Wednesday, 17 August 2011

மழைக்காலத்தில்..

வெய்யில் காலத்துல, ஒரு மழைத்துளியாவது விழாதா?..கொஞ்சமாவது வெக்கை குறையுமேன்னு ஏங்குன காலம் போய், மும்பையில் இப்போ செம மழை. என்னதான்,.. குடை, ரெயின் கோட்ன்னு கொண்டுபோனாலும், மழையில நனையுற சுகமே தனி.. 

ஆரம்ப ஜோர்ல எல்லாமே நல்லாத்தான் இருக்கும். அப்புறம், என்னதான் துணிதுவைக்கும் இயந்திரத்தின் உலர்த்தியில்(ட்ரையர்ன்னு இங்கிலீசுலயும் சொல்லலாம் :-)) காயவைத்தாலும், சட்ன்னு காயாத துவைத்த துணிகள், மழைக்காலத்துக்கே உரிய இன்னபிற சங்கடங்கள்ன்னு வரிசையா வந்து படுத்தியெடுக்கும். மழை ஆரம்பிச்ச ரெண்டுமாசத்துக்குள்ளாறயே எப்போதான் மழைக்காலம் முடியப்போவுதோன்னு ஒவ்வொருவரையும் முணுமுணுக்க வெச்சிடுது..

இதுக்கெல்லாம் தேவையேயில்லாம, நம்மை இந்தக்காலத்துகேற்ப கொஞ்சம் மாத்திக்கிட்டா, சொர்க்கம்தான்.. கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருந்துக்கிட்டா, மழைக்காலத்துல வர்ற வியாதிகள்லேர்ந்தும் நம்மை காப்பாத்திக்கலாம்.

இந்த லிஸ்டுல மொதல்ல வர்றவங்க குழந்தைகள்தான்.. தண்ணீரில் விளையாடப்பிடிக்காதுன்னு சொல்ற குழந்தைங்க உண்டா என்ன?!!.. அதுவும் பள்ளிவிட்டு வீடு திரும்பும்போதுதான் செமையா நனைஞ்சுக்கிட்டு வருவாங்க. வந்ததும், அப்டியே அலாக்கா குளியலறைக்கு தூக்கிட்டு போயி, ஈர உடைகளை மாற்றி, கை,கால்களை நல்லா சோப்போ, இல்லை தரமான கிருமி நாசினியோ போட்டு கழுவச்சொல்லணும். தேங்கி நிக்கிற அழுக்குத்தண்ணீர்ல எவ்ளோ கிருமிகள் இருக்கும்ன்னு சொல்லியா தெரியணும் :-) 

முடிஞ்சா, இதமான சூடுள்ள வென்னீர்ல கொஞ்சம் டெட்டால், சாவ்லான் எதையாவது கலந்து ஒரு பக்கெட்ல எடுத்துக்கிட்டு, கால்களை அதில் கொஞ்ச நேரம் வெச்சிருந்தா, நக இடுக்குகளில் இருக்கற பாக்டீரியாக்களும் அழிஞ்சு, கால் சுத்தமாயிடும். இதனால், அரிப்பு போன்ற சருமப்பிரச்சினைகள் தவிர்க்கப்படுது.. இது பெரியவங்களுக்கும் பொருந்தும். 

மழைக்காலத்துல ஷூக்களைதவிர்த்து அதுக்கென இருக்கற சப்பல்கள், சாண்டல்களை உபயோகப்படுத்தும்போது, அது தரமானதுதானான்னு சரிபார்த்து வாங்கினா நல்லது. இல்லைன்னா, நாலு நாள் துவைக்காத சாக்ஸுக்கும் அதுக்கும் மணத்தில் எந்தவித வித்தியாசமும் இருக்காது. காலுக்கும் அலர்ஜியாகிடும். ஷூக்களை, அதுக்குள்ளே செய்தித்தாளை திணிச்சுவெச்சு பார்சல் செஞ்சு மழைக்காலம் முடியறவரை பரண்ல பத்திரப்படுத்துங்க.

மழைக்காலத்துல தண்ணீரை காய்ச்சியோ அல்லது வாட்டர் ஃபில்டர்களில் ஊற்றி சுத்தம் செய்தோ பயன்படுத்தணும்ன்னு நமக்கு தெரியும்தான்,.. ஆனாலும், ஃபில்டர்களை சரியா சுத்தம் செய்யலைன்னா, அதுவே பாக்டீரியாக்கள் பல்கிப்பெருகற ஒரு இடமா மாற வாய்ப்பிருக்கு. அப்றம் நோய்களை வெத்தலைபாக்கு வெச்சு அழைச்ச கதைதான் :-)))

மழை மற்றும், அதை தொடர்ந்து வர்ற குளிர்காலங்கள்ல சூடா சாப்பிடறது நலம். அதுவும் குடும்பத்துல எல்லோரும் ஒண்ணா உக்காந்து சாப்பிட்டா, உறவு வளரும், கேஸ்செலவு குறையும். (சாப்பாட்டைஅடிக்கடி சூடாக்கவேண்டிய தேவையிருக்காதே:-). கூடுமானவரைக்கும் அந்தந்த நேரத்துக்கு போதுமான அளவு உணவை சமைச்சு வெச்சுக்கலாம். சாப்பாட்டுலயும் மிளகு, சுக்கு, இஞ்சிவகைகளை நிறைய சேர்த்துக்கிட்டா, நாக்குக்கும் ருசி.. உடம்புக்கும் நல்லது.

மழை பெஞ்சா தோட்டம் வெச்சிருக்கறவங்களுக்கு கொண்டாட்டம்தான்,.. மழைத்தண்ணீரே செடிகளுக்கு போதுமானது. அப்றம், மழைக்காலங்கள்லதான், மண்புழுக்கள் வெளியே வரும். அதுல நாலஞ்சை பிடிச்சுட்டு வந்து தொட்டிக்கு ஒன்னு ரெண்டா போட்டுவெச்சுட்டா, செடிகளுக்கு நல்லது. இயற்கையுரம் தயாரிக்க வெச்சிருக்கற டப்பாவுல கழிவுகளோட,மண்புழுக்களை போட்டுவெச்சா, இயற்கையுரத்தை இன்னும் சத்தாக்கிடும். 
இயற்கையுரத்துல வளர்ற எங்கூட்டு பூக்களை நலம் விசாரிக்கும் பட்டாம்பூச்சி..
மழைக்காலத்துல இன்னொரு தவிர்க்கமுடியாத பிரச்சினை,.. பிரச்சினைன்னு சொல்றதைவிட ஆபத்துன்னே சொல்லலாம். அதான் ஒழுகும் கூரைகள்.. இதுக்கு அடுக்குமாடி கட்டிடங்களும் விதிவிலக்கல்ல. இதனாலயே இங்கெல்லாம் தரைத்தளத்துலயும், மேல்தளத்துலயும் இருக்கற வீடுகள் சட்ன்னு விக்கிறதில்லை. வித்தாலும் 'ஏதோ.. வீடுன்னு ஒன்னு இருந்தாப்போதும்'ன்னு நினைக்கிறவங்கதான் வாங்குவாங்க.
அந்தா............ சுவத்துல கோலம் போட்டிருக்காங்களே.. அதான் கெமிக்கல்பூச்சு..
கூரைகள் மட்டும்தான் ஒழுகும்ன்னு இல்லை. சிலசமயங்கள்ல விரிசல் விட்டுருக்கும் சுவர்கள் வழியாவும் நீர் கசியும். அந்த மாதிரி கசிவு இருக்கற இடங்கள்ல மின்சார இணைப்புகளோ, சுவிட்சுகளோ இருந்தா,.. வேற வினையே வேண்டாம். எப்போ ஷாக் அடிக்கும்ன்னே தெரியாது. பயந்துக்கிட்டே இருக்கணும். அதனால, மழைக்கு முன்னாடியே இங்கெல்லாம் கட்டிடங்கள்லயும் வெளிச்சுவர்கள்ல ரசாயனப்பூச்சுவேலை நடக்கும். ஏன்னா, பால்கனியில தண்ணீர் தேங்கினாக்கூட, அது நமக்கு கீழ்த்தளத்துல இருக்கற வீட்ல கசிய வாய்ப்பிருக்கு.

