அனங்காம கொள்ளாம ஒரு இடத்துல இருந்தாத்தானே.. ஓரக்கண்ணால நாம கிட்டே வர்றோமான்னு பார்க்கறதும் நாம ஒரு எட்டு எடுத்து வெச்சாலும் சர்ர்ர்ருன்னு பறக்கறதுமா ஒரே அலப்பறை. என்னதான் பூனைப்பாதம் வெச்சு மெதுவா நாம நடந்தாலும் ஒரு அசைவிலேயே கண்டு பிடிச்சுருதுகள்.
இவர் cattle egret இனத்தைச் சேர்ந்தவர். பச்சைப்பசேல் புல்லை மேய்ஞ்சுட்டிருக்கும் ஆடு, மாடுகளோட பின்னாடியே வால் மாதிரி போயிட்டிருப்பார். அதுகள் புல் மேயும் போது வெளிப்படுற புழு, பூச்சிகள்தான் இதுக்கு உணவு.
இவங்க கொஞ்சம் சாதுவானவங்க. மும்பையைப் பொறுத்தவரை மக்கள் கூட்டத்தோடயே இருந்து பழக்கப்பட்டுட்டதாலயோ என்னவோ, ஆட்களைக் கண்டதும் ஓடறதில்லை. 'உன் வழியில் நீ போயிக்கோ'ன்னு கொஞ்சம் பெருந்தன்மையா விட்டுக்கொடுத்துட்டு அவங்க வேலையைப் பார்த்துட்டிருப்பாங்க. அடுக்களை ஜன்னல் கொஞ்சம் திறந்திருந்தா "இன்னிக்கு என்ன சமையல்?"ன்னு எட்டிப்பார்த்து விசாரிச்சுட்டுப் போற அளவுக்கு ஜகஜமா இருப்பாங்க :-)
முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்ன்னா அது இவங்க ஆட்கள்தான். பத்தடி தூரத்துல இருந்தாலும் லேசான அசைவையும் கண்டுபிடிச்சு உஷாராயிடுவாங்க.
தீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கிக்கொடுக்க மாட்டேன்னு ஊட்டுக்காரர் சொல்லிட்டாராம். உர்ர்ர்ர்ன்னு இருக்காங்க. கிட்டே போயி ஏதாச்சும் கேட்டா கடிச்சு வெச்சாலும் வெச்சுருவாங்க. வாங்க,.. அந்தப்பக்கமா போயிடலாம் :-)
இந்த கெட்டப்பை இன்னும் கொஞ்ச நாளைக்கு மெயிண்டெயின் செஞ்சாத்தான் பர்ஸ் பொழைக்கும் :-)
என்னா லுக்கு!!!..
வாஷிங் மெஷின்லேருந்து இப்பத்தான் வெளியில எடுத்தேன். பளபளக்கிறாங்க..
குடியிருப்பையடுத்து இருக்கும் சின்ன காலி மனையில் தற்காலிகமா இவங்க குடியிருக்காங்க. கிட்டத்தட்ட அஞ்சு நாளா முயற்சி செஞ்சு இதைக் கிளிக்கினேன். ரொம்பவும் கூச்ச சுபாவமுள்ள புல்புல் இவங்க. ஆனா, ஒரு செகண்டுக்கு மேல ஒரு இடத்துல இருக்கறதில்லை. இடம் மாறி மாறிப் பறந்துட்டே இருப்பாங்க. வழக்கமா பறவைகளைப் படம் பிடிக்கறப்ப ஷட்டர் ஸ்பீடு 1/1000 இருந்தாலே போதும், ஆனா, இவங்களைப் பிடிக்கறப்ப 1/2000 வரைக்கும் தேவைப்பட்டது. மேனுவல் செட்டிங்கில் 1/2000 ஷட்டர் ஸ்பீட், அப்பர்ச்சர் 4 அல்லது 5.6 வெச்சு எடுக்கும்போது ரிசல்ட் நல்லாவே கிடைக்குது.
"என்னடி மைனாம்மா உன் கண்ணுலே மையி.."
போகுமிடமெல்லாம் கூடவே போயி ஃப்ரெண்டு பிடிச்சு, ஏதாவது தின்னக் கொடுத்து "நீ ரொம்ப நல்லவ"ன்னு அதுகள்ட்ட பேரு வாங்கிட்டா போறும். பறவைகளும் விலங்குகளும் போட்டோ செஷனுக்கு நல்லாவே ஒத்துழைக்கும். இது என்னோட அனுபவம். இன்னொரு பறவைத்தொகுப்பையும் விரைவில் எதிர்பாருங்கள்..
54 comments:
பறவைகளின் படங்களும், தகவலும் அருமை. பகிர்வுக்கு நன்றி
அத்தனையும் மிக அழகு:)! அடுத்த தொகுப்புக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.
கண்ணைக் கவர்ந்த படங்கள் அருமை.
படங்கள் எல்லாம் மிக மிக அருமை...பகிர்வுக்கு மிக்க நன்றி....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அழகு அழகு.. எல்லா படங்களுமே அழகு. ஒரு காகாவை கூட இவ்வளவு நன்றாக படம் எடுக்க முடியுமா என்று தோன்றியது..அருமை.
அனைத்தும் கொள்..ளை அழகு. விபரிப்பும் அருமை. அடுத்த தொகுதியை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
அழகான பறவைகள்
அற்புதமான புகைப்படங்கள்
அறியாத தகவல்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 3
எல்லாமே அழகோ அழகு.
தலைப்பு மிக அருமை.
பறவைகள்..... பலவிதம்......
ஒவ்வொன்றும் ..... ஒருவிதம்.
மிகச்சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள்.
ஃபோட்டோக்ராஃபி படிச்சிருக்கீங்களோ?இம்புட்டு ஜூப்பரா புடிச்சுருக்கீங்க?
இதைப் பாத்ததும் எனக்கு ஒண்ணு ஞாபகத்துக்கு வருது.தினமும் எங்க வீட்டு வாசல்ல நான் கோலம் போட்டதும் ரெண்டு காக்கா வரும்.வெளி வாசல்ல போட்டு உள் வாசல்ல போடறதுக்குள்ள வெளில போட்டுருக்கறது மொத்தமும் சாப்டுடும்.உள் வாசல்ல போட்டு கதவைப் போட்டதும் ரெண்டு அணிலார்கள் வந்து அதை நக்கி நக்கி சாப்பிட்டு தீத்துடுவாங்க.வாசல்ல கோலம் போட்ட அந்த ஃப்ரேம் டிசைன் மட்டும் இருக்கும். வெளில சாப்பிடறவங்க உள்ள சாப்பிடறவங்களையும், உள்ள சாப்பிடறவங்க வெளில சாப்பிடறவங்களையும் அலோவ் பண்ண மாட்டாங்க.பவளமல்லி வாசனையோட கார்த்தால இந்த காட்சி எங்க வீட்ல அருமையா இருக்கும்.ஒரு நடை வாங்க :-)
Pretty and nice.
படங்களும் தகவல்களும் ரொம்ப நல்லா சொல்லி இருக்கே
படங்களின் தொகுப்பும் நீங்கள் தந்திருக்கும் வர்ணனையும் அருமை! ரசித்தேன்.
பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்! நன்றாகவே சுட்டுத் தள்ளி இருக்கிறீர்கள், காமிராவினால்.
நேத்துதான் ஒரு மைனாஇவைப் பிடித்தேன். அதுவும் விருட்னு போயிடப் போகிறதேன்னு வீட்டுக் குள்ள இருந்தே பிடித்தேன். அப்படியும் முகம் காட்ட மறுத்துட்டாங்க:)
உங்க பட்ங்கள் அத்தனையும் சூப்பர்.
வர்ணனை அதைவிட சூப்பர்.என்ன கலர். வாழ்த்துகள் சாரல்.
படங்களும் அதற்கேற்ற உங்க கமெண்ட்டும் அருமை.
பற...பற...பற அழகிய படங்கள்.
அடுத்த வருகைக்கு உணவுடன் காத்திருக்கின்றோம் .:)
அனைத்தும் மிகவும் அருமை..
நன்றி...
tm6
படத்துக்கான கமெண்ட்ஸ் மிக நன்றாக இருக்கின்றன. தீபாவளிக்கு பட்டுப் புடவை வாங்காத கமெண்ட் ரசனை. படங்கள் அழகோ அழகு.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/5.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
அழகான புகைபடங்கள்... நானும் ஒரு பறவைக் காதலன். அவை பறக்கும் பூக்கள்... நல்ல பதிவு.. வாழ்க!
வாழ்த்துக்கள்.பறவைகளை படம் பிடிப்பது லேசில்லை. இதன் பின்னாடி உள்ள உழைப்பும் பொறுமைக்கும் பாராட்டுக்கள்.படங்கள் செம அழகு.
