கால்ல சக்கரத்தை கட்டிக்கிட்டு எப்படி ஓடிப்போச்சுன்னே தெரியலை.. இந்தவாரத்தைச்சொன்னேன். என்னையும் நம்ம்ம்ம்ம்ம்பி இந்த பொறுப்பை ஒப்படைச்ச சீனா ஐயாவுக்கும், வலைச்சரக்குழுவினருக்கும், மொதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.
ஏன்னா,.. வழக்கமா படிக்கிற பதிவுகள் தவிர நெறைய புதிய பதிவுகளையும் கண்டுக்கிடறதுக்கு, எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பா இருந்திச்சு. அதையெல்லாத்தையும், பிரபலம்,புதுசுன்னு கதம்பமா தொடுத்துட்டேன். ஜூரமெல்லாம் ஒண்ணும் வரலை. மத்தபடி பரீட்சைக்கு படிக்கிறமாதிரி ஜாலியா படிச்சுட்டே இருந்தேன் :-))). வலைச்சரப்பொறுப்பை சாக்குவெச்சு, கணினியை ஆக்கிரமிக்க முடிஞ்சது. இல்லைன்னா, அஞ்சு நிமிஷத்துக்கு மேல எனக்கு அனுமதிகிடைக்காது :-))
பின்னூட்டமிட்டு 'ஊக்கு'வித்த உங்கள் அனைவருக்கும், பின்னூட்டம் போடலைன்னாலும்.. தினமும் படிச்சுட்டுப்போன மற்ற அனைவருக்கும், 'லேட்டானாலும் லேட்டஸ்டா, நமக்கெல்லாம் தளம் கொடுத்து உதவிய கூகிளம்மனுக்கும்(இதெல்லாம் ரொம்ப ஓவருன்னு ஆரும் திட்டப்டாது:-)) நன்றி'.... ('சொல்ல மறந்தா, பாஸ்வேர்டு மறந்துபோகக்கடவதாக' அப்படீன்னு யாரோ சொல்றமாதிரியே.. காதுக்குள்ள கேட்டுக்கிட்டிருக்கு).
மறுபடியும்,.. அடுத்து வரப்போற ஆசிரியருக்கு வாழ்த்துக்களும், எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களும், வரப்போற பொங்கலுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்களும் சொல்லிக்கிறேன்.
6 comments:
அருமையான வாரம்.
பொங்கல் வாழ்த்துக்கள்! [பொங்கல் வடை என்பது விசேஷமாச்சே:)! எனக்கா எனப் பார்ப்போம்!!]
கூகுளம்மன் அருள் என்றும் உங்களுக்குக் கிட்டுவதாக:))!
வாங்க ராமலஷ்மி,
வடை உங்களுக்கே.. பொங்கலுக்கு அருமையான ஜோடியாச்சே :-)))
எனக்கு கிடைச்சதை எல்லாரோடயும் பகிர்ந்துக்கறேன் :-))))
நன்றி.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வாங்க புவனேஸ்வரி,
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..
நன்றி.
பணியை செவ்வன முடித்ததற்கு வாழ்த்துக்கள்!
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள். வலைச்சரத்தில் கலக்கியதற்கும்!!
Post a Comment