Friday, 14 January 2011

மஹாராஷ்டிராவும் பொங்கலும் பின்னே ஞானும்..உழவுக்கும்,தொழிலுக்கும் வந்தனை செய்வோம், தை பிறந்தா வழி பிறக்கும், இதெல்லாம் பொங்கல் பண்டிகையை நினைவு படுத்தும், சில பொன் மொழிகள். நம் ஊரில் தைமாசம் முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வருடம் முழுக்க உழைத்த, தனக்கு உதவிய ஜீவன்களுக்கு நன்றி சொல்லி,ஆதவனை ஆராதிக்கும் பண்டிகையிது .

ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே வீடு, வாசல் கழுவி , வீட்டை தூய்மைப்படுத்தி, சாதனங்கள் சேகரித்து என்று, பண்டிகை களை கட்ட ஆரம்பித்து விடும்.கிராமங்களில் கட்டி அடுப்பு என்று ஒன்றை வீட்டிலேயே செய்வார்கள். மண்ணைக்குழைத்து, வேண்டிய அளவிலிருக்கும் பழைய, ஓரடி உயரத்திலிருக்கும் பக்கெட்டோ, பாத்திரமோ எடுத்து, மண்ணை அதில் அழுத்திஅடைத்து அப்படியே திருப்பி பின்னால் ஒரு தட்டு... துண்டாக வந்து விழும் கட்டியை அப்படியே காய விட்டுவிடுவார்கள்.வேண்டிய எண்ணிக்கையில் செய்து காயவிட்டு வீட்டுக்கு அடிக்கும் சுண்ணாம்பில் அதற்கும் கொஞ்சம் பூசி, காவிப்பட்டையால் அலங்கரித்து வைப்பார்கள்.

பொங்கலன்று இந்த அடுப்பில் பானையை ஏற்றி, சாஸ்திரத்துக்கு ரெண்டு பனைஓலையை வைத்து அடுப்பை ஆரம்பிச்சுட்டு அப்புறம் , விறகுகளின் துணை கொண்டு பொங்கல் கொதிக்க ஆரம்பிக்கும். விறகுகளின் இடையே சில பனங்கிழங்குகளை செருகி விட்டால் பிறகு கடித்துக்கொள்ளலாம்.சமயம் பார்த்து காற்றும் சோதனை செய்யும்... புகையுடன் போராடி, பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்தி, சூரியனுக்கு படையல் செய்வார்கள்.இஞ்சி மஞ்சளின் பச்சைமணமும், கரும்பின் இனிப்பும் கூடுதல் மகிழ்ச்சி தருது..

பொங்கல் பண்டிகை கிராமங்களில் மண்மணத்துடன் கொண்டாடப்படுகிறது. அந்த அளவு இல்லை என்றாலும், நகரங்களிலும் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை. அடி நாதமாய் அது இரண்டு இடங்களிலும் ஊடாடிக்கொண்டுதான் இருக்கிறது.மஹாராஷ்டிராவில் பொங்கல் 'மகர சங்கராந்தி' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பச்சை காய்கறிகள், வெளிறிப்போயிருக்கும் கரும்பு ,எல்லாம் இங்கேயும் உண்டு. அரிசியும் பயத்தம்பருப்பும் போட்டு செய்யற கிச்சடிதான் இன்றைய ஸ்பெஷல். நம்மூர் வெண்பொங்கலாச்சேன்னுதானே நினைக்கிறீங்க. எஸ்ஸ்.. ஆனால், மைனஸ் மிளகு, மைனஸ் சீரகம், மைனஸ் முந்திரிப்பருப்பு. ஆனா, டேஸ்ட்டு மட்டும் ப்ளஸ்.. ப்ளஸ்.. காலை பூஜை முடித்ததுமே சாயங்காலத்துக்கு ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்து விடும்.

இரண்டு நாட்களுக்கு முன்னாடியே பொருட்கள் சேகரிக்கப்பட்டுவிடும். தெரிந்தவர்கள்.. நண்பர்களுக்கு...அழைப்பு அனுப்பப்பட்டுவிடும்.

சாயந்திரம் நன்கு அலங்கரித்துக்கொண்டு, சிறிதாக நறுக்கப்பட்ட காய்கறிகள், கரும்பு இவற்றின் கலவையை ஒரு சிறிய மண்பானையில் போட்டு வைத்துக்கொண்டு,இதனுடன் எள்ளுமிட்டாய்,சர்க்கரையை வைத்து தயாரிக்கப்படும் எள்ளுருண்டை,பூ, பழம், பூ,தாம்பூலம், வைத்துக்கொடுக்க ஏதேனும் ஒருபொருள், இவற்றுடன் தயாராக காத்திருப்பார்கள்.

ஒவ்வொருவராக வர ஆரம்பித்ததும், அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து, தாம்பூலம் அளித்து, எள்ளுமிட்டாய், சீனிஉருண்டை கலவையை"தில் குட் க்(G)யா.....கோ(G)ட்....கோ(G)ட்....போ(b)லா.." என்று சொல்லி கொடுப்பார்கள். அதாவது "இனிக்கும் எள்ளை எடுத்துக்கிட்டு இனிமையாக பேசு" என்று அர்த்தம்.வயதில் சிறியவர்கள், பெரியவர்களிடம் ஆசி பெற்றுக்கொள்வார்கள்.

குழந்தைகளும் ஒரு டப்பாவில் சீனி, எள் உருண்டைகளை போட்டுக்கொண்டு க்ரூப்பாக கிளம்பி விடுவார்கள். வீடுவீடாக சென்று எல்லோருக்கும் கொடுத்து  பெரியவர்கள் காலில் விழுந்து, ஆசி பெற்று வருவார்கள்.  ஒருவயது கூடுதலானவர்களாக இருந்தால் கூட அவர்களுக்கு பெரியவர்கள் என்ற பதவி அளிக்கப்பட்டுவிடும் . நிறைய வீடுகளில் இவர்களுக்காக இனிப்புகள் வாங்கி வைத்திருந்து, கொடுப்பார்கள்.


எந்த இடத்தில் இருந்தாலும், எந்தப்பெயரில் கொண்டாடினாலும் பண்டிகை மகிழ்ச்சியையும், இனிமையையும் தரட்டும்.


எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

டிஸ்கி: படங்கள் வலை(போட்டு)யில் பிடித்தவை. மெஹந்தியை தவிர..


பண்டிகைக்காக மெஹந்தி டிசைன்கள்.. 

இன்னொரு டிஸ்கி: சில மாற்றங்களுடனான மீள்பதிவு இது :-))
25 comments:

வெங்கட் நாகராஜ் said...

"தில் குட் க்(G)யா.....கோ(G)ட்....கோ(G)ட்....போ(b)லா.."

மஹாராஷ்டிர பொங்கல் பற்றிய பகிர்வுக்கு நன்றி. தில்லியில் லோடி [Lohri] மட்டுமே விமரிசையாய் கொண்டாடுவர்...

ஸாதிகா said...

மஹாராஷ்டிர பொங்கல் வித்தியாசமாக இருந்தது.இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

பிரபு எம் said...

மும்பைக்கு வந்து ஒருவருடம் ஆகும் மதுரைத் தமிழன் நான்....
இப்பொழுது உடன் பணிபுரிகிறவர்களிடம் இந்த மஹாராஷ்டிரப் பொங்கல் பற்றித் தகவல்கள் கேட்டுக்கொண்டிருந்தேன்.... :)
உங்கள் பதிவு படம் வரைந்து பாகங்களைக் குறித்துவிட்டது!!

பொங்கல் வாழ்த்துக்கள் சகோதிரி :)

siva said...

ஹாப்பி பொங்கல்
ஹாப்பி மாட்டுப்பொங்கல்
ஹாப்பி கண்னும் பொங்கல்

கோவை2தில்லி said...

மஹாரஷ்ட்ரா பொங்கல் பற்றி தெரிந்து கொண்டேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஆமினா said...

ஹாப்பி பொங்கல்;)

மனோ சாமிநாதன் said...

மஹாராஷ்ட்ரா பொங்கல் படிக்க அருமையாக இருந்தது! பூனா செல்லும் வழியில் பன்வேலில் சில காலம் திருமண‌மான புதிதில் வாழ்ந்திருக்கிறேன். உங்களின் எழுத்தைப் ப‌டித்ததும் பழைய நினைவலைகள் புரண்டு வந்தன!

ராமலக்ஷ்மி said...

தெரியாத விவரங்கள் பலவற்றை அறிய முடிந்தது.

//எந்த இடத்தில் இருந்தாலும், எந்தப்பெயரில் கொண்டாடினாலும் பண்டிகை மகிழ்ச்சியையும், இனிமையையும் தரட்டும்.//

அழகாச் சொன்னீங்க.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

vanathy said...

very interesting informations.

ஜிஜி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

Jaleela Kamal said...

இனிய பொங்க்ல் வாழ்த்துக்கல்
ஓ எள்ளுருண்டைக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா.

ஜெய்லானி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Gopi Ramamoorthy said...

ஹாப்பி மகர சங்கராந்தி!

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

லோடி நல்லபடியா முடிஞ்சதா..

அமைதிச்சாரல் said...

வாங்க ஸாதிகா,

வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க பிரபு,

மீள்பதிவை கொஞ்சம் யோசனையோடவே போட்டேன்.. உங்களுக்கு உதவியிருப்பதில் ரொம்ப சந்தோஷம்.. :-))))

அத்தியாவசியமான அளவுக்கு மராட்டி கத்துக்கோங்க, ரொம்பவே கைகொடுக்கும் :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க சிவா,

பொங்கல்,கரும்பு எல்லாம் சாப்பிட்டு முடிச்சாச்சா :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க கோவை2தில்லி,

உங்களுக்கும் வாழ்த்துகள்.. டெல்லியில் எப்படி கொண்டாடுனீங்கன்னு எழுதுங்களேன் :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆமினா,

வாழ்த்துகளுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மனோம்மா,

அட!!.. நம்ம பன்வெல் :-))))). இது இப்போ கிட்டத்தட்ட நவிமும்பை ஆயாச்சும்மா :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

உங்களுக்கும் வாழ்த்துகள்..

asiya omar said...

மஹாராஸ்ட்ரா பொங்கல் பகிர்வுக்கு மகிழ்ச்சி.படங்கள் அருமை.

கோமதி அரசு said...

கட்டி அடுப்பு, பனை ஒலை இதெல்லாம் படித்தவுடன் ஊர் நினைவு வந்து விட்டது. எங்கள் அம்மா வீட்டில், மாமியார் வீட்டில் எல்லாம் கட்டி அடுப்பில்தான் பொங்கல்.

மாஹாராஷ்டிரா பொங்கல் பற்றி தெரிந்து கொண்டோம்.
நன்றி அமைதிச்சாரல்.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆசியா,

நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க கோமதிஅரசு அம்மா,

அடுப்பில் பொங்கலிடும்போது அதுக்கு தனிச்சுவையே கிடைக்குது. காஸ் அடுப்பில் அது மிஸ்ஸிங்தான் :-)

நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails