இது நம்ம ராஜி அழைச்ச தொடர்பதிவு.. பாசக்கார புள்ளை. விட்டுட்டுச் சாப்பிட மனசில்லாம என்னை தொடரச் சொன்னாங்க. அப்புறம் பார்த்தா, தொடரச் சொல்லி அழைச்ச அவங்களே மறந்து போற அளவுக்கு ரொம்ப நாளு லீவு வுட்டுட்டேன். ஞாபகப்படுத்தலாம்ன்னு நினைச்சுட்டு, கடைசில அவங்களே கன்பியூஸ் ஆகி மறந்துட்டாங்களோ என்னவோ!! ராஜி.. ச்சும்மா வெளாட்டுக்கு :-))
இந்த கேள்வித்தாளை பார்த்தாலே என்னவோ பரீட்சைக்கு போற மாதிரியே ஒரு ஃபீலிங்கு.. பாசாகணும்ன்னு வேண்டிக்கிட்டு தொடருகிறேன். கொஞ்சம் பார்த்து மார்க்கு போடுங்க ராஜி :-)
இனி, கேள்விக்கணைகள்...
இயற்கை உணவை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதுண்டா?
உண்டுங்க எசமானி. எங்க ஊர்ல இந்த வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, இது மாதிரி காய்கறிகள், அப்றம் ஆப்பிள் ஆரஞ்சு மாதிரியான பழவகைகள் எல்லாம் இயற்கையாத்தான் விளைவிக்கிறாங்க. இன்னும் செயற்கை காய்கனிகள் தயாரிக்க ஆரம்பிக்கலைங்க..
ஆஹா!!.. கிண்டலா????
ம்.. இல்ல்ல.. சுண்டல். முளைவிட்ட பயறுகளை சாலட்ட்டுன்னு இங்கிலிபீசுலயும், சுண்டல்ன்னு நம்மூர் மொழியிலயும் செய்யறதுண்டுங்க. அப்புறம், சமையலுக்கு காரட்டு, பீட்ரூட்டு, கோஸு, தக்காளின்னு காய் நறுக்கறச்சே, வாணலியில கொஞ்சமும், அப்பப்ப வாய்ல கொஞ்சமும் போட்டுக்கறது உண்டுங்க. ஏங்க,... இதெல்லாம் இயற்கை உணவுதானே???
மனசுக்குள்(ஸ்ஸப்பா.... முதல் கேள்விக்கே இப்டியா!!..) சரி அடுத்த கேள்வி.
இயற்கை உணவுப் பழக்கம் எந்த விதத்தில் உங்களுக்கு பயன் தருகிறது?
நினைச்சா சட்ன்னு தயாரிச்சுடலாம்ங்க. சமைக்கிற நேரம் மிச்சம். எல்லாத்துக்கும் மேல தேவையில்லாம உப்பு, புளி, சர்க்கரை, எண்ணெய்ன்னு உடம்புக்குள்ள ஒரு மளிகைக் கடையை ஆரம்பிக்காம ஆரோக்கியமா இருக்கலாமே. எப்பப்பாரு வறுத்தது, பொரிச்சதுன்னு வயித்துக்குள்ள தள்ளிக்கிட்டிருக்காம அதுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமில்லியா நம்ம ஜீரண உறுப்புகள் சரிவர இயங்கணும்ன்னா, அப்பப்ப சாப்பாட்டுக்கே லீவு விடறது நல்லதாம். அதை விரதம்ன்னு கூட சொல்லுவாங்க. அதோட வெறுமே ஜூஸா குடிக்காம பழங்களாவோ, காய்களாவோ சாப்டுறது இன்னும் நல்லது. சமைக்கிறதுனாலகூட சில விட்டமின்கள் அழிஞ்சு போகுது. அதெல்லாம் வீணாகாம அப்டியே நமக்கு கிடைக்குது. முக்கியமா முளைவிட்ட பயிறுகள்ல இரண்டு மடங்கு சத்து இருக்குதாம். சமைக்கிறதுனால இதெல்லாம் வேஸ்ட்டாத்தானே போகுது. இயற்கையா கிடைக்கிற சத்துகளை வீணடிச்சுட்டு, டானிக்குகளை வாங்கி முழுங்கறோம்.. (பாவம் அவங்களும் பொழைக்க வேணாமா :-))
ம்..ம்... இந்த பாயிண்டை நோட் செஞ்சுக்கறேன்.
அவல் எப்பவும் கையிருப்பில் இருந்தா ரொம்ப நல்லது தெரியுமோ, நனைச்சுப் பிழிஞ்ச அவலோட சர்க்கரை அல்லது வெல்லம், வாழைப்பழம், தேங்காய், ஏலக்காப்பொடி போட்டு பிசைஞ்சு சாப்ட்டா.... அமிர்தம் தோத்துடும். விஷுவன்னிக்கு இதுதான் சாமிக்கே நைவேத்தியம் செய்வோம்ன்னா பார்த்துக்கோங்களேன்.
அன்றாடம் சரியான நேரத்தில் சாப்பிடுவீர்களா? அல்லது பசிக்கும் நேரத்தில் உண்பீர்களா?
'பசித்துப் புசி' அப்டீன்னு நம்ம ஔவையார் பாட்டி சொல்லியிருக்காங்க. 'நேரத்துக்கு சாப்டுறது உடம்புக்கு நல்லது'ன்னு எங்க பாட்டி சொல்லியிருக்காங்க.நான் ரெண்டு பாட்டிகளின் சொல்லையுமே தட்றதில்லைங்க... இருந்தாலும் பசிக்குதோ இல்லியோ நேரத்துக்கு சாப்ட்டுடுவோம். நேரந்தவறி சாப்டுற பழக்கத்தால நம்ம உடம்புல 'வாதம், பித்தம்,கபம்' இதுகளோட சம நிலை பாதிக்கப்படுமாம். இப்படி பாதிக்கப் படறதால வியாதிகளும் வர ஏதுவாயிருக்குமாம்.
வலைப்பதிவில் சமையல் சம்பந்தமாக எழுதுவதற்கு யார் உங்களுக்கு தூண்டு கோலாக இருந்தார்கள்?
'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'ங்கற குறிக்கோள்தான் தூண்டுகோலா இருந்துது. ஆரம்பத்துல எல்லாம் சமையலப் பத்தி இடுகையெல்லாம் எழுதணும்கற ஐடியாவே இல்லை. அதுக்கெல்லாம் ரொம்பப் பெரிய ஜாம்பவான்களெல்லாம் இங்கே இருக்காங்க. அப்றம், இதுவும் படைப்புகள்தானேன்னு பகிர்ந்துக்க ஆரம்பிச்சேன்.
புதியதாக ஏதாவது உணவு வகை முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா?.. அது சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
ஹி..ஹி.. இது ஒரு நல்ல்ல கேள்வி.. சமையல் கத்துக்க ஆரம்பிச்ச ஆரம்பக் காலங்கள்ல, நமக்கு எல்லாமே புது உணவு வகைகளாத்தானே இருந்திருக்கும். சரி வரலைன்னா இன்னொருக்கா செய்றதுதான். இப்பல்லாம், மொதல்ல கொஞ்சமா செஞ்சு நான் மட்டும் ருசி பார்ப்பேன். எப்படியும் சரியா வந்துடும். அப்றம் வேற வேற காம்பினேஷன்கள்ல விதவிதமா செஞ்சு அசத்திடுவேனில்ல. "நாளைக்கு அம்மா கிட்ட சொல்லி இன்ன அயிட்டத்தை செஞ்சுக்கிட்டு வா"ன்னு, என் பெண்ணோட தோழிகள் மெனக்கெட்டு ஆர்டர் கொடுத்து விடுற அளவுக்கு ஓரளவு நல்லாவே செய்வேன்.
உங்களது அன்றாட சமையலில், நீங்கள் கட்டாயம் தவிர்க்கும் சமையல் சம்பந்தமான பொருட்கள் ஏதாவது மூன்று.
எண்ணெய், டால்டா,நெய் இது மாதிரியான கொழுப்புச் சத்துள்ள பொருட்களை அதிகம் சேர்த்துக்கறதில்லை. (பசங்களோட ஆர்டர் :-)) பசங்களோட வளர்ச்சியின் ஒவ்வொரு கால கட்டத்துலயும், எங்கூட்ல ஒவ்வொரு வித சமையலுக்கு கிராக்கி இருந்தது, இருக்குது. அதனால எதையும் முழுசும் தவிர்க்க முடியாது, ஆனா, அளவோட பயன்படுத்துவோம்.
தினப்படி சமையலில் நீங்கள் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும் சமையல் பொருட்கள் சில?
வெங்காயம், தக்காளி, பயிறு, பருப்பு, கீரை, காய்கறி வகைகள்.. தெனமும் சப்பாத்திக்கு சைடிஷ் செய்யணுமே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்ணா சேர்த்துக்கறதுதான்.
குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உண்டாகிறது?
குடும்பத்தினருக்கிடையே நிச்சயமா அன்னியோன்னியம் கூடுது.சாப்பாட்டுக்கு அப்பாற்பட்டு யாராருக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுங்கறதை தெரிஞ்சுக்க முடியும். அன்னன்னிக்கு நடந்த விஷயங்களை ஒருத்தரோடு ஒருத்தர் பகிர்ந்துக்கறதுனால, ஏதாச்சும் ஆலோசனை தேவைப்பட்டா நிச்சயமா கிடைக்கும். எங்கூட்ல எல்லோரும் சாப்பாட்டு நேரத்துல வீட்ல இருந்தா, ஒண்ணா உக்காந்துதான் சாப்டுவோம். முக்கியமா இரவுச் சாப்பாடு கண்டிப்பா ஒண்ணாத்தான் இருக்கும். இது மட்டுமில்லாம, சாப்பாட்டை ஒவ்வொரு தடவையும் சூடு செஞ்சுக்கிட்டே இருக்க வேண்டிய தேவையில்லை. இதனால கேஸும் மிச்சமாகுதே :-)
உங்களுக்குப் பிடித்த உணவகத்தில் நீங்கள் விரும்பாத உணவு பரிமாறப் பட்டால் என்ன செய்வீர்கள்?
இதுவரைக்கும் அப்படியானதில்லை. ஆர்டர் கொடுக்கறச்சே க்ராஸ் செக் செஞ்சுட்டுத்தான் பணியாளர் அடுக்களைக்கே போவார். அந்தந்த உணவகங்களோட ருசியும் மாறுபட்டதில்லை. அதனால இப்படியொரு சூழ்நிலையை இதுவரை சந்திச்சதுமில்லை. அப்படி சந்திக்க நேர்ந்தா கண்டிப்பா கூப்பிட்டு அவங்க மனசும் நோகாம சொல்லிடுவேன். ஷிங்கனாப்பூர் போயிருந்தப்ப, பரிமாறும் தட்டை சரியா சுத்தம் செய்யலைன்னு பக்கத்து டேபிள் ஆள், ஹோட்டல் மேனேஜர் கிட்ட சொன்னப்ப, இந்த ஹோட்டல் வேணாம்ன்னு வெளியே வந்துட்டோம். உடல் ஆரோக்கியத்தை அடகு வைக்க முடியாதில்லையா..
ஆரோக்கியம்ன்னதும் சில விஷயங்கள் ஞாபகம் வருது. பொதுவாகவே சாப்பிடுறப்ப அரை வயித்துக்குத்தான் சாப்பிடணுமாம். அப்ப மீதி?.. கால் வயித்துக்கு தண்ணி குடிச்சுட்டு மீதி கால் வயித்தை காலியா விடணுமாம். இப்படி செய்யறதால சாப்பாடு ஒழுங்கா சீரணமாகுது. முடிஞ்சா வாரத்துக்கொருக்கா விரதமிருக்கறதோ, இல்லை ஒரு பொழுது மட்டும் சாப்பிடறதோ, நம்ம வயித்துக்கு நாம செய்யற உதவியாயிருக்கும். வயிறும் நம்மை வாழ்த்தும்.பாவம்.. அதுவும் எவ்வளவுதான் ஓவர்டைம் பார்க்கும் :-)
'உணவே மருந்து,.. மருந்தே உணவு'ன்னு சொல்லுவாங்க. அந்தக் காலத்துலயெல்லாம் சரியான உணவுப் பழக்கம் இருந்ததால வியாதிகள் வர்றது குறைச்சல். அப்படியும் மீறி வந்துட்டுதுன்னா, மூலிகைப் பொருட்களெல்லாம் சேர்த்து, சரியான சமையல் செஞ்சு சாப்பிட்டே வியாதியை விரட்டிடுவாங்க. இந்த மூலிகைகள்ல பெரும்பகுதி நம்ம அஞ்சறைப் பெட்டியில இருக்கறதாத்தான் இருக்கும். இப்ப, நம்மோட வாழ்க்கை முறைக்கு ஒத்து வராத, மாறிவரும் உணவுப் பழக்கத்தால வியாதியை வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கிறோம்ன்னே சொல்லலாம். பண்டிகை சமயங்கள்ல மட்டுமே செய்யப்பட்ட வறுத்த, பொரிச்ச உணவுகளை இப்போ தினமும் ஃபுல் கட்டு கட்றோம் :-)
இப்படி ஃபுல் கட்டு கட்டினதுனால அஜீர்ணம் ஏற்பட்டா, எங்க பாட்டி, வெத்தலையில் ரெண்டு கல்லுப்பு, நல்ல மிளகு, ரெண்டு பூண்டுப் பல், துளியூண்டு சீரகம் வெச்சு, மடிச்சுத் தருவாங்க. மென்னு முழுங்கிட்டு பொறுக்கற சூட்டுல வென்னீரைக் குடிச்சாப் போதும், சரியாகிடும். அதே மாதிரி மோர்ல கொஞ்சூண்டு பொடி செஞ்ச பெருங்காயத்தை கலக்கியும் தருவாங்க. ரெண்டுமே கை கண்ட மருந்து. இங்கே ஹோட்டல்கள்ல சாப்பிட்டப்புறம் ஒரு கிண்ணத்துல பெருஞ்சீரகம் கொண்டாந்து வைப்பாங்க. அதுவும் இந்தக்காரணத்துக்காகத்தான் வைக்கப்படுதோ என்னவோ.
சமைக்கும் பாத்திரங்களைப் பொறுத்தும் உணவோட ருசி மாறுது. அந்தக் காலத்துல ஸ்வர்ண பாத்திரம்ன்னு சொல்லப்பட்ட மண்பாண்டங்களை சமையலுக்கு பயன் படுத்தினாங்க. இப்ப தண்ணீர்ப் பானையைத் தவிர வேற எதுக்கும் மண் பாண்டங்களை நாம உபயோகப்படுத்தறதில்லை. மத்த இடங்களைப் பத்தி எனக்கு தெரியாது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை அசைவம்,.. முக்கியமா மீன் குழம்பு செய்யணும்ன்னா மண் பாத்திரத்துலதான் செய்வாங்க.
செப்பு,செம்புன்னு சொல்லப்படற தாமிரப் பாத்திரங்கள்ல இரவு முழுக்க தண்ணீர் நிரப்பி வெச்சு, காலையில அதை குடிச்சா உடலுக்கு நல்லதாம். ஆனா, வெண்கலம் மற்றும் தாமிரப்பாத்திரங்களை சமையலுக்கு பயன் படுத்தறதாயிருந்தா ஈயம் பூசித்தான் பயன் படுத்தணும். ஈயச்சொம்பு ரசத்தின் ருசியே தனியாச்சே :-)). அப்டி ஈயம் பூசலைன்னா அதுல வெச்சிருக்கற சாப்பாடு கண்டிப்பா ருசி கெட்டுப் போயிடும். இங்கே சில பேர் ஃபில்டர் செய்யப்பட்ட தண்ணியை, குழாய் பொருத்தப்பட்ட தாமிரப் பானையில ஊத்தி வெச்சுத்தான் பயன் படுத்துவாங்க. இப்பல்லாம், வெளியே எவர்சில்வராலயும் உள்ளே தாமிரத்தாலயும் ஆன, தண்ணீர் குடிக்கும் தம்ளர்களும் மார்க்கெட்டுக்கு வந்துடுச்சு.
ஜலதோஷம் வந்தா, ரெண்டு நல்லமிளகை ஊசியில் குத்தி அதை தீயில் காட்டி, அதுல வர்ற புகையை சுவாசிச்சா சரியாகுமாம்.கொஞ்சம் கிர்ர்ர்ர்ர்ர்ன்னு இருக்கும். இருந்தாலும் ஓரளவு நிவாரணம் கிடைக்குது. அதே மாதிரி தொண்டை கரகரப்பு வந்தா நெய்யில் பத்துப் பதினஞ்சு நல்ல மிளகை, லேசா பொரிச்செடுத்து வெச்சுக்கிட்டு, ரெண்டு மூணா கடிச்சு முழுங்கிட்டு கொஞ்சம் வென்னீர் குடிச்சாலும் தொண்டைக்கு இதமா இருக்குது. காய்ச்சல் வந்தாக்கூட மிளகு ரசமும், மிளகு தட்டிப் போட்ட சுக்கு மல்லிக் காப்பியுமே பாதி நோயைக் குணப்படுத்திடுதே.
இஞ்சியும் இதே குணங்களைக் கொண்டதுதான். மோர்ல கொஞ்சூண்டு இஞ்சியைத் தட்டிப் போட்டுக் குடிச்சா அதோட ருசியே அபாரம். இதுகூட கொஞ்சூண்டு பெருங்காயத்தூள் சேர்த்துக்கிட்டா 'யே தில் மாங்கே மோர்'ன்னு பாடுவீங்க :-) தலைவலி வந்தா சுக்கை இழைச்சு, வலிக்கும் இடத்தில் பத்துப் போட்டா வலி குறையுது. மூட்டு வலிக்கும் பத்துப் போட்டா குணம் கிடைக்குதாம். ஆனா ஒண்ணு,.. வடிவேலு மாதிரி பத்துப்(10) போடக் கூடாது :-)
வாய்வுப் பதார்த்தங்களையோ இல்லை அசைவத்தையோ சமைக்கிறப்பவோ பூண்டு சேர்த்துக்கறது வழக்கம். உடம்பிலிருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. வாரமொருமுறை பூண்டு சேர்த்து குழம்பு சாப்பிட்டா உடலுக்கு நல்லது. சுட்ட பூண்டும் சாப்பிடலாம். தீக்கங்கு இல்லைன்னா, கவலையில்லை.. வெறும் வாணலியில் வறுத்தாக் கூட அந்த ருசி பரவாயில்லாம இருக்கு.
வெந்தயத்தைப் பத்தி சொல்லியே ஆகணும். வெந்தயத்தையோ அல்லது வெந்தயக்கீரையையோ அரைச்சு, தலையில் தேய்ச்சு ஊற விட்டு, குளிச்சா முடிக்கு நல்லது. உடம்பும் குளுமையாயிருக்கும். வெந்தயப்பொடி, அல்லது அரை டீஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் ராத்திரியே அரைகிண்ணம் தயிர்ல ஊற விட்டு, மறு நாள் காலையில், 'கடக்'ன்னு முழுங்கி வந்தா, சர்க்கரை வியாதி இருக்கறவங்களோட இரத்தத்துல சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுல இருக்கும். கீரையை சமைச்சுச் சாப்பிட்டாலும் நல்லதுதான். கசப்பு தெரியாம இருக்கத்தான் தயிரும்,.. 'கடக்'கும் :-)
மஞ்சள் இல்லாம நம்ம சமையல் முழுமை பெறுமா என்ன??.. சூடான பால்ல மிளகுப் பொடியும், சிட்டிகை மஞ்சளும் போட்டுக் குடிச்சா இருமல் குணமாகுமுன்னு சின்னப் புள்ளைக்கு கூட தெரியுமே :-)) அதே மாதிரி பித்தம் காரணமா வாய்க்கு ருசியில்லாம இருந்தா, சீரகம் அதுக்கு நிவாரணம் கொடுக்குது. கேரளாவில் தெனமும் குடிக்கிறதுக்கு ஜீரக வெள்ளம் தயார் செய்யறதுக்கு அந்த மக்கள் அலுத்துக்கறதேயில்லை.