எனக்கு தெரிஞ்சவங்க வீட்ல, வீட்டோட இணைஞ்ச மொட்டைமாடியில செங்கல் வெச்சு தொட்டி கட்டி, அதுல மண் நிரப்பி, தோட்டம்போட்டிருந்தாங்க. தினமும் அதுக்கு ஊத்துற தண்ணீர் சுவர் வழியா கசிஞ்சு, கீழ்த்தளத்துல இருந்த வீட்டோட சமயலறையின் டைல்களெல்லாம் அப்படியே உதிர்ந்து 'சொத்.. சொத்'ன்னு விழற நிலைமைக்கு போயிடுச்சு. மொத்தமா விழுந்தா பரவால்லை.. ஒவ்வொரு நாளும் ஒன்னு ரெண்டா விழுந்தா, எப்படி?.. தினமும் பயந்துக்கிட்டே சமைக்கமுடியுமா?.. கடைசியில சொஸைட்டில புகார்கொடுத்து, தொட்டியை இடிக்கவெச்சதுமில்லாம, தங்களோட அடுக்களையையும் சரிசெஞ்சு கொடுத்தப்புறம்தான் சமாதானமானாங்க :-)

இப்படியெல்லாம் இருந்தாலும் பாதுகாப்பு கருதி நாமும் எச்சரிக்கையா சில முன்னேற்ப்பாடுகளை செஞ்சுக்கணும். ஷாக் அடிப்பதை தவிர்க்க சுவிட்சுகள், மற்றும் ப்ளக் பாயிண்டுகள்ல எர்த் கனெக்ஷன் இருக்கான்னு பார்த்து சரிசெஞ்சுக்கணும். முடிஞ்சவரைக்கும் த்ரீ பின் பாயிண்டுகளை உபயோகப்படுத்துவது நல்லது. 

அதுவும் மிக்ஸி, டிவி, சிஸ்டம் போன்ற மின்சார மற்றும் மின்னணுச்சாதனங்களை உபயோகப்படுத்தியபிறகு, சுவிட்சுலேர்ந்து ஒயரைப்பிடுங்கிடுறது நல்லது. அதிகம் இடிமின்னல் இருக்கும் சமயங்கள்ல டிவியையும், ஃப்ரிஜ்ஜையும் ஆஃப் செஞ்சுடுறது அதுக்கும், உங்க பர்சுக்கும் பாதுகாப்பு. 

தரைத்தளத்துல இருக்கறவங்களுக்கு கொஞ்சம் திண்டாட்டம்தான். மழைல நனைஞ்சுட்டு சகதிக்காலோட வீட்டுக்குள்ள நடமாடினா, ஒரு நாளைக்கு நாலஞ்சு தடவை வீட்டை துடைச்சு, சுத்தம் செய்யவேண்டிய அவசியத்துக்கு வீட்டுப்பெண்களை உள்ளாக்கினா, அப்றம், சமைக்க நேரமெங்கே இருக்குன்னு அதிரடி பதில் கண்டிப்பா வரும்.  'அதிகப்படியான சுத்தம் சோறுபோடாது :-))

ஈரமான குடைகளை வீட்டுக்குள்ள கொண்டுவராதீங்க. வெளியவே ஒரு பக்கெட்டை வெச்சு குடைகளை அதில் வெச்சுடுங்க. அதிகப்படியான தண்ணீரெல்லாம் வடிஞ்சப்புறம், வேணும்ன்னா, எல்லோரும் தூங்கப்போறச்சே ஹால்ல குடைகளை விரிச்சு வெச்சுட்டா, பத்து நிமிஷத்துல காய்ஞ்சுடும். மடக்கி வெச்சுடலாம். மழைக்கோட்டுகளை உலர்த்தறதுக்குன்னு தனியா ஒரு கொடி கட்டி, அதுல காயவெச்சுட்டா, ஈரவாசனை தவிர்க்கப்படும்.

