Wednesday, 17 October 2012

கை விடப்பட்டவை - இம்மாதப் போட்டிக்கான புகைப்படப் பகிர்வுகள்..

புறக்கணிக்கப்பட்டவை அல்லது கை விடப்பட்டவை(Abandoned).. இதுதான் 'பிட்' போட்டியின் இம்மாதத் தலைப்பு. புறக்கணிக்கப்படுவது, கை விடப்படுவதென்பது எப்போதும் வலி நிரம்பியதாகவே இருக்கிறது. ஆறறிவுள்ள மனிதர்கள் மட்டுமல்ல, உயிரற்ற பொருட்கள், பராமரிப்பற்ற கோயில்கள், கட்டிடங்கள், விலங்குகள் கூட இந்தப் பட்டியலில் இடம் பெறலாம்.

என்னவெல்லாம் கனவுகளோடு கட்ட ஆரம்பித்திருப்பார்களோ இந்த வீட்டை..
டீசலும் பெட்ரோலும் இப்படி விலை ஏறிக்கிட்டே போனா கடைசியில் இதுதான் நிலைமையோ?..
பாதியில் கைவிடப்பட்ட வழிபாட்டுத்தலம்..
காய்கறிக்கடையாக ஒரு காலத்தில் இருந்தவை..
கை விட்டவர்கள் மறுபடியும் வருவார்களா?.. ஏக்கத்தோடு காத்திருக்கிறது.
புறக்கணிக்கப்பட்ட வலியுடன் எத்தனைக் கதைகள் புதைந்து கிடக்கின்றனவோ ஒவ்வொன்றின் பின்னும்!!


42 comments:

மோகன் குமார் said...

Nice. Best wishes for winning.

பால கணேஷ் said...

ஒவ்வொரு படமும் கதை சொல்கிறது. குறிப்பாய் அந்த கைவிடப்பட்ட கார்... வெகு அருமை. போட்டியில் வெல்ல என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

எப்படிங்க, இதுக்குன்னே தேடிப் போய் படம் பிடிச்சீங்களா?

ஆமா, இந்தக் கட்டிடங்களெல்லாம் இன்னுமா யாராலயும் ஆக்கிரமிக்கப்படாம, காலியா இருக்கு? தமிழ்நாட்டிலெல்லாம் ஆளுங்க இருக்க இடத்தையே நாங்கல்லாம் விட்டு வக்கீறதில்ல தெரியுமா? :-))))))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனையும் அழகு..

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான படங்கள். போட்டியில் வெல்ல வாழ்த்துகள்.

த.ம. 5

rishi said...

இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும் எதனாலும் யாராலும் புறக்கணிக்கப்படுவதில்லை.

துளசி கோபால் said...

எல்லாமே அருமை!

அநேகமா இந்தமுறை கெமெரா என்னைக் கைவிட்டுருச்சு!

ஸ்ரீராம். said...

எல்லாமே அருமையான படங்கள் கைவிடப்பட்ட வீடுகள் கட்டிடங்கள் ஊருக்கு ஊர் இருக்கு போல! முதலிரண்டு படமும் முதலிரண்டு இடம், முறையே!

தி.தமிழ் இளங்கோ said...

மனிதனை மனிதனே கைவிட்டு விடுகிறான். தங்கள் பதிவில் மனிதனால் கைவிடப்பட்டவைகளின் படங்களும் அவற்றிற்கான வார்த்தைகளும் மனத்தை நெருடலாக்குகின்றன.

வல்லிசிம்ஹன் said...

என் வோட் வீட்டுக்குத்தான்.
எத்தனை சந்தோஷத்தைப் பார்த்திருக்கும்.
எத்தனை துக்கத்தோடு அவர்கள் வெளியேறி இருப்பார்கள்.
நல்லபடம் சாரல்.

ராமலக்ஷ்மி said...

அருமையான படங்கள் சாந்தி. தேடிப் படமாக்கிய ஆர்வத்துக்குத் தனிப் பாராட்டுகளும்:)!

Asiya Omar said...

மிக அருமை. வலியுடன் பகிர்ந்த விதம் அழகு..வாழ்த்துக்கள்..

தமிழ் காமெடி உலகம் said...

எப்பவுமே பழசு பழசு தான்.....அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் said...

அத்தனையும் அருமை...

t.m. 8

ரிஷபன் said...

உங்களைக் கைவிடவில்லை படங்கள்

அமைதிச்சாரல் said...

வாங்க மோகன் குமார்,

உங்க வாழ்த்துகளுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க பாலகணேஷ்,

காரை ரசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

கடைசி ரெண்டையும் தேடிப்போய் படம் பிடிச்சேன். மத்தவைகளெல்லாம் பயணத்தின்போது வேகமா ஓடற வண்டியிலிருந்தே பிடிச்சுப்போட்டவை. ரங்க்ஸ் புண்ணியத்துல ஸ்பீட் போட்டோகிராபியில் கொஞ்சம் தேறிட்டேன் :-))

அமைதிச்சாரல் said...

வாங்க சௌந்தர்,

அத்தனையையும் நேரமெடுத்து ரசிச்சதுக்கு நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ரிஷி,

அப்படி எதுவும் புறக்கணிக்கப்படாம இருந்தா நல்லாத்தான் இருக்கும்..

வரவுக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க துள்சிக்கா,

கல்யாணப்பரிசா புதுக்கேமரா கேட்டிருக்கலாமில்லே அண்ணா கிட்ட :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்ரீராம்,

ஆஹா.. வீட்டுக்கும் காருக்கும் மவுசு கூடிக்கிட்டே போவுதே :-))

ரொம்ப நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தமிழ் இளங்கோ,

ரசித்தமைக்கு மிக்க நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

நீங்க சொன்னதெல்லாமே உண்மையான வார்த்தைகள்..

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

ரசிச்சதுக்கு மிக்க நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆசியா,

ரசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க மலர்,

ரசித்தமைக்கு ரொம்ப நன்றி.

பராமரிக்கப்படும் பழசுக்கு மவுசு கூடுதல்தான். அதுவே கை விடப்பட்டதாயிருந்தா பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்குங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்,

ரசித்தமைக்கு மிக்க நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ரிஷபன்,

ரசித்தமைக்கு மிக்க நன்றி.

துளசி கோபால் said...

//கல்யாணப்பரிசா புதுக்கேமரா கேட்டிருக்கலாமில்லே அண்ணா கிட்ட :-))//

அதெல்லாம் ஏர்ப்போர்ட்டிலேயே கிடைச்சுருச்சு, இந்தியாவுக்கு (ஓடி)ப்போய் கல்யாணம் பண்ணிக்கக்கிளம்பும்போதே!

எண்ட்ரி லெவல்ன்னு ஒரு Canon DSLR 1100D இன்னும் பரிசோதனை முடியலை!

மாதேவி said...

கைவிடப் பட்டவை மனத்தில் நிலைத்து நிற்கின்றன.

இராஜராஜேஸ்வரி said...

பயணங்களின் போது வழியில் இப்படி கைவிட்ட கட்டிடங்கள் , பார்த்தால் மனம் கனக்கும்..

அதற்கான உழைப்பு , சிரமம் , செலவு என்று எததனை கஷ்டங்கள் இப்படி விரயமாகிறதே என்று !

கோவை2தில்லி said...

ஒவ்வொரு படமும் கதை சொல்கிறது....போட்டியில் வெல்ல வாழ்த்துகள்.

அருணா செல்வம் said...

காலத்தால் கதை சொல்லும் படங்கள்...!!

Muruganandan M.K. said...

கைவிடப்பட்டவை
அழகான படங்கள்
ஆனால் மனத்தை அழவைக்கின்றன

அமைதிச்சாரல் said...

ஹா..ஹா..ஹா.. துள்சிக்கா, கலக்குறீங்க போங்க :-)))

சோதனை வெற்றிகரமா முடியட்டும்.

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

ரசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

நீங்க சொல்ற மாதிரி கட்டிடங்களை மும்பையில் நிறையப்பார்க்கலாம். கடனை உடனை வாங்கி ஃப்ளாட் புக் செஞ்சப்புறம் பாதியில் நின்ன கட்டிடத்தைப் பார்த்தே பிபி ஏறினவங்க எக்கச்சக்கம் இங்கே.

வரவுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆதி,

வரவுக்கும் ரசித்தமைக்கும் வாழ்த்துகள்.

அமைதிச்சாரல் said...

வாங்க அருணா செல்வம்,

வரவுக்கும் ரசித்தமைக்கும் நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க முருகானந்தம் ஐயா,

வரவுக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails