Monday, 22 August 2011

ஆயர்பாடி மாளிகையில்..

எங்க வீட்டுக்கு இவன் வந்து சுமார் மூணு வருசம் இருக்குமா!!!.. இல்லையாம், ரெண்டரை வருசம்தான் ஆச்சாம்.. திருத்திக்கச்சொல்றான். அவனுக்குன்னு தேடித்தேடி தொட்டில், நகைகள், உடைகள்ன்னு எத்தனைதான் வாங்கிக்குவிச்சாலும், ஒரேயொரு துளசிதளத்தைப் பார்த்ததும் சட்ன்னு பரமதிருப்தியாயிடறான். சாப்பாட்டுலயும், அவனுக்காக வெச்சிருக்கற தண்ணீர்லயும்கூட ஒரு தளத்தை போடச்சொல்றான்னா பார்த்துக்கோங்க. அதென்னவோ அதுமேல அப்படியொரு பிரியம் அவனுக்கு :-)))

தினம் குளிச்சுமுடிச்சு, ட்ரெஸ்ஸெல்லாம் போட்டுக்கிட்டு, ஊஞ்சல்ல ஒரு ஆட்டம் ஆடணும் அவனுக்கு. அப்றம்தான் சாப்பாடெல்லாம் சாப்பிடுவான். பிடிவாதக்காரன் :-))
க்ருஷ்ஷுக்கே அல்வா... அதுவும் மஸ்கோத்து அல்வா :-))
அவனுக்கு பிறந்தநாளாச்சேன்னு, நேத்திக்கி புது ட்ரெஸ்ஸு வாங்கிட்டு வந்தேன். 'இப்பவே போட்டுவிடு'ன்னு ஒர்ரே அடம்.. 'அதெல்ல்லாம் முடியாது. நாளைக்கு குளிச்சப்புறம்தான் போட்டுவிடுவேன். நாளைக்கு பிறந்த நாளில்லையா.. காலைல சீக்கிரம் எழுந்துக்கணுமில்லையா. அதனால, இப்போ சீக்கிரம் தூங்கு'ன்னு வலுக்கட்டாயமா தூங்கவெச்சேன்.

காலைல குளிச்சு முடிச்சு, அலங்காரமெல்லாம் செஞ்சுக்கிட்டு, புது ட்ரெஸ்ஸு போட்டுக்கிட்ட திருப்தியில என்னவொரு ஆனந்தமா சிரிக்கிறான். உப்புச்சீடையும், வெல்லச்சீடையும் ரொம்ப பிடிச்சிருக்காம்.பால்பேடாவும் நல்லாத்தான் இருக்காம்.கடையில் வாங்கினதுதான்னு சொன்னேன். கோச்சுக்கலை. அவல்,சர்க்கரை,வெண்ணெய் எல்லாத்தையும் பார்த்ததும் படுகுஷியாயிட்டார் :-)
ஆனந்தமாய் ஊஞ்சலாடும் க்ருஷ் :-)
நேத்து முழுக்க செம மழை,.. அவன் பிறந்த சமயம் அப்படித்தான் இருந்ததாம். கொட்டற மழையில் வசுதேவர் அவனை, ஆயர்பாடிக்கு கொண்டுபோயி, யசோதாவிடம் ஒப்படைத்தாராம். ஆயர்பாடின்னதும், அவனுக்கு தான் ஆயர்பாடியில் வெண்ணெய் திருடித்தின்ன நிகழ்வுகளெல்லாம் ஞாபகம் வந்துடுச்சு..


இப்பவும் அந்த ஞாபகமாத்தான், இங்கே மும்பையில் 'தஹிஹண்டி' கொண்டாடறோம்ன்னு சொன்னேன். அப்டீன்னா என்னதுன்னு கேக்கறான். அவனுக்கா தெரியாது!!!.. குறும்புக்காரன் :-)))27 comments:

வெங்கட் நாகராஜ் said...

குறும்புக்கார கண்ணன் பற்றிய சுவையான பகிர்வு...

வெறும் அவல் கொடுத்தால் கூட சந்தோஷப்படும் ஜீவன்...

தில்லியில் இன்றுதான் கோகுலாஷ்டமி. கோவில்கள் களைகட்டியிருக்கிறது.

Amutha Krishna said...

இங்க எங்க வீட்டிற்கும் விசிட் செய்தான்.பலகார கவர் எல்லாம் பிரிச்சு வைக்கப்படாதா..பாவம் குழந்தை கவர் பிரிக்க கஷ்டப்படுமே.

ஸ்ரீராம். said...

//"'தஹிஹண்டி' கொண்டாடறோம்ன்னு சொன்னேன். அப்டீன்னா என்னதுன்னு கேக்கறான். அவனுக்கா தெரியாது!!!.. குறும்புக்காரன் "//

மாயக் கண்ணனுக்குத் தெரியாததா....ஹி...ஹி....ஆனால் எங்களுக்கு, ஸாரி, எனக்குத் தெரியலையே...!

புதுகைத் தென்றல் said...

