Friday, 5 April 2013

நெல்லை ஹலோ எஃப்.எம்மில் எனது பேட்டி.. (பகுதி-1)

எப்பவும்போல் அன்னிக்கு மெயில் பெட்டியைத் திறந்தேன். ஒவ்வொண்ணா வாசிச்சு, பதிலளிக்க வேண்டியதுக்கெல்லாம் பதிலளிச்சு, ப்ளாகுக்கு வந்திருந்த பின்னூட்டங்களைப் பப்ளிஷ் செஞ்சுன்னு நான் ஒர்ரே பிஸியாயிருந்தேன். அப்பத்தான் ஒரு புது மெயில் கண்ணுல பட்டது. அனுப்புனவங்க பேரு வேற இது வரைக்கும் கேள்விப்பட்டதில்லை.  யாரு? என்னன்னு மெயிலைத் திறந்து பார்த்தேன்.. ஹைய்யோ!!!!

நெல்லை ஹலோ எஃப்.எம்மிலிருந்து ஜெயகல்யாணியின் மெயில். குங்குமம் தோழியில் வந்திருந்த என்னுடைய பேட்டியை வாசிச்சுட்டு, 'நெல்லை ஹலோ எஃப்.எம்மின் "சாதனைப்பெண்கள்" மகளிர் நிகழ்ச்சிக்காக ஒரு பேட்டியெடுக்கணும். சம்மதம்ன்னா உங்க தொடர்பு எண்ணை மெயிலுங்க'ன்னு கேட்டிருந்தாங்க. ஆஹான்னு யோசிச்சுட்டு என் மொபைல் நம்பரை அனுப்புனேன். அப்படியே பேட்டி எப்ப எடுப்பீங்க?.. நேரடி ஒலிபரப்பா.. அல்லது பதிவு செய்யப்பட்டதான்னு துணைக்கேள்விகளும் அனுப்பினேன். ஏன்னா நிகழ்ச்சிக்கேத்தபடி தயாரா இருக்கணுமில்லையா!. மறுநாள் மதியம் 12 மணிக்கப்புறம் தொடர்பு கொள்வாங்கன்னும், பேட்டியைப்பதிவு செஞ்சு அன்னிக்கு மதியமே ஒரு மணியிலிருந்து ஒண்ணேகால் வரையிலான நேரத்துல ஒலிபரப்பும் ஆகிரும்ன்னு பதில் மெயில் வந்தது.

நம்ம ஜெயகல்யாணி ஜெயபாலனின் பெயரை விட அவங்க வாங்கியிருக்கும் பட்டங்களின் லிஸ்ட் நீளமானது. M.Com., M.C.A., B.Ed., P.G.D.C.A., இதோடு கூட ஆஸ்திரேலியாவில் படிச்சு வாங்கிய CPA-யும் சேர்ந்துக்கிட்டிருக்கு. இந்த CPA நம்மூர் CAக்கு சமம். படிப்பின் மேல் இவங்க வெச்சுருக்கும் ஆர்வம் இதுலயே தெரியுதில்லே. பையனை ஸ்கூலில் சேர்த்துட்டு, பையன் ஏழாம் வகுப்பு வரும்வரைக்கும் அதே ஸ்கூலில் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பு எடுத்துட்டிருந்திருக்காங்க. அதே சமயத்தில் தூத்துக்குடி ஆல் இந்தியா ரேடியோவிலும் அறிவிப்பாளராவும் பணி புரிஞ்சிருக்காங்க. குழந்தை, குடும்பம்,ஒரே நேரத்துல இரண்டு வேலைகள்ன்னு எல்லாத்தையும் சமாளிச்சுக்கிட்டு.. அம்மாடியோவ்!!.. அசுர சாதனைதான் இல்லையா?. இப்ப ஹலோ எஃப்.எம்மில் எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசராவும் இருக்காங்க. தன்னைப்பத்திச் சொல்லிக்கிட பெருசா ஒண்ணுமில்லைன்னு சொல்லிக்கிட்டாலும் இவங்களும் சாதனைப்பெண்தான். கண்டிப்பா இவங்களைப்பத்தி இன்னொரு நாள் விரிவா எழுதணும்.

