சிலபல வருடங்களுக்கு முன்னால், மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு மும்பைக்கு ரயிலேறினப்ப, என்னுடைய இந்தி புத்தகம் இருக்கையில் எனக்கென்ன கவலைங்கற தைரியமும் வித்தவுட்டில் என்னோட மும்பைக்கு வந்து இறங்குச்சு. ஏன்னா, மும்பையைப்பத்தி ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி பயமுறுத்தியிருந்தாங்க. இங்க வந்தப்புறம்தான் தெரிஞ்சுச்சு, வெறுமனே இந்தியை வெச்சிக்கிட்டு காலத்த ஓட்டமுடியாது, 'மராட்டி'ங்கற இன்னொரு வில்லனையும் சமாளிக்க வேண்டியிருக்கும்ன்னு.. வல்லாரைபொறியல்(வரலாறு புவியியலுக்கு நாங்க வெச்ச செல்லப்பேரு)வகுப்புகளை கவனிச்சுருந்தாத்தானே மஹாராஷ்ட்ரத்துல மராட்டிதான் தாய்மொழிங்கற உண்மை ஞாபகம் இருந்திருக்கும்.
இருந்தாலும், இந்தியில அனா, ஆவன்னாலேர்ந்து அஹன்னா வரைக்கும், அப்புறம் ஒண்ணு ரெண்டு லேர்ந்து இருபத்தஞ்சு வரைக்கும் நாமதான் பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கோமே.. சமாளிச்சுரலாம்ன்னு ஒரு நம்பிக்கை அந்த குளிர்காலத்துலயும் துளிர்விட்டு பூ பூத்துச்சு..அது ஏன் அத்தோட நிறுத்திட்டேன்னு நீங்க கேக்காம தலைதெறிச்சு ஓடினாலும், பிடிச்சு ஒக்காரவெச்சு சொல்லுவேன்ல..
ஒன்பதாம் வகுப்பு முடிகிற தருணத்தில்தான், எங்க ஸ்கூல்ல இந்தி வகுப்புகள் நடக்குதுன்னும், பரீட்சையெல்லாம் வெச்சு பாஸானவங்களுக்கு சர்டிபிகேட் கொடுப்பாங்கன்னும் தெரியவந்துச்சு. சரி.. ஒரு சர்ட்டிபிகேட்டை நாமளும் வாங்கிவெச்சா அப்புறம் ரிசர்வ் வங்கில கவர்னர் வேலைக்கு போகும்போது கையெழுத்துபோட ஒத்தாசையா இருக்குமேன்னு வகுப்பில் சேர்ந்துவெச்சேன். 'வாணாம். அப்புறம் பொழுதன்னிக்கும் இதையே கட்டிட்டு அழணும். வழக்கமான பாடங்களை படிக்க நேரமிருக்காது'ன்னு ஏற்கனவே இந்தி படிச்சிட்டிருந்த, நண்பிகள் என்ற பெயரில் உலாவந்துக்கிட்டிருந்த ஜெலுசில்கள் பயமுறுத்துனாங்க.. நா ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்துடுவேனோன்னு அவங்களுக்கெல்லாம் பொறாமை.
வகுப்பில் சேர்ந்ததுமே, முதல்வேலையா என்பெயரை இந்தியில் எப்படி எழுதணும்ன்னு ப்ராதமிக் முடிச்சிருந்த ஒரு ஜெலுசில் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். நாளப்பின்ன, கையெழுத்து கூட போடத்தெரியாத கைநாட்டுன்னு வரலாறுல நம்மை தப்பா பதிஞ்சுடக்கூடாதில்லியா!!.. எம்பேருதான் அவளுக்கும், ஆனாலும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட அவ சொல்லித்தந்ததும், அதையே அஞ்சாறு வருஷமா நான் கடைப்பிடிச்சதும், அப்றம் இங்கே வந்தப்புறம் 'ஞஞஞ' வானதும் வரலாற்றிலிருந்து இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்கள் :-))). அப்றம் பத்தாம் வகுப்புக்கு போனதும், பொதுத்தேர்வை காரணம் காட்டி ரிசர்வ் வங்கிக்கனவு உடைக்கப்பட்டது. நஷ்டஈடா தங்கவங்கி கூட கிடைக்கலை :-))
இங்கே வந்தப்புறம், முதல் சிலமாதங்கள் நல்லாத்தான் போச்சு.. அக்கம்பக்கத்துல யாராச்சும் மராட்டியில ஏதாவது கேட்டா சின்ன சிரிப்போட நகர்ந்துடுவேன்.மராட்டி அப்புறமா கத்துக்கலாம். மொதல்ல இந்தியை ஒருவழி செய்யலாம்ன்னுட்டு வீட்ல இருக்கற நேரங்கள்ல என்னோட புத்தகத்தை வாசிக்கிறதும், ரங்க்ஸ் வந்தப்புறம் அர்த்தம் தெரிஞ்சுக்கிட்டு அந்த வார்த்தைக்கு பக்கத்துல எழுதிவெச்சுக்கிறதுமா என்னோட மொழியறிவு வளர ஆரம்பிச்சுச்சு. படிச்சதை பரிசோதனை செஞ்சு பார்க்க அக்கம்பக்கத்து குழந்தைகள் ஆப்டாங்க. அவங்க என்னத்தையாவது கேக்க, நான் என்னத்தையாவது சொல்லிவைக்க, அதுங்க பரிதாபமா முழிக்கும் :-). ஆனாலும் ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸாயிட்டோம் :-)). அவங்க வீட்டுக்கு என்னத்தையாவது வாங்கறதுக்கு கடைக்கு போனா, எங்கிட்ட வந்து, 'ஆன்ட்டி, ஐ கோயிங் ஷாப். யூ வாண்ட் வாட்?'ன்னு கேட்டுட்டு போகும்.
