Wednesday 28 January 2015

225 அடி உயரத்தில் தாயின் மணிக்கொடி பாரீர்..

 “நம் மூவர்ணக்கொடியானது இந்தியாவின் ஒற்றுமையின் சின்னம். மக்கள் தங்களிடையேயான அரசியல் மற்றும் பல்வேறு வேற்றுமைகளைக்களைந்து நம் தாய்த்திருநாடான இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற கடமையை இது நினைவூட்டுகிறது. இத்தகு பெருமையுடைய நம் தேசியக்கொடியை உயரே.. மிக உயரே பறக்கச்செய்வது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய ஒன்றாகும்” நவிமும்பை மாநகராட்சியின் முதல் மேயரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்சீவ் நாயக்கின் இந்த விருப்பத்தாலும் விடாமுயற்சியாலும்தான் இன்று நவிமும்பை மாநகராட்சியின் புதிய கட்டடத்தில் 225 அடி உயரக்கம்பத்தில் நம் இந்தியத்தாயின் மணிக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. இது இந்தியாவிலேயே மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி என்ற பெருமையுடையது.

கொடியைப்போலவே இக்கொடியைத் தன்னகத்தே கொண்டிருக்கும் நவிமும்பை மாநகராட்சியின் தலைமைச்செயலகமும் பல சிறப்பம்சங்களைக்கொண்டிருக்கிறது. முதலில் பேலாப்பூரில் அடுக்கு மாடி அலுவலகம் ஒன்றில் இயங்கி வந்த இச்செயலகம் தற்போது அதே பேலாப்பூரில் பாம் பீச் ரோடில் கில்லா ஜங்க்ஷனில் கட்டப்பட்டிருக்கும் புதிய கட்டடத்திற்கு இடம் மாறியிருக்கிறது. 


ஜெர்மன் தொழில்நுட்பத்துடன், நம் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகையின் சாயலுடன் கட்டப்பட்டிருக்கும் இக்கட்டடத்தில் மழை நீர் சேகரிப்பு, மற்றும் சூரிய ஒளிப்பிரதிபலிப்பை அதிக அளவில் தடுக்கும் anti-reflective tiles போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. இதன் காரணமாக அறை சூடாவது தடுக்கப்பட்டு அதன் மூலம் குளிர்பதன எந்திரங்களின் உபயோகமும் அதன் விளைவாக மின்சார உபயோகமும் குறைக்கப்படுகிறது. அடிக்கும் வெய்யிலை வீணாக்காமல் அதிலிருந்து மின்சாரம் தயாரித்துக்கொள்ள சூரிய ஒளித்தகடுகளும் பதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய வசதிகளைக்கொண்ட ஒரே அரசு அலுவலகம் இதுதான் என்பதால் லிம்காவின் சாதனைப்புத்தகத்திலும் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மொத்தம் பத்து இடங்களில் 207 அடி உயர தேசியக்கொடிக்கம்பங்கள் இருக்கின்றன. நவிமும்பையிலுள்ள கொடிக்கம்பம் அவற்றை விட 18 அடி கூடுதல் உயரம் கொண்டது. கொடிக்கம்பத்தின் எடை 12.5 டன்களாம்.இவ்வளவு உயரத்தில் பறக்கும் கொடி காற்றில் கிழிந்து போகாமல் இருக்கவேண்டும் அல்லவா? ஆகவே இதற்கென்றே பூனாவின் அருகிலுள்ள ரஞ்சன்காவ் என்ற ஊரில் ஸ்பெஷலாகத்தயாரிக்கப்பட்ட பாலியெஸ்டரில் இந்தக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 48.9 கிலோ. இவ்வளவு எடையுள்ள கொடியை ஏற்றுவதென்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. ஆகவே இது இயந்திரம் மூலம் இயக்கப்படும் விஞ்சால் ஏற்றப்படுகிறது. ஒரு முறை ஏற்றவோ இறக்கவோ 7-9 நிமிடங்கள் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

பொதுவாக தேசியக்கொடி சூரிய உதயத்தின் போது ஏற்றப்பட்டு சூரிய அஸ்தமனத்தின் போது இறக்கப்பட்டு விட வேண்டும். ஆனால், இந்தக்கொடி 24x7 அதாவது எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்க விசேஷ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மிக உயரத்தில் காற்றின் வேகம் காரணமாக கிழிந்து போய்விடாமல் இருக்க சிறப்பு கவனத்துடன் பராமரிக்கப்படும் இந்தக்கொடி போதிய இடைவெளிகளில் மாற்றவும் படுகிறது. கடந்த ஒரு வருடமாகக் காற்றில் படபடவென்ற சிறிய ஒலியுடன் பட்டொளி வீசிப்பறக்கும் இந்தக்கொடியின் கீழ் நிற்கும்போது படமெடுக்க வேண்டுமென்ற உணர்வு கூட தோன்றாமல் நம் மனமும் ஜிவ்வென்று பறக்கும் உணர்வு ஏற்படுவதென்னவோ உண்மைதான்.

ஜெய் ஹிந்த்.. பாரதத்தாயை வணங்குவோம்..

Monday 26 January 2015

66 - வது வாழ்த்துகள்..

அனைவருக்கும் இனிய 66-வது குடியரசு தின நல்வாழ்த்துகள்.

இந்தியாவிலேயே மிக உயரமான கொடிக்கம்பத்தில் 225 அடி உயத்தில் பறக்கும் நமது தேசியக்கொடி. இது நவி மும்பை மாநகராட்சியின் புதிய கட்டடத்தில் 24 மணி நேரமும் பறந்து கொண்டிருக்கிறது. (இதைப்பற்றிய விரிவான கட்டுரை பின்னர் வரலாற்றில் பதியப்படும். வரலாறு முக்கியம் மக்கள்ஸ்..)




வழக்கத்தை உடைக்கும் விதமாக ஆரஞ்சு மிட்டாய்க்குப்பதில் சீரக மிட்டாய் :-))


Thursday 15 January 2015

Saturday 10 January 2015

சென்னை புத்தகத்திருவிழா - 2015

வாசிப்பனுபவத்தில் மூழ்கி முத்தெடுக்கக்காத்திருக்கும் வாசகர்களையும், அவர்களுக்குத்தீனி போடக்காத்திருக்கும் பதிப்பகங்களையும் புத்தகங்கள் என்ற சங்கிலி இணைக்கிறது. அதுவும் நேற்று ஆரம்பித்து வருகிற 21-ம் தேதி வரை நடைபெற இருக்கும் புத்தகத்திருவிழாவில் வாசகர்கள் தேனில் விழுந்த ஈக்களாய் 'எதை எடுக்க.. எதை விட' என்று மயங்கித்திரியப்போவது நிச்சயம்.

புத்தகக் கண்காட்சி என்பதை விட திருவிழா என்று கூறுவது மிகப்பொருத்தமானது என்றே தோன்றுகிறது. ஒரு உற்சாகமான மனநிலையையும் கொண்டாட்டத்தையும் உருவாக்கக்கூடிய ஒன்றை வேறெப்படித்தான் கூறுவதாம்?
இந்தப்புத்தகத்திருவிழாவில் 'சிறகு விரிந்தது' என்ற எனது கவிதைத்தொகுப்பு உட்பட அகநாழிகைப்பதிப்பகத்தின் அனைத்து நூல்களும் வீரபாண்டிய கட்டபொம்மன் வீதி 'அகநாழிகை அரங்கு எண்-304' ல் கிடைக்கும். கவிதைத்தொகுப்பை இணையத்திலும் வாங்கலாம்.

அரங்கில் அடுக்கப்பட்டிருக்கும் அகநாழிகைப்பதிப்பக வெளியீடுகள்..
அரங்கின் வரைபடம்
படங்கள் மற்றும் தகவல் திரு. வாசுதேவன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.

அகநாழிகைப் பதிப்பகத்தின் வெளியீடுகள் - 2013, 2014 மற்றும் - ஜனவரி 2015
கவிதைகள் 
விரல் முனைக் கடவுள் - ஷான் (ரூ.80)
சொந்த ரயில்காரி - ஜான் சுந்தர் (ரூ.70)
மௌன அழுகை - மு.கோபி சரபோஜி (ரூ.70)
மலைகளின் பறத்தல் - மாதங்கி (ரூ.80)
ஏன் என்னைக் கொல்கிறீர்கள் - க.இராமசாமி (ரூ.60)
என் வானிலே - நிம்மி சிவா (ரூ.50)
யுகமழை - இன்பா சுப்ரமணியன் (ரூ.70)
கவிதையின் கால்தடங்கள் (50 கவிஞர்களின் 400 கவிதைகள்) - தொகுப்பாசிரியர் : செல்வராஜ் ஜெகதீசன் (ரூ.230)
அன்ன பட்சி - தேனம்மை லட்சுமணன் (ரூ.80)
சிறகு விரிந்தது - சாந்தி மாரியப்பன் (ரூ.80)
இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி (ரூ.80)
தனியள் - தி.பரமேசுவரி (ரூ.100)
அவளதிகாரம் - வசந்த் தங்கசாமி (ரூ.200)
சிவப்பு பச்சை மஞ்சள் வௌ¢ளை - செல்வராஜ் ஜெகதீசன் (ரூ.70)
மணல் மீது வாழும் கடல் - குமரகுரு அன்பு (ரூ.70)
ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் - உமா மோகன் (ரூ.70)
அக்காவின் தோழிகள் - நீரை. மகேந்திரன் (ரூ.60)
தூக்கம் விற்ற காசுகள் - ரசிகவ் ஞானியார் (ரூ.90)
சிறுகதைகள்
சுனை நீர் - ராகவன் ஸாம்யேல் (ரூ.110)
தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் - இராய. செல்லப்பா (ரூ.120)
அடை மழை - ராமலக்ஷ்மி (ரூ.100)
குறுக்கு மறுக்கு - சிவக்குமார் அசோகன் (ரூ.70)
முப்பத்தி நாலாவது கதவு (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) - தமிழில் : புல்வெளி காமராசன் (ரூ.120)
சக்கர வியூகம் - ஐயப்பன் கிருஷ்ணன் (ரூ.80)
வற்றா நதி - கார்த்திக் புகழேந்தி (ரூ.120)
அம்மாவின் தேன்குழல் - மாதவன் இளங்கோ (ரூ.130)
என்றாவது ஒரு நாள் (ஆஸ்திரேலிய புதர்க்காடுறை மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள்) - ஹென்றி லாசன் - தமிழில் : கீதா மதிவாணன் (ரூ.150)
கட்டுரைகள்
வெயில் புராணம் - உமா மோகன் (ரூ.25)
கலிகெழு கொற்கை (மீனவர் வாழ்வியலை முன்வைத்து ஜோ டி குரூஸ் படைப்புலகம்) தொகுப்பாசிரியர் : தி.பரமேசுவரி (ரூ.240)
யாருக்கானது பூமி? - (சூழலியல் - காட்டுயிர் பாதுகாப்பு - பறவையியல் கட்டுரைகள்) பா.சதீஸ் முத்து கோபால் (ரூ.140)
பேயாய் உழலும் சிறுமனமே - இளங்கோ டிசே (ரூ.150)
நாவல்
நுனிப்புல் - வெ.இராதாகிருஷ்ணன் (ரூ.130)

Monday 5 January 2015

வரலாற்றைப் பதிவு செய்தேன்..(பாகம்-2)

காமிரா என்றவொரு அறிவியல் கண்டுபிடிப்பு மனிதனுக்கு முதன்முதலில் அறிமுகமாகியபோது அதை ஆச்சரியத்தோடு பார்த்தவர்களை விட பயம் கலந்த ஆச்சரியத்தோடு பார்த்தவர்கள்தான் அதிகமாக இருந்திருக்கக்கூடும். "படம் புடிச்சா அளகு குறைஞ்சுடும், ஆயுசு குறைஞ்சுடும்" என்று போட்டோ எடுத்துக்கொள்வதை எவ்வகையிலாவது தள்ளிப்போட்ட நமது பாட்டன், பாட்டிகள், காண்பவற்றையெல்லாம் படம் பிடித்துத்தள்ளும் இன்றைய டிஜிட்டல் உலகத்தையும், காமிரா அடங்கிய மொபைலில் நிமிடத்துக்கொரு முறை செல்ஃபி எடுத்துக்கொள்ளும் மக்களையும் காண நேர்ந்தால் எவ்வகை அதிர்ச்சிக்கு உள்ளாவார்களோ!! :-))

அப்படியில்லாமல் துணிந்து தங்களையும் தங்கள் வாழ்வியலையும் காமிராவில் பதிவு செய்த துணிச்சல்வாதிகளால்தானே அன்றைய வாழ்வியலை அறிந்து கொள்ள முடிகிறது. எத்தனையோ பேருக்கு தங்கள் முந்தைய தலைமுறையை படத்திலாவது காண முடிகிறது. அந்த வகையில் அன்றாட வாழ்க்கையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த சில காட்சிகளை ஒளிப்படமாக்கியவற்றில் சிலவற்றை ஏற்கனவே முதல் பாகமாகப் பகிர்ந்திருந்தேன். தொடர்ச்சியாக  மேலும் சில.

போவோமா ஊர்கோலம்..

ஆலையகப்பட்ட கரும்பாய் வாழ்வும்..

 பஞ்சு மிட்டாய் பத்து ரூபாய்..

 குறுக்கப்பட்ட விருட்சம்..
  நண்பேண்டா//

 தலைமுறைகள்..

பழுத்த பழம்..
ஐஸ்..

 எங்கே செல்லும் இந்தப்பாதை..

இயந்திர வாழ்க்கை பிழிந்தெடுக்கிறது..

அ.. ஆச்சரியம்..
பதனி.. பதனீய்..

 எல்லாம் வெங்காயம்..

நிறைவு செய்கிறது வெற்றிலை..

ரோட்டோரத்தில் வாழ்ந்தாலும்.. பசிக்கிறதே..

 இளைய தாத்தா..

நல்ல மேய்ப்பர்..

சுத்தம் சோறு போடும்..

கல்லிலிருந்து கட்டடம் வரை..

சுமையல்ல..

Thursday 1 January 2015

நன்றி - 2014



நல்லவைகளையெல்லாம் நினைவில் வைக்கவும், அல்லவைகளையெல்லாம் அனுபவங்களாகவும் படிப்பினைகளாகக்கொள்ளவும் , புதிய சவால்களை எதிர்கொள்ளவும் இன்னுமொரு ஆண்டைப்பரிசளித்து இந்த ஆண்டு விடை பெற்றுச் செல்கிறது.


அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

LinkWithin

Related Posts with Thumbnails