வீட்ல பசங்க கிட்டயும் ரங்க்ஸ் கிட்டயும் இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கிட்டேன்.அப்பத்தான் மறுநாள் ஒரு முக்கியமான வீட்டுவேலையை முடிக்கிறதுக்காக ரங்க்ஸ் லீவு போட்டிருந்தது ஞாபகம் வந்தது. மறுநாள் காலை பத்து மணி வாக்கில் ரெண்டு பேரும் அங்கே போகலாம்ன்னு ஏற்கனவே  ப்ளானும் போட்டிருந்தோம். அடடா!! இப்ப என்ன செய்யறது?. “சரி.. மொபைல்லதானே பேட்டியெடுப்பாங்க. கையோட கொண்டு வந்தா அங்கே வெச்சு பேசலாமே”ன்னார். “ஆங்.. அதெல்லாம் முடியாது. அங்கே ஒரே மெஷின் சத்தமா இருக்கும். சத்தம் காரணமா சரியா பேச முடியலைன்னா அப்றம் ப்ரோக்ராம் ஹோகயா”ன்னுட்டேன். அப்றம் உக்காந்து யோசிச்சுட்டு “ஒண்ணு செய்யலாம்,.. பத்து மணிக்கு நீங்க முன்னாலே போங்க. ப்ரோக்ராமை முடிச்சுட்டு நான் பின்னாடி வரேன்”னு இறுதி முடிவெடுத்துட்டேன்.

மறுநாள், குளிச்சு முடிச்சு சாமி கும்பிட்டு, ரங்க்ஸைக் கிளப்பி அனுப்பிட்டு, அன்றாட வேலைகளைக் கவனிக்க ஆரம்பிச்சேன். ‘ஆச்..’ முதல் தும்மல். ரெண்டு நிமிஷ இடைவெளியில் அடுக்கடுக்கா தும்மல், லேசா தொண்டையும் கரகரங்குது. ஜலதோஷத்துக்கான அறிகுறிகள் லேசா தென்படுது. பகவானே!!.. இதென்ன? இருந்திருந்து இன்னிக்கா இப்படி ஆகணும். சரி,.. நீயே கவனிச்சுக்கோன்னுட்டு அடுக்களைக்கு வந்து கொஞ்சம் வெந்நீரை பொறுக்கும் சூட்டில் குடிச்சுட்டு, ஒரு பாட்டிலிலும் நிறைச்சுப் பக்கத்துல வெச்சுக்கிட்டேன். இண்டர்வியூ கொடுக்கறச்ச தொண்டை வறண்டாலோ, திடீர்ன்னு தொண்டைக்கரகரப்பு வந்துட்டாலோ என்னாகிறது? எதையும் ப்ளான் பண்ணிப் பண்ணணுமில்லையா :-)) அப்படியே “ஹல்திகஃப்”ஃபையும் ரெண்டு டோஸ் முழுங்குனேன். இப்ப கொஞ்சம் கொள்ளாம். இன்னும் டைம் இருக்கேன்னு இணையத்துல உலாவ ஆரம்பிச்சேன்.

சுமார் பன்னிரண்டரை மணியிருக்கும்… மொபைல் கூப்பிட்டது. ஜெயாதான். இணைப்பு சரியாயிருக்கான்னு செக் செஞ்சுட்டு, “நான் அறைக்குள்ளே போய்க்கிறேன். லைன்ல இருங்க”ன்னாங்க. பின்னணியில் லேசான ஒலியில் ஒரு பாட்டு ஒலிக்குது. என்ன பாட்டு? அடிக்கடி கேட்டதுதான். ஆங்.. இப்ப தெளிவாக் கேக்குது. “தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது” இது கோபுரவாசலிலே படத்துலேர்ந்து இல்லே. கேட்டு எவ்ளோ நாளாச்சு. ஜெயா பேட்டியை ஆரம்பிக்கிற வரைக்கும் நான் கேட்டுக்கிட்டிருந்தேன். நீங்களும் கேளுங்க... கேளுங்க.. கேட்டுக்கிட்டேயிருங்க, இதோ வரேன் :-)

19 comments:

rishi said...

