Tuesday, 29 November 2011

பூந்தோட்டம்..(29-11-11 அன்று பூத்தவை)

பிச்சி: கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்ன்னு சொல்லுவாங்க. ஏதோ முழுக்க கெடுறதுக்கு முன்னாடியே முழிச்சுக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும். எங்கும் எதிலும் ப்ளாஸ்டிக் ப்ளாஸ்டிக்ன்னு இருந்த மோகத்திலேர்ந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமா தெளிவடைய ஆரம்பிச்சிருக்காங்களே அதைத்தான் சொல்றேன். மும்பையைப் பொறுத்தவரை 'அந்த' மழைக்கப்றம் ப்ளாஸ்டிக் பைகளைப் பத்தின ஒரு விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமா மக்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பிச்சிருக்குது. மால்கள்ல கூட பை வேணும்ன்னா காசு கொடுத்துத்தான் வாங்கிக்கணும்ன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. சின்னச் சின்னக் கடைகள்ல பேப்பர் பைகள் புழக்கத்துக்கு வந்தாச்சு. செய்யறதுக்குச் சுலபமான இந்தப் பைகள் இங்கே சில குடும்பங்களையும் வாழ வெச்சுக்கிட்டிருக்குது.

மும்பையின் காந்திவிலி பகுதியைச் சேர்ந்த பத்துப் பெண்கள் ஒண்ணாக் கூடி இதை ஒரு குடிசைத் தொழிலாவே செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. அக்கம்பக்கத்துக் கட்டிடங்கள்ல சொல்லி வெச்சு, நாளிதழ்களைத் தினமும் சேகரிச்சு பைகள் செய்யறாங்க. இதை அக்கம் பக்கத்துல இருக்கற இனிப்பகங்கள், மருந்துக் கடைகள், அப்றம் சின்னச் சின்ன கடைகள்ல வாங்கிக்கறாங்க. நாமளும் குடும்பத்துக்குப் பொருளாதார ரீதியா பலமா இருக்கோம்ங்கறதுல இந்தப் பெண்களுக்கு ரொம்பவே சந்தோஷம்.

இருவாட்சி: உலகப் புகழ் பெற்ற அஜந்தா எல்லோராக் குகைகளுக்கு ஆபத்து காத்துக்கிட்டு இருக்குதாம். இதை நம்ம இந்தியத் தொல்பொருட்துறை ஆராய்ச்சி செஞ்சு கண்டு பிடிச்சு, அறிவிச்சுருக்குது. வெளி மாநிலங்கள்லேர்ந்தோ, இல்லை உள்ளூர்க் காரங்களோ ஷிர்டி, சனிஷிங்கனாப்பூர்க்கு தரிசனம் செய்ய வந்தா அங்கேருந்து பக்கத்துல அவுரங்காபாத்ங்கற நகர்லேர்ந்து அஞ்சே கி.மீ தொலைவுல இருக்கற அஜந்தா எல்லோராக் குகைகளுக்குப் போயி சிற்பங்களை ரசிக்காம வர மாட்டாங்க. இப்படி தினமும் கூடுற டூரிஸ்ட்டுக் கூட்டத்தாலதான் அந்தக் குகைகளுக்கு ஆபத்தாம்.

கூட்டம் அதிகமா இருக்கறதால அங்கே கரியமில வாயுவோட அளவு காத்துல கூடுதலாகிடுச்சு. இப்படி கூடுதலான வாயு குகையோட கற்கள்ல இருக்கற கால்ஷியம் கார்பனேட்டோட வினை புரிஞ்சு பயோகார்பனேட் ஆகுது. இது பாறைத்துணுக்குகளுக்கு இடையேயான பிணைப்பைத் தகர்க்குதாம். இதனால என்ன ஆகும்ன்னு கேக்கறவங்களுக்கு அங்கே ரெண்டாம் குகையின் கூரைப்பகுதியிலேர்ந்து பொடிப்பொடியா உதிர்ந்து வர ஆரம்பிச்சுருக்கும் மணற்துகள்களே பதில் சொல்லும். இந்தியாவின் பொக்கிஷங்கள்ல ஒண்ணான அஜந்தா, எல்லோராக் குகைகளை இனிமேல் புகைப்படங்கள்ல மட்டுந்தான் பார்க்க முடியும்ங்கற நிலைமை வந்துடும் போலிருக்கு.

