ஒளிப்படத்துறையில் தங்களைச் சுற்றியுள்ள வாழ்வியலைப் பதிவு செய்யும் "ஸ்ட்ரீட் போட்டோக்ராபி" என்பது ரொம்பவே சுவாரஸ்யமானது. நாம் சாதாரணமாக எண்ணி எடுக்கும் சில படங்கள் வரலாற்றைப் பதிவு செய்யும் ஆவணமாகவும் அமைந்து விடும். முன்னொரு காலத்தில் இடங்களையும் மக்களையும் புகைப்படங்களில் பதிவு செய்தவற்றை இப்போது பார்க்கும்போது, 'அட!!' இந்த இடம்தானா அது?.. அந்தக்காலத்து மக்களின் ஆடை, அணிகள் இந்தக்காலத்திலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கின்றன!' என்றெல்லாம் ஆச்சரியப்படுகிறோம் இல்லையா?. இதெல்லாம் ஸ்ட்ரீட் போட்டோகிராபியின் கைங்கர்யம்தான். போரடிக்கும் பொழுதுகளில் காமிராவும் கையுமாக நகர் வலம் வந்துதான் பாருங்களேன். யார் கண்டது?.. நீங்கள் பதிவு செய்யும் ஏதாவதொரு ஒளிப்படம் வரலாற்று ஆவணமாகக்கூட பிற்காலத்தில் விளங்கக்கூடும். வரலாற்றைப்பதிவு செய்வது முக்கியம் அமைச்சரே :-)
நான் நகர்வலம் போனபோது எடுத்த படங்களில் சிலவற்றை இதோ கண்காட்சியில் வைத்திருக்கிறேன். கண்டு களியுங்கள்.. கூடவே, சில படங்களின் exif info எனப்படும் ஷட்டர் ஸ்பீடு, அப்பர்ச்சர்,போன்ற விவரங்களையும் முடிந்த மட்டும் கூடவே கொடுத்திருக்கிறேன்.
ஷட்டர் ஸ்பீடு- 1/320, அபர்ச்சர் 4.8,
iso - 1600 (இருட்ட ஆரம்பித்து விட்டதால் அதிக iso. இல்லையென்றால் 100தான் வைப்பேன்)
1: படத்துக்குள் படம் :-)
2: நவி மும்பையில் பைப்லைன் மூலம் காஸ் சப்ளை செய்வதற்கான ஆரம்ப ஏற்பாடுகள்..
3: s.s. - 1/320 (இனிமேல் சுருக்கமாவே ஞாபகம் வைத்துக்கொள்ளலாமே)
f- 9, iso- 100
இனிய தருணங்களைச் சிறைப்படுத்துதல் இனிது..
4: இந்தப்படம் ஸ்போர்ட்ஸ் ஆப்ஷனைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது. பையனின் ஸ்கேட்டிங் ஸ்பீடு அந்தளவுக்கிருந்தது. :-)))5: s.s: 1/1250, f: 5, iso: 400
சுமந்தால்தான் சுமக்க முடியும் குடும்பச்சுமையை..
6: அதிகாலை வெளிச்சம் கொஞ்சம் குறைவாக இருந்ததால் f நம்பரை 5-ல் வைத்து அபர்ச்சர் மோடில் எடுத்தேன். மற்ற அளவுகளைக் காமிராவே தீர்மானித்துக்கொண்டது.
மும்பையின் இட்லிக்கடையொன்றில்..
7: பாயிண்ட் அண்ட் ஷூட்டில் ஸ்போர்ட்ஸ் ஆப்ஷனைப் பயன்படுத்தி எடுத்தது. காமிராவே எல்லா அளவுகளையும் தீர்மானித்துக்கொண்டது.
ஹெல்மெட்டை எப்படி உபயோகிக்க வேண்டுமென்று யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை போலிருக்கிறது :-)
8: இதுவும் அபர்ச்சர் மோடில் 5.6 வைத்து எடுத்தது.
வெறும் காற்றடைத்த டயரடா..
9: s.s: 1/800, f: 5.6, iso: 100
10: 1/1600, 400, 6.3
சுகமான சுமைகள்..
11: 1/1250, 5.6, 400
ஊக்கமிருக்கிறது இன்னும் மனதில் ஆகவே ஓய்வெடுக்கவும் இன்னும் காலமிருக்கிறது
12: சனீஸ்வரைக்கண்காணிக்க ஆஞ்சனேயரும் அங்கேயே குடியிருக்கும் கோயில்..
13: பேத்திக்காகக் காத்திருக்கும் பாட்டி..
14: முடங்கி விடாத உற்சாக உலகம் :-))
15: வாழ்க்கையும் வண்ணமயமாய் ஆகிவிடும் என்றாவது..
16: நம்பி விட்டுவிட்டுப்போயிருக்கிறார்கள்.. பத்திரமாகத்தான் இருக்கிறது.
(இந்தக் கடைசிப்படம் கல்கியின் போட்டோகேலரியிலும் அச்சாகியிருந்தது)
ஸ்ட்ரீட் போட்டோகிராபியின்போது,இயல்பான நிலையில் படம் எடுப்பதற்காக நாம் மெனக்கெட்டுக் கொண்டிருப்போம். இதைக்கண்டு விட்டால், சிலர் அங்கிருந்து நகர்ந்து விடுவார்கள், சிலர் சட்டென்று காமிராவை நோக்கி நின்று போஸ் கொடுப்பார்கள். ஆகவே அவர்கள் அறியாவண்ணம் சாமர்த்தியமாக எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் ஜூம் லென்சை உபயோகித்தும் எடுக்கலாம். சிலர் ஆட்சேபிக்கவும் கூடும். ஆட்சேபிப்பார்களானால் அவர்களைத் தொந்தரவு செய்வதைத் தவிர்த்தல் நலம். நமக்கு அறிமுகமானவர்களாக இருந்தால் தவிர இளம்பெண்களைப் படமெடுப்பதையும் தவிர்த்தல் நலம்.
டிஸ்கி: ஷட்டர் ஸ்பீடு, அபர்ச்சர் என்பவையெல்லாம் என்னவென்று பிட்டில் விளக்கியிருக்கிறார்கள். இடுகையும் பின்னூட்டங்களும் அளிக்கும் விவரங்கள் எக்கச்சக்கமானவை. வாசித்துப் பயனடைவீர் :-))
19 comments:
பாம்பே, பரபரப்பின்றி இவ்ளோ அமைதியாவா இருக்கும் ?
ஒவ்வொரு படமும் அருமை... வாழ்த்துக்கள்...
படத்தின் உங்களின் கருத்தும் கலக்கல்...
ஹைய்யோ!!!!!!!!
வாங்க தனபாலன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)
வாங்க ரிஷி,
ஆமாம்.. பரபரப்பான பகுதிகளைத் தவிர அமைதியான பகுதிகளும் மும்பையில் இருக்கு. கமர்ஷியல் ஏரியாக்களின் உலகம் தனியானது.
இன்னொண்ணும் சொல்லணும். எத்தனைதான் கூட்டமிருந்தாலும் நமக்குத் தேவையானதை மட்டும்தானே படமெடுக்க முடியும். எல்லாத்தையும் காமிராவில் அடைச்சா அது கருப்பொருளின் மேலிருக்கும் கவனத்தைச் சிதறடிச்சுரும்.
ஒரு ரகசியம் சொல்லவா.. கடைசிப்படம் "கேட் வே ஆஃப் இந்தியா"வில் எடுத்தது. இப்ப சொல்லுங்க அது அமைதியான பகுதியா :-)))))
வரவுக்கு நன்றி.
Excellent !!!!!
அருமையான புகைப்படங்கள்
மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தோம்
வாழ்த்துக்கள்
tha.ma 1
தொடர்ந்து வரலாற்றை பதிந்து வாருங்கள். அத்தனைப் படங்களும் அருமை. சிறுவருக்கான வண்ண உடை விற்போரும், கூடைகளைத் தூக்கியபடி சாலையில் செல்லும் விற்பனையாளரும் அதிகம் கவருகிறார்கள். முன்னரே சொன்ன நினைவிருக்கு.கடைசிப்படம் ஒரு கவிதை.
ஆகா,கண்டேன், களித்தேன், அருமை சாந்தி. வாழ்த்துக்கள்.
அன்புடன்
பவள சங்கரி
படமும் கருத்தும் அழகு.
கடைசி படம் கல்கியின் போட்டோகேலரியில் இடம் பெற்றது அறிந்து மகிழ்ச்சி.
சரித்திரத்தைப் பதிவு செய்யும் படங்கள் ஒவ்வொன்றும் மனதைக் கொள்ளை கொண்டன. பரபரப்பான அந்த முதியவர்களும், வண்ணங்களைச் சுமந்து செல்பவர்களும், பதிவின் கடைசிப் படமும்...! ஒன்றையொன்று மிஞ்சப் பார்க்கின்றன. அப்புறம்... ஹெல்மெட்டை மடியில் வைத்துச் செல்லும் அந்த ஆளின் மண்டையே ஹெல்மெட் மாதிரிதான் இருக்கு. ஹி... ஹி...!
எல்லாப்படங்களுமே மிக அழகாக எடுக்கப்பட்டுள்ளன. மனமார்ந்த பாராட்டுக்கள்.
பேசும் படங்கள்
அருமையான படங்கள் சாரல்.பார்க்கவே ரம்யமாக உள்ளது.
படங்கள் அழகு.,..
வண்ணமய வாழ்க்கையும், ஓய்வெடுக்க விரும்பாத கிழவரும் கவர்கிறார்கள்.
எல்லாப் படங்களுமே அருமை.
அருமையான காட்சிகள்
துல்லியமான படப்பிடிப்பு
அற்புதம்
அருமையான காட்சிகள் அத்தனையும் கதைகள் பேசுகின்றன.
இனிய சித்திரை புதுவருட வாழ்த்துகள்.
Post a Comment