Monday, 10 January 2011

கசப்பும் ஒரு ருசிதான்..

ரங்க்ஸுக்கு சின்ன வயசுலேர்ந்தே ஒரு விபரீத ஆசை இருந்ததுண்டு. அதாவது சொந்தத்தொழில் செய்யணுமாம். பசங்க சின்னவங்களா இருக்கச்சே ராச்சாப்பாடு முடிஞ்சப்புறம் குடும்பம் மொத்தமும் உக்காந்து பேசிக்கிட்டு இருப்போம். அப்படி ஒரு நேரத்துலதான் குழந்தைகள் கிட்ட,  தன்னோட குழந்தைப்பருவத்தையும், அந்தச்சமயத்துல இருந்த 'தொழிலதிபர்' லட்சியத்தையும் பகிர்ந்துக்கிட்டார்.

பெருசா ஒண்ணுமில்லை.. ஒரு ஆடு வாங்கி வளக்கணுமாம். அது கொஞ்ச நாள்ல வளந்தப்புறம்,  குட்டிபோட்டு எண்ணிக்கை கூடுமாம். இப்படியே பெருகிப்பெருகி ஒரு பண்ணைக்கே சொந்தக்காரராயிடலாம்ன்னு நினைச்சாராம். அப்புறம் கொஞ்ச நாளுக்கப்புறம் ஆட்டுப்பண்ணையில் இருந்த விருப்பம் போய், அது கோழிப்பண்ணையா மாறிச்சு. ஆடு போயி கோழி வந்தது டும்..டும்..டும்.. நாலஞ்சு முட்டை குஞ்சுபொரிச்சு, எப்படி அது ஒரு பெரிய கோழிப்பண்ணையா மாறுதுங்கிற கதையை ரங்க்ஸ் சொல்லச்சொல்ல நாங்கல்லாம், வாயில கொசுபோறதுகூட தெரியாம கேட்டுக்கிட்டுருந்தோம்.

அப்பதான், "அப்பா,.. இதேமாதிரி ஒரு கதை எங்களுக்கு மாரல் ஸ்டோரி புக்குல வருதுப்பா"ன்னாங்க பசங்க. அந்தக்கதை எப்படீன்னா,

"ஒரு ஊர்ல ஒரு அழகான பொண்ணு இருந்தா.. பொண்ணுன்னாலே அழகுதானேன்னு எங்களுக்கு தெரியாதான்னு ஆரும் கேக்கப்டாது :-)). அவ வீட்டுல சுமாரான எண்ணிக்கையில கோழிகள் இருந்திச்சாம். அதுங்க இடுற முட்டைகளை இவ சந்தைக்கு எடுத்துட்டுப்போயி வித்துட்டு வருவா. அதுலதான் பொழைப்பே ஓடுது.

ஒரு நாள் வழக்கம்போல சந்தைக்கு போயிட்டிருக்கா. வீட்டுக்கும் சந்தைக்குமிடையில சுமாரான தொலைவு இருக்கும். எப்பவும்போல, தனக்குள்ளயே பேசிக்கிட்டு நடந்துக்கிட்டிருந்தா. 'இன்னிக்கு எல்லாத்தையும் வித்துடாம, கொஞ்சத்தை வீட்டுக்கு கொண்டுபோகணும். அதை அடைகாக்கவெச்சா குஞ்சு பொரிக்கும். அந்தக்குஞ்சுகளை தீவனமெல்லாம் போட்டு நல்லா வளர்ப்பேன். அதெல்லாம் பெருசா வளந்தப்புறம் முட்டை போடும். அதையும் அடைவெச்சா இன்னும் நிறைய கோழிக்குஞ்சுகள் வரும்.