டிஸ்கி 1: நாம தினமும் சமையலுக்கு உபயோகப் படுத்தற காய்கனிகள்ல என்னென்ன சத்து எவ்ளோ இருக்குன்னு தெரிஞ்சுக்க வேணாமா... சிரமம் பார்க்காம ஸ்க்ரோல் செஞ்சு படிச்ச உங்களுக்கு நன்றி :-))
ஆரோக்கியம்ன்னதும் சில விஷயங்கள் ஞாபகம் வருது. பொதுவாகவே சாப்பிடுறப்ப அரை வயித்துக்குத்தான் சாப்பிடணுமாம். அப்ப மீதி?.. கால் வயித்துக்கு தண்ணி குடிச்சுட்டு மீதி கால் வயித்தை காலியா விடணுமாம். இப்படி செய்யறதால சாப்பாடு ஒழுங்கா சீரணமாகுது. முடிஞ்சா வாரத்துக்கொருக்கா விரதமிருக்கறதோ, இல்லை ஒரு பொழுது மட்டும் சாப்பிடறதோ, நம்ம வயித்துக்கு நாம செய்யற உதவியாயிருக்கும். வயிறும் நம்மை வாழ்த்தும்.பாவம்.. அதுவும் எவ்வளவுதான் ஓவர்டைம் பார்க்கும் :-)
'உணவே மருந்து,.. மருந்தே உணவு'ன்னு சொல்லுவாங்க. அந்தக் காலத்துலயெல்லாம் சரியான உணவுப் பழக்கம் இருந்ததால வியாதிகள் வர்றது குறைச்சல். அப்படியும் மீறி வந்துட்டுதுன்னா, மூலிகைப் பொருட்களெல்லாம் சேர்த்து, சரியான சமையல் செஞ்சு சாப்பிட்டே வியாதியை விரட்டிடுவாங்க. இந்த மூலிகைகள்ல பெரும்பகுதி நம்ம அஞ்சறைப் பெட்டியில இருக்கறதாத்தான் இருக்கும். இப்ப, நம்மோட வாழ்க்கை முறைக்கு ஒத்து வராத, மாறிவரும் உணவுப் பழக்கத்தால வியாதியை வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கிறோம்ன்னே சொல்லலாம். பண்டிகை சமயங்கள்ல மட்டுமே செய்யப்பட்ட வறுத்த, பொரிச்ச உணவுகளை இப்போ தினமும் ஃபுல் கட்டு கட்றோம் :-)
இப்படி ஃபுல் கட்டு கட்டினதுனால அஜீர்ணம் ஏற்பட்டா, எங்க பாட்டி, வெத்தலையில் ரெண்டு கல்லுப்பு, நல்ல மிளகு, ரெண்டு பூண்டுப் பல், துளியூண்டு சீரகம் வெச்சு, மடிச்சுத் தருவாங்க. மென்னு முழுங்கிட்டு பொறுக்கற சூட்டுல வென்னீரைக் குடிச்சாப் போதும், சரியாகிடும். அதே மாதிரி மோர்ல கொஞ்சூண்டு பொடி செஞ்ச பெருங்காயத்தை கலக்கியும் தருவாங்க. ரெண்டுமே கை கண்ட மருந்து. இங்கே ஹோட்டல்கள்ல சாப்பிட்டப்புறம் ஒரு கிண்ணத்துல பெருஞ்சீரகம் கொண்டாந்து வைப்பாங்க. அதுவும் இந்தக்காரணத்துக்காகத்தான் வைக்கப்படுதோ என்னவோ.
சமைக்கும் பாத்திரங்களைப் பொறுத்தும் உணவோட ருசி மாறுது. அந்தக் காலத்துல ஸ்வர்ண பாத்திரம்ன்னு சொல்லப்பட்ட மண்பாண்டங்களை சமையலுக்கு பயன் படுத்தினாங்க. இப்ப தண்ணீர்ப் பானையைத் தவிர வேற எதுக்கும் மண் பாண்டங்களை நாம உபயோகப்படுத்தறதில்லை. மத்த இடங்களைப் பத்தி எனக்கு தெரியாது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை அசைவம்,.. முக்கியமா மீன் குழம்பு செய்யணும்ன்னா மண் பாத்திரத்துலதான் செய்வாங்க.
செப்பு,செம்புன்னு சொல்லப்படற தாமிரப் பாத்திரங்கள்ல இரவு முழுக்க தண்ணீர் நிரப்பி வெச்சு, காலையில அதை குடிச்சா உடலுக்கு நல்லதாம். ஆனா, வெண்கலம் மற்றும் தாமிரப்பாத்திரங்களை சமையலுக்கு பயன் படுத்தறதாயிருந்தா ஈயம் பூசித்தான் பயன் படுத்தணும். ஈயச்சொம்பு ரசத்தின் ருசியே தனியாச்சே :-)). அப்டி ஈயம் பூசலைன்னா அதுல வெச்சிருக்கற சாப்பாடு கண்டிப்பா ருசி கெட்டுப் போயிடும். இங்கே சில பேர் ஃபில்டர் செய்யப்பட்ட தண்ணியை, குழாய் பொருத்தப்பட்ட தாமிரப் பானையில ஊத்தி வெச்சுத்தான் பயன் படுத்துவாங்க. இப்பல்லாம், வெளியே எவர்சில்வராலயும் உள்ளே தாமிரத்தாலயும் ஆன, தண்ணீர் குடிக்கும் தம்ளர்களும் மார்க்கெட்டுக்கு வந்துடுச்சு.
உள்ளே செப்பு, வெளியே எவர்சில்வர்..
சாப்பாட்டில் சில பொருட்களை நாம தினம் தினம் பயன்படுத்துவது நல்லது. அதுல முக்கியமான மற்றும் முதலிடத்தை நல்ல மிளகு பிடிச்சுக்குது. 'பத்து மிளகு இருந்தா பகை வீட்டிலும் பசியாறலாம்'ன்னு சொல்லுவாங்க. அதுக்கேத்த மாதிரி இது செய்ற வித்தைகள் எக்கச்சக்கம். செரிமானக்கோளாறு, ஃபுட் பாய்சன், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, போன்ற வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை இது சரியாக்குகிறது, சீரண சக்தியை கூட்டுகிறது, மன அழுத்தம், மூச்சுக் கோளாறுகளையும் இது சரிப்படுத்துதாம்.ஜலதோஷம் வந்தா, ரெண்டு நல்லமிளகை ஊசியில் குத்தி அதை தீயில் காட்டி, அதுல வர்ற புகையை சுவாசிச்சா சரியாகுமாம்.கொஞ்சம் கிர்ர்ர்ர்ர்ர்ன்னு இருக்கும். இருந்தாலும் ஓரளவு நிவாரணம் கிடைக்குது. அதே மாதிரி தொண்டை கரகரப்பு வந்தா நெய்யில் பத்துப் பதினஞ்சு நல்ல மிளகை, லேசா பொரிச்செடுத்து வெச்சுக்கிட்டு, ரெண்டு மூணா கடிச்சு முழுங்கிட்டு கொஞ்சம் வென்னீர் குடிச்சாலும் தொண்டைக்கு இதமா இருக்குது. காய்ச்சல் வந்தாக்கூட மிளகு ரசமும், மிளகு தட்டிப் போட்ட சுக்கு மல்லிக் காப்பியுமே பாதி நோயைக் குணப்படுத்திடுதே.
இஞ்சியும் இதே குணங்களைக் கொண்டதுதான். மோர்ல கொஞ்சூண்டு இஞ்சியைத் தட்டிப் போட்டுக் குடிச்சா அதோட ருசியே அபாரம். இதுகூட கொஞ்சூண்டு பெருங்காயத்தூள் சேர்த்துக்கிட்டா 'யே தில் மாங்கே மோர்'ன்னு பாடுவீங்க :-) தலைவலி வந்தா சுக்கை இழைச்சு, வலிக்கும் இடத்தில் பத்துப் போட்டா வலி குறையுது. மூட்டு வலிக்கும் பத்துப் போட்டா குணம் கிடைக்குதாம். ஆனா ஒண்ணு,.. வடிவேலு மாதிரி பத்துப்(10) போடக் கூடாது :-)
வாய்வுப் பதார்த்தங்களையோ இல்லை அசைவத்தையோ சமைக்கிறப்பவோ பூண்டு சேர்த்துக்கறது வழக்கம். உடம்பிலிருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. வாரமொருமுறை பூண்டு சேர்த்து குழம்பு சாப்பிட்டா உடலுக்கு நல்லது. சுட்ட பூண்டும் சாப்பிடலாம். தீக்கங்கு இல்லைன்னா, கவலையில்லை.. வெறும் வாணலியில் வறுத்தாக் கூட அந்த ருசி பரவாயில்லாம இருக்கு.
வெந்தயத்தைப் பத்தி சொல்லியே ஆகணும். வெந்தயத்தையோ அல்லது வெந்தயக்கீரையையோ அரைச்சு, தலையில் தேய்ச்சு ஊற விட்டு, குளிச்சா முடிக்கு நல்லது. உடம்பும் குளுமையாயிருக்கும். வெந்தயப்பொடி, அல்லது அரை டீஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் ராத்திரியே அரைகிண்ணம் தயிர்ல ஊற விட்டு, மறு நாள் காலையில், 'கடக்'ன்னு முழுங்கி வந்தா, சர்க்கரை வியாதி இருக்கறவங்களோட இரத்தத்துல சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுல இருக்கும். கீரையை சமைச்சுச் சாப்பிட்டாலும் நல்லதுதான். கசப்பு தெரியாம இருக்கத்தான் தயிரும்,.. 'கடக்'கும் :-)
மஞ்சள் இல்லாம நம்ம சமையல் முழுமை பெறுமா என்ன??.. சூடான பால்ல மிளகுப் பொடியும், சிட்டிகை மஞ்சளும் போட்டுக் குடிச்சா இருமல் குணமாகுமுன்னு சின்னப் புள்ளைக்கு கூட தெரியுமே :-)) அதே மாதிரி பித்தம் காரணமா வாய்க்கு ருசியில்லாம இருந்தா, சீரகம் அதுக்கு நிவாரணம் கொடுக்குது. கேரளாவில் தெனமும் குடிக்கிறதுக்கு ஜீரக வெள்ளம் தயார் செய்யறதுக்கு அந்த மக்கள் அலுத்துக்கறதேயில்லை.
அன்றாடம் பயன்படுத்துற காய்கனிகளும் அதன் சத்துக்களும்..
