Monday, 17 October 2011

பூந்தோட்டம்.. (17-10-11 அன்று பூத்தவை)

தாமரை:
ஆயிரம்தான் சொல்லுங்க.. இயற்கைக்கு அடுத்தபடியா  அமைதியையும் நிம்மதியையும் மனுஷனோட வாழ்க்கையில் ரெண்டறக் கலந்த பாடல்கள்தான் கொடுக்குது. அது நம்மூரு நாட்டுப்பாடல்களானாலும் சரி, உலகப் புகழ் பெற்ற கஜல் பாடல்களானாலும் சரி. பெரும்பாலும் உருதுக் கவிதைகளே கஜல்ல பாடப்படுது. கஜல் பாடல்களோட முடிசூடா மன்னர் ஜக்ஜீத் சிங். பங்கஜ் உதாஸ் உட்பட நிறையப் பேர் கஜல் பாடல்களுக்காக பெயர் வாங்கியிருந்தாலும், இவரோடது ஒப்புமை சொல்ல முடியாதது. 1941-ல் ராஜஸ்தான்ல பிறந்த இவருக்கு, 'பண்டிட் ச்சகன் லால் ஷர்மா, உஸ்தாத் ஜாம்லால் கான்' ரெண்டு பேரும் குருக்களா இருந்திருக்காங்க. மும்பைக்கு வந்து பாடத் தொடங்கியவரை, "Unforgettables"ங்கற இவரோட கஜல் ஆல்பம்தான் முதன் முதல்ல புகழேணியில் ஏத்தி வெச்சதுன்னு சொல்லப் படுது. அதுக்கப்புறம் இவருக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.

இவரோட மனைவி பேரும் சித்ராதான். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஜோடியா எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை அளிச்சிருக்காங்க. இசையுலகத்துல இவங்கதான் முதன்முதல்ல (நிஜ)ஜோடியா பாடினவங்கன்னும் சொல்றாங்க. 1987-ல் வெளியான இவங்களோட "Beyond time"ங்கற ஆல்பம்தான் முதன் முதல்ல டிஜிட்டல்ல பதிவு செய்யப்பட்டதாம். ஜக்ஜீத் சிங்கிற்கு சமூக சேவையிலயும் ஆர்வம் உண்டு. அடிக்கடி அதுக்காகவே நிகழ்ச்சிகள் நடத்தி, வர்ற பணத்தையெல்லாம் சமூக அமைப்புகளுக்குக் கொடுத்துடுவாராம். இப்படிப்பட்ட பெருமையுடைய அவருக்கு நம்ம இந்திய அரசாங்கம் 2003-ல் பத்மபூஷண் விருது கொடுத்து கௌரவிச்சிருக்கு.

இன்னிக்கெல்லாம் அவரோட பாடல்களைக் கேட்டுக் கிட்டேயிருக்கலாம். கடவுளுக்கும் அவரோட பாடல்களைக் கேக்க ஆசை வந்துடுச்சோ என்னவோ.. மூளையில் ரத்தக் கசிவுக்காக மும்பையின் லீலாவதி ஆஸ்பத்திரியில சிகிச்சை எடுத்துக்கிட்டு இருந்தவரை அலுங்காம நலுங்காம கூட்டிட்டுப் போயிட்டார். இவரோட இழப்பு நிச்சயமா உருதுக் கவிதைகளுக்கும்(உருதுக் கவிதைகளை நக்மான்னும் சொல்லுவாங்க) நமக்கும் பெரிய இழப்புத்தான். அவரோட குரல் இருக்குதே... காதுல நுழைஞ்சு இதயம் வரைக்கும் இனிக்கக் கூடியது. இந்த ரெண்டு பாடல்களைக் கேட்டுப் பாருங்க.. அப்றம் நீங்களும் சொல்லுவீங்க.. முதல் பாடல் எனக்கு ரொம்பப் பிடிச்சது. கேக்கும்போதே மனசை என்னவோ செய்யுது பாருங்க.. அதான் கஜல் மற்றும் ஜக்ஜீத்தின் குரலின் மந்திர சக்தி..நந்தியா வட்டம்:
நடைபாதை எதுக்குங்க இருக்கு?...
நடைபாதைக் கடைகள் போடறதுக்குன்னு சர்ரியாச் சொன்னவங்க அவங்களுக்கு அவங்களே ஒரு சபாஷ் சொல்லிக்கலாம். சரி!!.. அப்ப எங்கே நடக்கறது?.. இதென்ன கேள்வி!!. ரோட்டுலதான். இவ்ளோ பெரிய ட்ரக்கு, பஸ்ஸு, ஆட்டோ, அப்றம் நாலுகால், ரெண்டுகால் வாகனங்கள்ன்னு இவ்ளோ வாகனங்கள் போகறச்சே நமக்கும் ஒரு ஓரமா இடம் கிடைக்காமயா போயிரும். தரைக்கும் உசரமான இடத்துக்கும் தாவித் தாவிச் சின்ன வயசுல விளையாடிப் பழகுன 'கல்லா.. மண்ணா' விளையாட்டை இப்ப நீங்க ரோட்டுல வெளையாடிட்டே போனாக் கூட யாரும் வித்தியாசமா நினைக்க மாட்டாங்க. அதெல்லாம் அவங்களும்தானே விளையாடிட்டு வருவாங்க. புதுசா பார்க்கறவங்களுக்குத்தான், ரோட்ல வண்டி வரப்ப நீங்க என்னவோ நடைபாதையில் ஏறிக்கற மாதிரியும், இல்லாதப்ப ரோட்ல நடக்கற மாதிரியும் தெரியும். அதுக்கென்னங்க பண்றது.

எங்கூர்ல ரயில் நிலையத்துக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் குறிப்பிட்ட தூரத்துக்கு நடைபாதைக் கடைகள் இருக்கக் கூடாதுன்னு உத்தரவே இருக்குது. ஆனா, மீறினாத்தானே ஜன நாயகம்.. இல்லையோ?? இங்கே நம்மாளுங்க இடம் பிடிக்கற விதமே தனி. மொதல்ல ச்சும்மா தரையில சாக்கு விரிச்சு வியாபாரம் ஆரம்பிக்கும். அப்றம் மெதுவா சாக்கு விரிப்பு கை வண்டிக்கு ஏறும். கை வண்டி எப்போ சுத்து முத்தும் கல் நார்க் கூரையோட நிரந்தரமான கடையாகுதுன்னு யாரும் கவனிக்கிறதில்லை. கல் நார் கடைசியில கல்லுக் கட்டிடமாகி ஆயுசுக்கும் அங்கியே உக்காந்துக்கும். மக்களும் ஒண்ணும் கண்டுக்கறதில்லை. ஆப்பீஸ் விட்டு வீடு போறச்சே ரயிலை விட்டு இறங்கியதும் ஷாப்பிங்கையும் முடிச்சுக்கலாம்ன்னா யாருக்குத்தான் கசக்கும்.

சிலசமயம் நடைபாதையைத் தாண்டி ரோட்டுலயும் கடைகளைப் பரப்பி வெச்சுடுவாங்க. கடைகளை அப்புறப்படுத்துறதுக்காக அடிக்கடி வண்டியை எடுத்துக்கிட்டு நகராட்சிக்காரங்களும் கிளம்புவாங்க.. வண்டி வருதுன்னு சொல்றதுக்கும் அங்கே ஒருத்தர் இருப்பாரு. வண்டியைக் கண்ணுல கண்டதும் அவர் சிக்னல் கொடுத்துடுவார். உடனேயே அத்தனை பேரும் தபதபன்னு கூடையைத் தூக்கிட்டு அப்பாவி மாதிரி நடைபாதைக்கு ஏறிக்குவாங்க. ஆப்ட்ட கூடைகளை அள்ளிட்டு வண்டி போயிடும்.  எங்கூரு நகராட்சியும் இன்னும் இன்னதுதான் வியாபாரப் பகுதின்னு நியமிக்காம இருக்காமே.. மொதல்ல அதை நியமிக்கட்டும்.. அப்றம் பார்த்துக்கலாம். அதுவரைக்கும்??... கல்லா மண்ணாதான் :-)

நித்ய கல்யாணி:
கொஞ்ச நாளா இந்த மின்சாரத்தோட கண்ணாமூச்சி ஆட்டம் கூடுதலாப் போச்சு. தெனத்துக்கும் குறைஞ்சது எட்டு மணி நேரமாவது கரண்ட் கட் ஆகுது. விஷயம் என்னான்னா, எங்கூரு மின்சாரத் துறைக்கும் WCLன்னு சொல்லப்படற western coalfields Limitedக்குமிடையே வாய்க்கா வரப்புத் தகராறு நடக்குது. ஈரமான நிலக்கரியைக் கொடுத்துட்டாங்க, தேவையான அளவு நிலக்கரியை சப்ளை செய்யலைன்னு wcl மேல குற்றச்சாட்டுகள் அடுக்கப் பட்டிருக்கு. நகரங்கள்லயாவது பரவாயில்லைன்னு தோணும்படியா கிராமப்புறங்கள்ல பதினஞ்சு மணி நேரமாவது மின்வெட்டு அவங்களைச் சிரமப்படுத்துது. பாவம் விவசாயிகளும் சிறுதொழில் அதிபர்களும்..

சாமந்தி:
மும்பைல லோக்கல் ரயில்கள்ல பெண்கள் நிம்மதியா பயணம் செய்யணும்ன்னுதான் பெண்கள் பெட்டி இருக்குதுன்னு நாங்க நினைச்சுட்டிருந்தோம். ஆனா, இப்ப கொஞ்சம் கூட பாதுகாப்பில்லாத நிலையில் அவங்க பயணம் நடக்குது. வழிப்பறியெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமாப் போச்சு. ரயில்வே போலீஸ் எதுக்கு இருக்குதுன்னு கேக்கறீங்களா?.. எரியுற தீயில் எண்ணெய்யை ஊத்தறதுக்குத்தான். சீண்டல்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், இன்னொரு ரயில்வே ஸ்டேஷனின் காவலர் கிட்ட புகார் செஞ்சப்ப, "இப்ப என்ன நடக்கக் கூடாததா நடந்துடுச்சு?"ன்னு அவங்க அலட்சியமா கேட்டதால கொந்தளிச்சுட்டாங்க.  எங்க சொல்லணுமோ அங்க சொன்னதுனால, அலட்சியம் செஞ்ச ரெண்டு போலீசையும் இப்ப சஸ்பெண்ட் செஞ்சு வெச்சிருக்காங்க.

ராத்திரி பதினொரு மணிக்கப்றம் மூணு லேடீஸ் பொட்டிகள்ல ஒண்ணை, பொதுப் பொட்டியாக்குறதுக்கும் ஆட்சேபம் எழுந்துருக்கு. அது வரைக்கும் கூட காத்திருக்காம, அதுக்கு முன்னாடியே ஆண்கள் அந்தப் பெட்டியை ஆக்கிரமிச்சுக்கிடறாங்க. போதுமான அளவுக்கு ஆட்கள் இல்லாததால பெண்கள் பெட்டிக்கு காவலர்கள் வர்றதும் குறைச்சலான நேரம்தான். ரவுடிகள், வழிப்பறிக்காரர்கள்ன்னு பல இடர்களுக்கு மத்தியில் உசிரைக் கையில் பிடிச்சுக் கிட்டே பெண்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கு.

தங்க அரளி:
 நவராத்திரி சமயத்துல எங்கூர்ல தங்கம் ரொம்ப மலிவா இருக்கும். மக்களெல்லாம் வாங்கிட்டுப்போயி ஆயுத பூஜையன்னிக்கு வீடு வீடாப் போயி பெரியவங்க கையில் தங்கத்தைக் கொடுத்துட்டு, அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்குவாங்க. அன்னிக்கு தங்கம் கொடுத்தா, அந்த வருஷம் செல்வச் செழிப்புக்குக் குறைவிருக்காதுங்கறது அவங்க நம்பிக்கை. எப்பவும் மாதிரி இந்தத் தடவையும் அஞ்சு ரூபாய்க்கு வாங்கிக் கிட்டேன். அதுவே கடைசியில சீப்பட்டுக் கிடந்தது.

இது எனக்கு அறிமுகமானது நான் ஒரு நவராத்திரி சமயத்துல முதன்முதலா மும்பையில் அடியெடுத்து வெச்சப்பத்தான். "ஆன்ட்டி.. இந்தாங்க"ன்னு சொல்லி கையில் திணிச்சுட்டுப் போச்சுங்க குழந்தைங்கல்லாம். அப்புறம், அப்டி வர்ற குழந்தைங்களுக்காகவே சாக்லெட்டெல்லாம் வாங்கி வெச்சிட்டு காத்திருப்போம். தங்கம்ன்னு சொல்லிட்டு கண்ணுல காட்டவேயில்லைல்ல.. இதாங்க தங்கம். நவராத்திரி முடிஞ்சு போனா என்ன?.. இந்தக் கொலு நிரந்தரமா இங்கியேதானே இருக்கப் போவுது. கொலுவைப் பார்த்துட்டு, நிறைய தங்கம் எடுத்துக்கோங்க :-)
எங்க வீட்டுக் கொலுவின் சில காட்சிகள்


இந்த இலைகள்தான் தங்கம்ன்னு சொல்லப்படற அப்டா இலைகள்.. வேண மட்டும் எடுத்துக்கோங்க. எனக்கு கூகிளார் கொடுத்தார் :-)


இதுக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கணுமே.. இருக்குதே! :-). முன்னொரு காலத்துல அயோத்தியில் கட்ஸா என்ற இளைஞர் அந்தக் கால குருகுல வழக்கப்படி குரு வரதந்து கிட்ட ஆய கலைகள் அறுபத்தி நாலையும் கத்துக்கிட்டார். இப்ப மாதிரி மந்த்லி ஃபீஸெல்லாம் கிடையாது, அந்தக் காலத்துல படிச்சு முடிச்சுட்டு வெளியே போறப்ப குரு தட்சணையா ஒன் டைம் பேமெண்ட்தான். அந்தக் குரு ரொம்ப நல்லவர்.. ஃபீஸெல்லாம் வேணாம்ன்னுட்டார்.(பொழைக்கத் தெரியலையோ :-)) ஆனா இளைஞர் விடலை. "குரு தட்சணை கொடுத்தாத்தான் கத்துக்கிட்ட வித்தை பலிக்குமாமே, அதனால கொடுத்துத்தான் தீருவேன்"ன்னு நிக்கிறார்.

குருவும் "சரி, உன்னிஷ்டம். கத்துக்கிட்ட ஒவ்வொரு வித்தைக்கும் ஒரு கோடி தங்க நாணயங்கள்ங்கற கணக்குல பதினாலு கலைகளுக்கும் குரு தட்சணை கொடு"ங்கறார். அப்டியாவது சீடரோட நச்சரிப்பு குறையாதாங்கற நம்பிக்கையில. சீடர் நேரா ஸ்ரீராம் கிட்ட போனார். விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டார். ஸ்ரீராமும் "உங்கூர்ல இருக்கற அப்டா மரத்துக்கிட்ட வெயிட் பண்ணு, நான் வரேன்"ன்னார். நம்மாளு மூணு நாளா காத்திருந்தார்.

ராமச்சந்திரப் பிரபுவும் கடைசியில் குபேரரை அங்க கூட்டிக்கிட்டு வந்தார். ரெண்டு பேருமாச் சேர்ந்து அப்டா மரத்தோட இலைகளெல்லாம் தங்க நாணயமா மாறும்படி செஞ்சாங்க. இதை ஸ்ரீராம் மட்டுமே செஞ்சுருக்கலாமே.. குபேரர் எதுக்காம்?.. ஒரு வேளை மரத்துல இலைகள் தட்டுப்பாடு ஆச்சுன்னா, அவசரத்துக்கு குபேரர் கிட்ட வாங்கிக்கலாம்ன்னு ஐடியாவோ என்னவோ?.. :-)

சீடரும் நாணயங்களையெல்லாம் கொண்டுக்கிட்டுப் போயி குரு கிட்ட கொடுத்துட்டு, மிச்சப்பட்ட நாணயங்களை ஊர் மக்களுக்கெல்லாம் கொடுத்தாராம். அந்தச் சம்பவம் நடந்தது தசரா அன்னிக்குத்தான்னு இதுக்குள்ள கரெக்டா கண்டு பிடிச்சிருப்பீங்களே :-)). அந்த ஞாபகமாத்தான் இன்னிக்கும் மக்கள் இலைகளைக் கொடுத்து ஒருத்தருக்கொருத்தர் வாழ்த்திக்கறாங்க.

33 comments:

Ramani said...

தங்கமான குரலுக்குச் சொந்தக்காரரின்
அருமையான இரண்டு பாடல்களும் அறிமுகமும்
எனத் துவங்கி இடையில் கல்லா மண்ணா
கரண்ட் கட் எனத் தொடர்ந்து
முடிவில் தங்கக் கதையோடு முடித்த
கதம்ப மாலை அருமை
அருமையாகத் தொடுத்துத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 1

புதுகைத் தென்றல் said...

சோனா தெரியும். ஆனா அதுக்கான கதை இப்பத்தான் தெரியும். நன்றிப்பா. பூந்தோட்டத்தில் வாசனை இதமாக இருந்தது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பூந்தோட்டம் பல்வேறு மணங்களுடன் மனதைக் கவர்வதாக இருந்தது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Lakshmi said...

ஒரே பதிவுல எவ்வளவு விஷய்ங்கள் சொல்லி இருக்கே. போனவாரம் புதுகைதென்றல் பக்கமும் சித்ரா, ஜக்ஜித்சிங்க் பாத்தேன் நீயும் அதே. அவங்கரெண்டுபேரும் சேந்துபாடும்போது கண்ணைமூடிகிட்டு ரசிக்கனும் அவ்வளவு சுகமா இருக்கும்.
சோனா இலைகள் இங்கயும் குழந்தைகள் வந்து தருவாங்க. அதுபற்றி இப்பதான் தெரியவந்தது.

ஷைலஜா said...

நல்ல தகவல்கள்...மனோவசியம் செய்யும் குரலுக்குசொந்தக்காரர்களைப்பற்றி ஜோரா எழுதி இருக்கீங்க பூந்தோட்டம் மணத்துக்கொட்டுது!

ஹேமா said...

பூந்தோட்டம் வாசமோ வாசம் இனிய பாடல்களோடு !

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல்கஉடன் பூந்தோட்டம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்....

கோமதி அரசு said...

சித்ரா,ஜக்ஜித்சிங் பாடல்கள் அருமை.மனதை நிறைத்து விட்டது உங்களுக்கு நன்றி.

ஸ்ரீராமச்சந்திரப் பிரபு சீனுவாசனாய் இருந்த போது பத்மாவதி தாயாரை திருமணம் செய்ய குபேரரிடம் கடன் வாங்கினார் என்பார்கள். அதனால் அவரை அழைத்து வந்து விட்டார் போலும்.

கல்லா,மண்ணா நல்லா இருக்கிறது.
கொலு அருமை.

மலர்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாம் அருமை சாந்தி.

தங்க இலைகளை வேண்டு மட்டும் எடுத்துக் கொண்டேன்.
நன்றி சாந்தி.

RAMVI said...

ஜக்ஜீத் சித்ரா அருமையான ஜோடி.நானும் இவர்களின் பாடல்களை விரும்பிக்கேட்பேன்.

நல்ல அலசல் பதிவு.

அப்டா இலைகள் பற்றிய குறிப்பு அருமை.

மாதேவி said...

மலர்களின் நந்தவனம்.

கதை தெரிந்துகொண்டோம்.

r.v.saravanan said...

இயற்கைக்கு அடுத்தபடியா அமைதியையும் நிம்மதியையும் மனுஷனோட வாழ்க்கையில் ரெண்டறக் கலந்த பாடல்கள்தான் கொடுக்குது.

சரியான வார்த்தை

இலைகள் பற்றிய தகவல்களுக்கு நன்றி

RVS said...

தங்கம் தங்கமா எழுதியிருக்கீங்க மேடம். :-)

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. கொலு அருமை:)!
பூந்தோட்டம் மிகப் பிடித்துள்ளது. தொடருங்கள்.

இராஜராஜேஸ்வரி said...

வண்ணமயமான மணம் மிக்க மலர்களை நந்தவனத்தில் கண்களையும் கருத்தையும் அள்ளிக்கொள்ளும் வகையில் பாடல் பகிர்வுடன் தொகுத்தளித்தமைக்குப் பாராட்டுக்கள்>

kshetrayatraa said...

அப்டா இலைகள் என்றால் என்ன..? இந்த இலைகளை பார்த்தால் வன்னி மரத்து இலைகள் போல் இருக்கிறது. நவராத்திரியின் போது மும்பையில் இந்த இலைகள் விற்கப்படுகிறது. ஆனால் காரணம் கேட்ட போது அதை வைத்து பூஜிப்பார்கள் என்று தெரியவந்தது. is it right..?
as far as i know there is a story of pandavas vanavasa coming to an end with vijayadasami and they took their weapons kept hidden in the vanni tree branches..
Good description of events happening in mumbai....

சே.குமார் said...

பல்வேறு மணங்களுடன் பூந்தோட்டம்.

அமைதிச்சாரல் said...

வாங்க ரமணி,

வாசிச்சதுக்கு நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

பூந்தோட்டத்தை வருடிச் சென்ற தென்றலுக்கு நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க வை.கோ ஐயா,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க லஷ்மிம்மா,

இசையுலகுக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பு இது..

அமைதிச்சாரல் said...

வாங்க ஷைலஜா,

இன்னிக்கெல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இனிமையான பாடல்களில்லையா அவரோடது..

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹேமா,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு.

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

நட்சத்திர வாரத்துல அருமையான இடுகைகளால அசத்திட்டீங்க போங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க கோமதிம்மா,

முதல் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது. சிறுவயது நினைவுகளை என்ன அழகா அடுக்கறார்.!!!!!

ஆஹா.. அப்ப அதுக்குத்தான் குபேரர் வந்தாரா.. :-)))

அமைதிச்சாரல் said...

வாங்க ராம்வி,

தங்கம் எடுத்துக்கிட்டீங்களா :-)

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

வாசிச்சதுக்கு நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க சரவணன்,

வாசிச்சதுக்கு நன்றிங்க..

ஒருத்தர் முகத்தை ஒருத்தர் அடிக்கடி பார்த்துக்க முடியாத இன்றைய அவசர உலகத்துல இதுமாதிரி பண்டிகைகள்தான் மக்களை இன்னும் உயிர்ப்போடவும் வெச்சிருக்குது.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆர்.வி.எஸ்,

வைரம் போன்ற கருத்துக்கு நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

தங்கம் எடுத்துக்கிட்டீங்களா :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வாசிச்சதுக்கு நன்றிங்க

அமைதிச்சாரல் said...

வாங்க ஷேத்ரயாத்ரா,

வன்னி வேற, இது வேற வகைகள்.

பூஜை சமயங்கள்ல பூஜைக்குத் தேவையான பூக்கள் இலைகளோட,வன்னி இலைகளும் இங்க கலந்து வெச்சு விப்பாங்க..

நவராத்திரியில் எல்லாருக்கும் தங்க இலைகள் கொடுக்கும்போது சாமிக்கும் கொடுக்கறதுதானே முறை
:-).

அமைதிச்சாரல் said...

வாங்க குமார்,

பூந்தோட்டத்துக்கு வந்ததற்கு நன்றி :-)

ராமலக்ஷ்மி said...

தங்கம் விற்கிற விலையில் தாம்பூலத்துடன் கொடுத்தால் வேண்டாம்னா சொல்லப் போறோம்:)? தங்க இலையின் வடிவம் சிறகு விரித்த வண்ணத்துப் பூச்சியாக வெகு அழகு.

LinkWithin

Related Posts with Thumbnails