காலம்: இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு.(போறாத காலம்ன்னு மனசுக்குள்ள நினைக்கிறது கேக்குது :-))))
நிகழ்வு: சிறப்பாசிரியர் பணியேற்பு.
இடம்: வலைச்சரம்.
அன்புடையீர்,
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இன்றிலிருந்து (3-1-11) ஒருவாரத்துக்கு வலைச்சரத்தின் சிறப்பாசிரியர் பணியில் நியமிக்கப்பட்டிருக்கிறேன். ஆதலால், தாங்கள் சுற்றம்சூழ, நண்பர்களையும் அழைத்துக்கொண்டு, அங்கே வந்திருந்து மொய்யெழுதி நிகழ்ச்சியை சிறப்பிக்கும்படி கேட்டுக்கொல்கிறேன்.
அன்புடன்,
அமைதிச்சாரல்..
35 comments:
வெத்தல பாக்கு எடுத்துக்கிட்டு மனதார வாழ்த்துகிறேன்:)! அசத்துங்கள்! தவறாம வந்துடுறோம்.
சுடச் சுட எனக்கே:)!
வாங்க ராமலஷ்மி,
ஹாட்பேக்கில் போட்டு வெச்சிருந்தேன்ப்பா :-)))
நன்றி.
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
நாள் தோறும் வலைச்சரத்தில் புதுப்புது அற்முகங்கள் செய்து கலக்க உங்க்ளுக்குச் சொல்லித்தரவா வேணும்... கலக்கிடுவீங்க!!
வாங்க வெங்கட்,
தைரியம் கொடுக்க நீங்களெல்லாம் இருக்கீங்க என்ற நம்பிக்கையில்தான் களமிறங்கியிருக்கேன் :-))
நன்றி.
அழைப்பிதழே அட்டகாசமாக இருக்கே.வாழ்த்துக்கள்.
Congratulations
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்க\ள்
வெத்திலை பாக்கு வைத்து அழைத்த வரை வராமல் இருப்பேனா?
வாழ்த்துக்கள்ங்க... வலைச்சரம் சிறக்கட்டும்...
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
தங்கள் தளத்துக்கு இன்றே முதல் வருகை. இன்னும் பழைய இடுகைகளை படிக்கலை. இனி தொடர்ந்து வருவேன். வலைச்சரத்துக்கு கண்டிப்பா வருவேன். ஆமா கும்மியடிக்கலாமா? அப்புறம் வலிக்குதுனு அழக்கூடாது ல அதுக்குதான்
வாங்க ஆசியா,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க கீதா,
வாழ்த்துக்களுக்கு நன்றி. தவறாம வலைச்சரத்துக்கு வாங்க.
வாங்க ஜலீலா,
வலைச்சரத்துக்கு தெனமும் வரணும். சரியா :-))
நன்றி.
வாங்க பாலாசி,
ரொம்ப நன்றிப்பா.
வாங்க கோவை2தில்லி,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க ராஜி,
முதல்வருகைக்கு நன்றி.தொடர்ந்து வர்றதா சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
வலைச்சரத்தில் மிதமான கும்மி அலவ்டுதான். யாரையும் நாம புண்படுத்திடக்கூடாது பாருங்க. அதனால்தான் அந்த மிதமான :-))))
நன்றிப்பா.
மிதமான கும்மி அலவுட்தான். நாம் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது இல்ல.
ஃஃஃஃஃஃஃஃ
கண்டிப்பாக என் வார்த்தைகளில் கண்ணியமிருக்கும். என்னுடைய கமெண்டுகளை பார்த்தாலே தெரியும் உங்களுக்கு
வெத்தலபாக்கு ஓக்கே !!!
தம்பளம் ல வச்சு கொடுத்தா தான் வருவோம் ;)
தாம்பாளத்தோட கொஞ்சம் பழங்கள் வச்சிக்குடுங்க :)
வாழ்த்துக்கள்!
வலைச்சர ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள்.
வாங்க ஆமினா,
முத்துலெட்சுமி..
அன்பையே தாம்பாளமாக்கி,இதயக்கனியுடன் புன்னகை மலர்களையும், வைத்துக்கொடுத்திருக்கிறேன்.. நல்ல்ல்ல்லா உத்துப்பாருங்க :-)))))))
நன்றி.
வாங்க அம்பிகா,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வலைச்சரத்துக்கும் தவறாம வருவீங்கதானே :-))
வாங்க ஸ்ரீஅகிலா,
ரொம்ப நன்றிங்க..
பொறுப்பான பணி.
வாழ்த்துகள் தோழி !
வாங்க ஹேமா,
ரொம்ப நன்றிப்பா..
@ ராஜி,
பெர்மிஷன் க்ராண்டட் :-)))))
அடடா. வாழ்த்துகள் சாரல்!
நீங்க பொறுப்பா நல்லபடியா சரம் செய்து முடிப்பீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்குப்பா.
தாம்பூலம்னா ,காசும் வைத்திருக்கணுமே. கொஞ்சம் நோட்டுகளையும் வைங்கப்பா:) இங்கிருந்து மும்பை வரணுமில்ல.;0)
அன்பின் அமைதிச் சாரல் - அழகான அன்பான அழைப்பு - அனைத்து நல்லுள்ளங்களும் தாம்பூலம் எடுத்துக் கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வந்து விடுவார்கள். தோழியை விட்டுக் கொடுப்பார்களா நண்பர்கள்
எல்லோருமே "வாழ்த்துக்கள்" னு எழுதறாங்க - வாழ்த்துகள் தான் சரியான சொல். பாலாசி கூட தப்பா எழுதறாரே !!! ம்ம்ம்ம்ம்
வாங்க வல்லிம்மா,
அப்புறம் காசுகொடுத்து சேர்ந்துருக்கோம்ன்னு யாரும் சொல்லிடக்கூடாதில்லையா.. அதான் வைக்கலை (சமாளிபிகேஷன்)
அங்க வருவீங்கதானே??
வாங்க சீனா ஐயா,
நானும் மத்தவங்களோட சேர்ந்து தலையை தடவிக்கிறேன்.. ரொம்ப நாள் ஆச்சுல்ல குட்டு வாங்கி :-)))))
ரொம்ப நன்றிங்க..
vaalthukkal akkov...
வாங்க அப்பாவி,
நன்றிங்கோவ் :-))))))
Post a Comment