Thursday, 6 January 2011

மகளிர் அணி..

அந்த ஊரின் லேடீஸ் க்ளப் தன்னுடைய ஐந்தாவது ஆண்டுவிழாவை மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டிருந்தது. ஆகையால், அந்த புகழ்பெற்ற மண்டபமொன்றில் விழா ஏற்பாடாகியிருந்தது. பந்தல்களும், பந்தல்களில் தொங்கும் ஒளிச்சரங்களும் கண்ணைப்பறித்தன. அனைவரும் மண்டபத்தின் உள்ளும் வாசலிலுமாக கூடியிருந்து சிறப்புவிருந்தினருக்காக காத்திருந்தார்கள். அந்த ஊரில் சிறிய அளவில் பத்திரிகை நடத்திவரும் ஒருவரை விருந்தினராக அழைத்திருந்தார்கள். காரில் வந்திறங்கிய விருந்தினருக்கு மாலைமரியாதைகளை அளித்தபின், உள்ளே அழைத்துச்சென்றார்கள் விழாக்குழுவினர்.

பேச்சும் பாராட்டுக்களும், பொன்னாடைகளுமாக விழா நிறைவுற்றது. விழாக்குழுவினரில் ஒருவர் சிறப்புவிருந்தினரிடம் ஏற்கனவே விழாவுக்குப்பின் ஒரு கலந்துரையாடல் இருப்பதாகவும், அதில் அவர் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென்றும் கூறி அனுமதி வாங்கியிருந்தார்.

அனைவரும் ஓய்வாக நாற்காலிகளை எடுத்துப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அதில் ஒரு பெண் சிறப்புவிருந்தினரை வந்ததிலிருந்தே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். கடைசியில் ஆர்வம் தாங்காமல் கேட்டுவிட்டார்.

"மேடம்... நீங்க ரொம்ப ஸ்லிம்மா இருக்கீங்களே.. தவறாம ஜிம்முக்கெல்லாம் போவீங்களா!!..."

"இல்லைம்மா,.. கோவை2தில்லி சொல்லியிருக்கிற தோய்ப்பு நடனத்தை தினமும் மூணுதடவை செய்வேன், அவ்ளோதான். அப்புறம், மாதேவி சொல்லியிருக்கிறமாதிரி அகத்திப்பூவை அடிக்கடி சமைச்சு சாப்பிடுவேன். இப்படி , எளிமையாத்தான் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துட்டு வரேன். மத்தபடி பெரிய காரணம் எதுவுமில்ல.. "

மேலும் படிக்க வலைச்சரத்துக்கு வாங்க :-))))


4 comments:

ராமலக்ஷ்மி said...

நல்லா நடக்க வைக்கறீங்க. சரி உடற்பயிற்சியுமாச்சு:)!

குறையொன்றுமில்லை. said...

இப்பத்தான் வலைச்சரத்தில் இந்த பதிவைப்பார்த்தேன். இங்கயும் அதே.
என்னபின்னூட்டம் போடுவதுன்னு யோசிச்சிகிட்டே இருக்கேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

அதிகமில்லை. ச்சும்மா, ஒரு க்ளிக் செய்யும் தூரம்தான் :-)))))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

இது டேக் டைவர்ஷன்ம்மா :-)))

நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails