"வாங்கக்கா.."
"வரச்சொன்னியாமே... குழந்தை வந்து கூப்பிட்டா.."
"ஆமாங்க்கா.. புதுச்சா கணினி வாங்கியிருக்கோம். எனக்கு அதப்பத்தி ஒண்ணும் தெரியாது. அதான் உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு கூப்பிட்டு வரச்சொன்னேன்."
"நானும் உன்னைமாதிரிதான்.. ஆனா, தெரியாததை இணையத்துல தேடிப்பார்த்து தெரிஞ்சுக்குவேன். தமிழ்ல நிறைய வலைப்பூக்கள்ல எக்கச்சக்கமான விபரங்களெல்லாம் கொட்டிக்கிடக்கு .."
"வலைப்பூக்கள்ன்னா என்னக்கா.... ரோஜா, மல்லிகை மாதிரியா.."
வலைச்சரத்துக்கு வந்தா மிச்சத்தையும் படிக்கலாம் :-)))))
8 comments:
தொழில்நுட்பத் தகவல்கள் தரும் பதிவர்களை அறிமுகப்படுத்தி அசத்தியதற்கு நன்றிகள்...
இந்த பதிவு தொழில்நுட்பத் தகவல்கள் தரும் பதிவர்கள உற்சாகபடுத்தும்.
புதியவர்களை வலைச்சரத்தின் மூலமாக அறிமுகப்படுத்தும் விதம் நிறைய பதிவர்களைத்தெரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிரது, நன்றி.
ஆரம்பம் எல்லோருக்குமே அறியாமை ததும்பும் கேள்விகளுடனேதான்:)! கத்துக்கலாம் எதையுமே.
வாங்க பிரபாகரன்,
நமக்காக எப்படியெல்லாம் மெனக்கெட்டு இடுகைகள் போடறாங்க. நாமளும், நிச்சயமா அவங்களை கண்டுகிட்டு ஆதரவளிக்கணும் இல்லியா..
நன்றி.
வாங்க சக்தி,
கரெக்டுங்க.. பிரபாகரனுக்கு சொன்ன பதிலை உங்களுக்கும் ரிப்பீட்டிக்கறேன் :-))
நன்றி.
வாங்க லஷ்மியம்மா,
நிச்சயமா... புதுசா வர்ற எல்லோருக்குமே ஒரு அங்கீகாரத்தை தருது..
நன்றி.
வாங்க ராமலஷ்மி,
சரியா சொல்லிட்டீங்கப்பா..
நன்றி.
Post a Comment