பேட்டி எங்கே ?

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.பாட்டை கேட்டு முடிச்சாச்சே! எப்ப வருவீங்கன்னு நேயர்கள் காத்துக்கிட்டு இருக்கோம்.

கோமதி அரசு said...

நெல்லை ஹலோ எஃப்.எம்மிலிருந்து அழைப்பு மும்பை தேவதைக்கு.
வாழ்த்துக்கள்.
பேட்டியை கேட்க ஆவலாக இருக்கிறோம்.
தொண்டையை சரி செய்து விட்டீர்களா நாங்கள் காதை தீட்டிக் கொண்டு கேடக ரெடியாகி விட்டோம்.

மோகன் குமார் said...

மிக மிக மகிழ்ச்சி வாழ்த்துகள்

மோகன் குமார் said...

மிக மிக மகிழ்ச்சி வாழ்த்துகள்

ஸாதிகா said...

பேட்டியை சீக்கிரம் பதிவாகவும்,ஒலியாகவும் போடுங்க சாந்தி.வாழ்த்துக்கள்.

T.N.MURALIDHARAN said...

வாழ்த்துக்கள்

thirumathi bs sridhar said...

இம்புட்டு பெரிய இடைவேளை விட்டது நியாயமல்ல

புதுகைத் தென்றல் said...

இம்புட்டு பெரிய இடைவேளை விட்டது நியாயமல்ல //

athe athe

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா பேட்டியா? வாழ்த்துகள்.

பேட்டிக்கு முன்னாடி பாட்டு! சரி தான் ஹலோ எஃப்.எம். எஃபெக்ட் கொடுக்கீங்களோ! :)

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துகள் சாந்தி! இன்னும் பேட்டி ஆரம்பிக்கவில்லையா:)? சரி, இப்போ பாட்டைக் கேட்கிறோம். அடுத்த பகிர்வுக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அமுதா கிருஷ்ணா said...

அடடா என்ன ஒரு பில்டப்பு ரசித்தேன்.பேட்டி கேட்கணுமே..

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிக்வும் மகிழ்ச்சி. பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

பேட்டியின் பதிவை எதிர்ப்பார்க்கின்றேன்...

பால கணேஷ் said...

அருமை! மகிழ்ச்சி! என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் சாரல் மேடம்! அந்தப் பாடல் ‌ரொம்பவே நல்லாயிருக்கும்னாலும், எவ்வளவு நேரம் கேட்கறதாம்? சீக்கிரம் பேட்டியை ஒளிபரப்பி (அ) பிரசுரித்து எங்களின் ஆவலைத் தணியுங்க... ப்ளீஸ்!

poovizi said...

இப்படி தூண்டிவிட்டு போயிடீங்க பேட்டிக்கு எப்ப வருவது படிக்கதான்

VijiParthiban said...

வாழ்த்துக்கள் அக்கா...

ஹுஸைனம்மா said...

பேட்டி எடுக்க முன்ன நடந்ததையே ஒரு பதிவாக்கிட்டீங்களே!! ஒரு தொகுப்பாளரா ஆவதற்கான முக்கியமான தகுதி இருக்கு உங்ககிட்ட. :-)))) பேட்டி எடுத்தப்போ, முடிஞ்சப்பிறகு நடந்ததெல்லாம் சேர்த்து ஒரு அஞ்சாறு பதிவுல முடிஞ்சிடுமாக்கா? :-)))

பேட்டிக்கு வெய்ட்டிங்!!

ஸ்ரீராம். said...

அறிமுகப் பதிவே ஆர்வத்தைத் தூண்டுகிறது. லேட்டா வந்ததுல ஒரு சௌகர்யம். உடனே அடுத்த பதிவையும் படிச்சுடலாம்! இதோ போறேன்...

LinkWithin

Related Posts with Thumbnails