அலுவலகம் போறவங்க,.. முக்கியமா பெண்கள், இந்த மழை நேரத்துக்குன்னே தனியா, சீக்கிரம் காயறவகையிலான செயற்கை இழையாலான ஆடைகளை உபயோகப்படுத்தறது நல்லது. முடிஞ்சா, ஆபீசில் உங்களுக்குன்னு டேபிள் இருந்தா, ஒரு செட் உலர்வான உடைகளை எப்பவும் அதுல வெச்சிக்கிறது ரொம்ப பயனானது. ரொம்பவே தொப்பலா நனைஞ்சு, அத்தனை பேர் நடுவுல கூனிக்குறுகி, குளிர்ல நடுங்கிட்டே வேலைசெய்யற அவஸ்தையை இதனால தடுக்கலாம். இது இங்கே தொலைத்தொடர்பு துறையில் பணிபுரியும் என்னோட தோழி சொன்ன டிப்ஸ்.. பெண்களுக்குன்னு தனியா ஓய்வறை வசதி இருக்கற அலுவலங்கள்லயாவது இதை கடைப்பிடிக்கலாமே..
மழைக்காலத்துல குஞ்சுகளுக்கு கதகதப்பா படுக்கை தயாரிக்க எங்கூட்டு செடிகள்தான் போகுதாக்கும் :-)). டப்பாவே தெரியாத அளவுக்கு வளர்ந்து பூத்துக்கிடந்த செடி, ஒர்ரே நாள்ல பணாலான கதியைப்பாரீர் :-))
அதிமுக்கியமானது,.. வியாதிகள்லேர்ந்து காப்பாத்திக்க தடுப்பூசிகளை போட்டுக்கிடறது நல்லது. கொசுக்கள் பெருகாம இருக்க, வீட்டுப்பக்கங்கள்ல தண்ணீர் தேங்கி நிக்கிற இடங்கள்ல வேப்பெண்ணெய், ஆமணக்கெண்ணெய், மற்றும் கழிவு ஆயில்களையும் (நன்றி-உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணா) ஊத்திவெச்சா,.. கொசுக்கள் அழிக்கப்பட்டு, அதனால பரவற காய்ச்சல் வகைகள் கொஞ்சமாவது தடுக்கப்படும். 

அமெரிக்காவின் டாக்சஸ், விஸ்கோன்சின், அலபாமா ஆகிய பல்கலை கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைஞ்சு, சிக்கன் குனியா காய்ச்சலுக்கான தடுப்பூசியை கண்டுபிடிச்சிருக்காங்க. பன்றிக்காய்ச்சலுக்கும் தடுப்பூசி இருக்காம். வருமுன் காப்பது நல்லதுதானே..

மும்பையில் ஒவ்வொரு இடங்கள்லயும், புகைபோட்டு கொசுவை அழிச்சுக்கிட்டிருக்காங்க. ஒவ்வொரு கட்டிடமா போயி, கீழ்த்தளத்துல, மழை நீர்வடிகால்கள், அப்றம் வாகனங்கள் நிறுத்தற இடங்கள்ன்னு எல்லா இடங்கள்லயும் புகையடிப்பு நடக்குது.
எங்க பில்டிங்கில் மருந்தடிக்கிறாங்க... கொசுவுக்கு :-)

முக்கியமானது,.. மழை பெஞ்சாத்தான் நாடுசெழிக்கும்,.. காடும் செழிக்கும். குடிதண்ணீர், காய்கறிகள்ன்னு எல்லாமும் தட்டுப்பாடில்லாம கிடைக்கும். கண்ணுக்கு குளிர்ச்சியா சுத்துப்புறமும் இருக்கும். பட்டாம்பூச்சிகள் அருவிகளெல்லாம் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும். அதனால, மழை பிடிக்கலைன்னாலும் தயவு செய்து,' சனியன் பிடிச்ச மழை.. விடாம பெய்ஞ்சு கெடுக்குதே'ன்னு அலுத்துக்காதீங்க. மழை நல்லது :-)))


39 comments:

Ramani said...

மழை காலத்திற்கான முன்னெச்ச்சரிக்கை பதிவு
மிக மிக அருமை
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மும்பைபோல
அப்படிக் கொட்டித்தீர்ப்பதில்லை
ஆயினும் பொதுச்சுகாதர விஷயத்தில் ரொம்ப வீக்
நீங்கள் சொல்லியிருக்கிற விஷயங்கள் அனைத்தும்
ரொம்ப பயனுள்ளவைகளாக உள்ளன
பயனுள்ள முன் எச்சரிக்கைப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

காலத்திற்கு ஏற்ப சரியான பகிர்வு. நல்ல மழைச் சாரலில் அமர்ந்து சுடச் சுட தேநீர் அருந்திய சந்தோஷம்.

நல்ல செய்திகளைச் சொல்லிய உங்களுக்கு நன்றி.

Rathnavel said...

அருமையான பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பயனுள்ள தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கையாக இருந்தால் மழையும் ரசிக்கும்படியான நிகழ்வுதான்....

நல்ல தொகுப்பு நண்பரே

தமிழ் உதயம் said...

365 நாளும் செழிப்பாக இருக்க - சில நாட்கள் மழையை பொறுத்து கொள்ளத்தான் வேண்டும். நல்ல பதிவு.

Lakshmi said...

மும்பை மழையைப்பத்தி சரியா சொன்னீங்க. மும்பை வாசிகளுக்குத்தான்
அதோட தீவிரத்தை நல்லா உணர முடியும். நானும் மூணாவது மாடிலதான் இருக்கேன் பெட்ரூம் ஜன்னலின் வெளியாதான் ஏ.சி. யோட கம்ப்ரசர்
வச்சிருக்கேன். மழை அடிச்சு காத்துகலந்து வீசும்போது கம்ப்ரெசர் பூராவும் தண்ணி ரொம்பிடும்.ரோட்லயும் சரியான ட்ரெய்னேஜ் வசதி போரவே போராது. எங்க பாத்தாலும் தண்ணி குட்டையா தேங்கி நிக்கும். 3, 4, மாசங்கள் அவதி தான்.

சி.பி.செந்தில்குமார் said...

நீட் & குட்

ஆமினா said...

மழைகாலத்துகேத்த டிப்ஸ்...

இங்கே இப்ப தான் வந்துருக்காங்க :)

ஹுஸைனம்மா said...

மழைக்காலம் வந்தா, வீட்டில நடந்து ‘பொற்’பாதங்கள் பதிக்கும் வீட்டு + வெளி ஆண்கள் - பயங்கரக் கடுப்பாருக்கும்!!

சுவர்ல செயற்கை கோலம், அருவில இயற்கை கோலம் - அழகான காட்சி!!

மழை & விளைவுகள் பத்தி ஒரு தனிபதிவே போடுற அளவுக்கு மழை பெய்யுது உங்களுக்கு!! கொடுத்து வச்சவங்க...

//பூத்துக்கிடந்த செடி, ஒர்ரே நாள்ல பணாலான கதியைப்பாரீர்//
இங்கேயும் அதேகதிதான்!! என்னா ஸ்பீடுங்கிறீங்க..

//சிக்கன் குனியா காய்ச்சலுக்கான தடுப்பூசியை கண்டுபிடிச்சிருக்காங்க//
இன்னும் ஆராய்ச்சி லெவல்லதான் இருக்கதா.. அதாவது இன்னும் சில சோதனைகளுக்கு உடப்டுத்த வேண்டியிருக்குன்னு படிச்சேன்.. சீக்கிரம் வந்தா நல்லது. கன்னியாகுமரி மாவட்டத்துல இப்பவே ஏதோ காய்ச்சல் நடமடுதாமே..

//எங்க பில்டிங்கில் மருந்தடிக்கிறாங்க... கொசுவுக்கு//
ஹி.. ஹி.. கொசுத்தொல்லை தாங்கல நாராயணான்னு யாரும் போட்டுக் கொடுத்திருப்பாங்களோ.. உங்களை... ஹி.. ஹி..

கோவை2தில்லி said...

மழைக்காலத்துக்கேற்ற நல்ல குறிப்புக்களை கொடுத்திருக்கீங்க.மும்பை அளவு இங்கே மழை இல்லை. மும்பையிலிருக்கும் என் தோழியும் மழை பற்றி சொன்னாள்.

படங்கள் எல்லாமே நல்லா இருக்குங்க. பட்டாம்பூச்சி படம் ரொம்ப நல்லா இருக்கு.

கோவை2தில்லி said...