டிஸ்கி 1: நாம தினமும் சமையலுக்கு உபயோகப் படுத்தற காய்கனிகள்ல என்னென்ன சத்து எவ்ளோ இருக்குன்னு தெரிஞ்சுக்க வேணாமா... சிரமம் பார்க்காம ஸ்க்ரோல் செஞ்சு படிச்ச உங்களுக்கு நன்றி :-))
டிஸ்கி 2: அட்டவணை கொடுத்த இணையமே உனக்கு நன்றி
36 comments:
ருசியான தகவல்...
இவ்வளவு தகவல்கள் தொகுத்து அசத்தி உள்ளீர்கள்...
வாழ்த்துக்கள்...
உணவு ,சமையல், பாத்திரம் என விரிவாக பகிர்ந்துள்ளீர்கள்.
அருமையான நீண்ட பகிர்வு.தொடருக்கு கூப்பிட்டால் இப்படியா பின்னி பெடல் எடுக்கிறது?
புடிச்சுக்கோங்க சென்டம் மார்க்.லேட்டா போட்டலும் லென்த்தியா போட்டாலும்
லீஜியே அச்சா கானா கா டிப்ஸ்னு போட்டு அசத்திட்டீங்க.
ஃபுட் சார்ட் ப்ரின்ட் எடுத்துட்டேன்.
சாப்பாடு பத்தி மட்டுமில்லாம சமைக்கற பாத்திரம்,உடல் தொந்தரவை சரி செய்து கொள்ளக் கூடிய டிப்ஸ்
இப்பிடி எல்லாம் கலந்து கட்டி கலக்கிட்டீங்க.(வயத்தை இல்லீங்க.பதிவுல கலக்கிட்டீங்கன்னு சொன்னேன் :-)) )
பாராட்ட வார்த்தையே இல்லை ...கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க :-))
"தெரிஞ்சுகிட்டு சாப்பிடலாமே...
தெரிஞ்சுகிட்டேன் ஆனால் சாப்பாடு தரவே இல்லையே ....."
நிறைய அனுபவுமும்,
சுவையும் கலந்த பதிவு...
நல்ல சமைப்பிங்கன்னு
நினைக்கிறன்....
அதே போல நல்ல சொல்லிருகிங்க
வாழ்த்துக்கள்...
நன்றி சகோ .....
உபயோகமான பதிவு. சற்றே நீ.....ண்ட பதிவு. அந்தப் பட்டியலை தாண்டி வந்துட்டேன்!
அ.சா! அற்புதம் மிக உபயோகமான பதிவு. உங்கள் அட்டவணையை லவுட்டிக் கொண்டு கட்&பேஸ்ட் செய்துவிட்டேன்.. நன்றி!
////அன்றாடம் பயன்படுத்துற காய்கனிகளும் அதன் சத்துக்களும்.////
தாங்கள் இணையத்துக்கு நன்றி சொன்னாலும் இதை தேடி பதிவிட எந்தளவு நேரம் பிடிச்சிருக்கும்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்
வாங்க சௌந்தர்,
அலுக்காக வாசிச்சதுக்கே உங்களுக்கெல்லாம் நன்றி சொல்லணும் :-))
சாப்பாடாச்சே.. ருசிக்கு கேட்பானேன் :-)
வாங்க மாதேவி,
வாசிச்சதுக்கு மிக்க நன்றி :-)
வாங்க ஆசியா,
ஹி..ஹி.. ரொம்பவே நீண்டுடுச்சுல்ல :-)))
வாங்க ராஜி,
ஆஹா.. பாஸாயிட்டேனா, நன்னீஸ் டீச்சர் :-)))
அந்த லிஸ்டை கொஞ்சம் யோசனையோடவே போட்டேன். இருந்தாலும் பயன் இருக்குதுன்னு தெரிஞ்சதும் ஒரு சின்ன நிம்மதி.
வாங்க சங்கரலிங்கம் அண்ணா,
நமக்கு புடிச்ச சப்ஜெக்ட்டு.. கேக்கணுமா :-))
வாசிச்சதுக்கு நன்றி.
வாங்க ஜெய்லானி,
ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)
வாங்க சின்னதூரல்,
சாப்பாடு இருக்குதே.. அவ்வளவும் இயற்கை உணவுகள். உங்களுக்காகவே பச்சைக் காய்கனிகளைக் கொண்டாந்து அடுக்கிட்டேன். எதுல எவ்ளோ சத்து இருக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டு எவ்ளோன்னாலும் சாப்டுங்க.. ரைட்டா :-))
கருத்துகளுக்கும் நன்றி
வாங்க ஸ்ரீராம்,
போட்டுட்டேனே தவிர எத்தனை பேருக்கு உபயோகமாகும்ன்னு ஒரு டவுட்டு.. பரவால்லை, ரிசல்ட் பாஸிட்டிவாவே இருக்குது :-))
வாங்க மோகன் அண்ணா,
ஆஹா!!.. உங்களுக்கில்லாததா!!. லவுட்டிட்டு போனா மட்டும் போறாது. நல்லா சாப்ட்டு உடம்பை தேத்திட்டு தெம்போட தினம் இடுகை வெளியிடணும் :-)
வாங்க சுதா,
தேடுறதுக்கு கொஞ்சம் நேரம் பிடிச்சதுதான். இருந்தாலும் நல்ல விஷயங்களைப் பகிர்ந்துக்கறப்ப நேரம் ஒரு பொருட்டில்லை :-)
வாசிச்சதுக்கு நன்றி.
உணவு குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய
அசத்தலான பதிவு.விரிவாகத் தந்தமைக்கு நன்றி
திருவிழா விஷேப்பதிவுகள் உங்கள் பதிவின் தனிச் சிறப்பு
நவராத்திரி ஸ்பெஷலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்
வாங்க ரமணி,
நவராத்திரி வந்துக்கிட்டேயிருக்கு :-)
வாசிச்சதுக்கு நன்றி.. போரடிக்கலைன்னு நினைக்கிறேன் :-)
உண்மையிலேயே அவ்வளவும் பயன் உள்ள தகவல்கள்..
அரை வயிறு சாப்பாடு கால் வயிறு நீர் கால் வயிறு காலி - அப்புறம் ஏன் உடம்புக்கு வருது.. வாயைக் கட்டாமல் விட்டால் தான் பிரச்னை எல்லாம்.
ஹெல்த் ஈஸ் வெல்த்!
சூப்பர்ர் ருசியான பதிவுக்கா!!நன்றி...
நல்ல பயனுள்ள தகவல்கள்... வாழ்த்துகள், ராஜிக்கும், சாந்திக்கும். தொடருங்கள், இதே கலகலப்புடன்...
ஸாரிக்கா, பெரீஈஈய்ய விருந்தா, உண்ட மயக்கம் - அதான் லேட்!! :-))))
//ஹைய்யோ.. இதை கலைக்க மனசே வராதே.. எப்படி சாப்டுவாங்க??//
அதுமட்டுமா, எப்படியும் அந்தக் காய்கள் வேஸ்டாத்தானே போகும்கிற நினைப்பே என்னை அதை ரசிக்க விடாமப் பண்ணிடும்!! :-(((
//சமையல் கத்துக்க ஆரம்பிச்ச ஆரம்பக் காலங்கள்ல, நமக்கு எல்லாமே புது உணவு வகைகளாத்தானே//
ஹி.. ஹி.. நானேல்லாம் இப்பவும் தெனம் புதுசு புதுசாத்தான் சமைப்பேன் தெரியுமா? பின்னே... ஒரு நாள் வச்ச சாம்பார், அடுத்த மூறை செய்யும்போது, அதே பொருட்கள், அதே செய்முறை, அதே நான் என்றாலும்கூட, சாம்பார் மாதிரியே இருக்காது!! :-((((
//சாப்பிடுறப்ப அரை வயித்துக்கு... கால் வயித்துக்கு தண்ணி .. கால் வயித்தை காலி//
இஸ்லாத்திலும் இப்படியொரு முக்கியமான ஹதீஸ் உண்டு!!
இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள் - ஸேம் பிஞ்ச். நானும் நிறையப் பயன்படுத்துவேன்.மிளகுப் புகை - புது தகவல்.
சாந்தி நல்ல விளக்கம், நல்ல பட்டியல் எல்லாருக்குமே பயன்படும் விதத்தில் பதிவு இருக்கு. வாழ்த்துக்கள்.
பதிவே சாப்பாடாப் போச்சுப்பா:)
நன்றிமா.
மஹா பொறுமை சாந்தி உங்களுக்கு.கோடி நமஸ்காரங்கள்.
பதிவர் தென்றல் (பதிவர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிடும் பல்சுவை) இதழில் தங்கள் படைப்புகளை வெளியிட தங்களின் அனுமதி தேவை.விவரங்களுக்கு thagavalmalar.blogspot.com
thambaramanbu@gmail.com
வாங்க ரிஷபன்,
உண்மைதான்.. ஆரோக்கியத்துக்கு மிஞ்சின செல்வம் இருக்கா என்ன..
வாங்க மேனகா,
ரொம்ப நன்றிங்க..
வாங்க சங்கரி,
கலகலப்புக்கென்ன பஞ்சம்?.. ஜமாய்ச்சுடலாம் :-))
வாங்க ஹுஸைனம்மா,
தினம் ஒரேமாதிரி சாம்பார் சாப்பிட்டா அலுத்துப்போயிடும்ப்பா.. நீங்க தினம் வெரைட்டியா செஞ்சு கலக்குங்க :-))))
வாங்க லஷ்மிம்மா,
பயனுள்ளதா இருக்கும்ன்னு நம்பறேன் :-)
வாங்க வல்லிம்மா,
ஆஹா.. ரொம்பப் பெரிய வார்த்தைம்மா :-)
வாசிக்கவும் செவிக்கும் இல்லாத போழ்தில் சிறிது வயிற்றுக்கும் வேண்டியிருக்குதே நமக்கு :-)))
வாங்க குடந்தை அன்புமணி,
நமக்குன்னு வெளிவரும் இதழாச்சே.. தாராளமா அனுமதியுண்டு :-)
வருகைக்கு நன்றி.
அட்டகாசம்!!!!!
தூள் கிளப்பிட்டீங்க!!!!!!!!!!!
Post a Comment