Wednesday, 12 October 2011

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது? அவ்வ்வ்வ்வ்வ்..

இப்பத்திய குழந்தைகள் இருக்காங்களே.. யப்பா!!.. ரொம்ப வெவரமாத்தான் இருக்காங்க. நாம ஏதோ அவங்கல்லாம் சின்னப்புள்ளைங்க.. அதுங்களுக்கு என்னாத்தைத் தெரியும்ன்னு நெனைச்சாக்க ஒவ்வொண்ணும் சுவாமிநாதனாவும் தாயுமானவர் மாதிரி தாயுமானவளாவும் அவதாரம் எடுக்குதுங்க..

சிலசமயம் இதுங்களுக்கு என்னத்தை தெரியும்ன்னு நினைக்காம, ஏதாவது சின்னப் பிரச்சினைகளைச் சொல்லி தீர்வு கேட்டுப் பாருங்க. நமக்குத் தோணாத, ஆனா சரியான தீர்வுகளைச் சொல்றதுல இந்தக் காலத்துப் பசங்க கெட்டி.

புகைப்படம் எடுக்கறதுல எனக்கு ஆனா ஆவன்னா கூடத் தெரியாது. சும்மா ஆட்டோ ஃபோகஸில் வெச்சுக்கிட்டு குத்து மதிப்பா எடுப்பேன். குத்துக்கு ஏது மதிப்புன்னெல்லாம் எகனை மொகனையா கேக்கப்டாது. சொல்லிட்டேன் :-). காம்போஸிங் மட்டும் அருமையா செய்வேன். மத்தபடி படம் ஓரளவு சுமாரா வந்துடும். பிலிம் காலம் போயி டிஜிட்டல் வந்ததும் கண்ணுல படறதையெல்லாம் சுடறதுதான். ரிசல்ட்டும் உடனே தெரிஞ்சுடுதே. கூடுதல் குறைவையும் உடனே தெரிஞ்சுக்கவும் முடியுதுங்கறது ஒரு வரப்பிரசாதமாச்சே.

இப்படி இருக்கச்சே வலையுலகில் நுழைஞ்சதும் புகைப்படக் கலையை நம்ம பிட் கத்துக் கொடுக்குதுன்னு தெரிஞ்சப்றம் ஆஹா!!.. இந்தியாவுல ஒரு லேடி ஸ்ரீராம் உருவாகறதை யாராலும் தடுக்க முடியாதுன்னுட்டு காமிராவும் கையுமா குதிச்சிட்டேன். அந்தத் தளத்துல போயி பாடம் படிச்சுட்டு ஹோம்வொர்க் செஞ்சு பார்த்து, ரிசல்ட் நல்லா வந்தா ஜூப்பரேய்ன்னு கத்தறதும், இல்லைன்னா 'சண்டையில கிழியாத சட்டை எங்கயிருக்கு'ன்னு தூசியை தட்டி விட்டுட்டு அடுத்த படமெடுக்க கிளம்பறதும்ன்னு ஒர்ரே பிஸி..
சட்டுன்னு சுட்டுட்டு வந்துடும் என்னோட பீரங்கி..
என்னோட ஆர்வத்தைப் பார்த்துட்டு, ரங்க்ஸ் canon 1000 D-ஐ வாங்கிக் கொடுத்து, உற்சாகம் கொடுத்தார். கண்ணில் பட்டதையெல்லாம் க்ளிக்கி கேமராவை ஒரு வழி செஞ்சேன். சும்மா நானே பார்த்து திருஷ்டி வெச்சா போதுமான்னு நம்ம ஃப்ளிக்கர்ல ஒரு கணக்கைத் தொடங்கி, அங்க பார்வைக்கு வெச்சேன். மக்களும் ஓரளவு நல்லாத்தான் இருக்குன்னு ஒத்துக்கிட்டாங்க.. அங்கதாங்க காத்திருந்தது ஆப்பு..

முதல்ல தொடங்குன அக்கவுண்டு என்ன காரணத்துனாலயோ முடங்கிப் போச்சு.. திறக்க முடியாமப் போனதுனால, சரீன்னுட்டு இன்னொரு அக்கவுண்டு தொடங்கினேன். சிலபல படங்களை வலையேத்தி பெயர் சொல்ற அளவுக்கு நல்ல படங்களையும் எடுத்துப் பகிர்ந்தேன். போன மார்ச் மாத வாக்கில் அதுவும் முடங்கி தெறக்க முடியலை. ஐடி ஞாபகமில்லை, ஆனா பாஸ்வேர்டு ஞாபகமிருக்கு.  "ஐடி மறந்து போச்சே.. யாரிடம் சொல்வேனடி தோழி??.."ன்னு சோகத்துல பாடாத குறைதான். வீட்லயும் ஒரே புலப்பம். தோழின்னதும் ஒருத்தங்க ஞாபகம் வந்தாங்க. அவங்களுக்கொரு மெயிலைத் தட்டி விட்டு, எல்ப் கேட்டேன். அவங்களும் ஆன மட்டும் முயற்சி செஞ்சாங்க.. பிரயோசனமில்லை.

"அந்தக் கடை போனா சந்தைக் கடை"ன்னுட்டு மூணாவதா இன்னொரு அக்கவுண்டு ஆரம்பிச்சேன். ஆயிரம் அக்கவுண்டை முடக்கினாலும் அமைதிச்சாரல் முடங்குவதில்லை ஆம்மா!!!.. இதுல தினமும் படங்களை வலையேத்தறது வழக்கம். 

ரெண்டு நாள் முன்னாடி, வழக்கம் போல எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு ஃப்ளிக்கரை திறந்தா ஹைய்யோ!!... மறுபடி அதே பிரச்சினை. 'உள்ளே வராதே'ன்னு விரட்டுது. மூணு தடவைக்கு மேல கணக்கைத் திறக்க முடியலைன்னா பூட்டிக்குமாமே.  நல்ல திண்டுக்கல் பூட்டா போட்டுப் பூட்டிக்கிச்சு..என்னடாயிது இந்த அமைதிச்சாரலுக்கு வந்த சோதனைன்னுட்டு வழக்கம் போல புலப்பம் ஆரம்பிச்சாச்சு. 

பொண்ணு கொஞ்ச நேரம் கேட்டுக்கிட்டேயிருந்தா.. என்னாச்சுன்னு கேட்டா. சொன்னேன்.

"இவ்ளோதானா?.. இது ஈஸி மேட்டராச்சே"ன்னா. "யம்மாடி.. எல்ப் பண்ண முடிஞ்சா சொல்லு"ன்னேன். "லாக் ஆகிட்டதுனால நம்ம சிஸ்டத்துலேர்ந்து இப்ப லாகின் செய்யாதீங்க.  cyber cafe போய் அங்கிருந்து திறக்க முயற்சி செய்யுங்க.. கண்டிப்பா திறக்கும். உடனேயே கடவுச்சொல்லை கடினமா வெச்சுடுங்க. அப்றம் வீட்டுக்கு வந்து உங்க கணக்கைத் திறக்கலாம். ஈஸியா வரும்"ன்னா. 

சரீன்னுட்டு தனயள் சொல்லைத் தட்டாத தாயா அங்க போனேன். பயந்துக்கிட்டே கணக்கைத் திறந்தேன். ஐடி குடுத்தாச்சு.. பாஸ்வேர்ட் குடுத்தாச்சு.. எண்டர் தட்டியாச்சு. என்னாகப் போவுதோன்னு பயந்துட்டே நகம் கடிக்க ஆரம்பிச்சுட்டேன். பின்னே என்னங்க??.. மாசாமாசம் மளிகை வாங்கலாம். கணக்கு ஆரம்பிக்க முடியுமா? ஒவ்வொரு தடவையும் படங்கள் ஏத்தி எல்லா க்ரூப்புலயும் இணைக்கறதுன்னா  ஏகப்பட்ட நேரமும் பொறுமையும் வேணும். அதுக்கப்றம் அந்தப் படங்களைப் பார்க்கறவங்களுக்குத்தான் பொறுமை தேவைப்படும் :-)

ஆஹா!!... கணக்கு சரியாகிடுச்சு. முதல் வேலையா பாஸ்வேர்டை கடினமா மாத்தினேன். அப்பாடான்னு வெற்றியோட வீர நடை போட்டு வீட்டுக்கு வந்தேன். வீட்ல உள்ள சிஸ்டத்துலயும் கணக்கைத் திறக்க முடியுது. 

இது என்ன மேஜிக்ன்னேன்.. "அது அப்படித்தான்,. என்னோட ஃப்ரெண்டுக்கும் ஜிமெயில்ல இப்படியாச்சு. கடைசியில வெளியில போய் சரி செஞ்சப்றம் வீட்லயும் சரியாச்சு. இதெல்லாம் சின்னப் புள்ளைங்களுக்குக் கூட தெரியுமே"ன்னா. ரைட்டு.. "ஒளிமயமான எதிர்காலம்... வாங்கிய பல்பில் தெரிகிறது"

மறுபடி புலப்பம் ஆரம்பம். "ச்சே.. இந்த ஐடியாவை நீ முன்னாடியே கொடுத்திருந்தா இதுக்கு முன்னாடி தொலைச்ச கணக்கும் மறுபடி கிடைச்சிருக்குமே.. இந்த ஒரு மாச உழைப்பை அதுல கொடுத்திருந்தா கிட்டத்தட்ட ஐம்பது படங்களை என்னோட கணக்குல ஏத்தியிருப்பேன்"ன்னு புலம்ப,

"கணக்கைத் தொலைச்சிட்டேன்னு நீங்க சொல்லவேயில்லையே"ன்னாங்க மேடம்..

" நீ கேக்கவேயில்லையே"ன்னேன் நான்.

"சொல்லாம எப்படித் தெரியும்"ன்னு கேட்டா அருமைப் புத்திரி.

அதானே!!.. எப்படித் தெரியும். அதுவுமில்லாம இப்படி எனக்கு மட்டுந்தான் நடக்குதா, இல்லை வலைத் தளங்கள்ல கணக்கு வெச்சிருக்கறவங்களுக்கு வழக்கமா நடக்கறதுதானான்னு தெரியலியே. சரி, இப்ப உங்க கிட்ட சொல்லிட்டேன். இது ஒண்ணும் பெரிய கம்ப சூத்திரமில்லை. இது, வலைத்தளங்கள்ல கணக்கு வெச்சிருக்கற எல்லோருக்கும் தெரிஞ்சதாக் கூட இருக்கலாம். இருந்தாலும் இந்த அனுபவம் யாருக்காவது பயன்பட்டா சந்தோஷமே..


64 comments:

Unknown said...

மீ த பர்ஸ்ட். இப்படி வாங்கிய பல்புகள் ஜாஸ்தியா போச்சு. என்ன செய்யறதுவாங்க. உங்க பேரை வெச்சு பதிவு போட்டிருக்கேன். பாத்தீங்களா?

குறையொன்றுமில்லை. said...

சாந்தி உன் புத்திசாலி பொண்ணுமாதிரி எல்லார் வீடலயும் இருக்கனுமே. அப்படியே இருந்தாலும் நாம தான் பாவம் சின்ன பசங்க அவங்களுக்கு என்ன தெரியும்னு போயிகிட்டே இருப்போமே இல்லியா? இப்ப உங்கபதிவு மூலமா அவங்களிடம் தான் முதல்ல ஆலோசனை கேக்கனும்னு தோனுது இல்லியா

துபாய் ராஜா said...

பல்புகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். :))

இராஜராஜேஸ்வரி said...

ஆயிரம் அக்கவுண்டை முடக்கினாலும் அமைதிச்சாரல் முடங்குவதில்லை ஆம்மா!!!./

nice..

இராஜராஜேஸ்வரி said...

தனயள் சொல்லைத் தட்டாத தாயா அங்க போனேன். பயந்துக்கிட்டே கணக்கைத் திறந்தேன்./

My daughter also give me many same பல்புகள்

ADHI VENKAT said...

பல்பு சூப்பர்!
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தால் நாங்களும் உஷாராகிடறோம்.

சின்ன புள்ளைங்க இப்ப விவரமாத் தான் இருக்காங்க....

என்னை விட ரோஷ்ணி அழகா போட்டோ எடுப்பா.

Thenammai Lakshmanan said...

ஹாஹா சாமிநாதன்னதும் சயிண்டிஸ்ட் சாமிநாதனை நினச்சேன்.இவர் தகப்பன் சாமியா.. ஒகே ஓகே..:)

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா பல்புகள் தொடரட்டும்...!

RAMA RAVI (RAMVI) said...

// ஆயிரம் அக்கவுண்டை முடக்கினாலும் அமைதிச்சாரல் முடங்குவதில்லை//

வாழ்க அமைதிசாரல்..

இந்த தடவை கொடுத்த பாஸ்வேர்டு நினைவுல இருக்கா?

இந்த காலத்து குழந்தைகள் அதி புத்திசாலிகள். குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

யான் பெற்ற பயன் பதிவுலகும் பெறட்டும் என
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி

Unknown said...

உண்மையிலேயே சின்னப்பசங்களுக்கு தெரியிறது நமக்கு தெரியமாடீங்குது..

நல்ல பகிர்வு சார்..

வல்லிசிம்ஹன் said...

முன்னெல்லாம் மகன்கள் எல்ப்பு செய்வாங்க. இப்போ பேரன் செய்யறான்:)

Asiya Omar said...

எனக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாதுபா.பகிர்வுக்கு நன்றி.வெரி இண்ட்ரெஸ்டிங் டூ...

ஆமினா said...

// "ஐடி மறந்து போச்சே.. யாரிடம் சொல்வேனடி தோழி??.."ன்னு//

தடங்கல் இல்லாம சீரியஸா படிச்சுட்டு இருக்கும் போதே இந்த இடத்தில் டொபகடீர்ன்னு சிரிச்சுட்டேன் :-))

ஆமினா said...

ஒளிமயமான எதிர்காலம் பல்பு வாங்கியதன் மூலம் கண் முன் தெரிகிறதே.....

தெய்வசுகந்தி said...

:)))!!!

அப்பாவி தங்கமணி said...

ஆஹா... உங்களுக்குள் இப்படி ஒரு கலைஞிஇருப்பது தெரியாமல் போனதே அக்கா...லேடி சூப்பர் ஸ்டார்...ச்சே சூப்பர் கேமரா அக்கா வாழ்க வாழ்க... :) அம்மாவுக்கு பாடம் சொன்ன பாப்பா சூப்பர்'ப்பா...பல்பு மீது பல்பு வந்து உங்களை சேர...அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை பொண்ணை சேர...;)

தக்குடு said...

//ஆயிரம் அக்கவுண்டை முடக்கினாலும் அமைதிச்சாரல் முடங்குவதில்லை ஆம்மா// ha ha ha suuuuper comedythaan poongo! :)))

Unknown said...

புத்திசாலிக் குழந்தைகள். வீட்டுக்கு வீடு வாசப்படி.

வெங்கட் நாகராஜ் said...

பல்பின் பிரகாசம் பரவிக்கிடக்குது பதிவெங்கும்.... :)

நல்லா இருக்கு உங்க பகிர்வு....

Starjan (ஸ்டார்ஜன்) said...

அடடே... இப்படியாகிருச்சே.. :)). நல்ல சுவாரசியமாத்தான் இருக்கு.. இனிய பகிர்வு.

ஹுஸைனம்மா said...

ஹி. ஹி.. வெல்கம் டூ “ஒளிமயமாக வாழ்பவர்கள் சங்கம்”!!

//cyber cafe போய் அங்கிருந்து திறக்க முயற்சி செய்யுங்க//

மற்ற ரெண்டு அக்கவுண்டுகளையும் இப்ப எதுக்கும் இப்படியே முயற்சி செஞ்சு பாத்திடுங்க.. வேற usernameதானே? ஒருவேளை கிடைக்கலாம்.. (ஆறுமாசம் ஆச்சுன்னா கிடைக்காதோ?)

'பரிவை' சே.குமார் said...

பல்புகள் பலவிதம்...

பகிர்வு சுவாரசியமாத்தான் இருக்கு.

ஸ்ரீராம். said...

எனக்கு புது தகவல்தான். மற்றபடி எங்க வீட்டிலையும் பசங்க சர்வ சாதாரணமா இந்த மாதிரிப் பிரச்னைகளை உடைப்பது வழக்கம்தான். ஒரு தளத்தில் இணைந்தபிறகு அதன் யூசர் நேம் பாஸ்வர்ட் போன்றவற்றை எழுதி ட்ராஃப்டில் சேமித்து வைக்கலாமே...ஐடி மறந்து போச்சே யாரிடம் சொல்வேணும், 'சட்டுன்னு சுட்டுட்டு வந்துடும் என்னோட பீரங்கி'யும் ரசித்தேன்.

உணவு உலகம் said...

இளைய தலைமுறை வழிகாட்டுதல் இனிக்கட்டும்.

ஷைலஜா said...

இண்ட்ரெஸ்டிங்கான பதிவு ரசிச்சேன் மைதிச்சாரல்;

சந்திர வம்சம் said...

[im#]http://www.freedesktopwallpapers.net/nature/waterfall5t.jpg[im]


["லாக் ஆகிட்டதுனால நம்ம சிஸ்டத்துலேர்ந்து இப்ப லாகின் செய்யாதீங்க. cyber cafe போய் அங்கிருந்து திறக்க முயற்சி செய்யுங்க.. கண்டிப்பா திறக்கும். உடனேயே கடவுச்சொல்லை கடினமா வெச்சுடுங்க. அப்றம் வீட்டுக்கு வந்து உங்க கணக்கைத் திறக்கலாம். ஈஸியா வரும்"ன்னா.] நல்ல பகிர்வு.. இது மாதிரி நேர்ந்தால் பயன் தரும்.

சந்திர வம்சம் said...

[ma]பல [si="4"]விஷயங்களில் இக்கால குழந்தைகள்[/si] தெளிவானவர்கள்.[/ma]

[im#]http://www.allbabypics.com/data/thumbnails/9/5e609c65.jpg[/im]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

பல்பு வாங்கறது நமக்கொண்ணும் புதுசு இல்லியே.. இப்டிக்கா வாங்கி அப்டிக்கா தூக்கிப் போட்டுட வேண்டியதுதான் :-)

இன்னொருக்கா நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

'உலகத்தில் ஒரே ஒரு புத்திசாலிக் குழந்தைதான் இருக்கிறது. ஒவ்வொரு தாயிடமும்'ன்னு எங்கியோ படிச்சேன் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துபாய் ராஜா,

நலமா?..

பல்புக்கென்னங்க.. டிசைன் டிசைனா கிடைக்குது :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வருகைக்கு ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

உஷார் படுத்தத்தான் பகிர்ந்துக்கிட்டதே :-)

ஒளி ஓவியையாக ரோஷிணி வளர வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனக்கா,

தகப்பன்சாமி சின்ன பல்பெல்லாம் கொடுக்க மாட்டார். அவர் ரேஞ்சே வேற..

தாயுமான மேடம் கொடுக்கற பல்புக்கு கணக்கு கிடையாது :-)

கோமதி அரசு said...

"ஒளிமயமான எதிர்காலம்... வாங்கிய பல்பில் தெரிகிறது"//

குழந்தைகளிடம் பல்பு வாங்கினால் என்ன நம் வேலை நல்லபடியாக ஆனதே.

குழந்தைகள் குருவாய் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். எனக்கு என் குழந்தைகள் தான் குருவாய் இருந்து நிறைய விஷயங்கள் சொல்லி தருகிறார்கள்.

பாச மலர் / Paasa Malar said...

இப்போல்லாம் இந்த மாதிரி விஷயங்களில் பிள்ளைங்கதான் குரு...

ராமலக்ஷ்மி said...

வாங்கிய பல்பின் ஒளி மற்றவருக்கும் ஒளிதரும் வகையில் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

// 'சண்டையில கிழியாத சட்டை எங்கயிருக்கு'ன்னு தூசியை தட்டி விட்டுட்டு அடுத்த படமெடுக்க கிளம்பறதும்ன்னு//

அதானே!! நம்ம கட்சி:))!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ,

ஆஹா.. வாழ்த்துகளுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராம்வி,

எப்பவுமே மறந்ததில்லை. அதை மட்டும் எப்படி மறந்தேன்னும் நினைவில்லை :-))

இப்போதைய கணக்கை மறக்காதிருக்க ஃப்ளிக்கர் ஆண்டவர் அருள்புரிவாராக :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

அதேதான். தளத்துக்குள்ள போக முடியலைன்னதும் ஹேக் ஆகிடுச்சோ என்னவோன்னு விபரீதக் கற்பனைகளெல்லாம் ஓடுது. இப்படியும் ஒரு வழி இருக்குன்னு தெரிஞ்சு,கண்ணால கண்டப்புறம் அடைஞ்ச நிம்மதிக்கு அளவேயில்லை.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமேஷ்பாபு,

நாம எட்டடி பாஞ்சா அவங்க இருபத்து நாலு அடியாவது பாய வேண்டாமா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

எனக்கும் அப்படித்தான் நடக்கும் போலிருக்கு :-))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

நானும் இப்படித்தான் ஜாலியா இருந்தேன்ப்பா.. இப்ப கொஞ்சம் உஷாராயிட்ட்டேன் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

விழுந்து விழுந்து சிரிச்சீங்களாக்கும் :-)))

சாந்தி மாரியப்பன் said...

ஆமினா,

பிரகாசமான எதிர்காலம் உங்களுக்கும் அமைய வாழ்த்துகிறேன் ;-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தெய்வசுகந்தி,

சிரிச்சதுக்கு நன்றிங்க.. :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அடப்பாவி,

ஹோல்சேல் போடலாம்ன்னு இருக்கேன்ப்பா.. போணி பண்ண வாங்க, ஆயிரம் பல்பு வாங்கிய அபூர்வ அப்பாவி அவர்களே :-))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தக்குடு,

உங்க எழுத்திலிருக்கும் காமெடியை விடவா :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கலா நேசன்,

கரெக்டா சொன்னீங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

வாசிச்சதுக்கு நன்றிங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்டார்ஜன்,

தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிக்குதுங்க ஃப்ளிக்கர்
:-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹூஸைனம்மா,

ரொம்ப காலமாகிட்டதால அந்த அக்கவுண்டும் காலமாகிடுச்சோன்னு தோணல். அதான் முயற்சி செய்யலை :-))

சங்கத்தலைவி கொடுத்த வரவேற்புக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

நன்றிங்க :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

மறக்கத் தேவையில்லாதபடிக்கு இருந்த என்னோட ஞாபகசக்தி மேல அபார நம்பிக்கை வெச்சுட்டேன். இப்டி கவுத்துடுச்சு :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கரலிங்கம் ஐயா,

நாம் அவங்க கையைப் பிடிச்சு வழி நடத்தினது போல இனிமே அவங்க கையைப் பிடிச்சுட்டு நாம நடக்க வேண்டிய காலம் நெருங்குது போலிருக்கு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷைலஜா,

ரொம்ப நன்றிங்க ரசிச்சதுக்கு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்திரவம்சம்,

எனக்குமே இப்படியொரு வழி இருக்குன்னு தெரியாம இருந்தது. இனிமே என்னவொரு அசம்பாவிதம்(அப்படி நடக்காம இருக்கணும் அவ்வ்வ்வ்வ்)நடந்தாலும் முதல்ல இந்த முறையைத்தான் முயற்சிப்பேன். மத்தவங்களுக்கும் பயன்பட்டா ரொம்ப சந்தோசமே :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

ஆனானப்பட்ட சிவனுக்கே ஒரு சுவாமிநாதன் இருக்கச்சே நாம் எம்மாத்திரம் ?...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாச மலர்,

ரொம்ப சரியா சொன்னீங்க.. நம்ம விட ரொம்பவே அப்டேட் ஆக இருக்காங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

இடைவிடாத முயற்சிதானே பாலபாடம் :-)

எனக்கு எல்ப் செஞ்ச 'அந்த' வலையுலகத்தோழிக்கு நன்றி சொன்னேன்னு சொல்லிடுங்க
:-)

ராமலக்ஷ்மி said...

சொல்லிட்டேங்க:)))!

ஆமினா said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_25.html

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Asiya Omar said...

பகிர்வுக்கு நன்றி .இன்று வலைச்ச்ரத்தில் பகிர்ந்துள்ளேன்.அச்சச்சோ! ஏற்கனவே இது அறிமுகப் படுத்திய பகிர்வா.அருமை.

LinkWithin

Related Posts with Thumbnails