அன்றைக்கு குழந்தைகளின் கும்மாளம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. சமாளிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்தார் அவர்களின் அம்மா சவிதா. , "என்ன!!.. ஒரே சத்தக்காடா கெடக்குது?" என்று கேட்டபடி வீட்டுக்குள் நுழைந்தார் மரகதம்பாட்டி.
பாட்டியின் கையிலிருந்த கூடையிலிருந்து குங்குமப்பிரசாதத்தை எடுத்துக்கொண்டபடியே சவிதா," ஏம்மா இவ்ளோ நேரம்??.. கோயில்ல ரொம்ப கூட்டமா?" என்று கேட்டாள்.
"கோவில்ல நம்ம சௌந்தரம்மா(
கேணிப்பித்தன்) மகளைப்பார்த்தேன். ஊருக்கு வந்திருக்கா போலிருக்கு. ஹூம்!!.. எப்படியிருந்த குடும்பம்.."
"என்ன பண்றது!!.. காலம் யாரை எங்க கொண்டுபோய் வைக்கும்ன்னு யாருக்குத்தெரியும்!!.."
அப்படியே, வர்ற வழியில ஜெயந்தியையும் ஒரு எட்டு பாத்துட்டு வந்தேன். அதான் இம்புட்டு நேரமாயிடுச்சு.இந்தப்பொண்ணோட ரௌத்திரத்துக்கு பின்னாடி இருக்கிற கதை
(ராகவன்)யை நினைச்சா மனசு அப்படியே கலங்கிப்போகுது.."
இதற்கிடையில் பசங்களின் கூச்சல் அதிகமானது."அது என்னங்கேன்.. .. ஒரே வாக்குல" செல்லமாக அதட்டினாள் பாட்டி.
" பாட்டி.. அம்மாட்ட கதை சொல்லச்சொன்னோம். அம்மா எனக்கு கத சொல்லத்தெரியாதுன்னு சொல்றாங்க" என்று புகார் வாசிக்கப்பட்டது.
"கதைதானே... பாட்டி சொல்றேன். கேட்டுக்கிட்டே சாப்பிடுவீங்களாம். சரியா?.."
மேலும் படிக்க
வலைச்சரத்துக்கு வாங்க :-))