இப்படியேபோனா, நான் ஒரு கோழிப்பண்ணைக்கு சொந்தக்காரியாகிடுவேன். அப்புறம் அதுல கொஞ்சம் கோழிகளை வித்து காஸ்ட்லி ஆடைகளெல்லாம் வாங்குவேன்.  அதப்போட்டுக்கிட்டு நான் தெருவுல நடந்து போகையில, இந்த ஊரு பெரியபணக்காரங்களெல்லாம் கண்டிப்பா என்னைப்பார்ப்பாங்க. என்னோட அழகுக்கு அவங்க திரும்பிப்பார்க்காம இருந்தாதான் ஆச்சரியப்படணும். அப்புறம் எங்கவீட்டுக்கு வந்து என்னை கல்யாணம் செஞ்சுக்கணும்ன்னு, என்னோட பெத்தவங்க கிட்ட நிச்சயமா பொண்ணு கேப்பாங்க. ஆனா, நா.. ஒத்துக்க மாட்டேன். இந்த ஊர்ல எனக்கு சரியான ஜோடி யாருமே கிடையாது. அதனால, என்னோட சம்மதத்த கேட்டா, 'ம்ஹூம்.. முடியாது'ன்னு தலையாட்டிடுவேன்'ன்னு தனக்குத்தானே பேசிக்கிட்டு வந்தவ உணர்ச்சி வசப்பட்டு தலையை இடவலமா வேகமா ஆட்டுனா.

அவ்வளவுதான், தலையில் வெச்சிருந்த கூடை கீழே விழுந்து, முட்டைகளெல்லாம் உடைஞ்சது. முட்டைகள் மட்டுமா உடைஞ்சது??.. கோழிப்பண்ணை, விலையுயர்ந்த ஆடைகள், பணக்கார இடத்து சம்பந்தம்ன்னு எல்லாக்கனவுகளும் சேர்ந்து உடைஞ்சது..."அப்படீன்னு கதையை முடிச்சாங்க. இதைச்சொல்லும்போதெல்லாம் பசங்களுக்கு சிரிப்புவரும். ரங்க்சும் சிரிச்சு சமாளிச்சுக்குவாரு. அப்புறம் காலப்போக்கில் நாளாக ஆக பிஸினஸ் கனவும் கொஞ்சம்கொஞ்சமா மறைஞ்சே போச்சு... வேறவழி!!.. ரிஸ்க் எடுத்து கையைச்சுட்டுக்க நான் தயாரா இல்லியே. அதுவுமில்லாம, பிஸினஸ்ன்னா ஒரு அர்ப்பணிப்போட இறங்கினாத்தான் உருப்படும். நாங்களோ, லீவு கிடைச்சா எங்கியாவது ஹாலிடே போலாமான்னு யோசிக்கிறரகம். நமக்குஒத்துவராதுன்னு தெரிஞ்சுபோச்சு. அதனால அப்புறம் அதப்பத்தி யோசிக்கிறதையே விட்டுட்டோம்.

இப்ப, இந்தக்கதை எதுக்குன்னு கேக்கறீங்களா??.. சொல்றேன். என்னோட பால்கனித்தோட்டத்துல பேர்தெரியாத செடியொண்ணு வளர்ந்துச்சு. இலைகளின் வடிவம் ரொம்ப அழகா இருந்ததால, சரி.. மணிப்ளாண்ட் மாதிரி இதுவும் இருந்துட்டுப்போட்டும்ன்னு விட்டுட்டேன். ஒரு நாள் அதுல ஒரு பூ.. என்னப்பூ??... தர்பூசணிப்பூ!!!!!. ஹைய்யோ!!!... கூகுளாத்தாவும் அதுதான் உறுதி செய்யவும், எனக்கு தலைகால் புரியலை. வேணும்வேணும்ன்னு விதை போட்டு வளத்தப்பல்லாம் வராம, இப்ப தானாவே வந்து நிக்குதே. இதைத்தான் கெடைக்கிறது கெடைக்காம போகாதுன்னு சொல்லுவாங்களோ??..


அம்புட்டுத்தான், இந்தச்செடி, தப்பு.. தப்பு.. இந்தக்கொடியில ஒரு தர்பூஸ் வந்தாலே சுமார் ஐம்பதுரூபா லாபம். நெறைய பூக்கள் இருக்கும்போலிருக்கே.. எல்லாமும் காய்ச்சா!!!!.. அடிச்சது யோகம். சீசன் இல்லாட்டாலும் தர்பூஸ் கிடைக்குமே :-))). இந்த குஷியில செடிக்கு தெனமும் கூடுதல் பராமரிப்பென்ன.. பிஞ்சை கண்காணிக்கிறேன் பேர்வழின்னு, அதுமேல எறும்பு ஊர்ந்துபோனாக்கூட.. அதை தூக்கிப்போடறதென்னன்னு ஒரே அடாவடிதான். இப்பத்தான் கவனிக்கிறேன்.. மஞ்சள் நிறம் கூடுதலாயி பிஞ்சு சுருங்கிட்டே இருக்குது. கடைசியில பொட்டுன்னு போயிட்டது. மனசுக்கு ரொம்ப கஷ்டமாப்போச்சு. இந்த ஒண்ணு பத்தாகும்ன்னு எப்படியெல்லாம் எதிர்பார்ப்போட இருந்தேன். ச்சே.. இப்படியாகிப்போச்சே.. சரி.. மறுபடியும் பூக்காமலா போகும். அப்ப கவனிச்சுக்கிறேன்.

வாழ்க்கையில, எப்பவுமே வெற்றிகளே வந்துக்கிட்டிருந்தா போரடிச்சுடும். அப்பப்ப தோல்விகளையும் ருசிக்கணும். அப்பத்தான் வாழ்க்கையின் ருசி தெரியும். நினைக்கிறது எல்லாமே நடந்துட்டா, அப்புறம் ஒரு சுவாரஸ்யம் இருக்காது. நாஞ்சொல்றது சரிதானா :-)))))

38 comments:

எல் கே said...

சொந்தத் தொழிலில் பல கஷ்டங்கள் இருந்தாலும் நிம்மதி. அடுத்தவரிடம் கை கட்டி வேலை செய்யவேண்டாம்,.

நாஞ்சில் பிரதாப்™ said...

//ஒரு ஆடு வாங்கி வளக்கணுமாம்//

ஆகா இதுவல்லவோ லட்சியம்....:)

நல்லவேலை தர்பூசணி காய்க்காம போச்சு...காய்ச்சுருந்துன்னா அதுக்குவேற ஒரு பதிவு வந்திருக்கும்... தாங்குமா??:))

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

//அடுத்தவரிடம் கை கட்டி வேலை செய்யவேண்டாம்//

இப்படி எல்லோரும் நினைச்சிட்டா, நம்ம கிட்ட வேலைபார்க்கக்கூட யாரும் வரமாட்டாங்களே :-))))))

ரிஸ்க் எடுத்து கஷ்டப்பட்ட நிறையப்பேரை பாத்துட்டேன்ப்பா...

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க பிரதாப்,

அதென்னவோ கன்னியாகுமரி மாவட்டத்துக்காரங்களுக்கு சொந்ததொழில் மேல ரொம்பவே ஒரு ஈடுபாடு இருக்கு :-)))

//சரி.. மறுபடியும் பூக்காமலா போகும். அப்ப கவனிச்சுக்கிறேன்//

எச்சூஸ் மீ.. இந்தவரியை நீங்க படிக்கலை போலிருக்கு :-)))))))

எல் கே said...

//ரிஸ்க் எடுத்து கஷ்டப்பட்ட நிறையப்பேரை பாத்துட்டேன்ப்பா...//

என் தந்தை , அக்கா எல்லோரும் பிஸ்னஸ் தான். வேலையில் இருந்து கொண்டே ஒரு பிஸ்னஸ் துவங்கும் எண்ணம் உள்ளது. பார்ப்போம்

Kousalya said...

உங்க கவனிப்பு ஓவரா இருந்ததால தான் இப்படி ஆகி இருக்கும்னு எனக்கு தோணுது...செல்லம் கொடுக்கிறது தப்புதானே...

எங்க வீட்டுலயும் தர்பூசணி செடி ஒன்று தன்னால் வளர்ந்து வந்தது....தண்ணி மட்டும் காட்டினேன்...!? :)) கைமாறா மூணு பழம் கொடுத்தது. :)) அதே ஆசையில் தொடர்ந்து தண்ணி ஊத்தினேன்..... போதும் உனக்கு இந்த மூணே அதிகம்னு வாடி போச்சு. :(((

உங்க விடாமுயற்சிக்கு என் வாழ்த்துக்கள். கடைசியில நல்ல ஒரு மெசேஜ்.

ராமலக்ஷ்மி said...

அனுபவப் பகிர்வு, அதில் கற்ற பாடமும் எல்லோருக்கும் எப்போதும் உடனிருக்க வேண்டிய ஒன்றே.

//மறுபடியும் பூக்காமலா போகும்.//

இதுதான் இதுதான் நம் எல்லோரையும் செலுத்திக் கொண்டே இருக்கிறது:)!

நல்ல பதிவு சாரல்.

பூவும், படங்களும் அழகு.

ஹுஸைனம்மா said...

ஸேம் பிளட்!! ஹி.. ஹி.. இப்படி நான் செடிகளால ஏமாந்த கதைகளை எழுதினா ஒரு வருஷத்துக்கு ஓடும்..

விதையைக் கடையில் வாங்காம, சாப்பிட்ட பழத்துல இருந்து போட்டதுன்னா இப்படித்தான் பூக்கும், ஆனா காய்க்காது!! கடையில வாங்குன விதையும் இப்படி ஆசை காட்டி ஏமாத்தும் சில சமயம். இதுனாலத்தானே முழுசா விவசாயத்துல இறங்கவே பயமாருக்கு!!

ஆமா, தர்பூஸனி 50 ரூபாயா விலை? ஆத்தீ... தீ..

ஹுஸைனம்மா said...

அப்புறம், தலைப்பைப் பாத்து, பாவக்காய் ரெஸிப்பி போலன்னு எனக்குப் பிடிச்சதாச்சேன்னு ஆசையா ஓடி வந்தேன்.. இருந்தாலும், இதுவும் நல்லாருக்கு...

நிறைய விஷயங்கள் கனவாவே இருந்துடுது சாரலக்கா. சொந்தத் தொழிலும் ஒண்ணு அதில..

வெங்கட் நாகராஜ் said...

ஒரு மெஸேஜ் சொல்லும் இந்த பகிர்வு நன்று. நானும் சிறு வயதில் இது போல செடி,கொடிகளோடு நிறைய பேசி இருக்கிறேன்.. :)

Chitra said...

வாழ்க்கையில, எப்பவுமே வெற்றிகளே வந்துக்கிட்டிருந்தா போரடிச்சுடும். அப்பப்ப தோல்விகளையும் ருசிக்கணும். அப்பத்தான் வாழ்க்கையின் ருசி தெரியும். நினைக்கிறது எல்லாமே நடந்துட்டா, அப்புறம் ஒரு சுவாரஸ்யம் இருக்காது. நாஞ்சொல்றது சரிதானா :-)))))


......இந்த விஷயத்தையும் சாதரணமாக எடுத்து கொண்டு, வாழ்க்கை தத்துவம் சொல்லும் விதமே அழகுதாங்க.... சூப்பர்!

பாரத்... பாரதி... said...

இது பூக்கள் பூக்கும் தருணம்... தர்பூசணி பூக்கள் பூக்கும் தருணம்...

பாரத்... பாரதி... said...

தர்பூசணியையும் மணிபிளான்ட் லிஸ்டில் சேர்த்திரலாமா?

asiya omar said...

சரி தாங்க,சாரல்.எல்லாருக்குள்ளும் இது மாதிரி கனவு இருக்கும் போல.

வல்லிசிம்ஹன் said...

எனக்குக்கூட பிசினஸ் என்றால் கொஞ்சம் பயம் தான்.( உங்களை மாதிரியே) சில எமாளிகளைப் பார்த்த்ததால் வந்த பயம்.
தர்பூசணி இல்லைன்ன்னா போறது. பூசணி வரும் போட்டுப் பாருங்க.
சாரல் நன்றாகவே வரும்.

"உழவன்" "Uzhavan" said...

நீங்க சொல்றது சரிதான்..
வெற்றியை ரசிக்கத்தன் முடியும்.. ஆனால், தோல்வியைத்தான் உணரமுடியும்.

கோவை2தில்லி said...

கடைசியில் சொன்ன மெஸேஜ் நல்லா இருந்தது. தலைப்பு பார்த்ததும் பாகற்காயில் ஒரு ரெஸிபின்னு நினைச்சிட்டேன்.

vanathy said...

என் வீட்டிலும் இப்படி நடந்திருக்கு. அடுத்த வருடம் தர்பூசனி பிஸ்னஸ் லேடியாக வாழ்த்துக்கள்.

நானானி said...

//மறுபடி பூக்காமலா போகும்?//

ஆமாம்மா....நம்பிக்கைதானே வாழ்கை!!!

நானும் ஒரு ஆண்ட்ரப்ரனர் ஆகணும்முன்னு கற்பனை, கனவெல்லாம் கண்டவள்தான்.

நானானி said...

அந்த கசப்பையெல்லாம் கடப்பாரையை முழுங்குறா மாதிரி முழுங்கி, அதுவும் செரிச்சாச்சு!!!

ஹேமா said...

அழகான படங்கள் சாரல்.வாழ்வின் படிப்பினைகள்தான் அடுத்தபடிக்கு எங்களை வழிநடத்தும்.என்றாலும் முயற்சி முயற்சி மனம் சோராமல் நடைபோடும் சக்தி வாழ்வைப் பூக்கவைக்கும் !

மாதேவி said...

"மீண்டும் பூக்காமலா போகும்... முயற்சித்திடுவோம் :)

ஆமினா said...

எக்கோவ்.....

சீக்கிரமே தர்பூசணி வளர்ந்து பெரிய பிஸினஸ் உமனாக வளர வாழ்த்துக்கள் ;))

அமைதிச்சாரல் said...

வாங்க கௌசல்யா,

எனக்கு மூணெல்லாம் வேணாங்க.. ஒண்ணே ஒண்ணு காய்ச்சாக்கூட போறும் :-)))

நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

இன்னிக்கு காலைல ஒரு பூ பூத்திருக்குப்பா.. இதையாவது பாதுகாக்கிறேன் பேர்வழின்னு கொடுமை பண்ணாம விட்டு வைக்கணும் :-))))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

என்னோட செடிகள் எதுவும் என்னை ஏமாத்தினதே இல்லைப்பா. பாகல், பட்டாணி, வெண்டைன்னு ஒண்ணையும் விட்டு வைச்சதில்லை. குறைந்தபட்சம் கால்கிலோவாவது ஒவ்வொண்ணும் மகசூல் கொடுத்திருக்குது :-))))

சீசன்லதான் இந்த விலை ஆஃப்சீசனில் நூறுக்கு குறையாது.

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

அதுகளோடு பேசினாலோ, பாட்டுக்கேக்க வெச்சாலோ செடிகள் சந்தோஷமாயிடுமாம். ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சிருக்காங்க :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க சித்ரா,

பூக்கிறதெல்லாமே காய்ச்சுட்டா சர்வசாதாரணமாயிடும். ச்சான்ஸ்ன்னு ஒண்ணு இருக்கிறதுனாலதானே, காய்க்குமா இல்லியான்னு பதைபதைப்போட காத்திருக்கிறோம் :-)))))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க பாரத் பாரதி,

செடிகளில் இலைகளின் அமைப்பு ஒரு அழகாகவே இருக்குது. என்ன!!.. மணிப்ளாண்ட் மாதிரி இதுக்கு நீண்ட ஆயுசு கிடையாது. அவ்ளோதான் :-)))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆசியா,

ஆமாம்ப்பா.. சிலது நிறைவேறுது..

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

அது ஒரு பரமபதம் மாதிரி இல்லையாம்மா :-))

பூசணியையும் ஒருதடவை முயற்சிக்கணும்..

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க உழவன்,

ரொம்ப கரெக்டா சொல்லிட்டீங்கப்பா :-)
உணர்ந்தால்தானே அதை வெற்றியாக மாற்ற முயற்சிக்கணும்ன்னு தோணும்.

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க கோவை2தில்லி,

பாகற்காய்தானே.. போட்டுட்டாப்போச்சு :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வானதி,

எனக்கு பிசினெசெல்லாம் வேணாம்ப்பா.. நம்மூட்டுல காய்ச்சு பழமானதுன்னு சொல்லிக்க ஒண்ணே ஒண்ணு அவ்ளோதான் :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க நானானிம்மா,

முழுங்கின கடப்பாரைகள் ஏராளம்ன்னு சொல்லுங்க :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹேமா,

தப்புகள்லேர்ந்துதான் நமக்கு பாடங்கள் கிடைக்குது.. நிச்சயமா..

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

கண்டிப்பா :-)

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆமினா,

வளரட்டும்ன்னுதான் நானும் வெயிட்டிங்கில் இருக்கேன் :-))

நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails