Thursday, 15 April 2010

தால்பீட்.

பிக்னிக் போறதுக்கு முன்னால சத்தான சாப்பாடு சாப்பிட்டு தெம்பா புறப்படலாம். கம்பு, கேழ்வரகு, சோளம் மாதிரியான தானியங்கள் இப்போல்லாம் மறக்கப்பட்டு வருது.களி, கூழ்ன்னு செஞ்சு கொடுத்தா, பசங்களை சாப்பிடவைக்க முடியறதில்லை. தால்பீட் செஞ்சு கொடுத்தா, தானாவே சாப்பிடுவாங்க. இது ஒரு மஹாராஷ்ட்ரியன் சாப்பாடு.

தேவையான பொருட்கள்:

கலந்த பயிறு வகைகள் -1 கப்.

கோதுமை மாவு - 4 கப்.

கடலை மாவு-1 கப்.

பச்சரிசி மாவு-1 கப்.

சோளமாவு+ராகி அல்லது ஏதாவது ஒரு தானியமாவு-1கப்.

பெரிய வெங்காயம்-2.

பச்சைகொத்துமல்லி- 1கட்டு.

மிளகாய்த்தூள்-காரத்துக்கேற்ப (சுமார் 2 டேபிள் ஸ்பூன் அளவு போதும்)

உப்பு- சுவைக்கேற்ப

முதலில் அடுப்பை பற்ற வைத்துக்கொள்ளவும்.

கலந்த பயிறுவகைகளை ஒரு வாணலியில் போட்டு அடுப்பில் ஏற்றி, மிதமான தீயில் வாசனை வரும்வரை வறுத்து,பின் மிக்ஸியில் நல்லா பவுடராக அரைச்சுக்கோங்க.



வெங்காயத்தையும், கொத்துமல்லியையும் பொடியாக நறுக்கி வெச்சிக்கோங்க.

ஒரு அகன்ற பாத்திரத்தில், கோதுமை மாவு, கடலைமாவு, அரிசிமாவு எல்லாவற்றையும் போட்டுக்கொள்ளவும். (முதலில் சல்லடையில் சலிக்கவும்ன்னு சொல்லவேண்டாம்தானே)

பின் பயிறுமாவை அதில் கலக்கவும்.

அதன்பின் வெங்காயம்,கொத்துமல்லி இலைகளை அதில் போடவும்.

கடைசியாக மிளகாய்த்தூள், உப்பு போட்டு அதன் தலையில் ரெண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றவும்.

முதலில் மாவுகள்+வெங்காயம்+கொத்துமல்லி இலை+etc கலவையை நன்றாக கலந்து கொள்ளவும்.

பின் வேண்டிய அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவைவிட தளர்வாக பிசைந்து கொண்டு ,சாத்துக்குடி அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.




தோசைக்கல்லை சூடாக்கி,ஒரு ஸ்பூன் எண்ணையை அதில் விடுங்க. இப்பத்தான் உங்க வீரதீர பராக்கிரமத்தை காட்டவேண்டிய சந்தர்ப்பம் வருது. மாவு உருண்டையை தோசைக்கல்லில் வைத்து,அதிலேயே அடைபோல் கொஞ்சம் கனமா தட்டணும்.கொஞ்சம் தண்ணீரை தொட்டுக்கிட்டா மாவு கையில் ஒட்டாது. தால்பீட்டை ஈஸியா தட்டலாம்.

இப்ப, தால்பீட்டை சுற்றியும் அதுமேலாகவும் எண்ணெய் விட்டு, ஒரு மூடியால் மூடி, சிறு தீயில் வேகவிடுங்க. ரெண்டு நிமிஷம் கழிச்சி, திறந்துபார்த்தா.. லேசாக நிறம் மாறியிருக்கும். இப்ப, தால்பீட்டை திருப்பி போட்டு, சுத்திலும் எண்ணெய் விட்டு மூடி வையுங்க.இன்னொரு ரெண்டு நிமிஷம் கழிச்சு திறந்து செக் பண்ணிக்கோங்க.ரெண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து, தேங்காய் சட்னி, ஊறுகாயுடன் பரிமாறலாம்.


வறுத்த பயிறுவகைகள், சோளம், ராகி அல்லது ஏதாவது தானியங்கள் கலவையை மிஷினில் கொடுத்து,அரைச்சு வெச்சிக்கிட்டா, மற்ற பொருட்களை சேர்த்து சீக்கிரமே இதை தயார் செஞ்சிடலாம். கொஞ்சம் ஹெவியான சாப்பாடு இது.விரும்பினால் இஞ்சியையும் நறுக்கி சேர்க்கலாம்.கொஞ்சம் மெல்லிசா தட்டி, மொறுமொறுன்னு சுட்டு பேக் பண்ணிஎடுத்துக்கிட்டா, ஒரு நாள் பிக்னிக்குகளுக் கு தாங்கும்.ரொம்ப நேரத்துக்கு பசிதாங்கும்.

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். சத்தானது. (சமையல் குறிப்புன்னா இதெல்லாம் சொல்லணுமாம்).

27 comments:

எல் கே said...

//முதலில் அடுப்பை பற்ற வைத்துக்கொள்ளவும்//
முக்கியமானது மக்களே
//மிதமான தீயில் வாசனை//
தீயில் எப்படி வாசனை வரும் ???
//அதன் தலையில்//
அதுக்கு தலை இருக்க??
//மாவு உருண்டையை தோசைக்கல்லில் வைத்து,அதிலேயே அடைபோல் கொஞ்சம் கனமா தட்டணும்.//
ஒரு பிளாஸ்டிக் கவரோ இல்லை இலையோ வச்சி அதில தட்டி கல்லில போடலாமா ?
//ஒரு நாள் பிக்னிக்குகளுக் கு தாங்கும்//
அப்பா நீங்க பிக்னிக் போகலையா

துபாய் ராஜா said...

நம்ம ஊரு அடை தோசை மாதிரி பல பயிறுகள் சேர்ந்த தால்பீட் பார்க்கவே பிரமாதமா இருக்கு... வீட்ல சொல்லி செய்ய சொல்லிடுவோம்...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!

அம்பிகா said...

மிக பயனுள்ள சமையல் குறிப்பு. செஞ்சி, சாப்பிட்டு பாத்துட்டு நல்லாயிருந்துதான்னு சொல்றேன்.

Anonymous said...

நல்ல ஐடியாங்க .

பனித்துளி சங்கர் said...

அருமையான உணவைப் பற்றி . மிகவும் தெளிவான செய்முறை விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் . மிகவும் சிறப்பாக உள்ளது .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

அமைதி அப்பா said...

வணக்கம் மேடம்,
பெயரைப் பார்த்துதான் உங்கள் பிளாக்குக்கு வந்தேன், மிகச் சிறப்பாக எழுதுகிறீர்கள்.

தால்பீட் செய்ய அமைதி அம்மா தயாராகிவிட்டார்கள்.
நன்றி.

Chitra said...

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். சத்தானது. (சமையல் குறிப்புன்னா இதெல்லாம் சொல்லணுமாம்).

....... ha,ha,ha,ha,ha,... super!

GEETHA ACHAL said...

தால்பீட் மிகவும் அருமையாக இருக்கின்றது..சத்தான சமையல்...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துபாய்ராஜா,

அடை மாதிரிதான். ஆனா,ருசியில் நிறைய வித்தியாசம் இருக்கும். செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டு சொல்லுங்க.

வந்ததுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே.

வாசனைதானே.... கிட்ட்ட்ட்ட்டக்க போய், பிடிச்சுப்பாருங்க. லேசா ஒரு கருகல் வாசனை வரும். தங்கமணி வந்து பார்த்துட்டு,மூக்கிலேயே குத்தினா நான் பொறுப்பில்லை :D :D :D.

