Tuesday, 4 October 2011

நிறங்களும் குணங்களும்பாலின் நிறம் மட்டுமா?... குழந்தை மனசும் வெள்ளைதான். இந்தப் பூப்போல :-)
வெள்ளை நிறம் தூய்மை, சுத்தம், பொறுமை, உருவாக்கும் தன்மை,சமாதானம் இதெல்லாத்தையும் குறிக்கிறது. மேலும் இதற்கு குணமாக்கும் தன்மையும் உண்டாம். எதிர்மறை எண்ணங்களை விரட்டி மனசை அமைதிப்படுத்தும் குணமும் இதற்கு உண்டாம். இத்தனை நல்ல குணங்கள் இருக்கறதுனாலதான் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் உடைகளில் இது இடம் பிடிச்சிருக்கோ என்னவோ! இத்தனையையும் செய்யும் வெண்மைங்கறது உண்மையில் ஒரு தனிப்பட்ட நிறம் கிடையாது என்பது ஆச்சரியமூட்டும் விஞ்ஞான உண்மை.
வெக்கப்படும் பிங்க்கி
பிங்க் நிறத்துக்கு கோபத்தைக் குறைக்கும் சக்தி உண்டாம். கோபப்படும் போது இந்த நிறம் நம்ம ஆற்றலை கிரகிச்சுக் கொள்கிறது. அதனால நம்ம இதயத்தோட தசைகள் வேகமாக செயல்படுவது குறையுது. இதனால கோபமும் கட்டுக்குள்ள வருதுரொம்பவும் முரட்டுத்தனம் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தணும்ன்னா, அவர்கள் தங்கி இருக்கும் அறையின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றினாலே போதும் என்கிறார், அமெரிக்க பயோசோஷியல் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஸ்காஷ். அடிக்கடி மே(லி)டத்திடம் 'பாட்டுக் கேக்கும்' நிலையில் இருப்பவர்கள் இதை முயற்சி செஞ்சு பார்த்து முடிவைச் சொல்லலாம் :-)மே(லி)டத்தின் அறையை பிங்க் மயமாக்குற முயற்சியில் இன்னும் பாட்டு விழுந்தா கம்பேனி பொறுப்பேற்காது :-)
புல்லின் மேல் தூங்கும் பனித்துளியில் தலைகீழாய்த் தொங்கும் கட்டிடம்
ஒரு நாட்டுல எங்க பார்த்தாலும் பச்சைப்பசேல்ன்னு இருக்கறதுன்னா என்ன அர்த்தம்?. அந்த நாடு செழிப்பா இருக்கறதுன்னுதானே!.இந்த ஒரு நிறத்தைப் பார்த்தால் மட்டுமல்ல, நினைச்சாலே மனசு குதூகலமடைகிறது. செழிப்பைக் குறிக்கும் இந்த நிறம் வளர்ச்சி, இயற்கை, மற்றும் ஒரு இடத்தின் உயிர்த்தன்மையையும் குறிக்கிறது. ஒரு இடத்துல புல் பூண்டாச்சும் வளர்ந்தாத்தானே அந்த மண்ணில் உயிர்ச்சத்து இருக்குதுன்னு சொல்றோம். இதனால்தானோ என்னவோ உலகின் சில இடங்களில் மணப்பெண்கள் திருமணத்தின்போது பச்சை நிறத்தில் உடையணிகிறார்களாம்.


வெண்மை மட்டுமல்ல பசுமையும் கூட சமாதானத்துக்கான நிறமாய் விளங்குகிறது. இருந்தும் பொறாமையையும் இந்த நிறமே குறிப்பது சுவாரஸ்யமான எதிர்மறைதான்.(ஓனிடா டிவியின் சாத்தானை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை)பச்சை நிறத்துக்கு மன அழுத்தம், மனச்சோர்வு, இன்னபிற உடல் அசௌகரியங்களை குணப்படுத்தும் தன்மையும் இருக்கிறது. மருத்துவர்கள் கையில் கண்ணாடியை கழட்டி வெச்சுக்கிட்டு, ஒவ்வொரு திரைப்படங்கள்லயும் "ஏதாவதொரு மலை வாசஸ்தலத்துக்கு கூட்டிட்டுப்போனா வியாதி குணமாக வாய்ப்பு இருக்கு"ன்னு வசனம் பேசிக் கேட்டிருப்பீங்கதானே.
யார் அது தூங்கறப்ப தண்ணி தெளிச்சு எழுப்புனது????
மங்களகரமான மஞ்சள் நிறம் ஆற்றல், விழிப்புணர்வு, சந்தோஷம் போன்ற நேர்மறை எண்ணங்களை வளர்க்கிறது. காலையில் உதிக்கும் மஞ்சள் நிறச் சூரியனை பார்க்கிறப்பவும், அந்த ஒளியில் நனையுறப்பவும் நமக்கு ஏற்படும் புத்துணர்ச்சியும் உற்சாகமுமே இதுக்கு சான்று. இந்த நிறத்தால், அது சுவருக்கு பூசப்பட்ட வண்ணமா இருந்தாலும் சரி, பூக்களா இருந்தாலும் சரி, நாம் சூழப்பட்டிருந்தால் நம்முடைய நரம்பு மண்டலம் ஒழுங்கா இயங்குதாம், அதே போல் நம்ம உடம்பின் வளர்சிதை மாற்றங்களும் சரியா நடக்குமாறு தூண்டப்படுதாம். நிறங்களிலேயே ஆளுமை மிக்க நிறமாவும் இது கருதப் படுகிறது.
கருப்பு மிளகாய் செம காஆஆஆரம்..
ருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு',.. 'கருப்பே அழகு காந்தலே ருசி'.. இன்னும் எத்தனையெத்தனை விதமா எப்படியெப்படிச் சொன்னா என்ன?? ஒரு பலனும் இல்லைங்கறது நாட்டுல விக்கிற சிகப்பழகு க்ரீம்களோட விற்பனை நாளுக்கு நாள் எகிறுவதை வெச்சே புரியுமே. அதெப்படி ஏழே நாள்ல செக்கச்செவேர்ன்னு ஆக முடியும்ன்னு ஒருத்தரும் யோசிக்கறதேயில்லைஇவ்வளவு சொல்றவங்க விளம்பரத்துல ஒரு காகத்தை வெள்ளையாக்கி நிரூபிக்கட்டுமே. கருப்பு நிறத்தை நாம்தான் தாழ்வா நினைக்கிறோம். ஆனால், உண்மையில் சக்தி, உறுதி, பலம், புத்திக்கூர்மை போன்ற நேர்மறைக் குணங்களை கருப்பு நிறம் குறிக்கிறது. கொஞ்சம் குண்டாக இருப்பவர்கள் கருப்பு நிற உடைகளை அணிந்து கொண்டால், ஒல்லியாத் தெரிவார்களாம்


ளுமைத்தன்மையையும் இது குறிக்கிறது, பெரிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புல இருக்கறவங்க அதிகமா இந்த நிறத்தில் உடையணிவது வழக்கம்கருப்பு என்பது நிறங்களின் இல்லாமை ஆகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குகிறது. அப்படி, தன் மீது விழும் ஒளியில் அனைத்து நிறங்களையும் உள்வாங்கிக் கொண்டு எந்த நிறத்தையும் பிரதிபலிக்கலைன்னா, அங்கு கருப்பு நிறம் உண்டாகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கருப்பு நிறம் மர்மம், திகில், போன்றவற்றுக்கான நிறமாவும் விளங்குது.

இதயத்தோடு தொடர்புடைய நிறமும் பூவும் :-)
உணர்ச்சிகளைத் தூண்டும் ஒரு நிறமே சிவப்பு. இது இதயத்தோட தொடர்புள்ளதாவும் அன்பு, பாசம், காதல், ஆசை போன்றவற்றின் நிறமாவும் குறிக்கப் படுகிறது. ஆர்வம் மற்றும் ஆற்றலுடனும் தொடர்பு இருப்பதால் தன்னம்பிக்கையையும் கூட்டுவதாக சொல்லப்படுது. இதுக்கு தூண்டும் சக்தி அதிகமிருப்பதால் பிறரின் கவனத்தையும் எளிதாக கவர்கிறது. இந்த நிறத்துக்குக் கோபத்தையும், உணர்ச்சிகளையும் தூண்டும் சக்தி இருப்பதாவும் சொல்லப்படுது. இவ்வளவும் இருந்தா அது கண்டிப்பா ஆபத்தையும் கொண்டு வரத்தானே செய்யும். அதனாலத்தான், சாலைகள்ல முக்கியமா நிறுத்தங்களுக்கான போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு சிவப்பு நிறம் உபயோகிக்கப் படுகிறது.


டிஸ்கி: வல்லமைக்காக எழுதினதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.
21 comments:

மாய உலகம் said...

மலர்களும், நிறங்களும், குணங்களும் அறிந்து கொண்டேன்.. மிக்க நன்றி

Jaleela Kamal said...

mika arumai

Nithi Clicks said...

அருமையான பதிவு, படங்கள் அனைத்தும் கலக்கல்

இராஜராஜேஸ்வரி said...

வண்ணப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

மோகன்ஜி said...

வண்ணங்கள் பற்றி பேசும்போது 'வானவில்மனிதன்' இல்லாமலா? பதிவு சுவையானது.

kowsy said...

நிறங்களின் குணங்களை தெட்டத்தெளிவாக விளக்கியிருக்கின்றீர்கள். படைப்பின் அனைத்தும் விந்தைதான் வாழ்த்துக்கள்

உணவு உலகம் said...

நிறங்களில் இத்தனை விஷயம் இருக்கா?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

வாசிச்சதுக்கு நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜலீலாக்கா,

படங்கள் பிடிச்சிருக்கா.. நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நித்தி,

உங்க பாராட்டு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்குது :-)

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மோகன் அண்ணா,

ரொம்ப கரெக்டா சொன்னீங்க.. நீங்க இல்லாத வண்ணங்களா :-))

வரவுக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்திரகௌரி,

ரொம்ப சரியா சொன்னீங்க.. இயற்கையின் ஆச்சரியமூட்டும் விந்தைகளில் வண்ண மலர்களும் ஒண்ணு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

நிறங்களை உபயோகிச்சு சிகிச்சையே கொடுக்கறாங்க. இங்கே சொன்னவை கொஞ்சம்தான்..

கோமதி அரசு said...

வல்லமையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

படங்கள் , கருத்துக்கள் எல்லாம் அழகு.

Muruganandan M.K. said...

நிறங்களும் குணங்களும் சுவார்ஸமாக இருக்கு.

மாதேவி said...

அழகிய பூக்கள்,காய்களின் வர்ணங்களில் "நிறங்களும் அவற்றின் குணங்களும்" பேசுகின்றன ....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

வாசிச்சதுக்கு நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க டாக்டர் ஐயா,

வாசிச்சதுக்கு நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)

RAMA RAVI (RAMVI) said...

தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

LinkWithin

Related Posts with Thumbnails