துச்சுவரில் தினந்தோறும் சூரியஉதயம், அஸ்தமனம் ஆகும் நேரத்தை கடிகாரம் காட்டுது.

சூரிய உதய, அஸ்தமன நேரங்கள்.

காலணிகளை ஒப்படைச்சுட்டு, படியேறினா, இடதுபக்கம் விவேகானந்தர் மண்டபம், வலது பக்கம் ஸ்ரீபாத மண்டபம். இதன் ரெண்டு பக்கமும் ஹெலிபேட் இருக்கு. விவேகானந்தர் மண்டபம் கொஞ்சம் உயரமான பகுதியில் இருக்கு. இதன் பின்பகுதியில்தான் தியானமண்டபம் இருக்கு. முதலில் விவேகானந்தர்.......

22 comments:

LK said...

நல்ல அருமையான விளக்கம். படத்தை வீட்லதான் பார்க்க முடியும். பார்த்தப்புறம் ஒரு கமெண்ட் போடறேன் மறுபடியும். நன்றி

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

விவேகானந்தரின் நினைவு சின்னம் பற்றியும் அங்கு சென்று வந்த அனுபவம் பற்றியும் மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் .பகிர்வுக்கு நன்றி !

Chitra said...

I used to visit Kanyakumari, every summer. I miss those trips very much. Thank you for a nice post.

அமைதி அப்பா said...

//விவேகானந்தர் பாறைக்கு பயணம். ரொம்ப கஷ்டப்பட்டு அப்லோட் செஞ்சது.//

திருவள்ளுவரின் பிரமாண்ட சிலையை, இவ்வளவு நேர்த்தியாக, நான் இதற்கு முன் பார்த்ததில்லை. இன்னும் கொஞ்ச நேரம் கூடுதலாக காட்டியிருக்கலாமே!
பாராட்டுக்கள் மேடம்.

நிறைய தகவல்கள் தந்துள்ளீர்கள், மகிழ்ச்சி.

ஹுஸைனம்மா said...

தொடருங்க; நல்லாருக்கு. முதல் விளக்கமே புதுசு எனக்கு. இன்னும் செய்திகளை எதிர்பார்க்கீறேன்.

thenammailakshmanan said...

விவேகனந்தர் பாறைக்குப் போய் இருக்கேன் ....ஆனா விஷயங்கள் புதுசு நன்றி அமைதிச்சாரல்

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க சங்கர்,

அங்கே எப்போ போனாலும்,முதல்தடவையா போனதுமாதிரியே இருக்கும்.

வருகைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க சித்ரா,

நாங்களும் ஒருகாலத்துல மாசத்துக்கு ரெண்டு தடவையாவது போயிட்டு வருவோம்.ரொம்ப அழகான இடம் அது. இல்லையா!!!

கொசுவத்தி ஏத்திவெச்சிட்டேன்னு நினைக்கிறேன் :-)))

வந்ததுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க அமைதி அப்பா,

என்னுடைய டிஜிட்டல் கேமிராவுல சின்ன அளவிலான வீடியோதான் எடுக்கமுடியும். இதை இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாம்தான், ஜன்னல் சீட் கிடைக்கலை :-)))

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

நானும் நிறைய விஷயங்கள் புதுசா தெரிஞ்சுக்க முடிஞ்சது, அங்குள்ள ஊழியர் மூலமா.

தொடர்ந்து வாங்க.

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தேனம்மை,

அடுத்த இடுகையிலும் விவேகானந்தர் பாறைதான். தொடர்ந்து வாங்க.

நன்றிங்க.

அம்பிகா said...

நல்ல பகிர்வு. பலதடவைகள் பார்த்திருந்தாலும், பகிர்வை படிக்க சந்தோஷமாயிருந்தது. தொடருங்கள்.

அமைதிச்சாரல் said...

வாங்க அம்பிகா,

பார்க்கப்பார்க்க சலிக்காத இடம்தான் கன்னியாகுமரி. தொடர்ந்து வாங்க.

நன்றி.

ரிஷபன் said...

அருமையான பதிவு.. தெரியாத பல விவரங்கள்.. நன்றி நண்பரே

malar said...

இதுவரை கேட்டிராத தகவல்கள்...

அமைதிச்சாரல் said...

வாங்க ரிஷபன்,

நல்லாருக்கீங்களா?..

இன்னும் நிறைய அறியக்கிடைத்தது. நீளம் கருதி விட்டுவிட்டேன்.

வரவுக்கு நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க மலர்,

முதல்வரவா!!.. நன்றி.

தொடர்ந்து வாங்க.

அப்பாவி தங்கமணி said...

ஸ்கூல் days ல ஒரு முறை அங்க போய் இருக்கேன்.... அந்த ஞாபகம் வந்துடுச்சு. நல்ல தகவல் பதிவும் கூட.... வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

வாங்க அப்பாவி,

ஆஹா.. இளசான கொசுவத்தியா.. இப்பவும் அந்தப்பக்கங்களில் ஸ்கூல்
பிக்னிக்ன்னாலே கன்யாகுமரிதான் லிஸ்டில் ஃபர்ஸ்ட். நாங்க போயிருந்தப்பவும் நிறைய வரிசைகளைப்பார்த்தேன்.

வருகைக்கு நன்றி.

நாஞ்சில் பிரதாப் said...

ஆகா... இம்புட்டு மேட்டரு இருக்கா???ங்க பொறந்து வளர்ந்த எனக்கே இப்பத்தான் தெரியும்...
அபகிர்வுக்கு ரொம்ப நன்றிங்க... இன்னம் இருந்தா சொல்லுங்க...

அமைதிச்சாரல் said...

வாங்க நாஞ்சில்,

இதுதான் ஆரம்பம். இப்பிடியே நூல் பிடிச்சுப்போனா ஒரு ஒன்பது பதிவுகள் வரும். படிச்சுட்டு சொல்லுங்க.

http://amaithicchaaral.blogspot.com/2010/04/1.html

நன்றிப்பா.

LinkWithin

Related Posts with Thumbnails