Tuesday, 18 January 2011

மும்பை மின்சார ரயில்கள்.. ஒரு பயணம்.

மும்பைக்கு மொதமொதல்ல வர்ற யாருமே, ரொம்பவும் அதிசயிச்சுப்பார்க்கிறது இங்குள்ள , பரபரப்பான ஆட்களையும், மின்சார ரயில்களையும்தான். அதிலும் எங்கூர் ரயில் நிலையங்கள்ல உள்ள கூட்டத்தைப்பார்த்தா, திருவிழாக்கூட்டம் தோத்துடும் :-)). நாம சும்மா கூட்டத்துக்கு நடுவுல நின்னுக்கிட்டா போதும். அப்படியே ட்ரெயின்ல ஏத்தி, இறக்கிவிட்டுடுவாங்க. சந்தேகமா இருந்தா ஒரு நடை சத்ரபதி சிவாஜி டெர்மினல்ஸ போயி பாத்துட்டு வாங்க.இங்க உள்ளவங்களுக்கு நடக்கவே தெரியாதோன்னுதான் நினைப்பீங்க.

ஒரு நாளைக்கு மின்சார ரயில்கள் ஓடலைன்னாலும், எங்கூரு ஸ்தம்பிச்சுப்போயிடும்,.. மும்பையின் ரத்த நாளங்கள்ன்னே இதை சொல்லலாம். ரயில்களின் முதல்வகுப்புகளை குறிவெச்சு வெடிகுண்டு சம்பவம் நடந்தப்ப மும்பையே கிடுகிடுத்துப்போச்சு :-((. ஒரு நாளைக்கு 6.9 மில்லியன் மக்கள் லோக்கல் ரெயில்களை பயன்படுத்தறதா புள்ளிவிவரங்கள் சொல்லுது. மின்சார ரயில்களை நாங்கள் லோக்கல்ன்னுதான் குறிப்பிடுவோம். மும்பை ரெயில்வேக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.  இந்தியாவின் முதல் , மற்றும் ஆசியாவின் பழமையான ரயில்வே என்ற சிறப்பு இதற்குண்டு. இந்தியாவுல முதல் ரெயில் மும்பைக்கும், ஜஸ்ட் முப்பத்து நாலே கிலோமீட்டர்ல இருக்கிற தானேக்கும் இடையில ஓடியிருக்கு.

மும்பை ரெயில்வே ரெண்டுபிரிவுகளா இயங்குது. ஒண்ணு வெஸ்டர்ன் ரெயில்வே(WR), இன்னொண்ணு, சென்ட்ரல் ரெயில்வே(CR).இதை நாங்க வெஸ்டர்ன்,மற்றும் சென்ட்ரல் லைன்ன்னு சொல்லுவோம். மொத்தம் 183 லோக்கல் ரயில்கள் 2624 ட்ரிப்கள் அடிக்குது. ஆனாலும், மும்பையின் மக்கள்தொகைக்கு முன்னே இது யானைவாயில் சோளப்பொறிதான். அதனால, இப்போ புதுசா மெட்ரோ மற்றும் மோனோ ரயில்கள் ஓடவிடணும்ன்னு ஏற்பாடுகளெல்லாம் நடந்துக்கிட்டிருக்கு. இங்கே பஸ்களை மாதிரியே மெதுஓட்டம் மற்றும் விரைவு ரயில்கள்ன்னு ரெண்டுவகையா பிரிச்சிருக்காங்க. இதில் மெது ஓட்ட ரயில்கள் எல்லா ஸ்டேஷன்களிலும், விரைவு ரயில்கள் குறிப்பிட்ட ஸ்டேஷன்களிலும் நிற்கும். ஒவ்வொண்ணுக்கும் தனித்தனி தடங்களும் உண்டு.

இங்கே மும்பையில் C.S.T., மற்றும் சர்ச்கேட் என்று ரெண்டு முக்கியமான டெர்மினஸ்கள் இருக்குது. மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸைத்தான் நிறைய மக்களுக்கு, குறிப்பா தென்னிந்தியர்களுக்கு தெரியும். ஒரு காலத்துல V.T.ன்னு சுருக்கமா அழைக்கப்பட்ட விக்டோரியா டெர்மினஸ்தான் பலத்த போராட்டத்துக்கப்புறம் C.S.T.(சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்)  ஆகியிருக்கு. முக்கியமான ரயில்களெல்லாம் இங்கிருந்துதான் புறப்படும். ஆனா, இப்பல்லாம் விரைவு ரயில்கள் ரெண்டு டெர்மினஸ்களிலும் இருந்து புறப்படுது.

இதுல, வெஸ்டர்ன் லைன்ல, சர்ச்கேட்ல இருந்து தஹானுரோட் வரைக்கும் போகிறபாதையில்,

முதலான ஸ்டேஷன்கள் வருகின்றன. தடித்த எழுத்துக்கள்ல குறிப்பிட்டிருக்கும் இடங்களில் மட்டுமே விரைவு ரயில்கள் நிற்கும். 

C.S.T.லேர்ந்து ஆரம்பிக்கும் செண்ட்ரல் லைன் ரொம்ப முக்கியமானது. கூடுதலான கூட்டம் இந்த லைன்லதான் அள்ளும். இதுல மூணு லைன்கள் இருக்குது. ஒண்ணு, C.S.T.லேர்ந்து ஆரம்பிச்சு கல்யாண் வரைக்கும் போகுது. அதுக்கப்புறம் அது ரெண்டா பிரிஞ்சு ஒண்ணு கஸாராவுக்கும் இன்னொண்ணு கோப்போலி-க்கும் போகுது. இந்த லைன்லதான் குர்லா, தாதர், தானா, கல்யாண்ன்னு முக்கியமான நமக்கெல்லாம் ரொம்ப பரிச்சயப்பட்ட நிலையங்கள் வருது. இதில் குர்லா ஸ்டேஷனில், ட்ரெயினிலிருந்து ஏறுவதும் இறங்குவதும் ஒரு சாகசப்பயணமாகவே இருக்கும்.. கொஞ்சநாள் பழகியாச்சுன்னா அந்த பரபரப்பு உங்களுக்கும் தொத்திக்கும் :-))

இந்த லைன்ல , Chhatrapati Shivaji Terminus , Masjid Bunder, Sandhurst Road, Byculla, Chinchpokli, CurreyRoad,  Parel, Dadar, Matunga, Sion, Kurla, Vidyavihar, Ghatkopar, VikhroliKanjurmarg, Bhandup, Nahur, Mulund, Thane, Kalwa, Mumbra, Diwa, Kopar,  Dombivli, Thakurli, Kalyanபோன்ற நிறுத்தங்கள் வரும். இதில் டிட்வாலாவுல இருக்கிற புள்ளையார் கோயிலும், 'மாத்தேரன்' என்ற மலைவாசஸ்தலத்துக்கு பக்கத்துல இருக்கிற 'நேரல்' என்ற நிலையங்களும் முக்கியமானவை. மாத்தேரனுக்கு டாய் ட்ரெயினில் போக விருப்பமிருந்தா நேரல்ல இருந்துதான் கிளம்பணும்.

சென்ட்ரல் லைனில் வரும் நிறுத்தங்கள்:


துணை லைன் 1:Kalyan, Shahad, Ambivli, Titwala, Khadavli, Vasind, Asangaon, Atgaon, Khardi, Kasara

துணை லைன் 2: Vasai Road, Juchandra , KamanRoad, Kharbav, Bhiwandi, Kopar, Dativali, Nilaje, Taloja, Navade Road, Kalamboli, Panvel.

இதில் இரண்டாம் துணை லைன் கிட்டத்தட்ட தொழிற்பேட்டைகளை ஒட்டியே போகுது. 

சென்ட்ரல் லைனில் ஒரு பகுதிதான் ஹார்பர் லைன். இதுவும் C.S.T.லேர்ந்துதான் புறப்படுது. இது மும்பையை பன்வெலுடன் இணைக்கிறது. முக்கியமா நவிமும்பை மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதிலும் மூணு துணைலைன்கள் இருக்குது.

முக்கியமான C.S.T.லேர்ந்து பன்வெல் வரைக்குமான லைன்ல, Chhatrapati Shivaji Terminus, Masjid Bunder, Sandhurst Road, Dockyard Road, Reay Road, Cotton Green, Sewri, Wadala, Guru Tegh Bahadur Nagar, Chunabhatti, Kurla, Tilak Nagar, Chembur, Govandi, Mankhurd, Vashi, Sanpada, Juinagar, Nerul, Seawoods-Darave, CBD Belapur, Kharghar, Mansarovar, Khandeshwar,Panvel

வாஷியிலிருந்து தானா வரைக்குமான லைன்ல, Vashi, Sanpada, Turbhe, Kopar Khairane, Ghansoli, Rabale, Airoli, Thane முதலான நிறுத்தங்களும்,

பன்வெல்லில் இருந்து தானா வரைக்குமான லைன்ல, Panvel, Khandeshwar, Mansarovar, Kharghar, CBD Belapur, Seawoods-Darave, Nerul, Juinagar, Turbhe, Kopar Khairane, Ghansoli, Rabale, Airoli, Thane முதலான நிறுத்தங்களும் 

வடாலாவிலிருந்து அந்தேரி வரைக்குமான லைன்ல Wadala, King's Circle, Mahim, Bandra, Khar Road, Santacruz, Vile Parle, Andheri .. முதலான நிறுத்தங்களும் வருது.


கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லாப்பாகங்களிலேர்ந்தும் வேலைதேடி தினமும் மக்கள் வந்து குவிஞ்சுக்கிட்டே இருப்பதால, எவ்ளோ ரெயில்கள் ஓடினாலும் பத்தமாட்டேங்குது. 1700பேர் இருக்கவேண்டிய ஒரு ரயில்ல கிட்டத்தட்ட 4500 பேர் பயணம் செய்யறதா சொல்றாங்க. இட நெரிசல்ல...  ஜன்னல்ல, அப்புறம் கதவுலயெல்லாம் தொங்கிக்கிட்டும், சிலசமயங்களில் மேல்கூரையிலும் பயணம் செய்யறதெல்லாம் சர்வசாதாரணம். இதனாலயே விபத்துக்களும் நடக்குது. வெளிநாட்டுக்காரங்க யாராச்சும் ரயில்ல பயணம் செய்யணும்ன்னு ஆசைப்பட்டா, கூட்டமில்லாத ஞாயிற்றுக்கிழமைதான் சவுகரியப்படும். அப்படியும் உக்கார இடமிருக்காது.

 நிறைய சிறுவியாபாரிகளுக்கு மும்பை ரயில்கள்தான் இலவச வியாபாரஸ்தலம்.. வெளியில் ப்ளாட்பார்மில்கூட கிடைக்காத எக்கச்சக்க சிறுசிறு பொருட்களெல்லாம் இங்கே மலிவுவிலையில் கிடைக்கும். காய்கறிகள், பழங்கள், பெண்களுக்கான ஃபேன்ஸி பொருட்கள் எல்லாம் அழகா பாக்கெட் போட்டு வெச்சிருப்பாங்க. இந்த வியாபாரத்தை நம்பியே எக்கச்சக்க குடும்பங்கள் பிழைக்குது.

ட்ரெயின் நிக்கிற சொற்ப நேரத்துல ஏறுறதையும், இறங்கறதையும்... மும்பைக்கு புதுசா வந்தவங்க மொதமொத பார்க்கிறப்ப மலைச்சுப்போயிடுவாங்க. பழக்கப்பட்டவங்களுக்கே சிலசமயம் கஷ்டமாயிடும். இப்படித்தான் கொஞ்ச வருஷங்களுக்கு முன்னே, ஒருதடவை, ரங்க்ஸும் நானும் பிள்ளைகளை கூட்டிக்கிட்டு தானாவுக்கு கிளம்பினோம். ரங்க்ஸும் பையரும் முதல்வகுப்பிலும்,  நானும் பெண்ணும் பெண்கள் பெட்டியிலும் இருந்தோம்.

தானாவில் ரங்க்ஸும் பையரும் இறங்கிட்டாங்க. நானும் பெண்ணும் இறங்கப்போகும்போது ஒரு கூட்டம் அப்படியே எங்களை உள்ளயே தள்ளிட்டுப்போயிடுச்சு. இறங்கறதென்ன!!.. அந்தக்கூட்டத்துல எங்களால அசையக்கூடமுடியலை. பொண்ணு பயத்துல கத்த ஆரம்பிச்சுட்டா.. அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு, தானாவுக்கு அடுத்து இருக்கும் முலுண்டில் இறங்கி, எதிர்ப்புறம் வந்த ட்ரெயினில் தானாவுக்கு வந்து சேர்ந்தோம். ரொம்ப நாளைக்கு அந்தபயம் இருந்துக்கிட்டேருந்தது :-))

இங்கே ட்ரெயினால நடக்குற விபத்துக்களைப்பத்தி சொல்லியே ஆகணும், ரயில் வருதுன்னு தெரிஞ்சாலும், தண்டவாளத்தை ஓடிக்கடக்கறதும், ஒரு ப்ளாட்ஃபார்மிலிருந்து இன்னொரு ப்ளாட்ஃபார்முக்கு போகணும்ன்னா, மேம்பாலத்தை உபயோகப்படுத்தாம, அப்படியே இறங்கி ஓடறதும், முக்கியமா .. சாலைகளில் கேட்டை அப்படியே குனிஞ்சு கடக்கறதும் கூடுதல். பத்தாததுக்கு தொங்கிட்டுப்போறவங்கள்ல, தள்ளுமுள்ளு காரணமா எத்தனையோ பேரு ட்ராக்ல கீழே விழுறதும் சகஜம். எவ்வளவுதான் எச்சரிக்கை செஞ்சாலும் பொறுப்பில்லாம நடந்துக்கிட்டு, 'இட் ஈஸ் த ஸ்பிரிட் ஆஃப் மும்பை'ன்னு சொல்றவங்களும் இருக்காங்க. என்ன நடந்தாலும், மும்பை ரயில் அதுபாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கு. நிற்காமல்.....51 comments:

கவிதை காதலன் said...

வாவ்.. எவ்வளவு விரிவான விஷங்களை பகிர்ந்திருக்கிறீர்கள்.. அருமை

வெங்கட் நாகராஜ் said...

புதிதாய் மும்பை வருபவர்களுக்கு உபயோகமுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி. அங்கே மின்சார வண்டியில் பயணம் செய்பவர்களைப் பார்த்தால் என்றுமே அதிசயம்!! :)

புதுகைத் தென்றல் said...

ஹா, மும்பை ட்ரையின். அதையெலலம் ஞாபகப்படுத்திவிட்டுடீங்களேப்பா. எம்புட்டு கஷ்டம் இருந்தாலும் ஓடும் ட்ரையினில் விண்டோ சீட் பிடிச்சு, அதையும் தோழிகளுக்கு கொடுத்திட்டு அவங்க மடியில உக்காந்து போனது, தட்டி பாட்டு பாடிகிட்டு போனதுன்னு என்னோட பதிவுகளில் நிறைய்ய கொசுவத்தி. ஐ லவ் மும்பை ட்ரையின் ட்ராவல்.

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் மும்பாய் வந்த போது இரவில் ட்ரையின் இருக்கும் பக்கமே தலை வைக்கலை.மதியம் மட்டும் தான் ட்ரையினில் எங்காவது போவோம். இரவில் டாக்ஸி தான். சென்னை ட்ரையின் எல்லாம் ஜுஜிபி.

புதுகைத் தென்றல் said...

இந்தக்கூட்டத்தால அயித்தானுக்கு மும்பைன்னாலே பிடிக்காது. நாங்க இரண்டு பேரும் மாறுபடும் விஷயம் இதுவாத்தான் இருக்கும்.

பாரத்... பாரதி... said...

ரயிலின் கூட்ட நெரிசல், அங்கு நடக்கும் வியாபாரம், விபத்துக்கள் என அனைத்து விஷயங்களையும் தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.சென்னை ரயில்களுக்கு விரைவில் இந்த நிலைமை வந்து விடுமோ?
மும்பை ரயில்கள் பற்றிய விவரங்கள் பயனுள்ளவை.

ராமலக்ஷ்மி said...

மூச்சு முட்டுது படிச்சு முடிக்கையில்:)!
இரண்டு வருடம் இருந்திருக்கிறேனே. தானாவிலிருந்து வி டி வரையிலான ஸ்டேஷன்கள் எல்லாம் வரிசையா நினைவு படுத்தியதோடு அந்தக் ட்ரெயினுக்குள்ளே ஏத்தியும் விட்டுட்டீங்க:))!

பலருக்கும் உபயோகமாகும் வகையில் நன்றாக விரிவாக எழுதியிருக்கிறீர்கள் சாரல். பாராட்டுக்கள்.

asiya omar said...

அம்மாடி எவ்வளவு விபரமுள்ள பகிர்வு,சென்ட்ரல் ரயில்வேயில் வேலை பார்க்கிறீங்களா?நிறைய தெரிஞ்சிகிட்டேன்.

சசிகுமார் said...

புள்ளி விவரங்கள் மிக அருமை மிகவும் ரசிக்கும் விதமாக பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

சே.குமார் said...

விரிவாக விஷங்களை பகிர்ந்திருக்கிறீர்கள்.

நிறைய தெரிஞ்சிகிட்டேன்.

எல் கே said...

ரொம்பத் தெளிவா சொல்லி இருக்கேங்க. மும்பைக்கு புதுசா வரவங்களுக்கு உபயோகமா இருக்கும்

பிரபு எம் said...

வாங்க தெய்வமே வணக்கம்...
கொஞ்ச நாளுக்கு முன்னாடியே இந்தப் பதிவைப் போட்டிருக்கக் கூடாதா?!!
மும்பைக்கு வந்த இரண்டாவது நாள்......அம்பர்நாத்ல இருந்து விக்ரோலி போறதுக்கு ஃபாஸ்ட் ட்ரெயின்ல காட்கோபர் போய் அங்கேயிருந்து எதிர்திசையில் ஒரு ஸ்டேஷன் ட்ராவல் பண்ணனும்.... காட்கோபர்ல இறங்காம குர்லா போயிட்டேன்.... அங்கேயிருந்து லைன் மாறி ட்ரெயின் ஏறி... அது மழை சீசன் வேற.... :-((( அஃபீஸுக்கு அப்பவே லீவ் சொல்லிட்டு ட்ரெயின்ல தூங்கி கண்ணு முழிச்சப்ப "என்னது? மதுரை வந்திடுச்சா??"ன்னு கேட்டேன்... இல்ல மட்டுங்கா இன்னும் வரலன்னு ஒருத்தன் சொன்னான்..... அவ்வ்வ்வ்வ்வ்..... :))

போய் குர்லால ஃப்ரெண்ட் ஒருத்தன் வீட்டுப்பக்கம் ஒரு ரூம் பிடிச்சு செகண்ட் ஹாண்ட் பைக் வாங்கி செட்டில் ஆகிட்டேன்... இன்னைக்கு வரைக்கும் ட்ரெயின்ல ஏறல!!! :-)))

கோவை2தில்லி said...

உபயோகமான பகிர்வு. நல்லா விரிவா சொல்லியிருக்கீங்க. நன்றி.

THOPPITHOPPI said...

மும்பை ரயில் டூர், உங்கள் பதிவு.

Chitra said...

Thank you for the info.

Lakshmi said...

மும்பைலேந்தே அவுடாஃப்மும்பைன்னு சொல்வாங்க. நீங்களும் எங்கபக்கமே வல்லியே. கல்யாண் தாண்டியும் விட்டல்வாடி, உல்லாஸ்னகர்(இண்டியாவின் யு, எஸ், ஏ),அம்பர்னாத் இதெல்லாம் உங்க கவனத்தில் வரவே இல்லியா?

அம்பிகா said...

எவ்வளவு புள்ளீ விவரங்கள்...
அருமை மிக உபயோகமான பகிர்வு.

நாஞ்சில் பிரதாப் said...

அப்படியே ஒரு ஏழெட்டு வரும் பின்னாடி போய்ட்டு வந்தேன்...முதன்முதலில் ஊரில் இருந்து வந்து இறங்கியது தாதரில். அங்கிருநது நெருல் போவதற்கு லோக்கல் ரயிலை பயன்படுத்தினேன். அந்த திகில் அனுபவம் இப்பவும் இருக்கு. அப்புறம் பழகிடுச்சு...:)

பழகிட்டா அது ஒரு ஜாலி அனுபவம்...:))

அமைதிச்சாரல் said...

வாங்க கவிதை காதலன்,

வருகைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

மொதல்ல அதிசயமாத்தான் இருக்கும். பழகிட்டா நம்மை அதிசயமா மத்தவங்க பாப்பாங்க :-)))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

மும்பையின் சிறப்பே கூட்டம்தானே :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க அமுதா,

சாயந்திரம் அஞ்சுமணியிலிருந்து peak hours ஆரம்பிச்சுடும். எள்ளு போட்டா எண்ணெய்தான் கீழே விழும். அந்தமாதிரி நேரத்தில் மும்பைக்கு புதியவர்கள் பயணம் செய்யாமலிருப்பது நல்லது. த்ரில் வேணுங்கிறவங்க தாராளமா பயணம் செய்யலாம்.

சென்னை லோக்கல்ல கிண்டி டூ பார்க்ஸ்டேஷன் ரெண்டுதடவை பயணம் செஞ்சேன்.. நீங்க சொன்னமாதிரி ஜூஜூபிதான் :-)))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க பாரத் பாரதி,

மும்பை ரயில்களையும், சென்னையின் பல்லவனையும் அடிச்சிக்கவே முடியாது. ரெண்டும் ஜாம்பவான்களாக்கும் :-)))))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

கூட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்குதில்லையா அதான் :-)))

ட்ரெயின் பயணம் எஞ்சாய் பண்ணீங்களா :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ஆசியா,

இத்தனை வருஷமா ரங்க்ஸ் பயணம் செய்யறதை பாத்துட்டு இருக்கிறேனே,.. அதுல நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு சில ஸ்டாப்பிங்குகளை கூகிளாண்டவர் சொல்லிக்கொடுத்தார்..

அமைதிச்சாரல் said...

வாங்க சசிகுமார்,

யாருக்காவது பயன்பட்டா எனக்கும் சந்தோஷமே :-))))

அமைதிச்சாரல் said...

வாங்க குமார்,

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

இப்பல்லாம் ஸ்டேஷன்களிலும் ரூட்மேப் கிடைக்கத்தான் செய்யுது. ரயிலின் நேர அட்டவணை முதற்கொண்டு எல்லாம் பக்காவா இருக்கும். ஆனாலும், புதுசா வரப்ப இதெல்லாம் தெரியறது இல்லைன்னுதான் சொல்லணும். அவங்களுக்கு ஒரு வழிகாட்டியா இருக்கட்டுமே :-))

அமைதிச்சாரல் said...

வாங்க பிரபு,

அடடா!!.. இவ்ளோ கஷ்டப்பட்டுட்டீங்களா :-))). ரயில்ல வாசலுக்கு மேலயே ரூட்படம் போட்டுருக்குமே.. மும்பைக்கு புதுசுன்றதுனால கவனிச்சுருக்க மாட்டீங்க..

ஃபாஸ்டைப்பிடிச்சதுக்கு பதிலா ஸ்லோவுல போயிருந்தீங்கன்னா நேரடியா விக்ரோலியிலேயே இறங்கியிருக்கலாமே. என் சினேகிதியின் பிறந்தவீடு விக்ரோலியில்தான் இருக்கு. கல்யாணில் இருந்து,ஸ்லோவில்தான் கிளம்புவாள்.

மும்பை லோக்கல்ல பயணம் செய்யற பொன்னான வாய்ப்பை மிஸ்பண்ணாதீங்க. ஜாலியானதொரு அனுபவம் அது :-))

அமைதிச்சாரல் said...

வாங்க கோவை2தில்லி,

வருகைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தொப்பி தொப்பி,

டூர் போரடிக்கலைதானே :-))

அமைதிச்சாரல் said...

வாங்க சித்ரா,

ரொம்ப நன்றிப்பா..

அமைதிச்சாரல் said...

வாங்க லஷ்மிம்மா,

முலுண்ட் தாண்டிட்டாலே அவுட்டாஃப் மும்பைதான். கல்யாணுக்கப்புறம் வர்ற ஸ்டேஷன்களை லிஸ்டில் கொடுத்திருக்கேனே..

உல்ஹாஸ்நகர், கல்யாணெல்லாம் மறக்கக்கூடியதா!!. நான் முதன்முதலில் காலடி எடுத்துவைத்த புண்ணியபூமியல்லவா கல்யாண் :-))

நசரேயன் said...

அச்சா

ஆமினா said...

எவ்வளவு விஷயங்கள்??

அனைத்தும் தெரிந்துக்கொண்டேன்

ராம்ஜி_யாஹூ said...

மேற்கு ரயில்வே ரயில்களில் உள்ள ஒரு பயனுள்ள விஷயம்- வரப் போகும் ரயில் நிலையம் பற்றி ஒலி/ஒளி தகவல் அளிப்பது

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடுக்கிட்டீங்க விவரங்களை..:)
பயனாகும் பலருக்கும்..


கூட்டமே இல்லாத ஒரு நாளில் நானும் என் பையனும் மெட்ரோவின் ஜன்னலில் ஊரின் அழகை ரசிச்சிக்கிட்டே அடுத்த ரெண்டு ஸ்டாப் போய்ட்டம்..பின்ன இறங்கி எதிர் ட்ரையின் ல வந்தோம்.. காலி ட்ரைனா இருந்தது. இப்பல்லாம் மெட்ரோ பிதுங்கி வழிஞ்சு மகளிர் பெட்டியை நோக்கி ஓடவைக்குது..

raji said...

அடேங்கப்பா!எவ்வளவு தகவல்கள்,புள்ளி விவரங்கள்!!!(கைடா வேலை பாக்குறீங்களோ? ஹி ஹி சும்மா டமாஷு)

உபயோகமான பதிவு அமைதிச்சாரல்


நீங்கள் ஒரு முறை என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தினீர்கள்.
அப்பொழுது வலைச்சரத்தைப் பற்றி தெரியாததாலும்,கணிணி பழுது காரணமாகவும் நன்றி தெரிவிக்க
இயலவில்லை.அதை இப்பொழுது தெரிவிக்கின்றேன்,மிக்க நன்றி

ஸாதிகா said...

பதிவையும்,வீடியோ கிளிபிங்கையும் பார்த்தால் உங்க ஊர் டிரைனில் பிரயாணம் செய்ய்யும் ஆசையே போய் விட்டதே!விவரமான பகிர்வு சாரல்.

Gopi Ramamoorthy said...

இருங்க, நான் ஒரு மும்பைக் கொசுவத்தி பதிவு போடுகிறேன்:)

அமைதிச்சாரல் said...

நமஸ்தே நசர்ஜி,

ஷுக்ரியா.. தன்யவாத் :-)))

அமைதிச்சாரல் said...

வாங்க ஆமினா,

நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க ராம்ஜி,

சென்ட்ரல்லயும், ஹார்பர்லைன்லயும் இன்னும் நிறைய புதுவசதிகள்,தானியங்கி கதவுகளெல்லாம் அறிமுகப்படுத்தப்போறாங்களாம். அப்ப இதையும் செய்வாங்களான்னு பாக்கணும்

அமைதிச்சாரல் said...

வாங்க முத்துலெட்சுமி,

எங்கூர்ல மகளிர்க்குன்னு தனியா ரயில்விட்டப்புறமும் கூட்டம் அள்ளுதுப்பா.. உங்கூரும் கூட்டத்துக்கு பேர்போனதாச்சே :-))

காலி ரயிலா இருந்தாலும், வாசல்ல நின்னுக்கிட்டு பயணம் செய்ற சுகமே தனி :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜி,

கைடெல்லாம் இல்லீங்க.. இத்தனை வருஷமா குப்பை கொட்டின அனுபவம்தான் :-)))

அமைதிச்சாரல் said...

வாங்க ஸாதிகா,

அடடா!!.. என்ன இப்படி சொல்லிட்டீங்க. ஒருக்கா பயணம் செஞ்சு பாருங்க.. உண்மையிலேயே ஜாலியா இருக்கும் :-)))

அமைதிச்சாரல் said...

வாங்க கோபி,

ஆஹா!!.. போடுங்க.. படிக்க காத்திருக்கோம். மும்பையை விட்டு வெளியே போனாலும், அந்த நினைவுகளை ஆயுசுக்கும் மறக்கமுடியாது :-)

வல்லிசிம்ஹன் said...

மழைக்காலத்தில் ரயிலில் கூலாகப் போய் வந்திருக்கிறேன்:)
ஆஃபீஸ் நேரம் இல்லாத கொஞ்சம் கூட்டம் குறைந்த நேரத்தில் போயிருக்கேன்.அது 14 வருடம் முன்னாடி. எத்தனையோமாறுதல்கள் வந்திருக்கும் இப்ப. வெகு நல்ல் பதிவு சாரல்.

ரிஷபன் said...

மும்பைல என் முதல் ரயில் அனுபவமே திகில்.. இறங்கப் போனவன் எசகுபிசகா கைப்பையோட (உள்ளே சர்டிபிகேட்ஸ்) குறுக்குக் கம்பிகிட்ட மாட்டிகிட்டேன்.. ஏற்ர இறங்குற ஜனங்க என்னை வச்சு ‘உள்ளே, வெளியே’ விளையாட்டு ஆடி கடைசி நிமிஷம் குதிச்சேன்.. எனக்கு ஹிந்தி தெரியாத கொடுமை வேற.. உங்க பதிவுல பிரமிக்க வைக்கிற தகவல்கள்..

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

காலைல 11 மணிலேர்ந்து சாயந்திரம் 4மணிவரைக்கும்தான் கொஞ்சம் காத்தாடும்.. மத்தபடி மும்பை இன்னும் மாறவேயில்லை. இங்கேயுள்ள கூட்டம் நீங்க அறியாததா :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ரிஷபன்,

வெற்றிகரமா குதிச்சீங்க இல்லே.. அப்பவே நீங்க மும்பைக்கு பழக்கப்பட்டுட்டீங்கன்னு அர்த்தம் :-))

LinkWithin

Related Posts with Thumbnails