கனகாம்பரம்: “வொய் திஸ் கொலவெறிமும்பை இளசுகளின் உதட்டில் சமீப காலமா வந்து உக்காந்துக்கிட்டு இருக்குது. காலேஜ் காண்டீன்கள்ல இந்தப் பாட்டு எத்தனை தடவை ஒலிக்குதுன்னு கணக்கே வெச்சுக்க முடியலை. எங்கூர் மராட்டி மொழியில் ஆரம்பிச்சு குழந்தைகளின் விருப்பமான சிப்மங்க்ஸ் வரைக்கும் பாடற மாதிரியான எக்கச்சக்கமான ரீமிக்ஸுகளும் வந்தாச்சு. ஏற்கனவே நம்மூரு டாக்குட்டர் விஜய் ஆடிப் பாடுனஅப்டிப் போடு.. போடுஇன்னி வரைக்கும் வடக்கே நடக்கற கல்யாணங்கள்லயும் கொண்டாட்டங்கள்லயும் டிவிக்கள்லயும் போடுபோடுன்னு போட்டுக்கிட்டிருக்கு. பத்தாததுக்குநாக்கமுக்கபாடல் ஒரு இந்திப் படத்துல பின்னணி இசையாவும் பயன் படுத்தப் பட்டிருக்கு. இப்போகொலவெறியையும் பாலிவுட் படங்கள்ல உபயோகப்படுத்தலாமான்னு மக்கள் கிட்ட கருத்துக் கணிப்பும் நடத்திக்கிட்டுருக்காங்க. தமிழேண்டா :-)

மந்தாரை: நம்ம கவுண்டர் ஒரு படத்துல சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டிருப்பார். ஒரு நாள் சைக்கிளை ஓட்டிக்கிட்டு வந்துக்கிட்டிருக்கறப்ப திடீர்ன்னு டமால்ன்னு சைக்கிளைப் போட்டுட்டு அவரும் கீழே விழுவார். அக்கம் பக்கத்துல நின்னுட்டிருந்தவங்க ஓடி வந்து அவரைத் தூக்கி விட்டுட்டு, அடிபட்டிருச்சான்னு கேக்கவும், நான் இப்படித்தான் சைக்கிள்லேர்ந்து இறங்குவேன்ன்னு கூலா சொல்லிட்டு போயிட்டேருப்பார். இந்தக் காட்சியை ஞாபகப் படுத்தறமாதிரி சமீபத்துல ஒரு சம்பவம் நடந்துது.

நவிமும்பையின் வாஷிக்கு போயிட்டு திரும்பி வந்துட்டிருந்தேன். ட்ரெயின் ஜஸ்ட் புறப்பட்டு வேகமெடுக்க ஆரம்பிக்கையில் எங்க பொட்டியிலிருந்து ஒரு பொண்ணு தடார்ன்னு வண்டிக்கு வெளியே பப்பரப்பேன்னு மல்லாக்க விழுந்துட்டா, கெட்ட நேரத்துலயும் ஒரு நல்ல நேரமா வண்டி இன்னும் ஸ்டேஷனுக்கு வெளியே வரலை. அதனால ப்ளாட்பாரத்துல விழுந்ததும் பக்கத்துல இருந்தவங்க சட்ன்னு அவளைத் தாங்கிப் பிடிச்சுட்டாங்க. எழுந்தவ சிரிச்சுட்டே தன்னோட பையைக் குனிஞ்சு எடுத்துக்கிட்டா. தள்ளுமுள்ளுல விழுந்துருப்பாளோன்னு நினைக்க வைக்கிற அளவுக்கு பொட்டிக்குள்ள கூட்டமுமில்லை. ஒருவேளை அவளைக் கேட்டிருந்தா, “நான் எறங்கற இஸ்டைலே இப்படித்தான்”ன்னு சொல்லியிருந்துருப்பாளோ என்னவோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

செவ்வந்தி: மும்பையில் சமூக அமைதியைக் குலைக்கிற விதமா அடிக்கடி நடக்கும் சம்பவங்களையும், வன்முறைச் சம்பவங்களையும் தடுக்கணும்ன்னா பொதுமக்களோட கை கோர்த்துக்கிட்டுச் செயல்படறது அவசியம்ங்கறதை எங்கூர் காவல்துறை உணர்ந்துக்கிட்டிருக்கு. ஒவ்வொரு ஏரியாவோட மூலை முடுக்கையும் அந்தப் பகுதி மக்களுக்குத்தான் நல்லாத் தெரியும்ங்கறதால திருட்டு, போதைப்பொருள் நடமாட்டம், வன்முறையாளர்களோட நடமாட்டம்ன்னு எல்லாத்தையும் ஆரம்பத்துலயே கண்டு பிடிச்சுடலாம் இல்லியா. இது கிட்டத்தட்ட நம்மூர் ஊர்க்காவல் படையோட மாறுபட்ட வடிவம்தான். அதேமாதிரி கடலுக்குள்ள கண்காணிக்கறதுக்காக மீனவர்களோட உதவியையும் கேட்டிருக்காங்க. தரைவழியாவோ கடல்வழியாவோ இந்தியாவுக்குள்ள தீவிரவாதிகள் நுழையறதைத் தடுக்கறதுக்கான முயற்சிதான் இது. மும்பை முழுக்க ஆங்காங்கே கண்காணிப்புக் காமிராக்கள் வைக்கவும் யோசனை நடக்குது. கடந்த வருஷங்கள்ல மும்பை மேல் நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களாலதான் இப்படியொரு யோசனை எழுந்துருக்குது. அதே சமயம் பொது மக்களோட பங்களிப்போட நகரத்துல நடக்கற கிரிமினல் சம்பவங்களையும் கட்டுக்குள்ள கொண்டாந்துடலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா :-)

