Thursday, 4 August 2011

நமக்கே நமக்காக..

உடம்போட எடையைக்குறைச்சு ஒரு ஸ்லிம்ரனா ஆகணும்கறதும், ஹீரோக்கள் மாதிரி சிக்ஸ்பேக் வைக்கணும்கறதும் இந்தக்கால இளவட்டங்களோட ஆயுட்கால கனவு. அதனால, கோடை காலத்துல காலை நேரங்கள்ல பார்த்தாப்போதும்.. வேர்க்க விறுவிறுக்க வாக்கிங் போறதும் பக்கத்துல இருக்கற பூங்காக்கள்ல போயி, செட்டு சேர்த்துக்கிட்டு யோகா செய்யறதும்.. வீட்ல, ஜிம்முலன்னு உடற்பயிற்சி செய்யறதும்ன்னு அடடா!!!!!... திமிலோகப்படும்.

 கடந்துபோன மழை மற்றும் குளிர்காலத்துல, வெளியே போகப்பயந்துக்கிட்டு போர்வையை இன்னும் நல்லா இழுத்து மூடிக்கிட்டு உறங்கியும், ஒரே இடத்துல உக்காந்து சாப்பிட்டும் சேர்த்த உடல்பருமனை, வெய்யில்காலத்துல கரைக்கிறேன் பேர்வழின்னு சிலபேர் உடம்பைப்போட்டு படாதபாடு படுத்திட்டிருப்பாங்க.

‘எப்படியாவது குறைஞ்சது பத்து கிலோவாவது குறைச்சே ஆகணும்’கறது அவங்களோட கனவு லட்சியமா இருக்கும். லட்சியத்தை கைப்பிடிக்கப்போற வேளையில கோடை முடிஞ்சு மழைக்காலம் வந்து தொலைச்சுடும். ‘இந்த மழையில் வாக்கிங் போவாங்களா?.. சூடா பஜ்ஜி சாப்பிட்டா நல்லாருக்குமே.. பக்கோடா சாப்பிட்டா நல்லாருக்குமே’ன்னு முழ நீள லிஸ்டில் இருக்கற பலகாரங்களை வயித்துக்குள் ஏற்றுமதிசெய்வாங்க

விளைவு!!.. இன்னும் உடம்பு பூரிச்சுப்போகும். 'அதெல்லாம் எங்க குடும்ப வாகே அப்படித்தான்' அப்படீன்னு ஒரு முத்தாய்ப்போட எடைகுறைக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு,.. அளவு சின்னதாய்ப்போன அழகான ஆடைகள், ஒரு பெருமூச்சோடு தானமளிக்கப்பட்டுவிடும்.

இன்னும் சிலபேர், வீட்ல கல்யாணம், அல்லது இன்னபிற விசேஷங்கள் வருதுன்னா, அன்னிக்கு அழகா தெரியணும்கறதுக்காக அதுக்கு முன்னாடியே எடையைக்குறைக்கறேன் பேர்வழின்னு பரண்ல கிடக்கற ஷூக்கள், ட்ராக் சூட்டுகளை கரப்பான்கள்கூட்டத்து நடுவுலேர்ந்து தேடிக்கண்டுபிடிச்சு முறையா பயிற்சி செய்ய ஆரம்பிப்பாங்க. என் தோழி இரண்டாவது குழந்தைக்கு தாயாராகுமுன், பத்துகிலோ எடையைக்குறைச்சு தயாராகிவிட்டிருந்தாங்க. அதன்பலனா, பிரசவத்துக்கப்புறம் பெண்களுக்கு வழக்கமா கூடிப்போகும் எடைப்பிரச்சினையிலேர்ந்து தப்பிச்சாங்க..

ஆனா, இப்படியெல்லாம் குறைக்கப்படற எடை நிரந்தரமா ஒரே நிலையில் இருக்குதான்னு கேட்டா,.. அதான் கிடையாது. குறிக்கோள்கள் நிறைவேறினதும் எடைகுறைப்பு லட்சியமும் காத்துல பறந்துடும்..“எங்க பரம்பரையிலேயே எல்லோருக்கும் பூசினமாதிரி உடம்புங்க.. அப்படியே அவங்க தாத்தாவாட்டம்,.. பாட்டியாட்டம்..” என்ற சால்ஜாப்புகள் சொல்லப்படும். இப்படி ஒரு குறிப்பிட்ட காலத்துக்காக குறைக்கப்பட்ட எடை அதே வேகத்துல மறுபடியும் கூடுதலாயிடும்ன்னு பயமுறுத்தறாங்க J

இதுக்கெல்லாம் நாற்காலியிலேயே குடியிருக்கற நம்முடைய வாழ்க்கைமுறையும், உணவுப்பழக்கவழக்கங்களும்தான் முக்கிய காரணம். அசையாம ஒரே இடத்துல உக்காந்திக்கிட்டிருந்தா சாப்பாடு சரியா செரிக்காது.. செரிச்சதும் கொழுப்பு செல்களா மாத்தப்பட்டு உடம்புல சேமிக்கப்படும். விளைவை தன்னைத்தானே ஆளுயுயர கண்ணாடியில் பார்த்து தெரிஞ்சுக்கோங்க J

சாதாரண மக்களுக்கே இம்புட்டு பாடு இருந்தா, நம்மமேல வீசப்படற அர்ச்சனைப்பூக்களையெல்லாம் தாங்கிக்கிட்டு, நாற்காலிய எப்பவுமே விட்டுக்கொடுக்காம, தமிழுக்கு சேவைசெய்யறதுக்காக கணினி முன்னாடி உக்காந்துக்கிட்டு, பொட்டி தட்டுற நமக்கு எவ்ளோ கஷ்டம் இருக்கும்.அதையெல்லாம் தாண்டி நம்ம உடல் எடையையும், ஆரோக்கியத்தையும் கட்டுப்பாட்டுல வெச்சிக்க,.. நம்ம டாக்குட்டர் ’கெட்வெல்’ சொல்ற அறிவுரையையும் கவனிக்கலாம். 

1. தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகள்:
இடுகை எழுதறதுக்கு முன்னாடி, என்ன விஷயத்தைப்பத்தி எழுத’லாம்’. என்னென்ன பாயிண்டுகள் சேர்க்க’லாம்’. மத்தவங்க கவனத்தை ஈர்க்கறமாதிரி என்ன தலைப்பு வைக்க’லாம்’ இப்படி எல்லா ‘லாம்’களையும் எப்படி பார்த்துப்பார்த்து தேர்ந்தெடுக்கறோமோ… அதேமாதிரிதான் சாப்பாட்டையும் தேர்ந்தெடுக்கணும்,..  பொரிச்செடுத்த பஜ்ஜி, வடை, போண்டாக்களை மத்தவங்க இடுகைகள்ல போயி எடுக்கறதோட நிறுத்திக்கணும்.. நெஜத்துல அவிச்ச, சுட்ட, வாட்டிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கறது உடம்புக்கு நல்லது.

2. சாப்பாட்டை நிதானமா மென்னு சாப்பிடணும்.
மின்சாரம் கட்டாகுறதுக்குள்ளாற இடுகையை எழுதிமுடிக்கணுமே… மத்த பதிவுகளையும் படிச்சு பின்னூட்டமிடணுமே.. அதுக்குள்ள சாப்பிட்டுடலாம்ன்னு அவசர அவசரமா சாப்பிடக்கூடாது. பொதுவா நாம சாப்பிட ஆரம்பிச்ச பதினஞ்சாவது நிமிஷத்துலதான் ‘வயிறு நிறைஞ்சுடுச்சு’ன்னு நம்ம மூளை தகவல் அனுப்புமாம். அதனால அவசர அவசரமா சாப்பிடுறப்ப, எப்போதும் சாப்டுறதைவிட கொஞ்சம் கூடுதலாவே சாப்பிட்டுட வாய்ப்பிருக்குதாம். சாப்பாட்டுல பழங்கள் பச்சைக்காய்கறிகள் சேர்க்கப்பட்ட,.. நார்ச்சத்து நிரம்பிய ஆரோக்கியமான உணவை சாப்பிடறது நல்லது.
3 .தண்ணி குடிக்க மறந்துடாதீங்க
இது ரொம்ப முக்கியமானது.. சிலவிஷயங்களைப்பத்தி படிக்கிறப்ப (உதாரணமா என்னோட இந்த இடுகை J) ‘சரி.. சரி.. தண்ணியக்குடி’ன்னு நம்மை நாமே தேத்திக்கிறதுக்காக சொல்லிக்கிறதுண்டு. அந்தமாதிரி சமயங்களில் ஒருகப் தண்ணீரைக்குடியுங்க. ஒரு நாளைக்கு குறைஞ்சபட்சம் எட்டிலிருந்து பத்துகப் தண்ணியாவது குடிக்கிறது ரொம்ப நல்லது. இது உடம்பிலிருக்கிற நச்சுப்பொருட்களை வெளியேத்தவும், சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி, சாப்பாட்டுல இருக்கற சத்துக்களை உடம்புமுழுக்க எடுத்துச்செல்லவும் உதவியாயிருக்கு. ஜூஸ்,இளநீர் இதுகளெல்லாம்கூட எடுத்துக்கலாம்..
4.காலையுணவை மறக்காதீங்க.
என்னிக்குமே காலைச்சாப்பாட்டை மறந்துடாம எடுத்துக்கறது நல்லது. இடுகையை காலைல பப்ளிஷ் கொடுத்துட்டு, பின்னூட்டம் வருதா.. வருதான்னு F5 பட்டனை தேய்ஞ்சுபோறவரைக்கும் அழுத்தி அழுத்தி, கண்ணு பூத்துப்போறவரைக்கும் கணினித்திரையை பார்த்துட்டே இருந்தா நிச்சயமா சாப்பிடமறந்துதான் போகும். அதைவிட புரோட்டீன் சத்துகள் நிரம்பிய சாப்பாடா எடுத்துக்கிட்டு அப்புறமா கணினிப்பக்கம் வந்தா, இன்னும் தெம்பா பின்னூட்டத்துக்கு காத்திருக்கலாம். அன்னிக்குப்பூரா எதிர்பார்த்த அளவுக்கு பின்னூட்டம் வரலைன்னாலும், சோர்வே வராது 
:-) இன்னும் தெம்பா பின்னூட்டங்களுக்காக காத்திருக்கலாம். ரெண்டு இட்லி.. ஒரு பக்கெட் சாம்பாரும் ஓகேதான். அதுக்கு மாறா பூரி,பராத்தா,பொங்கல்ன்னு சாப்பிட்டா கண்ணைச்சொக்கிட்டு வரும்.. அப்றம், லேப்டாப்பையே தலையணையாக்கி தூங்கிடுவீங்க… கவனமா இருங்க J

5.உணவை பகிர்ந்து உண்ணுங்க..
சிஸ்டத்துல வாசிச்சுட்டிருந்தத அப்படியே பாதியில விட்டுட்டு சாப்பிடவந்துட்டு, சாப்பிட சோம்பல்பட்டு நம்ம தட்டுல இருக்கறதை, வாழ்க்கைத்துணையோட தட்டுலயோ… இல்ல பசங்களோட தட்டுலயோ, அவங்க பார்க்காத நேரத்துல நைசா வெச்சுடறதுதான் பகிர்ந்துண்ணுதல்ன்னு,.. இதுக்கு அர்த்தம் சொல்லமாட்டேன் J

ஒரே நேரத்துல பெரிய பாத்திகட்டி வளைச்சுக்கட்டாம அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா சின்ன்ன்ன பாத்தி கட்டுனாப்போதும்.. இந்த வழிமுறை அடிக்கடி பசிஎடுப்பதை தடுக்குது.. அதுக்காக ஒவ்வொரு வேளையும் ஃபுல்மீல்ஸ் சாப்பிட்டுட்டு வெயிட்டே குறையமாட்டேங்குதேன்னு புலம்புனா, கம்பேனி பொறுப்பாகாது J
6.நொறுக்குத்தீனியை தவிருங்க..
சிலபேருக்கு சினிமா பார்க்கறச்சே, டிவி பார்க்கறப்ப, இப்ப லேட்டஸ்டா பொட்டிதட்டுறப்ப நொறுக்ஸ் சாப்பிடுற பழக்கம் இருக்கும். மொதல்ல அந்தப்பழக்கத்தை டிலீட் செய்யுங்க. இல்லைன்னா, விஷயத்தோட சுவாரஸ்யத்துல எவ்ளோ சாப்பிட்டோம்ன்னே தெரியாது J. அதுவுமில்லாம அதோட துணுக்குகள் கீபோர்டுல விழுந்து வைச்சா எறும்புத்தொல்லையும் வரும்.. அதோட, ‘நாராயணா.. இந்த எறும்புத்தொல்லை தாங்கலைடா’ன்னு டயலாக்கை மாத்தி சொல்லிக்கலாம்.

7.ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தை சமாளியுங்க.
மன அழுத்தம் கூடுதலா இருக்கச்சேதான், ஒண்ணு எக்கச்சக்கமா சாப்ட்டு குண்டாயிருவாங்க. இல்லைன்னா சாப்பிடாம இருந்து நரம்பாட்டம் ஒல்லியாகிடுவாங்க. ரெண்டுமே தப்பு.. அதனால மன அழுத்தத்தை அண்டவிடாதீங்க. யோகா, ஏரோபிக்ஸ் மாதிரியான பயிற்சிகளால மன அழுத்தத்தை விரட்டிடலாம். இந்த மன அழுத்தங்களுக்கான காரணங்கள் ஆளுக்காள் வித்தியாசப்படும். உதாரணமா சொல்லணும்ன்னா,.. ஒரு இடுகை ஃப்ளாப் ஆனா என்ன!!.. ‘இதுவும் கடந்துபோகும்’ன்னுட்டு அடுத்த இடுகையை இன்னும் நல்லா எழுதி, பாப்புலராக்குற வழியைப்பார்க்கலாமே :-)))
8.உடற்பயிற்சி செய்யுங்க..
உடற்பயிற்சிங்கறதையே மறந்து, கணினி முன்னாடியே தவம் கிடக்கறதால என்னாகும்ன்னு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை J. அதனால, காமணி நேரத்துக்கொருக்கா எழுந்துபோயி நடந்துட்டு வருவது நலம். இந்த வாய்ப்பை ‘சரி..சரி.. தண்ணியக்குடி..’ திட்டத்துக்கு பயன்படுத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கிறவங்க ‘சிக்கனம் சின்னச்சாமி’ என்ற பட்டத்தை தமக்குத்தாமே வழங்கிக்கொள்ளலாம் J. அதேசமயத்தில் காற்றடைத்த குளிர்பானங்கள் டீ காபி இவற்றை தவிர்க்கவும். ‘ஐயோ.. டீ காபி இல்லைன்னா எனக்கு வேலையே ஓடாதே’ங்கறவங்க.. அதோட அளவைக்குறைச்சுக்கோங்க. அதுக்குப்பதிலா, எவ்ளோ வேண்ணாலும் நீர்மோர் குடிக்கலாமே..

இதுபோக ஒரு நாளைக்கு சுமார் 30 நிமிடங்களுக்காவது வெளியே வாக்கிங் போயிட்டு வர்றது நல்லது. இந்த வாக்கிங் நேரம் விடியற்காலையா இருந்தா, ஃப்ரெஷ்ஷா காய்கறி வாங்கிட்டு வரது, வீட்டிலிருக்கும் செல்லப்பிராணியையும் வாக்கிங் கூட்டிட்டுப்போறதுன்னு செஞ்சா வீட்லயும் நல்லபேரு எடுக்கலாம்.

9.காலம் கழிந்து சாப்பிடவேண்டாம்
இது, நடுராத்திரியில.. டின்னரெல்லாம் முடிச்சு,.. எல்லோரும் தூங்கினப்புறமும் சிஸ்டத்துக்குள்ள தலையை விட்டுக்கிட்டு, எழுதவோ வாசிக்கவோ செய்யும் சாமக்கோழிகளுக்கானது...(நான் உட்பட :-)) ராத்திரி ரொம்ப நேரத்துக்கப்புறம் மறுபடியும் பசி எடுக்குதுன்னுட்டு பிஸ்கட்ஸ், டோஸ்ட்ன்னு வளைச்சா அது நல்லதில்லை. நேரம் கழிச்சு சாப்பிடற சாப்பாடு சீரணமாகாது.. உடம்புல வெயிட்டைத்தான் கூட்டும்.
10. சுவரோ, டிராயிங் போர்டோ இல்லை காகிதமோ.. ஏதாவது ஒண்ணு அடிப்படையா இருந்தாத்தான் சித்திரம் எழுதமுடியும். அதேமாதிரி, உடல் எடையை கட்டுக்குள்ள வைக்காட்டி இதயசம்பந்தமான நோய்களும் வர வாய்ப்பிருக்கு. ஒருத்தரோட எடை எவ்ளோ இருந்தா ஆரோக்கியமான நிலைன்னு நாமே கண்டுபிடிச்சிக்கலாம். 

உங்க உயரத்தை செ.மீட்டரில் அளந்துக்கோங்க. அதுலேர்ந்து 100-ஐக்கழிங்க. மீதி வருவதுதான் உங்க சரியான எடை. உதாரணத்துக்கு உங்க உயரம் 158 செ.மீ இருக்குதுன்னு வெச்சுப்போம். அப்படீன்னா உங்க எடை 58கிலோவா இருக்கணும். ஆனா, உங்க எடை அதுக்கும்மேல கூடுதலாயிருந்தா.. நீங்க உடற்பயிற்சி செய்யவேண்டிய நேரம் வந்துட்டுதுன்னு அர்த்தம். நல்லா பயிற்சி செஞ்சு தெம்பா இருந்தாத்தானே பதிவுகள்ல போயி கும்மியடிக்கமுடியும்.. :-)).. சரியா!!..


ரெடி.. ஸ்டார்ட் மூஜிக் :-)))
 


57 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

முதல் வருகை...
நானோ நானா...

# கவிதை வீதி # சௌந்தர் said...

///////
இந்த மழையில் வாக்கிங் போவாங்களா?.. சூடா பஜ்ஜி சாப்பிட்டா நல்லாருக்குமே.. பக்கோடா சாப்பிட்டா நல்லாருக்குமே’ன்னு //////

அப்படியிருந்தாங்க அது நம்ம ஜனம்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

10 தகவல்களும் முத்துப்போல் ஜொலிக்கிறது...

அற்புதமான தகவல்கள்..
வாழ்த்துக்கள்...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமையான தகவல்கள்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பயனுள்ள தகவலும் கூட..
பகிவுக்கு நன்றி..

புதுகைத் தென்றல் said...

natchathira pathivara super post ithu.

valthukkal

வை.கோபாலகிருஷ்ணன் said...

நீங்க எழுதியுள்ளதெல்லாம் படிக்க நல்லாவே இருக்கு. ஏற்கனவே 98 கிலோ இருப்பதால் ந்டக்கவோ நடைமுறைப்படுத்தத்வோ தான் ரொம்பக்கஷ்டமா இருக்கு.

பஜ்ஜி இல்லாத வாழ்க்கை பின்னூட்டம் ஏதும் வராத பதிவு போலல்லவா போரிங் ஆக இருக்கும்!

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
Rathnavel said...

முழுவதும் படித்தேன்.
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

சாகம்பரி said...

நல்ல பதிவு. குளிர்காலத்தில்தான் தீபாவளி, கிறிஸ்மஸ் , புத்தாண்டு வருகின்றன. எக்ஸ்ட்ரா லக்கேஜ் அதையும் கவனிக்கனும்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. நம்ம எடை சரியா இருக்குங்க! கொஞ்சம் தொப்பை தான் கூட ஆரம்பிச்சு இருக்கு. சரி பண்ணிடுவோம்ல....

நல்ல விஷயங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

அவசியமான பகிர்வு. நடைமுறையில் பின்பற்ற வேண்டியவற்றை அருமையாக வலியுறுத்தியிருக்கிறீர்கள்.

kobiraj said...

அனைத்து தகவல்களும் அருமை .நான் வலையுலகில் புதியவன் .நேரம் இருந்தால் வருகை தரவும்
மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல்இப்போது தமிழ் சினிமாவில் வெளிவரவுள்ள முக்கிய படங்கள் மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு. எதை முதலில் எழுதுவது எதை கடைசியாய் எழுதுவது என்று தீர்மானிக்கவே முடியாமல் கடைசியாய் இந்த வரிசையில் போட்டிருக்கிறேன்.இது வெற்றி வாய்ப்பு வரிசை முன்னிருந்துபின்னோ பின்னிருந்து முன்னோ அல்ல
http://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_03.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் உயரத்திலிருந்து 100 கழிச்சா வர எடையில் நான் இல்லை..அதை விட 10 க்கும் மேல குறைஞ்சு இருக்கேன். ஆனா இதுல சொன்ன சில வழிகளை சரியா பின்பற்றினாலே நான் என் எடையைக் கூட்டமுடியும்ன்னு டாக்டர் சொல்றாங்க..ஆனா பின்பற்றத்தான் முடியல..:((

Anonymous said...

‘இந்த மழையில் வாக்கிங் போவாங்களா?.. சூடா பஜ்ஜி சாப்பிட்டா நல்லாருக்குமே.. பக்கோடா சாப்பிட்டா நல்லாருக்குமே’ன்னு முழ நீள லிஸ்டில் இருக்கற பலகாரங்களை வயித்துக்குள் ஏற்றுமதிசெய்வாங்க. /////

:)

எளிமையான வழிகள்தான்... முயற்சிக்கிறேன்...

நன்றி!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Very useful post

அமைதி அப்பா said...

எடைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆலோசனையும் மிக சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.

நன்றியும் பாராட்டுகளும்.

மனோ சாமிநாதன் said...

அவசியமான, அருமையான அறிவுரைகள்! நடைமுறையில் செயல்படுத்துவது தான் நிறைய பேருக்கு கஷ்டம்!

S.Menaga said...

பகிர்வுக்கு நன்றி,தமிழ்மண நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துக்கள் அக்கா!!

Chitra said...

விளக்கமான பதிவு. நன்றி.

ஹேமா said...

சாப்பிடாம இருக்கணும்ன்னு நினைக்கிறப்பத்தான் நல்லாப் பசிக்குது !

துளசி கோபால் said...

அடடா........ அந்த நூறை வச்சுக்கிட்டு மீதியைக் கழிச்சாத் தப்பாங்க??????

ட்ரெட்மில்லில் லேப்டாப் வச்சுக்க வழி இருக்கான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்!

யோசிக்கணும்....... இருங்க 'குடி'ச்சுட்டு வர்றேன்:-)))

தமிழ் said...

அப்பாடா சாரல் அக்கா,

எப்படி இருக்கீங்க? ஸ்ருதியும், லயமும் எப்படி இருக்காங்க?

என்னா ஒரு co incidence... இன்னியிலேருந்துதான் நானும் எடையைக் குறைக்கலாம்னு, கூகிள் விதம் விதமா தேடி, என்னான்னா உடற்பயிற்சி, என்னா மாதிரி உணவுமுறை... எல்லாம் படிச்சுட்டு இருந்தேன்.

எனக்காகவே போட்ட மாதிரி இருக்கு இந்த பதிவு.

வலைப்பூ வெச்சிருக்கிறவங்க மட்டும்தான் இப்ப பின்னூட்டம் போட முடியுதுன்னு நினைக்கிறேன்.

என் ஐடி ல போட்டா, create a blog ன்னு signin பண்ண சொல்லுது... இது எங்க மாமாவோடது.

மாய உலகம் said...

ஆரோக்கியமான பதில் அசத்தல் - படிச்சுட்டோம்ல

புலவர் சா இராமாநுசம் said...

நல்ல பதிவு
உணவு மட்டுமல்ல
நம்மைப் போன்ற பதிவர்களின்
உணர்வுகளையும் இடையிடையே
கலந்து எழுதியுள்ளது போற்றவும்
பாராட்டத் தக்கது!
நட்சத்திரப்பதிவு பணிகளுக்கிடையே வலைகண்டு
வாழ்த்தனீர்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்

ஸ்ரீராம். said...

அட, என்ன ஒற்றுமை...எங்கள் ப்ளாக்கிலும் இது சம்பந்தமான பதிவு...!

சில சமயம் வை. கோபாலக்ருஷ்ணன் சார் சொல்வது போல உணவுக் கட்டுப்பாடு தேவையா என்று தோன்றும். கோடை, மழைக் காலம் போலவே நடைப் பயிற்சிக் காலம், உணவு சாப்பிடும் காலம்...!!

விருந்து மருந்தும் மூன்று நாள்...டயட்டும் பயமும் மூன்று மாதம்..!

அட...உணவையும் பதிவிடறதையும் கலந்து பதிவிட்டு கலக்கியிருக்கீங்க...சபாஷ்...

இராஜராஜேஸ்வரி said...

விருந்தாய் அமைந்தது பகிர்வு. பாராட்டுக்கள்.

அமைதிச்சாரல் said...

வாங்க சௌந்தர்,

பின்னே.. வழக்கம்ன்னு இருந்தா அதை மாத்திக்கக்கூடாதுங்கறதுதானே நம்ம ஜனங்களோட மனநிலை :-))

வாழ்த்துகளுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வேடந்தாங்கல் கருன்,

வாசிச்சதுக்கு நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

எப்பவும் மொக்கையே போட்டுக்கிட்டிருக்க முடியாதுல்ல.. கிடைச்ச கேப்ல கொஞ்சம் கெடாவும் வெட்டணும் :-))

வாழ்த்துகளுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,

வெறுமனே நடைப்பயிற்சி செஞ்சாக்கூட போதும்..

அடடா!!.. நீங்க பஜ்ஜி மஹாத்மியம் எழுதினதையும், பஜ்ஜிப்பிரியர்ங்கறதையும் மறந்துட்டு சொல்லிக்கிட்டிருக்கேன் பாருங்க :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ரத்னவேல் ஐயா,

படிச்சதுக்கும் 'அங்கே' பகிர்ந்துக்கிட்டதுக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க சாகம்பரி,

அது பாயிண்டு.. இருந்தாலும் வளைச்சுக்கட்டாம கொஞ்சமா எடுத்துப்போமே..

முன்னெல்லாம் பண்டிகைக்கு மட்டும்தான் இனிப்பு செய்வாங்க. இப்ப, தெருவுக்கு தெரு இனிப்பகங்கள் வந்ததும் ஒரு காரணமா இருக்கலாமோ :-))

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

நினைச்சா செல்லத்தொப்பையை சீக்கிரமா சரிபண்ண முடியாதா என்ன :-)))

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கிட்டா பின்பற்றுவதில் சிரமம் இல்லைதானே :-)

அமைதிச்சாரல் said...

வாங்க கோபிராஜ்,

சீக்கிரமே வரேன் உங்க தளத்துக்கு..

அமைதிச்சாரல் said...

வாங்க ஷீ- நிசி,

பஜ்ஜி சாப்டறதா,.. இல்லை பயிற்சி செய்யறதா??.. முயற்சிக்கிறேன்னு சொல்லி குழப்பத்துல தள்ளிட்டீங்க :-))))

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜா,

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க அமைதி அப்பா,

வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்கும் ரொம்ப நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மனோம்மா,

வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

அமைதிச்சாரல் said...

வாங்க மேனகா,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா..

அமைதிச்சாரல் said...

வாங்க சித்ரா,

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹேமா,

ஆஹா!!.. சத்திய சோதனைங்க :-))))

அமைதிச்சாரல் said...

வாங்க துளசிக்கா,


திட்டக்கூடாது.. அடிக்க ஆளனுப்பக்கூடாது. முக்கியமா இணைய இணைப்பு இல்லாத இடத்துக்கு கடத்திட்டு போகக்கூடாது. சரீன்னா ஒரு லேப்டாப்பை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். ட்ரெட்மில்லுல ஓடறப்ப பதிவுபோட வசதியா..

ஃப்ரிஜ்ஜுல ரேடியோப்பொட்டி இணைச்சு வரும்போது, ட்ரெட்மில்லுல லேப்டாப் இருக்கக்கூடாதா.. இணையத்துலேர்ந்து இறக்குமதி செஞ்சுருக்கேன் :-))))

[im]http://picture.funnycorner.net/funny-pictures/3380/hehe%20Belgian%20Laptop.jpg[/im]

எப்பூடீ :-))))))

அமைதிச்சாரல் said...

வாங்க முகிலு,

ஜிமெயிலு அக்கவுண்டு இருந்தாலே போதுமேப்பா.. இருந்தாலும் இதுவும் நல்லதுக்குத்தான்.

ஆரம்பிச்ச வலைப்பூவை வாடவிடாம இடுகைத்தண்ணி ஊத்தி வளர்த்து தமிழ்மணத்துல சேர்த்துவுடுங்க :-))

அமைதிச்சாரல் said...

வாங்க மாய உலகம்,

படிச்சதுக்கு நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க புலவர் ஐயா,

எல்லாம் நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வகைதான் :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்ரீராம்,

எடைகுறைத்தல்ங்கறது ஒரு ஹாட் டாபிக் .. அந்த மட்டும் மக்கள் கிட்ட ஆரோக்கியத்தைப்பத்தின விழிப்புணர்வு இப்பல்லாம் பெருகிட்டு வர்றது நல்லவிஷயம்..

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி..

RVS said...

எப்டீங்க நட்சத்திர வாரத்தில இப்படி ஜொலிக்கிறீங்க...

எங்களுக்கெல்லாம் தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில என்ன எழுதறதுன்னே தெரியாத போது நீங்க அசத்தோ அசத்துன்னு அசத்துறீங்க...

ஆரோக்கியத்தைப் பேணச் சொல்றீங்க... சரிங்க.. :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ஆர்.வி.எஸ்,

எழுத்துலக ஜாம்பவான்களான உங்க கிட்டயிருந்து கிடைக்கிற ஊக்கமே இந்த பம்பரத்தை இன்னும் சுத்தவைக்குது :-))

ரொம்ப நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

படிக்கிறப்ப நல்லாத்தான் இருக்கு....ஆனா செய்யணுமேன்னு வழக்கம்போல நினச்சுக்கிட்டு உங்களை வாழ்த்துகிறேன்..

அமைதிச்சாரல் said...

வாங்க பாசமலர்,

தண்ணியில இறங்காம நீச்சல் கத்துக்க முடியுமா?.. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாருக்கும். கொஞ்சம் எடையை குறிச்சிட்டோம்ன்னா, அப்றம் உடற்பயிற்சியில நமக்கே ஒரு சுவாரஸ்யம் வந்துடும்.. :-)

கோமதி அரசு said...

நல்ல பகிர்வு.

கடைப்பிடிப்பவர்கள் பாக்கிய சாலிகள்.

சுல்தான் said...

சில இடங்களில் என்னைப் பற்றியே எழுதியது போல் இருக்கிறது.

தகவலுக்கு நன்றி. நல்ல பதிவு.

மீண்டும் முயற்சிப்பேன்...... :))))

அமைதிச்சாரல் said...

வாங்க கோமதிம்மா,

ரொம்ப சரியா சொல்லிட்டீங்கம்மா..

அமைதிச்சாரல் said...

வாங்க சுல்தான் ஐயா,

ஆஹா.. அதுவும் அப்படியா.. முயற்சிக்கிறேன்னு சொன்னதே ஒரு நல்ல ஆரம்பம்தானே :-))

LinkWithin

Related Posts with Thumbnails