மழைக்காலத்துக்கேற்ற நல்ல குறிப்புக்களை கொடுத்திருக்கீங்க.மும்பை அளவு இங்கே மழை இல்லை. மும்பையிலிருக்கும் என் தோழியும் மழை பற்றி சொன்னாள்.

படங்கள் எல்லாமே நல்லா இருக்குங்க. பட்டாம்பூச்சி படம் ரொம்ப நல்லா இருக்கு.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. சூப்பர்-ஆ எழுதி இருக்கீங்க..! நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கீங்க. :)

எனக்கு இந்த ஸ்டேட்மெண்ட் ரெம்ப பிடிச்சிருக்குங்க..

// 'அதிகப்படியான சுத்தம் சோறுபோடாது :-))//

ஹா ஹா.. செம போங்க ;))

மாய உலகம் said...

மழைக்காலத்தில் எச்சரிக்கையாக இருந்தால் அந்த இயற்கையை என்றும் ரசிக்கலாம்... பகிர்வுக்கு நன்றி

கோமதி அரசு said...

மழை பெஞ்சாத்தான் நாடுசெழிக்கும்,.. காடும் செழிக்கும். குடிதண்ணீர், காய்கறிகள்ன்னு எல்லாமும் தட்டுப்பாடில்லாம கிடைக்கும். கண்ணுக்கு குளிர்ச்சியா சுத்துப்புறமும் இருக்கும். பட்டாம்பூச்சிகள் அருவிகளெல்லாம் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும். அதனால, மழை பிடிக்கலைன்னாலும் தயவு செய்து,' சனியன் பிடிச்ச மழை.. விடாம பெய்ஞ்சு கெடுக்குதே'ன்னு அலுத்துக்காதீங்க. மழை நல்லது :-)))//

மழை நல்லது மழை நல்லது !

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகவும் அவசியமானது.
அருமையான டிபஸ் கிடைத்தது.
நன்றி.

இதை படித்துக் கொண்டு இருக்கும் போது கனமழை பெய்து கொண்டு இருக்கிறது.இன்று மகாசங்கடஹர சதுர்த்தி பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் போக முடியவில்லை, மணிக்கணக்காய் பெய்து கொண்டு இருக்கிறது.

ஆனாலும் மழையை போற்றுகிறேன். ”மாமழை போற்றுதும்” என்று சிலப்பதிகாரம் சொல்லி இருக்கிறதே.

தமிழ் said...

மழைக் காலத்துக்கு இதமான சூடான பதிவு! சூப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்...... :-))

நன்றி சாரல் அக்கா!

சே.குமார் said...

மழை காலத்திற்கான முன்னெச்ச்சரிக்கை பதிவு
மிக மிக அருமை...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல கையேடு ..சாரல்..

( கையை சோப்பு போட்டு கழுவினயாடா...
ம்..
சோப்பு போட்டா
ம்....
எங்க கொண்டா பாப்பம் வாசமடிக்குதான்னு ..

இந்தா போரேன் ..
அப்ப அவன் முதல்லயே கழுவல என்னா பொய் பாருங்க..:(
)

தெய்வசுகந்தி said...

மழை நல்லது!!!

Easwaran said...

புறாக்குஞ்சுகளுக்கு படுக்கை கொடுத்த அமைதிச்சாரல் வாழ்க! வாழ்க!
அந்த டப்பாச்செடி பல்லாண்டு வாழ்கவே!

(சீர்காழி குரலில் கேட்கவும்)

புலவர் சா இராமாநுசம் said...

பயன் தரும் பதிவு
உரிய நேரத்தில் உரிய பதிவு!

புலவர் சா இராமாநுசம்

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல அட்வைஸ் மழை

ஆனா பாருங்க இங்க மழையும் காணோம் மழைக்காத்தையும் காணோம் படிக்கிறப்போ திட்டுனேன் மழைய :))))

ஸ்ரீராம். said...

ஒரு பக்கம் மழை வேண்டும் என்று சொல்லிக் கொண்டே மழை பெய்தால் குடை பிடித்து கறுப்புக் கொடி காட்டறோம். விவரமாக எல்லா முன் எச்சரிக்கைகளையும் அலசி விட்டீர்கள்.

அமைதிச்சாரல் said...

வாங்க ரமணி,

அப்டீங்கறீங்க?.. இப்பல்லாம், நம்மூரு மக்கள்கிட்டயும் சுகாதார விழிப்புணர்வு கூடிக்கிட்டிருக்கறதாத்தான் எனக்கு தோணுது..

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

தேனீர் மட்டும் போதுமா!! கூடவே கொறிக்க எதுவும் வேணாமா :-)))

அமைதிச்சாரல் said...

வாங்க ரத்னவேல் ஐயா,

கருத்துக்கு ரொம்ப நன்றிங்க

அமைதிச்சாரல் said...

வாங்க நண்டு,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஷீ- நிசி,

நோய்கள் சுலபமா பல்கிப்பெருக தேவையான பருவ நிலை இல்லையா.. அதனால, கொஞ்சம் எச்சரிக்கையோட இருந்துக்கிட்டா சொர்க்கம்தான்..

அமைதிச்சாரல் said...

வாங்க தமிழ் உதயம்,

அதைச்சொல்லுங்க. உளியடிக்கு பயந்தா நல்லதொரு சிற்பம் கிடைக்காதே, அதுமாதிரிதான் இதுவும்.

அமைதிச்சாரல் said...

வாங்க லஷ்மிம்மா,

எங்க அம்மா ஒருதடவை மழைக்காலத்துல மும்பை வந்திருந்தப்ப, "மழைக்காலத்துல மட்டும் மும்பை நரகம்தான்"ன்னாங்க :-))

புற நகர்ப்பகுதிகள்ல முன்னேற்றம் கொஞ்சம் மெதுவாத்தான் நடக்குது. அதான், ரோட்டுல ஆங்காங்கே தானாய் முளைத்த நீச்சல் குளங்கள் :-))))))

அமைதிச்சாரல் said...

வாங்க சிபி,

ரொம்ப நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க ஆமினா,

உங்களை நலம் விசாரிக்கச்சொல்லி நாந்தான் அதை அனுப்பிவெச்சேன். வந்த விருந்தாளியை நீங்களும் நல்லா கவனிச்சுக்கோங்க :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ஹூஸைனம்மா,

ஆமாம்ப்பா.. இப்போதைக்கு எலியை வெச்சு ஆராய்ச்சி செஞ்சு வெற்றி கிடைச்சுருக்கு.

இனிமேத்தான் மனுஷங்க மேல ஆராய்ச்சி செஞ்சு பதில் சொல்லுவாங்க. நம்மூர்ல அதுக்கா பஞ்சம் ;-)

'கொசுத்தொல்லை தாங்கலை'ன்னு புகார் செஞ்சவங்களை ஒரே சமயத்துல நூறு கொசுக்கள் கடிக்கட்டும் :-)))))

அமைதிச்சாரல் said...

வாங்க கோவை2தில்லி,

டெல்லியில் இப்ப இருக்காது,.. ஆனா இருக்குமாம். மும்பையிலிருந்து புறப்பட்ட மழை அடுத்தாப்ல டெண்ட் அடிக்கிறது டெல்லியில்தானே :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ஆனந்தி,

சுத்த்த்தம் :-)))))))))

அமைதிச்சாரல் said...

வாங்க கோமதிம்மா,

இப்போ மும்பையிலும் வெளியே தலைகாட்டமுடியாத அளவுக்கு மழைதான். கோகுலாஷ்டமியன்று கால நிலை எப்படியிருந்தாலும் சரி.. ஒரு ஆட்டம் ஆடித்தீர்த்துடும்..

அன்புடன் அருணா said...

பூங்கொத்து :)

பாச மலர் / Paasa Malar said...

மழையை நேசிக்கக் கற்றுக் கொள்வோம்....உப்யோகமான தகவல் பரிமாற்றங்களுக்கும் நன்றி..

அமைதிச்சாரல் said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லியிருக்கும்,..
[im]http://2.bp.blogspot.com/_FhFvwWRNAao/TK3mzViSgBI/AAAAAAAAADA/V9g9nvKx-o4/s320/thaks02-Editted.jpg[/im]

LinkWithin

Related Posts with Thumbnails