மொழியறிவை வளர்த்துக்க நான் கடைப்பிடிச்ச இன்னொரு வழி.. தூர்தர்ஷன். கேபிள்டிவி, மெட்ரோல்லாம் வர்றதுக்கு முன்னாடி மத்தியானம் ஒருமணி நேர நிகழ்ச்சியில சீரியல், சமையல்ன்னு கலந்துகட்டி அடிப்பாங்க. கர்மசிரத்தையா, அதுல வர்ற பொருட்கள், அதோட பேரு, சிலபல வினைச்சொற்கள் இதெல்லாம் ரொம்பவே கவனிச்சு வெச்சிக்கிட்டு, அர்த்தத்தை ஆராயறதுதான் வேலை. ஆச்சு.. அரைகுறை ட்ரெயினிங் போதும்.. இனி களத்துல இறங்கிடவேண்டியதுதான்னு நானே மார்க்கெட் போக ஆரம்பிச்சேன். ஆகவே மக்களே ஒரு புது மொழியை கத்துக்கணும்ன்னா டிவி, பக்கத்துவீட்டு பசங்க, மட்டுமல்ல சமயத்தில் நடைமுறை வாழ்க்கையும் உதவிசெய்யும். வீட்டுக்குள்ளயே ஒளிஞ்சு உக்காந்துருந்தீங்கன்னா ஒண்ணையும் கத்துக்கமுடியாது :-))))
பின்ன அளவுகளான கால்,அரை,முக்காலுக்கு என்ன சொல்லணும்ன்னு தெரியாது, காய்கறிகளோட பேரும் ஓரளவுக்குத்தான் தெரியும். இருபத்தஞ்சு வரைக்கும்தான் எண்களும் தெரியும். இப்படி எல்லாத்துலயும் அரைக்கிணறு தாண்டி அந்தரத்துல நிக்கிற நிலைமை. இதுல கொடுமை என்னன்னா, மார்க்கெட்ல, வெங்காயமும் கடலைமாவும் மாதிரி இந்தியும் மராட்டியும் கலந்து மணக்கும். ரெண்டுமொழியையும் கலந்துதான் பேசுவாங்க.'காய் பாஹிஜே தும்கோ'ன்னு அவங்க கேக்கறப்ப காய்தாம்ப்பா வேணும்ன்னு வாய்வரைக்கும் வர்ற வார்த்தைகளை அப்படியே முழுங்கிடுவேன். தூர்தர்ஷன் கொடுத்த ட்ரெயின் கடைசி ப்ளாட்ஃபார்முக்கு ஓடிப்போயிடுச்சு.
என்ன செய்வேன்னா... காய்கறிகளை பரிசோதனை செய்றமாதிரி பில்டப் கொடுத்துக்கிட்டே மத்தவங்க வாங்கறப்ப என்ன பேசிக்கிறாங்க, தராசில் என்ன எடைக்கல் விழுதுன்னு பார்த்து மனசில் பதிச்சிக்கிட்டு அப்றம் அதையே சொல்லி வாங்குவேன். இதனால சிலசமயங்கள்ல நூறுகிராமுக்குமேல அதிகம் தேவைப்படாத கொத்தவரங்காயை அரைக்கிலோ வாங்கிட்டு முழிச்சதும் உண்டு. ஏன்னா நூறுகிராமுக்கு என்ன சொல்லணும்ன்னு தெரியாதே :-)))). முக்கால் கிலோ வேணும்ன்னா மொதல்ல அரைக்கிலோ போடச்சொல்லிட்டு அப்றம் அப்பத்தான் ஞாபகம் வந்தமாதிரி 'அவுர் பாவ்கிலோ'ன்னு சொல்லுவேன். கொஞ்ச நாள்ல ரங்க்ஸுக்கே வகுப்பு எடுக்கற அளவுக்குவளந்தது தனிக்கதை.
ஏதாவது வாங்கிட்டு காசுகொடுக்கறப்பவும் இந்த மொழிப்பிரச்சினை ஈரக்கூந்தலை விரிச்சுப்போட்டுக்கிட்டு நிற்கும். அவங்க சொல்ற எண் இருபதுக்குள்ள இருந்திச்சின்னா, யோசிக்காம இருபது ரூபாயை எடுத்து நீட்டி பிரச்சினையை ஹேர்ட்ரையர் போட்டு காய வெச்சிடுவேன். இப்பத்தான் கால், அரை, முக்கால், முழுசுன்னு எல்லாமும் கொஞ்சம் பிடிபட்டுடுச்சே.. ஆனா, எனக்கு கண்டம் இருபத்தஞ்சுலேயும் முப்பதுலேயும் போய் கும்மியடிச்சிட்டிருக்கும். பீஸ்ன்னா இருபது.. தீஸ்ன்னா முப்பது, ஏற்கனவே கடைக்காரர் சொல்றது பீஸா, தீஸான்னு புரியாம நான் நொந்து பீஸ்பீஸாகிட்டிருப்பேன். இந்த லட்சணத்துல ஒரு நாள் பஞ்ச்வீஸ்ன்னு ஒருவார்த்தைய கேட்டதும் ஆடிப்போயிட்டேன். 'ஹாங் ஜீ'ன்னு நான் முழிச்சப்பவே அவருக்கு மத்ராசின்னு புரிஞ்சிபோச்.. 'பச்சீஸ்.. ட்வெண்டிஃபாயிவ்'ன்னு முழிபேர்த்தார்.இருபத்தஞ்சை மராட்டியில சொல்றாராம் :-)))))
இந்த பீஸும் தீஸும் இன்னிக்கும் காமெடி பீசாக்கிக்கிட்டிருக்கு. முக்கியமா மீட்டர் சிஸ்டம் இல்லாத ஆட்டோரிக்ஷாவுல, எவ்ளோன்னு கேக்கறப்ப, அலட்சியமா எங்கியோ பாத்துக்கிட்டே ''#%$^"ன்னு சொன்னதுல காத்துல போனதுபோக மீதி பதில்வரும். புரியலைன்னா கடுப்பாகி திரும்பவும் கேக்கணும். இல்லைன்னா இறங்கறச்ச வேற கட்டணம் சொல்லப்பட வாய்ப்பிருக்கு. நேத்தும் இப்படித்தான்,.. ரயில்வே ஸ்டேஷன் போக ரிக்ஷா பிடிக்கணும்.
"ஸ்டேஷன் போகணும்.. எவ்ளோ??"
"@#%$&"
"ஹாங்ஜீ பையா??.."
78 comments:
எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கேன்னு ஓடிவந்தேன்,நல்ல நகைச்சுவை.
வீட்டுக்குள்ளயே ஒளிஞ்சு உக்காந்துருந்தீங்கன்னா ஒண்ணையும் கத்துக்கமுடியாது :-))))
ஆமா சாரல் இந்த வார்த்தை என்னை இன்று தட்டி எழுப்பியது.
//.அது ஏன் அத்தோட நிறுத்திட்டேன்னு நீங்க கேக்காம தலைதெறிச்சு ஓடினாலும், பிடிச்சு ஒக்காரவெச்சு சொல்லுவேன்ல..// ஒக்காந்து கேடுட்டொமுல்ல.:-)
நகைசுவையாக எழுதி இருக்கீங்க அமிதிச்சாரல்
"ஹாங்ஜீ பையா??.." - ரொம்ப நல்லாத் தெரியும் போல...
நகைச்சுவையான பகிர்வு...
கஷ்டப்பட்டதை வருத்தத்தோட சொல்லாம இப்படி
நகைச்சுவையோடு சொல்லும்போதுதான்
நொந்து நூலானது தெளிவாய் உணரமுடியுது
சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்
(கஷ்டத்தைச் சொல்லலை பதிவைச் சொல்றேன்)
ஷார்ஜாவில் ஒரு பாகிஸ்தானிய டாக்சி டிரைவர் இந்தி பேசாமல் ஆங்கிரேசி பேசியதால் என்னை வெறுப்பேத்த , அடுத்தநாளில் இருந்து அய்யா உருது/இந்தி கத்துக்க ஆரபிசுட்டார். அடுத்த ஒருமாதத்தில் லபோ திபோவென கத்தி சண்டை பேசும் அளவிற்று அந்த பாகிஸ்தானிய நண்பன் என்னை தயார் படுத்திவிட்டான்.
நல்ல இண்டரெஸ்டிங்கா இருந்துது. ம், நமக்கெல்லாம் தூர்தர்ஷன்தான் ஹிந்தி ஆசான்.
//இருபத்தஞ்சு வரைக்கும் நாமதான் பெரிய படிப்பெல்லாம்//
அப்படியென்ன பெரிய படிப்பு இது? சொல்லுங்களேன்?
//'ஞஞஞ' வானதும்//
ஏ க்யாஹே தீதீ?
அங்க மராட்டி போல, இங்க உருது!! இந்தி மட்டும் தெரிஞ்சாலும் டாக்ஸி, கடைகள்ல உருதுதான் பிரதானம். நான் பேசுற ஹிந்தியப் பாத்தே, “தும் மதராஸி ஹே க்யா?”ன்னு கண்டுபுடிச்சுடுவாங்க :-((((
இந்தப் பதிவப் பாத்து நான் அரபி (அரகுறயா) கத்துகிட்ட கதையையும் எழுதணும்போல ஆசையா இருக்குது!! (ஆனா அதில, ஒரு தரம் அரபிகிட்ட, “நீ அரபியக் கொல பண்ணாம, இங்கிலீஷ்லயே பேசித் தொலை”ன்னு திட்டு வாங்கினதையும் எழுதணுமேங்கிறதாலே எழுதல.)
இது ஒவ்வொரு வடக்கத்திய வாழ் தமிழனின் பிரச்சினை தான். நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்...
நான் மும்பையில் இருந்த வரை மராத்தி பிரச்சனையே இருந்ததில்லை. ஆனா அங்க இருந்த வரைக்கும் மராத்தி சரளமா படிக்க வந்துச்சு. பேசினா நல்லா புரியும். அந்த நேரம் பாத்து கிளம்பியாச்சு.
உங்க கதையை நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்
அஹோ ஐக்லத்கா? ஏதானும் புரியுதா?
நீங்களும் நம்ம கட்சிங்க. நானும் அம்பது வருஷமா வட நாடுகளில் தான் வாசம். இதில் 35 வருடங்கள்,புனா, மும்பைதான். ஹிந்தி மராட்டி நம்மளை ஒருவழிபண்ணீடும்தான். நான் ஏற்கனவே என் பதிவில் கொஞ்சமாக சொல்லி இருக்கேன். நீங்களும் நல்ல காமெடியா சொல்லி இருக்கீங்க.
எத்தனை மொழிக் கற்றுக் கொண்டாலும் அந்தப் பகுதியில் பேசப்படும் மொழி தெரியாவிட்டால் திண்டாட்டம்தான் என்பதை நகைச்சுவையாக புரிய வைத்து விட்டீர்கள். நன்றி.
மகளிர் தின வாழ்த்துகள்.
வீட்டுக்குள்ளயே ஒளிஞ்சு உக்காந்துருந்தீங்கன்னா ஒண்ணையும் கத்துக்கமுடியாது :-))))
அனுபவங்களை நகைச்சுவையோடு பகிர்ந்திருக்கீங்க. தலைப்பு கச்சிதம்.
மகளிர் தின வாழ்த்துக்கள் அமைதிசாரல்.
"ஹாங்ஜீ ... நீங்க சொன்னா அச்சா ஜி!"
மொழி தெரியாமல் திண்டாடுவது என்பது அப்போது கஷ்டமாக இருந்தாலும், பின்னர் யோசிக்கும்போது நகைச்சுவையாகத் தான் இருக்கும்! நான் ஹிந்தியில் அ-ஆ கூட தெரியாமல் தில்லி வந்து ஞே.... ஆனது தனிக்கதை! நல்ல பகிர்வு.
மகளிர் தின நல்வாழ்த்துகள்.
இங்க, துபாய்வந்த புதுசுல ஹிந்தி பேசிய ஒரு அரபிகிட்ட பதில்சொல்லத்தெரியாம முழிக்க, அந்தாள்,நிஜமாவே நீ இந்தியன் தானான்னு சந்தேகமாக் கேட்டான். ரொம்ப வெக்கமாப்போயிடுச்சு :(
அதுக்காக, இப்ப இந்தி தெரியுமான்னெல்லாம் நீங்க எடக்குமடக்கா கேக்கக்கூடாது :)
எல்லாம் சரி கடைசியா ஹிந்தி படிச்சீரா இல்லியா...
ஏக் மார் தோ துக்டா'ன்னு சொல்லிட்டு போயிட்டே இருங்க...
நல்ல நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க. நானும் என் இந்தி கத்துகிட்ட கதையை எழுதணும்னு இருந்தேன். நூறுக்கு மேலே விலை இருந்தா ஆங்கிலத்தில் சொல்லச் சொல்லி விடுவேன். அவங்க எங்கயோ பார்த்துக்கிட்டு விலை சொன்னா புரியாம திருப்பி கேட்பேன்.
நல்லா இருக்கு, அக்கோவ். இப்ப மராட்டி, ஹிந்தி இரண்டுமே சும்மா பிச்சு உதறுவீங்க இல்லையா??? எனக்கு அமெரிக்கா வந்த புதிதில் " ஙே " தான். டி.வி நியூஸ் பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன்.
காய் ஜால? :)
தில் வாலே துல்அனியா லே ஜயாங்கே.
சல்தி க நாம் கரடி .சீ காடி...:))
ஜெய் பவானி, ஜெய் மகராஷ்ட்ரா..
பால் தாக்கரேயை கேட்டேன்னு சொல்லுங்க....:))
:)
நானும் குத்துமதிப்பா பணத்தை குடுத்துட்டு மீதி வச்சி எவ்ளோ சொல்றாங்கன்னு கண்டுபிடிப்பேன்.. 100 ரூதான் இருக்குனு நீட்டி மீதி வச்சி என்ன சொன்னார்ன்னு கண்டுபிடிக்கிற புத்திசாலி ஹ்ஹஹ்ஹ..
ஆனா எங்க வீட்டுக்கார்ங்க இத்தனை வருசத்துல பாவை பவ் ந்னு சொல்வாங்க :)
வாங்க ஆசியா,
தட்டி எழுப்பிட்டேன்.. முழிச்சுக்கிட்டீங்களா இல்லியான்னு சொல்லவேயில்ல :-))
வாங்க ஸாதிகா,
உக்காந்து கேட்டதுக்கு நன்றிங்க :-))
வாங்க குமார்,
மொதல்ல அது ஒண்ணைமட்டும் நல்லா ஸ்ட்ராங்கா கத்துக்கிட்டேன்.. அதுதானே அடுத்தாப்ல கத்துக்கற பாடத்துக்கு தூண்டில் :-)))
வாங்க ரமணி,
நொந்து நூலானது அந்தக்காலம்..
நூடுல்ஸாகிக்கிட்டிருக்கறது இந்தக்காலத்துல இருக்கற மத்தவங்களோட கஷ்டகாலம் :-))))
வாங்க மாணிக்கம்,
எதிராளி மஹாராஷ்ட்ரியன் இல்லைன்னு நெத்தியில எழுதி ஒட்டியிருந்தாலும் இங்கெல்லாம் வெறுப்பேத்தணும்ன்னா மராட்டியில்தான் பேசுவாங்க :-))
வாங்க ஹுஸைனம்மா,
இருபத்தஞ்சு வரைக்கும் சொல்லத்தெரியுமே.. அப்ப பெரிய படிப்புதானே..
//ஏ க்யாஹே தீதீ?//
அது ஒண்ணுமில்லீங்க.. கிட்டத்தட்ட ஆறேழு வருஷமா என்னோட கையெழுத்தை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதிவந்திருக்கேன்னா பாருங்க. இங்க வந்தப்புறம்தான் 'ஸா' வராது 'ஷா'தான் வரும்ன்னு தெரிஞ்சுச்சு :-))))
உங்க சோகக்கதையையும் எழுதுங்க.. படிச்சு சிரிச்சுக்கறோம் :-)))))))))))
வாங்க டக்கால்டி,
இப்பல்லாம் பசங்க வெவரமா, ஓரளவுக்காவது மொழியை கத்துக்கிட்டுத்தான் சம்பந்தப்பட்ட இடங்களுக்கே போறாங்க. அப்ப, அதுக்கெல்லாம் நிறைய வாய்ப்புகள் இல்லாத காலம், அதான் இப்படி :-))
வாங்க தென்றல்,
எனக்கும் மராட்டி பேசினா புரியும், சரியா பேசத்தான் வராது. ரங்க்ஸும்,பெண்ணும் புகுந்து விளையாடுவாங்க். இங்கேதான் பசங்களுக்கு சிலபஸ்ல பத்தாம்வகுப்பு வரைக்கும் மராட்டியை கட்டாயமாக்கியிருக்காங்களே.என் பசங்க படிக்கும்போது ஓரளவு கத்துக்கிட்டேன்:-))
ஆஹா நகைச்சுவையா சொல்லிருக்கீங்க..நானும் உங்களை மாதிரிதான் 7,8 ஆம் வகுப்பு படிக்கும் போது தஷிண பாரதாவில் ஹிந்தியை ராஷ்ட்ரபாஷா வரை படித்தேன்..அதுக்கப்புறம் ஹிந்தி நஹி மாலும் ஹை!! இப்போ என் ஹிந்தி அறிவு முழிசூடுச்சு..தமிழ் சீரியலை பார்ப்பதை விட்டுட்டு ஸ்டார் ப்ளஸில் ஹிந்தி சீரியல் பார்க்குறேன்..நம்ம கோலங்கள் சீரியல் கூட ஹிந்திஅல் போடுறாங்க..மறுபடியும் நான் அந்த கொடுமையை பார்ப்பேனா?? அப்போதான் நமக்கு சாப்பிடுற நேரம்..ரொம்ப அறுத்துட்டேன் அக்கா...
சாரல்...வேற்றுமொழித் தேசங்களுக்குப் புலம் பெயர்ந்து நாங்கள் படும் பாடும்,பாட்டும் அருமை அருமை !
// வல்லாரைபொறியல்(வரலாறு புவியியலுக்கு நாங்க வெச்ச செல்லப்பேரு)//
ha ha ha... ஒரு வகைல கரெக்ட் தான்... வல்லாரைய சாப்ட்டா தான் வரலாறு புவியியல் ஞாபகம் இருக்கும்...:)))
//ரிசர்வ் வங்கில கவர்னர் வேலைக்கு போகும்போது கையெழுத்துபோட ஒத்தாசையா இருக்குமேன்னு வகுப்பில் சேர்ந்துவெச்சேன்//
மத்ததெல்லாம் உடுங்க... கவர்னர் ஆனப்ப எத்தன ஊழல் செஞ்சீங்க அதை சொல்லுங்க மொதல்ல..:))
//நா ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்துடுவேனோன்னு அவங்களுக்கெல்லாம் பொறாமை//
நெனப்பு தான்...சரி உடுங்க...ஹையோ ஹயோ...:)))
//மராட்டியில ஏதாவது கேட்டா சின்ன சிரிப்போட நகர்ந்துடுவேன்//
போற வர்றவங்க எல்லாம் புரியாத பாஷைல திட்டினதை இதை விட சமாளிப்பா சொல்ல யாராலையும் முடியாது ஐ சே...:)))
//'காய் பாஹிஜே தும்கோ'ன்னு அவங்க கேக்கறப்ப காய்தாம்ப்பா வேணும்ன்னு//
இதுக்கு என்ற ஹிந்தியே பரவால்ல... என்ற ஹிந்தி போஸ்ட் பாருங்க... நான் எம்புட்டு அறிவாளின்னு தெரியும்...:)
(எனக்கு விளம்பரம் பிடிக்காது யு நோ...:))
// ஏன்னா நூறுகிராமுக்கு என்ன சொல்லணும்ன்னு தெரியாதே//
அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா...:))
//இந்த லட்சணத்துல ஒரு நாள் பஞ்ச்வீஸ்ன்னு ஒருவார்த்தைய கேட்டதும் ஆடிப்போயிட்டேன்//
பாஞ்சு வீசுனு சொல்லி இருப்பாரோ... அப்படி என்ன வெச்சு இருந்தீங்க கைல...:))
//"ஹாங்ஜீ பையா??.."//
போடா டேய்... உக்காருடா சோம்பேறி... போடா மடையா...ஐயோ உங்கள ஒண்ணும் சொல்லலை... நார்த் இந்தியா தமிழ் ஹிந்தினதும் "மௌன ராகம்" சிங்கு தாத்தா ஞாபகம் வந்துடுச்சு...அதான்...:)))
செம போஸ்ட்... சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது... ஒரு பஞ்ச்வீஸ் ஆயிரம் ரூபா அனுப்புங்க... மாத்திர வாங்கணும்...:))))
நகைச்சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.
தெரியாத மொழி என்றாலே சிக்கல்தான்.
பதிவு ரொம்ப நகைச்சுவையா இருந்தது அக்கா... :-))
//வீட்டுக்குள்ளயே ஒளிஞ்சு உக்காந்துருந்தீங்கன்னா ஒண்ணையும் கத்துக்கமுடியாது :-))))//
- ஒரு வாசகம் ன்னாலும், திருவாசகம் அக்கா! அட அட...
உங்க அனுபவத்த வெச்சு, உங்க வலைப்பூவுல ஒரு பக்கமா, அன்றாடம் புழங்கக்கூடிய ஹிந்தி/மராட்டி வார்த்தைகள் வாரத்துக்கு ஒரு அஞ்சு அஞ்சு எழுதி வெச்சா, வருங்கால வடக்கத்தி வாழ் தமிழ் சந்ததிகள் பாத்து, படிச்சு, தெளிவா நடந்துப்பாங்க ல்ல... :-))
-முகில்
நாங்க முதல்ல கத்துகிறது ஆனா ஆவன்னா இல்லை..யாராவது திட்டினா அவன் என்ன சொல்லி திட்டுறான்னு கண்டுபிடிச்சி பதிலுக்கு திட்டதான் ..
மொழி அறிவு தானா வளரும் :-))
இந்த பதிவை படிச்சதும் எனது மும்பை பிண்டி பஜார் நினைவு வந்துட்டுது ஹா..ஹா.. :-))
ஹா ஹா ஹா!! நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க. இங்க எங்க தெருவுல 14 இந்தியக்குடும்பங்கள் இருக்கறோம். எனக்கு மட்டும்தான் ஹிந்தி தெரியாது. சமையத்துல ரொம்ப நொந்து போயிருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டு இருக்கறேன். கூடிய சீக்கிரத்துல பேச அரம்பிச்சுருவேன்னு நெனைக்கிறேன். ஆனா அதைக்கேட்ட அப்புறமும் அவங்க எல்லாம் ஹிந்தி பேசுவாங்களான்னு தெரியல :-)).
ஹேய் க்யா போல்தீ தும்..:))
பகுத் படியா ஹை..
க்யோங் டாய் அவுர் பாய் கோ( லெஃப்ட் யா ரைட்) சோடா தும்.. இஸ்கே பாத் மே பி லிகோ ஜி..
வாங்க லஷ்மிம்மா..
பஸா.. ஸாங்கா. கரத் ஆஹேத் நா :-)))
பூனாவுல இன்னும் இலக்கண சுத்தமா இந்தி பேசுவாங்களே.. நொந்து நூடுல்சாகி போட்ட உங்க இடுகையை வாசிச்சிருக்கேன் :-))
வாங்க அமைதி அப்பா,
நிச்சயமா.. குறைஞ்சபட்சம் அடிப்படைத்தேவைகளை நிறைவேத்திக்கற அளவுக்காவது நாலஞ்சு வார்த்தைகளை தெரிஞ்சுவெச்சிருக்கறது நலம்.
வாங்க அம்பிகா,
தலைப்பும் அது சம்பந்தப்பட்ட படமும், காட்சிகளும் எல்லோருக்குமே என்னிக்கும் மறக்காத ஒண்ணு :-))
உங்களுக்கும் தாமதமான வாழ்த்துகள்.
ஆயியே சித்ராஜி,
தன்யவாத் ஜீ :-))))
வாங்க வெங்கட்,
தலையும் புரியாம காலும் புரியாம முழிக்கிறப்ப நம்மை பார்க்கறவங்களுக்கும் செம காமெடியா இருந்துருக்கும் இல்லே :-))
வாங்க சுந்தரா,
அதைத்தான் கேக்கவந்தேன்.. ச்சே, முந்திக்கிட்டீங்களே :-))
வாங்க மனோ,
இப்பல்லாம் ச்சார் துக்டாதான் சகோ :-))
வாங்க கோவை2தில்லி,
தில்லியில் ஆங்கிலத்துல சொல்லுவாங்கன்னா பரவாயில்லையே.. மும்பையில் கூடியமட்டும் மராட்டி, இந்தியில்தான் பேசுவாங்க. என்னதான் வெள்ளைக்காரங்க கொடிபறக்கவிட்ட இடம்ன்னாலும் அவங்க தாய்மொழிக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க :-))
வாங்க வானதி,
இந்தியை பிச்சுப்போட்டுட்டேன். மராட்டி கத்துக்கணும்ன்னு வாங்கிவெச்ச புத்தகத்தை சரஸ்வதி பூஜை சமயம் எடுத்து தூசிதட்டிட்டு திரும்ப வெச்சிடுவேன்.. கத்துக்கப்பார்க்கணும் :-))))
வாங்க பாரத்பாரதி,
வாழ்த்துகளுக்கு நன்றி..
வாங்க பிரதாப்,
நீங்க கேட்டீங்கன்னு சொல்லி பால்தாக்கரேயை கேட்டேன்.. தரமாட்டேன்னு அவரு ஊட்டாளுங்க சொல்லிட்டாங்க. சொந்த தாத்தா மாதிரி பாத்துக்குவீங்கன்னும் சொல்லிப்பாத்தேன்..ம்ஹூம் :-))))
வாங்க முத்துலெட்சுமி,
இங்கியும் அதேகதைதான்.. :-))
வாங்க மேனகா,
என்ன்னாதூ!!.. ஸ்டார் ப்ளஸ்ஸில் சீரியலை பாக்கறீங்களா!! ரொம்ப பொறுமைதான் உங்களுக்கு. பாலாஜிக்காரங்க படுத்தியெடுப்பாங்களே.. செண்டியில நம்மூர்க்காரங்களையும் மிஞ்சரவங்க அவங்க :-)))))
தமிழ், இந்தி எந்த மொழிகள்லயும் நான் சீரியல் பாக்கறதில்லை, பிடிக்காது :-))
வாங்க ஹேமா,
வேரூன்றும்வரை இதானே பாடு :-))))
தாமதத்திற்கு மன்னிக்கவும் சாரல்.கொஞ்சம் பிசி ( நிசமாதாங்க!)
நல்ல நகைச்சுவை கலந்து எழுதியிருக்கிறீர்கள்.
மிகவும் ரசித்தேன்
முக்கியமா உங்க ரிசர்வ் வங்கி கனவும் தங்க வங்கியும்,அப்பறம்
அந்த ஜெலுசில்,ஸ்டேட் ஃபர்ஸ்ட் மேட்டர், காய்கறி பரிசோதனை
செய்யறாப்பல பில்டப், இருபத்தஞ்சுலேருந்து முப்பதுக்குள்ள கண்டம்
கும்மியடிக்கறது எல்லாமே சூப்பர்.
நல்ல நகைச்சுவை வளம் உங்களுக்கு (என்ன உரம் போடறீங்கனு
சொன்னீங்கன்னா நானும் கொஞ்சம் அந்த உரம் போட்டு வளத்தை
வளக்க முடியமான்னு பாக்கறேனே.எனக்கு மட்டுமா காதுல சொல்லுங்க சரியா?)
No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி
அதுங்க பரிதாபமா முழிக்கும் :-). ஆனாலும் ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸாயிட்டோம் :-)). //
எப்படிங்க??எப்படி???
வாங்க அடப்பாவி,
//போற வர்றவங்க எல்லாம் புரியாத பாஷைல திட்டினதை இதை விட சமாளிப்பா சொல்ல யாராலையும் முடியாது ஐ சே...:)))//
ஹி...ஹி.. பப்ளிக்..பப்ளிக் :-))
அதேமாதிரி நான் திட்டினதும் அவங்களுக்கு புரிஞ்சிருக்காதுல்லே ஹை ஜாலியோ ஜாலி :-)))))
//(எனக்கு விளம்பரம் பிடிக்காது யு நோ...:))//
பி.பி.சியில இப்ப இந்த விளம்பரம்தான் சூப்பர் டூப்பர் ஹிட்டாம்.. சொல்லிக்கிட்டாங்க :-)))))
//பாஞ்சு வீசுனு சொல்லி இருப்பாரோ... அப்படி என்ன வெச்சு இருந்தீங்க கைல//
அவர் கடையில வாங்கின பூரிக்கட்டையத்தான் வெச்சிருந்தேன்.. உடையாம இருக்குமான்னு கேட்டதுக்குத்தான் வேறென்னவோ சொல்லி சமாளிச்சிருப்பாரோ என்னவோ:-)))))))))))))
பாஞ்சு வீசிட்டேன்.. காட்ச் புடிச்சுக்கோங்க. பாதி மாத்திரைய இங்கே அனுப்புங்க. உங்க கமெண்டு படிச்சுட்டு சிரிச்சிட்டிருக்கேன் :-)))))
வாங்க மாதேவி,
ஆமாப்பா.. லண்டன்ல போயி, அட!! இந்த ஊர்ல சின்னப்புள்ளைங்கல்லாம் கூட இங்கிலீஸ் பேசுதுப்பான்னு ஆச்சரியப்படுவோமே அதுமாதிரிதான் :-)))
வாங்க முகிலு,
அப்படியே நான் நெனைச்சதை சொல்லிட்டீங்கப்பா. மொதல்ல பிடியுங்க பாராட்டுகளை :-))
வேறமாதிரி ஒரு திட்டம் இருக்குது. காத்திருந்து பாருங்க.
அழகா, கோர்வையா எழுதறீங்கப்பா.. நீங்க ஏன் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு எழுதக்கூடாது??.. ஜோதியில் கலந்துக்கோங்க :-))
வாங்க ஜெய்லானி,
//யாராவது திட்டினா அவன் என்ன சொல்லி திட்டுறான்னு கண்டுபிடிச்சி பதிலுக்கு திட்டதான்.. மொழி அறிவு தானா வளரும்//
எப்படீப்பா இப்படில்லாம் சிந்திக்கிறீங்க :-)))))))
வாங்க தெய்வசுகந்தி,
எப்படீங்க.. லாலு பிரசாத் யாதவுக்கு ஆங்கிலம் கத்துக்கொடுக்கப்போயி ஜார்ஜ் புஷ் இந்தி கத்துக்கிட்ட கதை மாதிரியா :-))))
ஆனா, நீங்க சீக்கிரமே கத்துக்குவீங்கன்னு நினைக்கிறேன். அந்தந்த இடத்துல எந்த மொழி பிரதானமோ, அதைக்கத்துக்கிட்டாத்தான் நல்லது :-))
வாங்க தேனம்மை,
க்யா மை போலூம் :-))). ஏ தாய், பாய் என்னை ரொம்பவே லெஃப்ட் ரைட் வாங்கியிருக்கு :-))).புரியாத இடங்கள்ல லெஃப்ட் ரைட்ன்னே சொல்லி சமாளிச்சுடுவேன் :-)))
வாங்க ராஜி,
தோண்றதை எழுதறேன். அது நகைச்சுவையா இல்லியான்னு நீங்க சொல்லும்போதுதான் தெரிஞ்சுக்கறேன். வீட்லயும் இப்படித்தான் பேசிக்கிட்டே இருப்போம் :-)))
வாங்க பார்ட் டைம் ஜாப்ஸ்,
என் தளத்துக்கு வந்ததற்கு மகிழ்ச்சி :-))
வாங்க ராஜராஜேஸ்வரி,
அதான் குட்டீஸ்.. அதுங்க கிட்ட நட்பாயிருக்க மொழியே தேவையில்லைங்க :-)))
பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க க்கா... :-))
இப்போதைக்கு எழுதற யோசணை இல்லீங்க அக்கா... ஆனா உங்க பேச்சு எனக்கு மிகுந்த உற்சாகம் தருது. கால, நேரம் கைகூடி வரும்பொழுது பார்க்கலாம்...
கண்டிப்பா உங்க திட்டம் பலருக்கும் பயன்படக்கூடியதாகத்தான் இருக்கும். உங்கள் திட்டம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள்! :-))
சுதி, லயக் கச்சேரிகளை அப்டேட் பண்ணவும்.. :-)
-முகில்
//இந்த மொழிப்பிரச்சினை ஈரக்கூந்தலை விரிச்சுப்போட்டுக்கிட்டு நிற்கும்//
ரசித்தேன்....
டைட்டில் ரொம்ப பொருத்தம்....;-)))
மராத்தி ஹிந்தி ரெண்டுல எது ஈசி? ;-))
முகிலு,
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
வாங்க ஆர்.வி.எஸ்,
ஹிந்திதான் ஈஸி.. மராட்டி கொஞ்சம் பல்லை உடைக்கும் :-))). ஆனா, ஹிந்தி கத்துக்கிட்டா மராட்டியை இன்னும் சட்னு கத்துக்கலாம்..
மறக்க முடியாத தலைப்பு! ஹிந்தி தெரியாமலையே இன்னிவரைக்கும் நார்த் சைட் போகும்போதெல்லாம் எப்படியோ எஸ்கேப் ஆகிட்டிருக்கேன்!!
இருபது வருடங்களுக்கு முந்தைய என் அனுபவங்களை நினைவு படுத்தி விட்டீர்கள்:))! இப்பவும் குடியிருப்பின் காவலாளிகளுடன் தினம் இண்டர்காமில் ‘ஏக் காவுமே’ அளவிலேயேதான் போராடிக் கொண்டிருக்கிறேன்:(!
நல்ல பதிவு சாரல்:)!
வாரே வாஹ்:)
சிரிச்சு முடியவில்லை
பன்ச்வீஸ் இப்பதான் கேள்விப்படறேன்.
நல்ல வேளை நாங்க மும்பையில் இருக்கும் போது வீட்டுக்காரார் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்.
இல்லாட்ட உங்க பதிவு மாதிரி போடாம புலம்பி இருப்ப்பேன்:)
வாங்க ஷங்கர்,
ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறை வருவீங்களாயிருக்கும். அதுக்கு இந்தி பேச தெரிஞ்சிருக்க வேண்டியதில்லை. அபிநயம் பிடிக்க தெரிஞ்சா போறும் :-)
வாங்க ராமலஷ்மி,
பெங்களூர்லயும் இந்தியை பிச்சு உதர்றாங்களே.. பூக்காரம்மாகூட அருமையா பேசினாங்க :-))
வாங்க வல்லிம்மா,
ஆஹா.. நிறைய மிஸ் பண்ணிட்டீங்களே வல்லிம்மா.. நீங்க சொல்றது அவங்களுக்கு புரியாம, அவங்க சொல்றது உங்களுக்கு புரியாம பாயைப்பிறாண்ட வெச்ச அனுபவங்கள் கிடைச்சிருக்கும். எங்களுக்கும் இன்னும் நிறைய பகிர்வுகள் கிடைச்சிருக்கும் ;-)
ஹாஹா, நம்ம வீட்டிலே நான் முதல்லே போன ஊரே ராஜஸ்தானிலே. ராஜஸ்தானியும் ஹிந்தியும் தான் அங்கே செல்லுபடி. இருந்தாலும் சமாளிச்சதோடு இல்லாமல் எட்டு வருஷம் புனேயில் இருந்த ரங்க்ஸுக்கே சொல்லிக் கொடுத்திருக்கோமாக்கும். :)))
தொடர
'Ek gaon mein ek kisan rehta tha', meaning "There was a farmer who lived in a village."
Post a Comment