"இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா.. ச்சூ.. போ அந்தாலே.." கத்தியபடியே ஒரு கல்லைவிட்டெறியவும், சத்தம் அடங்கி.., அங்கிருந்து மூன்றாவது வீட்டின் மாடியில் மறுபடியும் முளைத்தது.
"யாரது.. கூரைல கல்லெறியறது..??" வீட்டுக்காரனின் குரல் கோபத்துடன் ஒலித்தது.
"தெனமும் ராத்திரியானா இதே தொல்லையா போச்சு.." ஒரு வாரமாக வீடுகளிலும், பைப்பில் தண்ணீர் பிடிக்கும் பெண்களிடமும் இதே பேச்சுதான்..
ஏதோவொரு வீட்டில் கைக்குழந்தை அழுகிறது என்றுதான், இரவில் வீட்டுக்கு வெளியில், காற்றுக்காக உட்கார்ந்துகொண்டு வம்பளந்து கொண்டிருந்தவர்கள் முதலில் நினைத்தார்கள். 'புள்ளையை அழவிட்டுட்டு எங்க போனா.. என்ன செஞ்சுக்கிட்டிருக்கா..' என்று பார்க்காத அம்மாவுக்கு வசவு விழுந்தது.
இரண்டொரு நாளில், ' ஏ.. இது புள்ளை அழற சத்தமில்லை.. பூனைல்லா கத்துது..' என்று தெரிந்துவிட, 'பூனை அழுதா நல்லதில்லையே..' என்று ஒவ்வொருவரும் சகுனம்சொல்ல ஆரம்பித்தார்கள். வெள்ளையில் கறுப்பு டிசைன்போட்ட புடவை மாதிரியிருந்த அந்த அழகான பூனை, இதனாலேயே அனைவரின் வெறுப்புக்கும் ஆளாகியிருந்தது. சும்மாவே அது எதிரே வந்தால் சகுனம்சரியில்லை என்று வெறுத்தவர்கள் இன்னும் கூடுதலாகவே அந்த வெறுப்பை கடைப்பிடித்தார்கள்.
ஏதோ சிறுகுழந்தையின் அழுகுரலாக ஆரம்பிக்கும்,.. நேரம் செல்லச்செல்ல சுதியும் வேகமும் கூடி, நெஞ்சைப்பிசையும் நீண்ட கத்தலாக தொடரும். இந்த சத்தத்தை கேட்டு இன்னும் சில பூனைகளும் வந்து உட்கார்ந்துகொண்டு கூட்டாக ஒப்பாரி வைக்கத்தொடங்கின. ஒன்று யாராவது கல்லெறிந்து விரட்டவேண்டும். இல்லையென்றால் வேறு ஏதாவது பூனையோ, கடுவனோ வந்து சீறும்போதோ, இல்லை தெரு நாயொன்றின் குரைப்பிலோ சட்டென சத்தம் அமுங்கிவிடும்.
'யாருக்காவது மரணம் சம்பவிக்க இருந்தால், பூனைக்கு அது முதலிலேயே தெரிந்துவிடும். அப்படியிருந்தால்தான் அது அழும்' என்று ருக்மணி பாட்டி சொல்லிவைத்துவிட, அந்த ஏரியாவில் சாகக்கிடப்பவர்கள் யார்யாரெல்லாம்?என்று கணக்கு எடுக்கப்பட்டது.
அவர்கள் கணிப்பில் முத்தையா தாத்தா ஒருவரைத்தவிர, மத்த வயசானதுகள் எல்லாம் கிழங்கு மாதிரி இருந்தன. எப்படியும் ஆறேழு வருஷங்களுக்காவது, கம்பை ஊன்றிக்கொண்டு நடந்தாவது.. தாக்குப்பிடித்துவிடும். முத்தையா தாத்தா ஒருவர்தான், படுத்த படுக்கையாக இருக்கிறார். உணர்வுகளெல்லாம் மங்கி, சகலமும் படுக்கையில் என்றானபின்னும், உயிர்மட்டும் ஊசலாடிக்கொண்டிருந்தது.
'எல்லாம் தின்னு, ஆண்டுஅனுபவிச்சாச்சு, நெறைய நல்லது கெட்டது பார்த்து, வாழ்ந்து தீர்த்தாச்சு. அப்புறமும் என்ன குறையோ..' என்று அடிக்கடி ஊர்வாயில் அடிபடுவார். 'என்னடே கதிரேசா.. உங்க தாத்தா அம்மாவாசை தாண்டிடுவாரா..' என்று சிலர் அவர் பேரனை வம்பிழுக்கையில் தலையை குனிந்துகொண்டே போய்விடுவான். எத்தனை வயதானால் என்ன.. சொந்தமல்லவா!!..
பூனை அழுவது அவரது மரணத்துக்காகத்தான்.. என்று எல்லோரும் அனுமானித்துக்கொண்டார்கள். எப்போது நிகழும் என்றே காத்திருக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். விட்டால்,.. யமனையே ஆட்டோவில் கூட்டிக்கொண்டுவந்து, தாத்தாவையும் சேர்த்து அனுப்பிவைத்துவிடுவார்கள் போல..
கதிரேசனுக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. அந்தத்தெருவிலேயே முதல்முதலில் கார் வந்தது அவனது வீட்டுக்குத்தான். காரை நிறுத்த இடம் வேண்டுமென்பதற்காகவே, தோட்டத்தில் ஒரு பகுதியில் ஷெட் கட்டியிருந்தான். 'கார்காரர் வீடு...' என்று அவர்கள் வீடு அடையாளம் காட்டப்படுவதில், அவன் அம்மைக்குத்தான் ரொம்ப பெருமை.
கார் வாங்கி, வீட்டுக்கு கொண்டுவந்தபின் அதில் முதல்முதலாக கோயிலுக்குத்தான் குடும்பத்துடன் செல்லவேண்டும் என்று அவன் அம்மை பிடிவாதம் பிடித்து அதில் வெற்றியும் பெற்றிருந்தாள். திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை மாலையன்று, சந்தனம், குங்குமம் இடப்பட்டும் , மாலையணிந்துகொண்டும் கார் தயாராக இருந்தது. சக்கரங்களின் அடியில் எலுமிச்சம்பழமும் பலியிட தயாராக இருந்தது. 'கொஞ்சம் இருப்பா.. நல்ல சகுனம் பார்த்து வண்டியை எடுக்கணும். எம்மா விஜயா,.. நெற கொடத்த கொண்டுட்டு எதிர்ல வாம்மா..' என்று உத்தரவிடவும், அவள் எதிரில் வந்து நின்றாள்.
கார் ஸ்டார்ட்டாகி, காம்பவுண்டை விட்டு வெளியே வரவும் திடீரென்று அது நாலுகால் பாய்ச்சலில் குறுக்கே பாய்ந்தது. விரட்டிக்கொண்டு வந்த தெருநாய், நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு இரைக்க இரைக்க நின்றது. கண்மூடித்திறப்பதற்குள் என்ன நடந்ததென்று ஒருவருக்கும் உறைக்கவில்லை. மெதுவாக டிரைவர் ஆசனத்திலிருந்து இறங்கியவன், காருக்கு கீழே குனிந்து பார்த்தான். ரத்த சகதியினூடே வெள்ளையும் கறுப்பும் கலந்தநிறத்தில் ஒரு கால் லேசாக துடித்து பின் மெதுவாய்.. மெதுவாய்.. அடங்கியது. இப்போதெல்லாம் அந்த தெருவில் ராத்திரியில் அழுகுரல் கேட்பதேயில்லை.

72 comments:
ம்.. ஒருவேளை அது குறுக்கே வராமல் இருந்தால் வேறு விபத்து நடந்து இருக்குமோ ????
பதிவுல பூனை இருக்கே? சகுனம் ஓக்கே வா? ஹா ஹா
பாவம்..கடைசில பூனை சகுனம் பார்க்காம போயிடுச்சு.
சகுனமே சரில்ல சாரல்.பூனை பூனையா கனவில குறுக்க வருது.
சரி சரி...கதை என்று பார்த்தால் நல்லா வந்திருக்கு !
வாங்க எல்.கே,
பூனை குறுக்கே வந்தா மனுஷனுக்கு நல்லதோ கெட்டதோ.. ஆனா, மனுஷன் குறுக்கே வந்ததால பூனைக்கு சகுனம் சரியில்லாம ஆகிடுச்சேப்பா :-))))
வாங்க சிபி,
ஏற்கனவே ஒரு வெள்ளைப்பூனையும் இருக்குதே, மழையில் நனைஞ்சுக்கிட்டு.. அதுக்கு துணையாத்தான் இது :-))
வாங்க ஜிஜி,
அதுங்க இன்னும் நம்ம அளவுக்கு முன்னேறலைப்பா :-))).
இப்ப யாரோட சகுனம் யாருக்கு கெட்டதா அமைஞ்சுருக்குன்னுதான் என் கேள்வி :-)
வாங்க ஹேமா,
பாவங்க.. அது பாட்டுக்கு வந்து விளையாடிட்டுப்போகட்டும்.மேல விழுந்து பிறாண்டாதவரைக்கும் சரி :-))
பூனைக்கு சகுனம் சரியில்லை போல! பாவம்....
கருத்துடன் ஒரு நல்ல கதை. பாராட்டுக்கள்!
தமிழ்மணத்தில் வோட்டு போட இயலவில்லை.... தமிழ்மணத்தில ஏதோ ப்ரோப்லேம் போல....
மனுஷங்க சகுனம் பாக்குற மாதிரி, பூனைகளும் பாக்குமோ # சந்தேகம்!!
கடைசி பாரா மனதை பிசைந்தது...பாவம் அந்த பூனை.!!
சகுனம் பார்க்கும் மனிதர்களின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டும் நல்ல கதை சாரல்.
அச்சச்சோ, பூனை இறந்துடுச்சா?எல்லோரிடமும் திட்டு வாங்கின வைப்ரேசன்லதான் இப்படி ஆகிட்டோ?
நல்ல கதை. பாவம் அந்த பூனை.
May be the cat realized that its day were numbered. poor cat. paavampa.
கதையோட்டம் அருமை,ஆனாலும் அந்தப் பூனை செத்ததை நேரில் பார்த்த பதை பதைப்பு..என்னமா எழுதிருக்கீங்க சாரல்,அசத்தல் மொழி நடை..
நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.
//இப்போதெல்லாம் அந்த தெருவில் ராத்திரியில் அழுகுரல் கேட்பதேயில்லை.//
பூனைக்கு வந்த சோதனை, புதிய கார் ரூபத்தில் வந்துள்ள எமன்.
பாவம் பூனையை கொன்னுட்டீங்க, அக்கா. நல்ல கதை.
//கருப்பு வெள்ளை டிசைன் பூனை...//
குட்.
//வயசானதுகள் எல்லாம் கிழங்கு மாதிரி இருந்தன.//
//சில பூனைகளும் வந்து உட்கார்ந்துகொண்டு கூட்டாக ஒப்பாரி வைக்கத்தொடங்கின//
இது செத்ததுக்கு அப்புறம் துக்கத்துல வேற பூனை எதுவும் அழ ஆரம்பிக்கலையோ?
கதை நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள். ;-))
சகுனம் பார்ப்பவர்களைச் சாடியிருப்பது அழகு...
வயதானவர்கள் சாவுக்காய்க் காத்த சலிப்பில் வெளிப்படும் உணர்வுகள், வார்த்தைகள்....எதார்த்தத்தை ரசித்தேன்...
குறிப்பாக இந்த வரி...
//யமனையே ஆட்டோவில் கூட்டிக்கொண்டுவந்து, தாத்தாவையும் சேர்த்து அனுப்பிவைத்துவிடுவார்கள் போல//
கருத்துடன் கூடிய கதை ரெம்ப நல்லா வந்திருக்கு சகோ...
பூனையின் ‘நமக்கு நாமே’ திட்டம் போல!! :-)))
மரணமும், வாழ்வும் எப்பவும் எதிர்பாராதபடிதான் இருக்கும். அதை மீண்டும் சொல்கிறது கதை.
நல்லா இருக்கு சாரல்.:)
கதை நல்லா எழுத வருது. சிறுகதைப் போட்டியில் கலந்துக்கோங்க.
அழகான கதை சாரல்!
நாம் போகும் போது குறுக்கே பூனை போனால்.... அந்தப் பூனை எங்கோ போகிறது என்று அர்த்தம்!
தன் சாவுக்கு தானே குறி சொல்லிய பூனை :(
நல்லா எழுதியிருக்கீங்க மேடம்
என்ன ஒரு திடுக்கிடும் முடிவு? தன் முடிவை தானே அறிந்து அழுது கொண்டிருந்த பூனைக்கு அவ்வப்போது கிடைத்தது கல்லடி...கடைசியில் கிடைத்தது காரடி!
வாங்க வெங்கட்,
ஏதாவது மனுஷர் குறுக்கே போயிருந்துருப்பாரோ :-))
வாங்க சித்ரா,
தமிழ்மணம் சரியாயிருச்சு ஆனா, ஆகலை.. :-))
வாங்க தெய்வசுகந்தி,
அப்படி சகுனம் பார்க்கறதுகளாயிருந்தா, நாம அதுங்களை திட்றமாதிரி அதுங்களும் நம்மை திட்டுமாயிருக்கும் :-)
வாங்க மேனகா,
பாவம்தான்.. சகுனம் பார்க்காம புறப்பட்டுடுச்சேப்பா :-))
வாங்க ராமலஷ்மி,
பூனை மட்டுமல்ல, காகம், நாய்ன்னு வாயில்லா ஜீவன்கள் அத்தனையும் சகுனம் பார்க்கும் மனுஷனோட வாயில் விழுந்து எந்திருக்குதே..
வாங்க திருமதி ஸ்ரீதர்,
இருக்கலாமோ!!.. தெரியலைங்க.
வாங்க வித்யா சுப்ரமணியம்,
எனக்கும் பாவமாத்தான் இருக்கு.
வாங்க வல்லிம்மா,
அத்தனைபேரும் அதை துர்சகுனமா நினைச்சுட்டிருந்தாங்க.. கடைசியில யாரால யாருக்கு ஆபத்துன்னு பார்த்தீங்களா :-)
வாங்க ஆசியா,
ரொம்ப நன்றிங்க..
வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,
பாராட்டுகளுக்கு நன்றி.
வாங்க வானதி,
அது உயிரைக்கொடுத்த பிறகாவது பூனைச்சகுனம் பார்க்கறது கொஞ்சமாவது குறையுமில்லியா..
வாங்க RVS,
அழுதா போட்டுத்தள்ளிடுவாங்களோன்னு பயமாருக்கும் :-))
வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க பாசமலர்,
பாயிண்டை நீங்க ஒருத்தர்தான் கரெக்டா பிடிச்சீங்கப்பா.. பாராட்டுகள் :-))
அடிக்கடி வாங்க.
வாங்க நாடோடி,
ரொம்ப நன்றிங்க சகோ.
வாங்க ஹுஸைனம்மா,
அதேதான் நானும் சொல்லவந்தது. சிலசமயங்கள்ல இயல்பா நடக்கறதைக்கூட சகுனத்தின்மேல் பழிபோட்டு தப்பிச்சுடறோமோன்னு ஒரு தோணல்..
வாங்க முத்துலெட்சுமி,
நன்றிங்க..
வாங்க உழவன்,
ஊக்கம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க.
வாங்க மோகன்ஜி,
அந்தப்பூனையும் 'சகுனம் சரியில்லியே'ன்னு அலுத்துக்குமோ என்னவோ :-)))
வாங்க வசந்து,
ரொம்ப நன்றிப்பா..
வாங்க ஸ்ரீராம்,
கல்லடி.. காரடி, ஆஹா!! விளையாடுறீங்க தமிழ்ல :-))
சகுனம் பார்ப்பதென்னவோ சரியா தோனல
நான் தினம் வீட்டைவிட்டு இருங்கும் போதேல்லாஅம் நாலந்து பூனைய பார்த்துட்டு தான் போறேன்
\அத ரசித்து கொண்டு ம் போவேன்
ஒகே நேரம் இல்லாததால் வரமுடியல முடிந்த்ஃஅ போது கண்டிபப வாரேன்
ஆளி விதைக்கு மடிக்காம சுடலாமான்னு கேட்டீங
சப்பாத்தி போலும் செய்யலாம்
என் வீட்டுக்காருக்கு சப்பாத்தி பிடிக்காது
எனக்கு பையன் களுக்கு பிடிக்கும்.
அதான் அவருக்காக மடிச்சி ரொட்டி போல் சுட்டேன்
ஹோம் மேட் ப்பாஸ்தாவும் முடிந்த போது உஙக் பொன்னுக்காஅ போடுகீறேன்
தங்கள் ப்லாக் ஐ பற்றி வலைச்சரத்தில் கூறி இருக்கிறேன்..
http://blogintamil.blogspot.com/2011/04/beautiful-blogs.html
சகுனம் பார்ப்பது சரியில்லை.. ஆனால் கதைக்கு நல்லாதான் இருக்கு...
பாவம் பூனை
நல்ல கதை. பாவம் அந்த பூனை! :(
அய்யோ....பூனை :(
பூனை அழுதால் இப்படியும் அர்த்தப் படுத்துவாங்களா.:(
//விட்டால்,.. யமனையே ஆட்டோவில் கூட்டிக்கொண்டுவந்து, தாத்தாவையும் சேர்த்து அனுப்பிவைத்துவிடுவார்கள் போல//
...இப்படி எல்லாம் எழுதி நல்லா சிரிக்க வச்சிட்டு..
கடைசி பாரா படிச்சிட்டு ரொம்ப கஷ்டமாயிருச்சுங்க... :(
வாங்க ஜலீலா,
உங்க பாஸ்தாவுக்காக வெயிட்டிங் :-)
வாங்க ஆனந்தி,
நேத்தே பார்த்தேன்ப்பா.. கமெண்டறதுக்குள்ள ஆற்காட்டார் விசிட் :-)))
வாங்க சிநேகிதி,
நம்பிக்கை என்பது முற்றி மூட நம்பிக்கையாகும்போது நம்ம வாழ்க்கையையும் முடக்கிப்போட்டுடுதே..
வாங்க தென்றல்,
வாசிச்சதுக்கு நன்றி..
வாங்க கோவை2தில்லி,
வாசிச்சதுக்கு நன்றி.
வாங்க மாதேவி,
ஆமாம்ப்பா.. இன்னும் எக்கச்சக்கம் இருக்கு :-)
வாங்க ஆனந்தி,
கதைக்காக போட்டுத்தள்ளவேண்டியதாயிடுச்சுங்க.. மற்றபடி எனக்கும் பாவமாத்தான் இருக்கு.
ஐயோ பாவங்க அணந்தப்பூனை. இந்தக்கால்த்லயும் இப்படி சகுனங்களை நம்புரவங்க இருக்கான்களே
இது புள்ளை அழற சத்தமில்லை.. பூனைல்லா கத்துது..' என்று தெரிந்துவிட, //
நானும் கேட்டிருக்கிறேன். குழந்தை மாதிரியே இருக்கும். பூனை பாவம்தான். சகுனம் பார்க்கும் பூனைக்கே சகுனம சரியில்லையே!!
சகுன நம்பிக்கையை இப்படி
அ நியாயமாக காருக்கடியில் போட்டு
நசுக்கிவிட்டீர்களே
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பாவம் அந்த பூனை..தனக்கு தானே சகுனம் சொல்லிருக்கு..மனசு கஷ்டமாயிருக்கு...
தன் சாவுக்கு தானே அழுததோ... சகுனம் பார்க்கும் வீணர்களுக்கு சாட்டையடி பதிவு....
"நாம்" எதிரில் வந்ததால் பூனைக்கு சகுன ம் சரியில்லை!!!!!!!!!!!!
நல்லா இருக்கு பாராட்டுக்கள்..,
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம்
செய்திருக்கேன். நேரம் கிடைக்கும்போது
பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html
எல்.கே யின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்.
ஒரு பெரிய விபத்தை தன் உயிர் தியாகத்தால் தடுத்துவிட்டது, கரும்பூனை. பாவம்தான்.
இப்ப தான் வீட்டு பின்னாடி இரண்டு பூனை அழுதது
Post a Comment