//போகுமிடமெல்லாம் கூடவே போயி ஃப்ரெண்டு பிடிச்சு, ஏதாவது தின்னக் கொடுத்து "நீ ரொம்ப நல்லவ"ன்னு அதுகள்ட்ட பேரு வாங்கிட்டா போறும். பறவைகளும் விலங்குகளும் போட்டோ செஷனுக்கு நல்லாவே ஒத்துழைக்கும். இது என்னோட அனுபவம்.//
உங்க அனுபவம் இது!!
//ஓரக்கண்ணால நாம கிட்டே வர்றோமான்னு பார்க்கறதும் நாம ஒரு எட்டு எடுத்து வெச்சாலும் சர்ர்ர்ருன்னு பறக்கறதுமா ஒரே அலப்பறை//
இது என் சோகக் கதை. கூட்டங்கூட்டமா குருவிங்க நிக்குது. ஆனா, ஒரு படம் எதுக்க முடியலையே... :-( :-)
அன்புடையீர் இன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவை நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.
நன்றி
http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_9.html
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
வாங்க ராஜி,
ரசிச்சதுக்கும் போணி செஞ்சதுக்கும் நன்றிங்க :-)
வாங்க ராமலக்ஷ்மி,
ரசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க :-)
வாங்க சசிகலா,
ரசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.
வாங்க எடிட்டோரியல் காலண்டர்,
வரவுக்கும் ரசிச்சதுக்கும் ரொம்ப நன்றி.
வாங்க ரமா,
பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க.
வாங்க இமா,
ரசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.
வாங்க ரமணி,
வருகைக்கும் ரசிச்சதுக்கும் ரொம்ப நன்றிங்க.
வாங்க வை.கோ ஐயா,
ரசிச்சதுக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிங்க.
வாங்க ராஜி,
எல்லாம் நம்ம 'பிட்' வகுப்புகள்ல கத்துக்கிட்டதுதாங்க :-)
நீங்க விவரிச்சிருக்கற விதம் இப்பவே வந்து பார்க்கணும்ன்னு ஆசையைத்தூண்டுதுங்க :-))
வரவுக்கும் ரசிச்சதுக்கும் நன்றிங்க
வாங்க மோகன் குமார்,
வரவுக்கும் ரசிச்சதுக்கும் நன்றி.
வாங்க லக்ஷ்மிம்மா,
ரொம்ப நன்றிம்மா.
வாங்க வெங்கட்,
ரசிச்சதுக்கும் வரவுக்கும் ரொம்ப நன்றி.
வாங்க தமிழ் இளங்கோ,
பாராட்டுக்கு வரவுக்கும் நன்றிங்க.
வாங்க வல்லிம்மா,
காலையில் அதுங்கல்லாம் சாப்பிடுறப்ப படம் எடுத்தா மைனாக்கள் ஒத்துழைக்கும். மதிய வெய்யில் ஏற ஏற சின்ன அசைவுக்கும் ஓடிரும்.
மிக்க நன்றி வல்லிம்மா ரசிச்சதுக்கு :-)
வாங்க ஆதி,
ரசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.
வாங்க மாதேவி,
விரைவில் பறவைகளைக்கூட்டிக்கிட்டு வரேன்ப்பா. ஒண்ணும் அகப்பட மாட்டேங்குது :-)
வரவுக்கும் ரசிச்சதுக்கும் நன்றிங்க.
வாங்க தனபாலன்,
வரவுக்கும் ரசிச்சதுக்கும் நன்றிங்க.
வாங்க ஸ்ரீராம்,
வரவுக்கும் ரசிச்சதுக்கும் ரொம்ப நன்றிங்க.
வாங்க தனபாலன்,
தகவலுக்கு நன்றிங்க.
வாங்க மோகன் அண்ணா,
'பறக்கும் பூக்கள்' வார்த்தைப் பிரயோகம் அருமை. ரசிச்சேன் :-)
வரவுக்கும் ரசிச்சதுக்கும் நன்றிங்க.
வாங்க ஆசியா,
நீங்க சொன்னது உண்மைதான்.
வரவுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிங்க.
வாங்க ஹுஸைனம்மா,
குருவிங்க என்னிக்காவது உங்க கிட்ட மாட்டாமலா போயிரும். அன்னிக்கு சுட்டுருங்க காமிராவால :-))
வரவுக்கு நன்றிங்க.
வாங்க குணசீலன்,
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றிங்க.
வாங்க அவர்கள் உண்மைகள்,
மனமார்ந்த நல்வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க சகோ.
வாங்க மாதேவி,
இனிய வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
வாங்க தனபாலன்,
தகவலுக்கு நன்றிங்க.
பறவைத் தொகுப்பு ரசிக்கவைத்தது ...
வாங்க ராஜராஜேஸ்வரி,
ரசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.
Post a Comment