'எக்ஸ்போ-11' என்று சீரியல் பல்புகளாலேயே வடிவமைக்கப்பட்டிருந்த வளைவு நுழைவாயிலின் அருகே, நடந்துபோய்க்கொண்டிருக்கும் அந்த தம்பதியையும், கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார்களே,.. அந்தக்குழந்தையையும் நல்லா பார்த்துவெச்சுக்கோங்க. பொருட்காட்சியில் ஒவ்வொரு இடங்களாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். கூட்டமா இருக்கிற இடங்கள்ல குழந்தைகளை பத்திரமா கையில் பிடிச்சுக்கவேண்டாமோ!!.. இவங்க கையிலிருந்து நழுவி அவன் ஓடறதும், துரத்திப்பிடிக்கிறதுமா இருக்குது.
"அப்பா... எனக்கு பட்டம் வேணும்,.. வாங்கித்தாங்க"
"நீ சின்னக்குழந்தைடா.. உனக்கு பட்டமெல்லாம் விடவருமா.. சும்மா பிச்சுப்போட்டுடுவே.. என்னங்க,.. அதெல்லாம் வாங்கவேணாம்"
"பரவாயில்லைம்மா, குழந்தை ஆசைப்படுறானில்ல.. இருக்கட்டும். சின்ன வயசுல பட்டம்ன்னா எனக்கு உசிரு. அந்த ஜாலியே தனி. வெங்கட் நாகராஜ்ங்கிறவர் அதப்பத்தி என்னமா எழுதியிருக்காரு தெரியுமா"
வாமன் ஹரி பேட்டே ஜூவல்லர்சின் ஸ்டாலை கடந்துபோகும்போது, வெளியே ஃப்ளக்ஸ் பேனரில் வரையப்பட்டிருக்கும் ஜிமிக்கிகள், ஒரு நிமிஷம் கடைக்குள்ள வந்துதான் பாரேன்னு கூப்பிடுது. ஆபத்தை உணர்ந்த கணவன், 'என்னத்த பெரிய ஜிமிக்கி!!!.. உன்னோட முகத்துக்கு ஜிமிக்கியைவிட தோடுதான் நல்லாருக்குது. அப்படியே அம்மன் சிலை மாதிரி இருக்கே தெரியுமா?..' என்றான் அவசரமாக.
மேலும் படிக்க வலைச்சரத்துக்கு வாங்க :-)))))))
12 comments:
கதையாச் சொல்லும் உத்தி ரொம்ப நல்லா இருக்கு. இனிய பாராட்டுகள்.
ஏம்ப்பா..... ஆண்கள் கோழைகளா மாறிக்கிட்டு இருக்காங்களே.... புடவைக் கடை விஷயங்களில்:(
வீரமா வந்து வாங்கிக் குவிக்க வேணாமா? :-))))))
அப்புறம் இன்னொன்னும் சொல்லிக்கிறேன்.
நன்றி நன்றி நன்றி
வலைச்சரத்தில் மீண்டுமோர் அறிமுகம் எனக்கு. மிக்க நன்றி.
ட்ரெய்லர் ஆவலை அதிகரிக்கிறது. மெயின் ஷோவுக்கு கிளம்பிட்டோம்.
இங்க சாம்பிள். அங்க ஷோருமா-??? பின்றீங்க போங்க...:)
என்னோட கவுஜைகளை படிச்சு படிச்சு செம ப்ரில்லியன்ட் ஆயிட்டீங்க...:))
aamaangka naanum ingka paathi angka paathiyumthaan patissu rasikkareengka.:)
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
மிகுந்த நகைச்சுவை உணர்வோடு எழுதப்பட்டது அருமை. ஒன்றரை ஆண்டுக்கு முன்பான என் இடுகையை ஞாபகத்தில் வைத்திருந்து, அதனை கதையோடு கோர்த்தமைக்கு மிக்க நன்றி.
வாங்க துளசியக்கா,
நீங்க அடிக்கடி சொல்றமாதிரி..'ட்ரெயினிங் பத்தாது'போலிருக்கு :-))))))
நன்றிங்க..
வாங்க வெங்கட்,
நன்றிங்க.
வாங்க ராமலஷ்மி,
ட்ரெயிலருக்கு ரொம்ப வரவேற்பு இருக்குங்க :-)))))
நன்றி.
வாங்க பிரதாப்,
உங்களை ஷோரூம் பக்கமே காணலயே!! ரொம்ப பிசியா :-)))
நன்றி கேமராக்கவிஞரே :-))
வாங்க லஷ்மியம்மா,
ட்ரெயிலர் பிடிக்கலைன்னா அப்படியே எஸ்ஸாயிடலாம் பாருங்க... அதான் இங்கியும் போடறேன் :-))))
நன்றி.
Post a Comment