நானும் சிம்பிளாத்தான் செஞ்சேன். பூஜை செய்தது ஆஷிஷ். நாளைக்கு படம் போடுறேன்.

கிருஷ்ணன் அழகு

ஆமினா said...

//அப்டீன்னா என்னதுன்னு கேக்கறான். அவனுக்கா தெரியாது!!!.. குறும்புக்காரன் :-)))

//
:-)

கோகுலாஷ்ட்டமி நல்வாழ்த்துக்கள்

RVS said...

ரைட்டு... அப்படியே மஸ்கோத்து அல்வா பிடிச்சுருக்கான்னு கேளுங்க மேடம்..

ஊத்துக்குளி வெண்ணை வாங்கித் தரலைன்னு கோச்சுக்கபபோறான்.. பொல்லாதவன்.. :-))))

ஹுஸைனம்மா said...

/ஒரேயொரு துளசிதளத்தைப் பார்த்ததும் //
துளசிதளம்னா??

எனக்குத் தெரிஞ்சது டீச்சரோட தளம்தான்!! ;-)))))

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

Ramani said...

இந்தப் பாடலை பலமுறை
கேட்டிருக்கிறேன் ஆனாலும்
பதிவில் படங்களுடன்
அதுவும் கோகுலாஷ்டமி நாளில் கேட்பது
புது அனுபவமாய் இருக்கிறது
அருமையான பதிவைத் தந்தமைக்கு நன்றி

தமிழ் உதயம் said...

ரசித்தோம் கண்ணனின் குறும்பை... பாடலை...

vidivelli said...

தினம் குளிச்சுமுடிச்சு, ட்ரெஸ்ஸெல்லாம் போட்டுக்கிட்டு, ஊஞ்சல்ல ஒரு ஆட்டம் ஆடணும் அவனுக்கு. அப்றம்தான் சாப்பாடெல்லாம் சாப்பிடுவான். பிடிவாதக்காரன் :-))

வீட்டில உங்கட பிடிவாதத்தை பார்த்திட்டு இவங்களும் தொடங்கிட்டாங்க போல..

நல்ல கடவுள் பற்றியதான பதிவு..
அன்புடன் பாராட்டுக்கள்..

மாதேவி said...

மாயக்கண்ணன் ஆடுகிறான்....

கோகுல் said...

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்!

Chitra said...

so cute!

சே.குமார் said...

குறும்புக்காரன் பற்றிய சுவையான பகிர்வு...

Rathnavel said...

அருமை.

Lakshmi said...

நல்ல சுவாரசியமான பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தீராத விளையாட்டுப் பிள்ளையாகிய கிருஷ்(ணன்)பற்றி, கொஞ்சலுடன், அவனைக்கொஞ்சுவது போலவே எழுதியுள்ளது, சிறப்பாக உள்ளது.

பாராட்டுக்கள்.

M.R said...

படிக்கும்பொழுது சுவாரஸ்யமாக இருக்கிறது .பகிர்வுக்கு நன்றி .வாழ்த்துக்கள்

கோவை2தில்லி said...

சுட்டிக்கண்ணன் பற்றி நல்ல பகிர்வு.
அழகாக ஊஞ்சலில் உட்கார்ந்து இருக்கானே.....

அருமையான பாடல்.

பாச மலர் / Paasa Malar said...

சுவையான பகிர்வு சாரல்..

FOOD said...

சுவையான பகிர்வு.

பாரத்... பாரதி... said...

வணங்கங்களும், வாக்குகளும்..

இராஜராஜேஸ்வரி said...

அழைத்துக்காட்டியது போல் அருமையான பகிர்வுக்க்ப் பாராட்டுக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குறும்புக்காரனாத்தெரியலயே.. சொன்னபடி கேட்டுருக்கான்..சீக்கிரம் தூங்கிருக்கான்,, கடையில் வாங்கினதுக்கு கோச்சுக்கல..:))நல்லா எழுதி இருக்கீங்க சாரல்..

எங்கவீட்டுல டேய் சேட்டை செய்யாதடான்னேன் அன்னிக்கு கிருஷ்ணவேசம் போட்டுக்கிட்டு வெளிய கிளம்பிட்டிருந்தான். சொல்றான் நான் மாக்கன் சோர் .. சேட்டை தான் செய்வேன் ந்னு.. :)

அப்பாவி தங்கமணி said...

கிருஷ்ணரை பிள்ளையாய் பாவித்து அழகா எழுதி இருக்கீங்க அக்கா... இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமேனு தோண வெச்சது...;)

வல்லிசிம்ஹன் said...

azhagu Krishnan.
thottil azhaku
pazham azhaku
ellaame azhaku. saaral padaiththa pathivu virunthum azhaku.

அமைதிச்சாரல் said...

கருத்து சொன்ன அனைவருக்கும் காலம் கடந்தாலும் கரெக்டா சொன்ன,

[im]http://www.animated-glitter-graphics.com/images/thanksb.gif[/im]

LinkWithin

Related Posts with Thumbnails