ப்ளாஸ்டிக் கவர் வேண்டாம். வாழைஇலை ஓகே.அதெல்லாம் கோழைகளுக்கானது. நீங்க எப்படி!!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க உலவு,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

செஞ்சு சாப்பிட்டு பார்த்துட்டு, கட்டாயம் சொல்லுங்க.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சின்ன அம்மிணி,

இப்படி ஏதாவது செஞ்சுதான், இப்போதைய பசங்களுக்கு ஊட்டத்தை கொடுக்க வேண்டியிருக்கு.

கம்பு,சோளம் எல்லாம் பழையகால ஆட்கள் சாப்புடுறது, இல்லைன்னா டயட் உணவுன்னு சொல்லிட்டு ஓடிடுதுங்க.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பனித்துளி சங்கர்,

சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

தால்பீட் செஞ்சு சாப்பிட்டுவிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

உங்க ஏ.சி யை பத்தின பதிவு பிரமாதம்.

நன்றிங்க,வருகை தந்ததுக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

rules are rules இல்லையா :-)))

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கீதா ஆச்சல்,

நன்றிங்க, முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

எல் கே said...

//தங்கமணி வந்து பார்த்துட்டு,மூக்கிலேயே குத்தினா நான் பொறுப்பில்லை :D/

தங்கமணி இருந்த நம்ம அடுக்களை பக்கம் போற வேலையே இல்ல.

//கோழைகளுக்கானது. நீங்க எப்படி!!!//
அப்படி இல்ல தெரிஞ்சிகிட்டேன்

நானானி said...

தால்பீட்! புதுப்பெயர்!
தேவையான பொருட்களும் செய்முறையும் சுலபமாயிருக்கு. கட்டாயம் செஞ்சு பாத்துட்டு “நல்லாருக்குன்னே” சொல்கிறேன். ஏன்னா நல்லாவேஇருக்கும்.

நானானி said...

அதென்ன? ’பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் புடிக்கும்?’
நடுவிலிருப்பவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

ஆஹா!!! நீங்க சாப்பிட மட்டும் கிச்சனில் எட்டிப்பார்ப்போர் சங்கத்தலைவரா?. :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நானானிம்மா,

புடிக்குமோ,புடிக்காதோன்னு டென்ஷன் பட்டுக்கிட்டே,செஞ்சு கொடுத்துக்கிட்டு இருக்கத்தானே நமக்கு நேரம் சரியா இருக்கு.இதுல எங்கே ரசிச்சு சாப்பிடுறது!!

நல்லாருக்குன்னே சொல்லுங்க.மும்பைப்பக்கம் வந்திருப்பதால் அனேகமா இது உங்களுக்கு பரிச்சயப்பட்டதாகவே இருக்கும்.

நன்றி.

sasikumar said...

ada pinniteenga romba useful..

thanks

sasi

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப நல்ல குறிப்பு சாரல். உண்மையிலியே சத்தானது. ஜீரணத்துக்கு இஞ்சித் தொகையலையும் சேர்த்துக்கிட்டா நல்லதோ.
நம்ம அடைக்கு வெல்லம் ,வெண்ணெய் தொட்டுக்கிற மாதிரி, இதையும் செய்து பார்க்கணும்.
பொண்ணுகிட்டவும் சொல்லறேன்,.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

ஈஸியா செய்யக்கூடியதுதான் இது.

முதல்வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

ஸாரி. கரன்ட்டைக்கண்டா நெட்டைக்காணோம். வலையைக்கண்டா கரன்ட்டைக்காணோம்ன்னு ஆகிப்போச்சு. அதான் ரெண்டு நாள் தாமதம்.

இஞ்சி நறுக்கிச்சேத்துக்கலாம். வெண்ணை ஓகே. வெல்லம்,சர்க்கரையும் எடுபடவில்லை. வேர்க்கடலைத்துவையல் அருமையா ஜோடி சேருது இதுகூட.

நன்றிம்மா.

LinkWithin

Related Posts with Thumbnails