ஆர்க்கிட்: நான் எழுதிய பவளமல்லி சிறுகதை நம்ம லேடீஸ் ஸ்பெஷலோட தீபாவளி மலர்ல வெளியாகியிருக்குது. வெளியிட்ட நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி.
                                   


64 comments:

ராமலக்ஷ்மி said...

பிச்சி ஆறுதல்.இருவாட்சி ஆதங்கம்.
கனகாம்பரம் நோ கமெண்ட்ஸ்:)!
பவளமல்லிக்குப் பாராட்டுகள்.

தொகுப்பு சிறப்பு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல தகவல்களுடன் பூந்தோட்டம் மணம் கமழுது. பகிர்வுக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம்: 2 யூடான்ஸ் : 4

அருமையான அழகான பூக்கள் பூத்துக் குலுங்கிடும் பூந்தோட்டத்திற்குள் சென்று வந்தேன். நறுமணம் கமழ்கிறது.
பாராட்டுக்கள். vgk

RAMA RAVI (RAMVI) said...

பூந்தோட்டம் மிக சுவாரசியம்.

மும்பையில் நடக்கும் விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு தேவைதான்.

தங்கள் சிறு கதை தீபாவளி மலரில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்,சாந்தி.

rajamelaiyur said...

நல்ல கதம்பம்
அன்புடன் :
ராஜா
.. இன்று

பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்

ADHI VENKAT said...

பூந்தோட்டம் பூத்துக் குலுங்கும் பூக்களோட மணத்தோட அருமையா இருந்தது.

பிளாஸ்டிக் விழிப்புணர்வு இங்க ரொம்ப நாளா இருக்குது. பேப்பர் பைகளுடன், (ரெக்ஸினா, துணியா என்று தெரியவில்லை)அந்த பைகளும் விற்கின்றனர்.

why this கொல வெறி இங்க அலுவலகத்திலயே போட்டு கொல வெறிக்கு அர்த்தம் வேறு கேட்கிறார்களாம்.

உங்கள் கதை தீபாவளி மலரில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.

வல்லமை said...

அன்பின் சாந்தி,

வாழ்த்துகள். முதலில் விழிப்புணர்வூட்டிய..... அதாங்க பிளாஸ்டிக் அரக்கனை ஒழிக்கும் நடவடிக்கை.. அடுத்து லேடிஸ் ஸ்பெஷல் பவள மல்லிக்கு....வளருங்கோ... வாழ்த்தறோம் தோழி!

ரிஷபன் said...

சிறுகதை மலரில் வந்ததற்கு வாழ்த்துகள்.
பூக்களின் தொகுப்பில் வாசனைகளின் சங்கமம்

raji said...

பிச்சி : முழிச்சிக்கிட்டோம் :)

இருவாட்சி : இதுக்கு அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்கலையா? ஐ மீன் மக்கள் கூட்டத்தை தடுக்கறது மாதிரி?

கனகாம்பரம் : :(

மந்தாரை : சம்பவத்தை விட அதை நீங்க விளக்கினதுல இருந்த 'பப்பரப்பே' வெ ஆ மூர்த்தியை நினைக்க வைத்து சிரிக்க வைத்தது.

செவ்வந்தி : இதுதாண்டா போலீஸ்

ஆர்க்கிட் : எப்பவுமே எல்லா பூக்களை விட தோற்றத்துலயும் வாசனையிலும் பவளமல்லி ஸ்பெஷல்தான்.அதுக்கு ஒரு வாழ்த்துக்கள் :))

வெங்கட் நாகராஜ் said...

கதம்பத்தில் மலர்கள் மணம் வீசுகின்றன....

கொலவெறி - எத்தனை ரீமிக்ஸ் வந்து விட்டது.... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மகளுக்குஒரே பெருமை.. வகுப்பில் ஒரே தமிழ்க்காரி இவதான்.. எல்லாரும் ஒய்திஸ் கொலவெறி தமிழ்பாட்டை பாடுவதில் தான்..:)

மாதேவி said...

பூக்கள் இதழ்விரித்து நிற்கின்றன.

வாழ்த்துக்கள்.

ஹேமா said...

சாரல்...நீங்களே சொல்லிட்டீங்க கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்ன்னு அப்புறமென்ன.இனி நல்லதே நடக்கும் !

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

பிளாஸ்டிக் பை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு சூப்பர்... அடக்கடவுளே, வரலாற்று சின்னத்துக்கு ஆபத்தா?... கொலைவெறி கொலவெறியாத்தான் பரவிகிட்டு இருக்குங்க இங்கயும்...:) அங்கயும் கௌண்டர் ஸ்டைலா? சூப்பர்...:) காவல்துறையின் அணுகுமுறை சூப்பர்... வாவ், வாழ்த்துக்கள் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வெளியானதுக்கு...;)

ஷைலஜா said...

வாழ்த்துகள் பத்திரிகையிலும் வெளிவந்ததற்கு

துளசி கோபால் said...

உங்க பூந்தோட்டத்தில் ஒரு சுத்து சுத்திட்டு வந்ததும் எங்கியோ வானத்தில் பறப்பது போல் இருக்கு!

'எல்லாத்துக்கும்' இனிய பாராட்டுகள்.

வல்லிசிம்ஹன் said...

பூந்தோட்டம் கருத்தும் வாசனையும் ரசனையுமா ஆளைத் தூக்குகிறதுப்பா. பவளமல்லிக்கு என் இனிய வாழ்த்துகள். எங்கவீட்டுப் பேரே அதுதான்.

pudugaithendral said...

ஓரு நாள் ஆஷிஷின் டேபிளை துடைக்கையில் ஒரு பாட்டின் வரிகள் . நம்ம புள்ள ஏதும் கவிஞர் ஆகிடிச்சோன்னு பயந்துகிட்டே படிச்சேன். சுத்தமா புரியலை. தமிழாட்டமும் இருக்கு. ஆனா தமிழும் இல்ல. அப்புறமாத்தான் நம்ம வலைப்பூவில் ஒரு லிங் பாத்து அங்க போய் பார்த்தற்கப்புறம் தான் ”கொலவெறி” புரிஞ்சது. வகுப்பில் தமிழ் தெரிஞ்சே ஒரே பையர் என்பதால் ஐயாவை லிரிக்ஸ் எழுதித் தரச்சொல்லியிருக்காகலாம்.!!!!

வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு சென்னை மக்களுக்கு சுட்டுப் போட்டாலும் வராது என்பதை சமீபத்திய சென்னையின் பேய் மழை அனுபவங்கள் உணர்த்தின! லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் சிறுகதை வெளி வந்ததற்குப் பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். பலப் பல விசயங்களை நன்றாக சொல்லி உள்ளீர்கள். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி அம்மா... எனது தளத்தில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 12 பதிவுகள் எழுதியுள்ளேன். படித்து விட்டு தங்களின் கருத்துரையை கூறவும். நன்றி. நேற்று எழுதிய் பதிவு கீழே:

"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

RVS said...

மலர்கள் ஜூப்பரு!

பத்திரிக்கையில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள். :-)

ரசிகன் said...

பூந்தோட்டம் வாசம் வீசுகிறது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

ஆஹா!!.. ரசனையான விமர்சனம்.

நன்றிங்கோ :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்டார்ஜன்,

நல்லாருக்கீங்களா?..

வாசிச்சதுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வைகோ ஐயா,

'எல்லாத்துக்கும்' நன்றிகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமா,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜா,

வாசிச்சதுக்கு நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

நீங்க சொல்ற பைகள் இங்கியும் ரொம்ப நாளா இருக்கு. அழகழகான கலர்கள்ல அசத்தலா இருக்கு. துவைக்கிறதும் காய வைக்கிறதும் ஈஸியோ ஈஸி. :-)

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நண்டு,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கரி,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜி,

நம்ம அரசாங்கம் என்னிக்கு சட்ன்னு நடவடிக்கை எடுத்திருக்கு :-(

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

ரீமிக்ஸுக்கே ரீமிக்ஸ் போடுற அளவுக்கு பெருகிக்கிட்டிருக்குப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

என் பெண்ணின் தோழி எங்கிட்ட மெனக்கெட்டு வந்து ஆன்ட்டி.. கொலவெறின்னா என்னா அர்த்தம்""ன்னு கேட்டுட்டுப் போறா :-)))

பிக்பாஸ் வரைக்கும் போயிடுச்சு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

வாசிச்சதுக்கு ரொம்பவே நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றிம்மா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

என்னதான் அமிர்தமா இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல போகறச்சே.... கொலவெறியாத்தான் இருக்கு :-)

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷைலஜா மேடம்,

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

பூவுன்னா உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் இல்லே :-))

பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றிக்கா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

ஆஹா.. அதுவும் அப்படியா :-))

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிம்மா.

Yaathoramani.blogspot.com said...

மலர்களால் ஆன பூந்தோட்டம் போல
பதிவும் மிக மிக் அருமையாக இருந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

பிச்சி அருமை., தமிழங்க. எப்ப யோசிப்பாங்க

இருவாட்சி.. ஹ்ம்ம் இன்னும் பார்க்கவே இல்லையே..

கனகாமபரம் கலக்கல்..

மந்தாரை அந்தப் புள்ளைக்கு முட்டி ஸ்ட்ராங்கு போல..:)

செவந்தி சூப்பர்..

ஆர்கிட்டுக்கு ஒரு பூங்கோத்து..:)

பாச மலர் / Paasa Malar said...

என்ன அஜந்தா எல்லோராக் குகைகளுக்கும் ஆபத்தா..தாஜ்மகால் பிரமிடுகள் முதல் அனைத்து அற்புதங்களுக்கும் ஆபத்து நெருங்கி வருகிறதே...

பவளமல்லிக்கு வாழ்த்துகள்..

Asiya Omar said...

இப்ப தான் பூந்தோட்டம் வந்தேன்,வாசனை கமகம்ன்னு இருக்கு.செய்தியை அழகாக தொடுத்து இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.பவளமல்லிக்கு.

கோமதி அரசு said...

பூந்தோட்டம் நன்றாக இருக்கிறது.
பவழமல்லிக்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

பவளமல்லிக்கு வாழ்த்துக்கள்.

Suresh Subramanian said...

பவளமல்லிக்கு வாழ்த்துகள்..

www.rishvan.com

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

இங்கியும் அதே கதைதான். பொண்ணோட தோழி ஒருக்கா வீட்டுக்கு வந்திருந்தப்ப மெனக்கெட்டு 'கொலைவெறி'க்கு அர்த்தம் கேட்டுட்டுப் போனாங்க. அவ்வ்வ்வ்வ்..

பையரின் தமிழ்ச் சேவைக்கு பாராட்டுகள் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

இங்கியும் மாணவர்கள், இளையதலைமுறையினர் மற்றும் ஒரு சிலர் கிட்ட இருக்கற விழிப்புணர்வு மத்தவங்க கிட்ட இன்னும் முழுசா பரவ ஆரம்பிக்கலை.. 'ஊருக்கில்லாத அக்கறை நமக்கு மட்டும் ஏன்?'ங்கற மனப்பான்மைதான்.

ஆனா காலப்போக்குல இளைய தலைமுறையினர் எல்லா தரப்பினரையும் தன் வழிக்கு கொண்டாந்துடுவாங்க. அது நிச்சயம். அப்படி நடந்துட்டா மும்பை மட்டுமல்ல இந்தியா முழுக்கவே சுத்தமான நாடாகும்.

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தனபாலன்,

முதல் வருகைக்கும் வாசிச்சதுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.

சீக்கிரமே வரேன் உங்க தளத்துக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆர்.வி.எஸ்,

எல்லாத்துக்கும் தாங்கீஸ் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரசிகன்,

ரசிச்சு வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனக்கா,

முழுக்கா அனுமதி மறுக்கப்பட எப்படியும் வருஷங்கள் பிடிக்கும்.. அஜந்தாவை அதுக்குள்ள பார்த்துடுங்க :-))

பூங்கொத்துலேர்ந்து ஒரு பூவை உங்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்துல கொடுக்கறேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

அழகால மட்டுமல்ல அழகுக்கும் ஆ10 வர்றது காலம்காலமா நடக்கறதுதானே.. :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

அழகால மட்டுமல்ல அழகுக்கும் ஆ10 வர்றது காலம்காலமா நடக்கறதுதானே.. :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

வாழ்த்துகளுக்கும் வாசிச்சதுக்கும் நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

வாழ்த்துகளுக்கும் பூந்தோட்டத்துல உலாவினதுக்கும் நன்றிகள் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

வாழ்த்துகளுக்கும் பூந்தோட்டத்துல உலாவினதுக்கும் நன்றிகள் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷ்வன்,

முதல் வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்..

LinkWithin

Related Posts with Thumbnails