Thursday, 27 January 2011

இப்படி ஒளிஞ்சுக்கிட்டா எப்படி கண்டுபிடிக்கிறதாம்..

ரொம்ப நாளா தள்ளிப்போட்டுப்போட்டு கடைசியில கிளம்பிட்டோம். எங்கேயா!!.. ஷிர்டி+சனிஷிங்னாப்பூருக்குத்தான். இங்கே மஹாராஷ்டிராவில் மூன்று கோவில்களை விசேஷமா சொல்லுவாங்க. மும்பையிலிருக்கும் மஹாலஷ்மி கோயில், அப்புறம், ஷிர்டி சனி ஷிங்கனாப்பூர், அப்புறம் கோலாப்பூர் மஹாலஷ்மி. அதிலும் ஷிர்டிக்கு போறதை, நம்மூர்ல திருப்பதிக்கு போறதுமாதிரியே ரொம்ப சிலாகிச்சு சொல்லுவாங்க.

இங்கே உள்ளவங்களுக்கு ஷிர்டியையும், ஷிங்கனாப்பூரையும் பிரிச்சுப்பார்க்கத்தெரியாது. போனா ரெண்டையும் தரிசனம் செய்யணும். அப்பத்தான் யாத்திரை பூர்த்தியான பலனாம். எல்லாம் நாமே உண்டாக்கினதுதானே. உண்மையில் ரெண்டும் பக்கத்துப்பக்கதுலதான் இருக்கு,.. அதனால அலைச்சல் மிச்சமாகும்ன்னு நினைச்ச யாரோ கெளப்பிவிட்டதாத்தான் இருக்கணும். மெனக்கெட்டு இன்னொரு பயணம் புறப்படப்போறோமா என்ன?..

மொதல்ல அதாவது 2002ல், கார்வாங்கின புதிதில் லாங்க் ட்ரைவ் போனாப்லயும் இருக்கும், ரங்க்ஸின் ட்ரைவிங் திறமையை செக் பண்ணதாவும் இருக்கும்,(இது நான் வெச்ச டெஸ்ட் :-)), கோவிலுக்கு போனாப்லயும் இருக்கும்னு மூணு அம்சத்திட்டம் போட்டு போயிருந்தோம். அதுக்கப்புறம் இப்பத்தான்.. மும்பையிலிருந்து ரெண்டு பாதைகள் இருக்கு. நாசிக் வழியா போறது ஒண்ணு. இன்னொண்ணு, மும்பை பூனா ஹைவேயில் போய் அதுக்கப்புறம் சக்கன், ஷிரூர், அஹமது நகர் வழியா போறது. இது ரெண்டும் ரொம்ப ஃபேமஸ். இதுதவிரவும் வேற பாதைகளும் இருக்குது.

நாங்க நாசிக் வழியாத்தான் முதல்தடவை போயிட்டு வந்தோம். அதனால இப்போ, மும்பை பூனா ஹைவே வழியா போலாம்ன்னு முடிவாச்சு. இதுல குறுக்கே பாதைகள் வந்து இணையாது. சும்மா சல்ல்ல்லுன்னு ஃபுல் ஸ்பீடுல வேண்ணாலும் போகலாம். செம த்ரில்லிங்கா இருக்கும். அதுவும் ghatன்னு சொல்லப்படற மலைப்பாதைகள் நிறைய வருவதால் ரொம்பவே அழகாவும் இருக்கும். ஆனா, வெய்யில் காலத்துல வெக்கை சுட்டெரிச்சுடும். இந்த ஹைவேவழியாத்தான் குஜராத் போற பஸ்களெல்லாம் போகும். அதனால நல்ல மோட்டல்களும் நிறையவே உண்டு. ஆனா,.. நாசிக் வழியில்!!.. ம்ஹூம். நம்மூர்ல சென்னை போறப்ப பஸ்ஸை நிறுத்துவாங்களே!!.. அதுமாதிரி ரொம்ப 'தரமான??..' டீக்கடைகள்தான் இருக்கும். தண்ணீர்பாட்டிலைத்தவிர ஒண்ணும் நல்லதா கிடைக்காது.மும்பை- பூனா நெடுஞ்சாலை..

கூகிள் மேப்பை ஒரு ப்ரிண்ட் எடுத்துக்கலாம்ன்னு சொன்னேன். கேட்டாத்தானே.. அதெல்லாம் போறப்ப அங்கங்கே விசாரிச்சுக்கலாமாம். எப்படியும் ஆறுமணி நேரப்பயணமாகும். அதனால் காருக்குள்ளயே மிச்ச தூக்கத்தை தொடர்ந்துக்கலாம்ன்னு சுதியும் லயமும் ஆளுக்கொரு பெட்ஷீட் சகிதமா சுருண்டுட்டாங்க. இருள்பிரியாத அந்த காலைப்பொழுதும், குளிரும், அடிக்கிற எதிர்காத்தும் ஜிவ்வுன்னு இருந்தது. வழியில் ஒரு மோட்டலில் வண்டியை நிறுத்தி, காபி, சாப்பிட்டுட்டு பயணத்தை தொடர்ந்தோம்.

சிலதெல்லாம், ச்சும்மா ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் மாதிரியே இருக்குது. சின்னச்சின்ன ரெஸ்டாரண்டுகள், பத்திரிக்கைகளும், புதுப்பட டிவிடிக்களும் விற்கிற கடைகள், ஜூஸுக்கு தனிக்கடைகள், அப்புறம் அதே காம்ப்ளெக்ஸ்ல சின்ன சர்வீஸ் ஸ்டேஷனோட, ஒரு பெட்ரோல் பங்க்ன்னு பக்காவா இருக்கு. வண்டிக்கும் தனக்கும் எரிபொருள் நிரப்பிக்கிட்டு, மக்களெல்லாம் டிவிடிக்களை மேஞ்சுக்கிட்டிருக்காங்க. பெரும்பாலான வண்டிகள் அவுரங்காபாத் வரைக்கும் போகுமாம். அதுவரை பொழுதுபோகணுமே!.. இதுல, டிபன் சாப்பிட நிறுத்தின இன்னொரு மோட்டலில் அழகா தோட்டமெல்லாம் போட்டு, ஈமு, வாத்துன்னு செல்லப்பிராணிகளை அதுல விட்டிருந்தாங்க. பார்க்க ரொம்ப அழகாயிருந்தது.

இந்த ரெஸ்டாரண்டின் பெயர் சிரிக்கும் கல்.. smile stone in english :-)))))))

நாங்க முதல்ல ஷிங்கனாப்பூர் போயிட்டு அப்புறம் ஷிர்டி போகலாம்ன்னு ப்ளான் பண்ணியிருந்தோம்.  நமக்கு பூனா ஊருக்குள்ள போகத்தேவையில்லை. அவுட்டரிலேயே போகணும். வழியெங்கும் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டுகள்... சென்ட்ரல் எக்ஸைசின் பூனா டிவிஷனுக்குட்பட்டதாம். லோனாவ்லா என்ற மலைப்பிரதேசத்தையொட்டி சாலை போகுது. அங்கங்கே கட்டிவிட்டிருக்கிற ரிஸார்ட்டுகள் கண்ணுக்கு தட்டுப்படுது.

இனி சின்னச்சின்ன கிராமங்களை கடந்து போகவேண்டியிருக்கும். கோடேகாவ்க்கு அப்புறம், அஹமத் நகர் போய் அங்கிருந்து ஷிங்கனாப்பூருக்கு தனிச்சாலை பிரியுதுன்னு, வலையில் தேடினப்ப பார்த்தோம். 'அஹமத் நகர்.. அஹமத் நகர்'ன்னு போறவழியெல்லாம் ஏலம்போட்டுக்கிட்டே போய், கடைசியில் கண்டுபிடிச்சோம். அஹமது நகர் கழிஞ்சதும், ரெண்டு பக்கங்களிலும் அறிவிப்பு பலகைகளை எதிர்பார்த்துப்போயிட்டே இருக்கோம்.

முஹூர்த்த நாள் போலிருக்கு.. எங்க பார்த்தாலும் பா(bha)ராத்திகள்.. அதாவது கல்யாண ஊர்வலங்களும், அதுல டான்ஸ் ஆடுறவங்களும். பெரிய வண்டியொண்ணில் மியூசிக் சிஸ்டத்தை வெச்சு அந்த பிராந்தியத்தையே அலறவெச்சுக்கிட்டிருக்காங்க. நல்ல வேளைப்பா.. இந்த சிஸ்டம் இன்னும் மும்பைக்கு வரலை.. வந்தா அவ்வளவுதான் :-))))))))
ம்யூசிக் சிஸ்டத்துக்கு தனி சவாரி..

அரை மணி நேரத்துக்கப்புறம்தான் தப்பான சாலையில் வந்துட்டோமோன்னு ஒரு ஐயப்பாடு. வந்தவழியே யு டர்ன் எடுத்து திரும்பு.... ஏழெட்டுக்கிலோமீட்டர் கடந்திருப்போம். வலதுபக்கம் நீலக்கலர்ல சின்னதா ஒரு ஆர்ச். சனி ஷிங்கனாப்பூர்ன்னு எழுதியிருக்கு. மொதல்ல அதைக்கடந்துதான் கவனிக்காம வந்திருக்கோம். எப்படி கண்டுபிடிக்கமுடியும்??.. ரோட்டுலேர்ந்து பத்தடி உள்ளே தள்ளியில்ல இருக்கு :-)). ரோட்டோரத்துல போர்டு வைக்கிறதுக்கு இன்னும் யாரும் சொல்லிக்கொடுக்கலை போலிருக்கு!!

மெயின்ரோட்டிலிருந்து கோவில் எட்டுகிலோமீட்டர் தூரத்துலதான் இருக்கு. போய்ச்சேர கால் மணிக்கூராவதுஆகாது? கண்டிப்பா ஆகும்.. அதுவரைக்கும் தலபுராணத்தைப்பார்க்கலாம்..

இந்த சுட்டியை பிடிச்சுட்டே போனீங்கன்னா கூகிளாண்டவர் வழி சொல்லுவார்.

தொடரும்..
48 comments:

ஜீ... said...

அருமை! படங்கள் சூப்பரா இருக்கு! :-)

அரசன் said...

பகிர்வுக்கு நன்றிங்க

புதுகைத் தென்றல் said...

ஹி ஹி ஹி என் பதிவுல சொல்ல மறந்த மேட்டர். அஹமத்நகர்னு சொன்னா நிறைய்ய பேருக்கு புரியாதாம். அ.நகர்னு கேட்டா சொல்வாங்க. அடுத்த பதிவுக்கு மீ த வெயிட்டிங்.

sakthistudycentre-கருன் said...

super,

எல் கே said...

டூரா? ரைட்டு தொடருங்கள்

நானானி said...

ஆஹா...! ஷீர்டிக்குப் போக ஒரு நேர்த்திகடன்? இல்லையில்லை நினைப்பிருக்கு. உங்க பதிவு அதை வெகு நேர்த்தியாக தூண்டிவிட்டது.
மும்பைக்கு, மகனைப் பார்க்க வரும்போது கண்டிப்பாக போகணும்.
ஜெய் சாய்ராம்!!!

வல்லிசிம்ஹன் said...

என்னப்பா ஆளாளுக்கு ஷிர்டி அப்பனைப் பார்க்கக் கிளம்பீட்டீங்க! படமெல்லாம் அமைதியா அழகா ஜிலோன்னு இருக்கு. மேடு பள்ளம் இல்லாத ரோடில கார் பறக்கக் கேக்கணுமா!நிறையப் புண்ணியம் சேர்த்துக் கிட்டு வந்து இருக்கீங்க. நம்ம பக்கம் கொஞ்சம் தள்ளிவிடுங்க:)

சுந்தரா said...

படங்களும் பகிர்வும் அருமை

தொடருங்க சாரல்.

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!!!!!! சூப்பரா இருக்கு ஆரம்பம்.

//கிவி, வாத்துன்னு....//

கிவின்னதும் அப்படியே ஆடிப் போயிட்டேன். எங்க தேசியப்பறவை அதுவும் ராத்திரியில் மட்டுமே வெளியே வந்து இரைதேடும் பறவை இங்கே எப்படிடா வந்துச்சுன்னு.............

நீங்க போட்டுருக்கும் படம் ஈமு இல்லையோ???????

மலைப்பாதை படங்கள் அருமையா இருக்கு

அமைதிச்சாரல் said...

வாங்க ஜீ,

வரவுக்கு நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க அரசன்,

ரொம்ப நன்றிங்க.. வரவுக்கு.

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

வெறுமனே நகர்ன்னே சொல்றாங்கப்பா.. இனிஷியலைக்கூட கழட்டி விட்டுட்டாங்க :-))

அமைதிச்சாரல் said...

வாங்க சக்தி,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

யெஸ்ஸு.. கூடவே வாங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க நானானிம்மா,

ஒருவேளை, உங்களை பார்க்கணும்ன்னு அவர்தான் இந்த இடுகையை வெளியிட தூண்டியிருக்காரோ என்னவோ :-))))

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

இப்பத்தான் சமீபத்தில் மே-2010-ல் போயிட்டு வந்தேன் :-)))))))

இந்த அழகுக்கும் அமைதிக்குமாகத்தான் மும்பை-பூனா எக்ஸ்பிரஸ் வழியில் போனோம். சுமாரா ஏழுமணி நேரமாச்சு. (நாசிக் வழியா போனா அஞ்சரை மணி நேரமாகும்)

அமைதிச்சாரல் said...

வாங்க சுந்தரா,

தொடர்ந்து வாங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க துளசியக்கா,

திருத்திட்டேன்.. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

ரொம்ப அருமையான பாதையா இருக்குக்கா..என்னன்னா சட்னு நிறுத்தமுடியாம, ஓடறவண்டியிலிருந்தே எடுக்கவேண்டியதாப்போச்சு.

raji said...

என்னப்பா இது?
இன்ட்ரஸ்ட்டிங்கா படிச்சுகிட்டே வரும்போது
இப்பிடி பாதில தொடரும் போட்டுட்டீங்களே?
உங்களுக்கே இது நியாயமா படுதா?
மிச்சத்த எப்ப போடுவீங்க?

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா, முதல்ல புதுகைத்தென்றல், அடுத்து நீங்களா? ஷிர்டி-ஷிங்கனாபூர் பயணக் கட்டுரையும் படங்களும் ஆரம்பத்திலேயே அசத்தல். அடுத்த பகுதிக்காய் காத்திருக்கிறேன்.

G.M Balasubramaniam said...

புனேயிலிருந்து நாங்களும் இந்த இடங்களுக்கு பயணித்திருக்கிறோம்.ஷிர்டி பற்றிய என் எண்ணங்களை என்னுடைய பிறிதொரு பகிர்வில் கூறியுள்ளேன்.அதை இங்கு கூறி உங்கள் பதிவின் சுவையைக் குறைக்க விரும்பவில்லை.நம்பிக்கை சார்ந்த விஷ்யங்கள் எது சொன்னாலும் நெருடும். அங்கு போனபோது ஒரு காந்தி குல்லாய் வாங்கினேன். தொடருங்கள் வாழ்த்துக்கள்

raji said...

புதுகைத் தென்றல் பக்கமா
கொஞ்சம் காத்து வாங்கலாமேனு போனேன்.
போன இடத்துலதான் தெரிஞ்சது
சம்பங்கி பூவை காஞ்சதும் பொடியாக்கி
குளிக்கும் போது உபயோகப் படுத்தலாம்னு சொல்லி
நீங்க அந்த காத்துல கொஞ்சம் வாசனையை பரப்பினது.
வாசனைக்கு நன்றி

ஆமினா said...

நல்லாயிருக்கு உங்க பயணம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரோடு பாக்கவே ஆசையா இருக்குப்பா ..

Jaleela Kamal said...

பகிர்வு அருமை , புதுசா கே|ள்வி படாத இடஙக்ள் இடங்கலும் சூபப்ர்

vanathy said...

நல்லா இருக்கு. படங்கள் சூப்பர்.

Chitra said...

நல்லா சுத்தி காட்டி இருக்கீங்க.... பகிர்வுக்கு நன்றிங்க...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக அருமையான விவரிபு சாரல் தொடருங்க..

நாஞ்சில் பிரதாப்™ said...

5 வருசம் புனாவுல இருந்து அவுரங்கபாத் வரைக்கும் போய்ட்டு வந்துட்டு கடைசிவரை சாய்பாபாவை தரிசனம் பண்ணாமலே வந்த ஒரே அறிவாளி நானாத்தான் இருப்பேன்.:((

அது சாரி நாம விருப்பபட்டு என்ன பிரயோசனம் அவரு விருப்பட்டாதானே பார்க்கமுடியும்... நம்ம வெங்கிடு கூட இப்படித்தான்....:)))

துளசி கோபால் said...

அஞ்சு வருசம் பூனாவில் இருந்தோம். நாங்களும் போனதில்லை.

போகணுமுன்னு தோணவும் இல்லை:(

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகில் பயணக்கட்டுரை அபூர்வம்.. ம் ம் வாழ்த்துக்கள். படங்கள் நல்லாருக்கு சார்

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜி,

இடுகை ரொம்ப நீளமா இருந்தா போரடிச்சுடாதா.. அடுத்தபாகம் திங்களன்று வெளிவரும் :-)

சம்பங்கிப்பூக்களையும் விதையையும் நம்மூர்லயும் ஸ்நானப்பவுடர்ல உபயோகப்படுத்துவாங்களேப்பா. இங்கே கடைகளில் கிடைக்காது. அதனால, பச்சைப்பயிறு, சம்பங்கி இதழ்கள், மசூர்தால், கஸ்தூரிமஞ்சள் இதெல்லாம் சேர்த்து பவுடர் செஞ்சுதான் உபயோகப்படுத்துவேன்.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆமினா,

நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க முத்துலெட்சுமி,

ரோடும், சுத்திலும் இருக்கிற இயற்கையும்.. லாங் ட்ரைவுக்கு ரொம்பவே ஏத்த சாலை. அங்கங்கே சுரங்கப்பாதைகளும் இருக்குது. ஆல்பம் கடைசியில் போடறேன் :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ஜலீலா,

ஷிர்டி நாடுமுழுக்க பிரபலமான இடம். ஷிங்கனாப்பூர் அவ்வளவு பிரபலம் கிடையாது. ஆனா, மஹாராஷ்ட்ராவில் ரொம்ப பாப்புலர். ஷிர்டி+ஷிங்கனாப்பூர் தரிசனம், கிட்டத்தட்ட ஒவ்வொருத்தருடைய கனவுங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க வானதி,

ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க சித்ரா,

பயணம் இன்னும் தொடருது.. கூடவே வாங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க தேனம்மை,

அடுத்தபாகம் விரைவில் :-)

அமைதிச்சாரல் said...

வாங்க பிரதாப்,

அஜந்தா, எல்லோரா குகைகளுக்கு போயிருக்கீங்களா?? அதுவும் பூனாவுக்கு பக்கம்தான் :-))

வெங்கிடு, சாய்பாபா, வைஷ்ணோதேவி.. இன்னும் வேறயார் இருக்கான்னு தெரியல இந்த லிஸ்டுல :-). பொதுவாவே தெய்வ சங்கல்பம் இருந்தாத்தான் தரிசிக்கமுடியும்ன்னு ஒரு நம்பிக்கை இருக்கே..

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

ட்ராப்டல ரொம்ப நாளா கெடந்துது. வெளியிட சந்தர்ப்பம் அமையலை. தென்றலோட இடுகைல வந்து உத்தரவு கொடுத்தமாதிரி ஒரு ஃபீலிங்.. அதான் வெளியிடல் :-))

அமைதிச்சாரல் said...

வாங்க பாலசுப்ரமணியம் ஐயா,

நம்பிக்கை என்பதே எல்லோருக்கும் பொதுவானதுதானே.. நமக்கு மேல ஒரு சக்தி இருக்குங்கறத யாராலயும் மறுக்கமுடியாது. அதை சிலபேர் தெய்வம்ன்னு பேரிட்டு கும்பிடறோம்.. சிலபேர் அறிவியல் கண்ணோட்டத்தோட பாக்கறோம். அவ்வளவுதானே :-))

அந்த குல்லாய் வடமாநிலங்களில் எல்லோரும் உபயோகிப்பதுதான் :-))

அமைதிச்சாரல் said...

@ துளசியக்கா,

இத்தனை வருஷத்தில், நாங்களும் ரெண்டுதடவைதான் போயிருக்கோம். இப்பகூட கழிஞ்ச தீபாவளிலீவு சமயத்துல போலாம்ன்னு எவ்வளவோ முயற்சித்தோம்.. முடியலை.

அமைதிச்சாரல் said...

வாங்க சி.பி,

பயணங்கள் மாதிரி மனசை ரிலாக்ஸ் பண்ற மருந்து வேற எதுவும் கிடையாதுங்கறது என் கருத்து.

பயணக்கட்டுரைகளைப்பொறுத்தவரை நம்ம துளசியக்காதான் 'முடிசூடா ராணி'. அவங்க பதிவுல எக்கச்சக்கமா இருக்குது. முடிஞ்சா ஒரு நடை போயிட்டு வாங்க :-)

முதல்வருகைக்கு நன்றி.

நானானி said...

//போகணுமுன்னு தோணவும் இல்ல//

துள்சிக்கு போகணுமுன்னு தோணாத இடமும் இருக்கா..? அட!!!

பாரத்... பாரதி... said...

விரிவாகவே சொல்லியிருக்கிறீர்கள்.. பயணங்கள் முடிவடையாமல் தொடரட்டும்..

பகிர்வுக்கு நன்றிகள்..

asiya omar said...

அருமையான பகிர்வு,தொடருங்கள்.

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் அருமை. தொடருங்கள் காத்திருக்கிறோம்.

கோவை2தில்லி said...

பயணக் கட்டுரையா? நானும் தொடர்ந்து வருவேன். படங்களும் தகவல்களும் உபயோகமாக இருக்கும். நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails