அன்றைக்கு குழந்தைகளின் கும்மாளம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. சமாளிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்தார் அவர்களின் அம்மா சவிதா. , "என்ன!!.. ஒரே சத்தக்காடா கெடக்குது?" என்று கேட்டபடி வீட்டுக்குள் நுழைந்தார் மரகதம்பாட்டி.
பாட்டியின் கையிலிருந்த கூடையிலிருந்து குங்குமப்பிரசாதத்தை எடுத்துக்கொண்டபடியே சவிதா," ஏம்மா இவ்ளோ நேரம்??.. கோயில்ல ரொம்ப கூட்டமா?" என்று கேட்டாள்.
"கோவில்ல நம்ம சௌந்தரம்மா(கேணிப்பித்தன்) மகளைப்பார்த்தேன். ஊருக்கு வந்திருக்கா போலிருக்கு. ஹூம்!!.. எப்படியிருந்த குடும்பம்.."
"என்ன பண்றது!!.. காலம் யாரை எங்க கொண்டுபோய் வைக்கும்ன்னு யாருக்குத்தெரியும்!!.."
அப்படியே, வர்ற வழியில ஜெயந்தியையும் ஒரு எட்டு பாத்துட்டு வந்தேன். அதான் இம்புட்டு நேரமாயிடுச்சு.இந்தப்பொண்ணோட ரௌத்திரத்துக்கு பின்னாடி இருக்கிற கதை(ராகவன்)யை நினைச்சா மனசு அப்படியே கலங்கிப்போகுது.."
இதற்கிடையில் பசங்களின் கூச்சல் அதிகமானது."அது என்னங்கேன்.. .. ஒரே வாக்குல" செல்லமாக அதட்டினாள் பாட்டி.
" பாட்டி.. அம்மாட்ட கதை சொல்லச்சொன்னோம். அம்மா எனக்கு கத சொல்லத்தெரியாதுன்னு சொல்றாங்க" என்று புகார் வாசிக்கப்பட்டது.
"கதைதானே... பாட்டி சொல்றேன். கேட்டுக்கிட்டே சாப்பிடுவீங்களாம். சரியா?.."
மேலும் படிக்க வலைச்சரத்துக்கு வாங்க :-))
11 comments:
ஆஹா..... வலைச்சர ஆசிரியருக்கு இனிய வாழ்த்து(க்)களும் நல்வரவும்.
கதை கேக்கக் காத்திருக்கோம்!!!
அடிச்சுவிடுங்க:-))))
வலைச்சர ஆசிரியருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்..:))
வாங்க தேனம்மை,
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் :-))
நன்றிங்க.
வாங்க துளசியக்கா..
காலட்சேபம் அங்கே நடக்குது :-))
நன்றி
வலைச்சரத்தில் நீங்கள் கோர்த்துள்ள அத்தனை [வலைப்]பூக்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி சகோ.
//மேலும் படிக்க வலைச்சரத்துக்கு வாங்க :-))//
வெத்தல பாக்கோடு ஃப்ளைட் டிக்கெட் இல்லையே:))! சரி இதோ பொடி நடையாப் புறப்படறோம்:)!
வாங்க வெங்கட்,
இப்படியொரு வாய்ப்பு கிடைச்சதுக்கு நாந்தான் எல்லோருக்கும் நன்றி சொல்லணும்.
வாங்க ராமலஷ்மி,
கதை கேட்டுக்கிட்டே நடந்தா அலுப்பே தெரியாதுங்க :-)))
நன்றி.
கதையோடு சேர்த்து ஆங்காங்கே இணைப்புகள் தந்த உங்கள் கிரியேட்டிவிட்டி ரசிக்க வைக்கிறது...
வாங்க தமிழ் உலகம்,
பார்க்கிறேங்க..
வருகைக்கு நன்றி.
வாங்க பிரபாகரன்,
ரொம்ப நன்றிங்க..
Post a Comment