Sunday 15 January 2012

தாத்தா பாட்டி சொல்றதைக் கேளுங்க..


இணையத்துலேர்ந்து சுட்ட பொங்கல்..
கடவுளோட படைப்புகள்லயே ரொம்பவும் அற்புதமான படைப்பு என்ன தெரியுமா?.. மனுஷனைப் படைச்சதுதான்.மத்த படைப்புகளில் இல்லாத ஒரு அற்புதமான சக்தி மனுஷனுக்கு இருக்கு. அதான் பேசும் சக்தி.மற்ற மிருகங்களுக்கும் வாயிருந்தாலும், மனசுல தோணற எண்ணங்களை வார்த்தையால் வெளிப்படுத்தும் திறமை மனுஷனுக்கு மட்டுமே இருக்கு. அப்படிப்பட்ட மனுஷப்படைப்பை ஏந்தான் படைச்சோமோன்னு அந்தக் கடவுளே நொந்துக்கற அளவுக்கு அந்த திறமையை தவறா உபயோகப் படுத்துறதும் கூட மனுஷனோட சிறப்பம்சம்தானோ.

சில பேர் இருக்காங்க.. நகைச்சுவைங்கற பெயர்ல எப்பவும் மத்தவங்க மனசைப் புண்படுத்தி அதுல சந்தோஷப்படுறதையே வழக்கமா வெச்சிருப்பாங்கற ரகம். பொதுவா நகைச்சுவைங்கறது நாமளும் சிரிக்கணும், நாம யாரை அல்லது எதைப்பத்திக் கிண்டல் செய்யறோமோ அவங்களும் சிரிக்கணும். அதான் நல்ல நகைச்சுவை. அப்படியில்லாம ஒருத்தரோட உருவத்தையோ இல்லை அவங்களோட தனிப்பட்ட குணங்களையோ எள்ளல் செய்யறது நிச்சயமா குரூரமானது. சம்பந்தப்பட்டவங்க அழுதுக்கிட்டிருக்கப்ப மத்தவங்க சிரிக்கிறதுங்கறதை நகைச்சுவைங்கற வகையில் சேர்க்கறதை நினைச்சுக் கூட பார்க்க முடியலை.

இன்னும் சில ரகங்கள் இருக்காங்க. பொதுச்சபையில் எப்போ எதைப் பேசணும்ன்னே ஒரு இங்கிதமில்லாம வார்த்தைகளை வெளியிட்டுடுவாங்க. உதாரணமா, கல்யாணமாகி ஒரு வருசம்தான் ஆகியிருக்கும். அந்தப் பொண்ணைப் பார்த்து, “ஏம்மா.. ஏதாவது விசேஷமுண்டா?..”ன்னு கேப்பாங்க. கணவர் வெளி நாட்ல இருக்க, பொண்ணு அம்மா வீட்டுக்கு ஒரு ஆறுதலுக்காக வந்துருக்கும். அதைத் தெரிஞ்சு வெச்சிருந்தாலும், அந்தப் பொண்ணைப் பார்த்து, “ஏம்மா, ரொம்ப நாளா இங்கேயிருக்கியே?.. உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினையா?”ன்னு கேப்பாங்க. "ஆமா,.. பிரச்சினைதான். இன்னும் அம்பது பவுன் நகை கொண்டாந்தாத்தான் வீட்டுக்கு வரலாம்ன்னு எங்க மாமியார் சொல்லிட்டாங்க. எம்மேல இவ்ளோ அக்கறை காமிக்கிற நீங்க அதைப்போட்டு எங்கூர்ல கொண்டு விடுங்களேன்னு அந்தப் பொண்ணு திருப்பிச் சொன்னா இவங்க நிலை என்ன?. இதெல்லாம் தேவையா?.. எங்க கல்யாணத்துக்கப்புறம் முதல் முறையா ஊருக்குப் போனப்ப, ரெண்டு மாசம் லீவு எடுத்துட்டுப் போனோம். ஊருக்குப் போயிச் சுமார் பத்து நாள்தான் ஆகியிருக்கும். ரங்க்ஸைப் பார்த்து ஒரு உறவு, “என்னப்பா?.. தொடர்ந்தாப்ல பத்து நாளா ஊர்ல இருக்கியே, வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துட்டியா..”ன்னு கேட்டது. அடப்பாவிகளா..ன்னு நொந்து நூடுல்ஸாயிட்டோம்.

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” ன்னு இப்படிப்பட்ட ஆட்களுக்காகத்தான் வள்ளுவர் பாடி வெச்சிருக்காரோ என்னவோ!!. ஒண்ணும் புரியலை போங்க :-)

அதே மாதிரி, மறந்தும் மத்தவங்க கிட்ட ஒரு இன்சொல் சொல்லாம எப்பவும் சுடுசொற்களால் அபிஷேகம் செஞ்சுக்கிட்டிருக்கறவங்களும் உண்டுதான். ஒரு சொல்லால பிரிஞ்ச குடும்பங்களும் உண்டு, இணைஞ்ச குடும்பங்களும் உண்டு. இதைத்தானே “ஒரு சொல் வெல்லும்,.. ஒரு சொல் கொல்லும்”ன்னு சொல்லி வெச்சிருக்காங்க. நாலு நல்ல வார்த்தை சொல்றதால மனுஷங்களுக்கு என்ன நட்டம் ஆகிடப் போகுதுன்னே புரிய மாட்டேங்குது.

சொல்லால அவமதிக்கிறது ஒரு வகைன்னா, செயலால அவமதிக்கிறது இன்னொரு வகை. இப்ப,.. நல்ல நாளும் அதுவுமா நீங்க உங்க நண்பர் வீட்டுக்குப் போறீங்கன்னு வெச்சுக்குவோம். அட!.. இதோ,.. காணும் பொங்கல் வருது. அன்னிக்கு ஃப்ரெண்ட் வீட்டுக்கு ஒரு விசிட் அடிக்கலாமேன்னு குடும்பத்தோட போறீங்க. ஒரு ஃப்ரெண்டு வீட்ல உங்க தலையை வாசல்ல கண்டதுமே, அந்த வீட்டுப் பையன், “அப்பா,..நாராயணன் மாமா வந்துருக்கார்”ன்னு சொன்னதும், உங்க ஃப்ரெண்டு ஓடி வந்து,.. ”வாடா மாப்ளே..”ன்னு கையைப் பிடிச்சுட்டு வர்ற உங்க பையனைக் கொஞ்சிட்டு, “வாம்மா..”ன்னு உங்க தங்க்ஸையும் வாய் நிறைய அழைச்சு வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போறார். வீட்டுக்குள்ள போனதும், அவங்க தங்க்ஸும் கலகலன்னு அன்பா உபசரிக்கிறார். இருந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும்ன்னுட்டு அவங்க தங்க்ஸ் நிமிஷத்துல விருந்துச் சாப்பாட்டைத் தயாரிச்சுடறாங்க. நேரம் போறதே தெரியாம உக்காந்து சந்தோஷமாப் பேசிச் சிரிச்சு பொழுதைக் கழிக்கிறீங்க.

சரி,..வீட்டுக்குக் கிளம்பலாம்ன்னு திரும்பி வந்துட்டிருக்கறப்ப அதே ஏரியாவுல இருக்கற இன்னொரு ஃப்ரெண்டு வீட்டுக்கும் போயி வாழ்த்திட்டு வந்துடலாமேன்னு நினைச்சு அங்கியும் போறீங்க. நீங்க வர்றதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி அந்த வீட்டு வாண்டு வாசல்ல விளையாடிட்டு இருக்குது. உள் தாழ்ப்பாள் போட்டிருக்கற கம்பிக் கதவை நீங்களே திறந்துட்டு உள்ள வர்றதைப் பார்த்தும் கவனிக்காத மாதிரி குடும்பமே டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்ல மூழ்கியிருக்குது. திடீர்ன்னு, அப்பத்தான் உங்களைக் கவனிச்ச மாதிரி உங்க ஃப்ரெண்டு வெளியே வந்து, “வாங்க..”ன்னு ஒப்புக்கு பொத்தாம் பொதுவாச் சொல்லிட்டு உள்ளே போயிடறார். நீங்களும் தொடர்ந்து வீட்டுக்குள்ள போறீங்க.

உள்ளே, வீட்ல மொத்தப் பேரும் டிவி நிகழ்ச்சியோட சுவாரஸ்யத்துல மூழ்கியிருக்காங்க. நீங்க இந்த நேரத்துல வந்ததை அவங்க விரும்பலைங்கறதை அவங்க முகமே காட்டிக் கொடுக்குது. பொங்கல் பண்டிகையின் தாத்பரியத்தைப் பத்தி, வட நாட்டு நடிகை, “என்க்கூ பொங்கள் ரோம்ப ப்டிக்கும். ஆக்சுவலி நானு தீவ்லி அன்னிக்கும் பொங்கள் சாப்டும்”ன்னு சிலாகிச்சுப் பேசற தத்துவ முத்துகளைக் கேக்கறது தடங்கல் பட்டுப் போச்சேன்னு வேண்டா வெறுப்பா எழுந்து போயி, கடனேன்னு சீனி போட்ட வெந்நீர்த் தண்ணியை ‘டீ’ங்கற பேர்ல கொண்டாந்து டீபாய்ல கொஞ்சம் சிதறி விழுறபடிக்கு வெச்சுட்டுப் போறாங்க அவங்க தங்க்ஸ். அங்கேயிருக்கற மொத்த நேரமும் நீங்க மட்டும்.. நீங்க மட்டுமே பேசிக்கிட்டிருக்கறீங்க. அதை டிவியில் பாதிக் கவனமும், உங்க கிட்ட பாதிக் கவனமுமா கேட்டுட்டிருக்காரு உங்க நண்பர்.

இடைக்கிடையே, உங்க பேச்சுக் குரல் தனக்கு இடைஞ்சலா இருக்குன்னு சொல்லிக் காட்டுற மாதிரி உச்சுக் கொட்டிக்கிட்டேயிருக்காங்க அந்த வீட்டுப் பெரியவங்க. நல்லவங்களுக்கு அடையாளம் சொல்லிக்காம கிளம்புறதுதான்னு, நீங்க கிளம்புறப்ப, ‘சரி’ன்னு ஒத்தை வார்த்தையில் தலையாட்டிட்டு மறுபடியும் டிவியில் மூழ்கிடறாங்க. அதுக்கு மேலும் நீங்க அங்க நிப்பீங்களா என்ன??
  
இப்ப சொல்லுங்க,.. இந்த ரெண்டு வீடுகள்ல எந்த வீட்டுக்கு அடிக்கடிப் போகணும்ன்னு தோணும்?.. உங்க கருத்தை விட்டுத் தள்ளுங்க. உங்க ஃப்ரெண்ட் எது செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்குன்னு நட்பைப் பெருசா நினைக்கிற "நண்பேண்டா". அதுவே, உங்க குடும்பத்தாரைக் கேட்டுப் பாருங்க. நிச்சயமா முதல்ல போன ஃப்ரெண்டு வீட்டுக்குத்தான் அவங்க ஓட்டுப் போடுவாங்க. வீட்டுக்கு வந்தவங்களை அதுவும் நல்ல நாளும்  அதுவுமா குடும்பத்தோட வந்துருக்கறவங்களை ‘ஏன் வந்தே?’ன்னு சொல்லாம சொல்ற மாதிரி நடந்துக்கறவங்க வீட்டு வாசப்படியை மிதிக்காம இருக்கறதே நல்லது. இதைத்தான் நம்ம முன்னோர்கள், ‘மதியார் தலைவாசல் மிதியாதே’ன்னு சொல்லி வெச்சுட்டுப் போயிருக்காங்க.

கோடி ரூபா கொடுத்தாக் கூட உன்னை மதிக்காதவர் வீட்டுக்குப் போகாதே,  அவங்க அன்பில்லாம கொடுக்கறது அமிர்தமேயானாலும் அதைச் சாப்புடாதேன்னு நம்ம நாவப்பழப் பாட்டி, அதாங்க ஔவையாரே பாடி வைக்கலையா,..
“மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்.
உண்ணீருண் ணீரென் உபசரியார் தன்மனையில்
உண்ணாமை கோடி பெறும்”

ஏன்னா,.. அவங்களும் அப்படித்தான் ஒருத்தர் வேண்டா வெறுப்பா ஒப்புக்காகக் கொடுக்கறதை சாப்புட மாட்டாங்க. மீறிச் சாப்பிட நேர்ந்தா அவங்க மனநிலை எப்படி இருக்கும்ங்கறதையும் சொல்லி வெச்சிருக்காங்க.
“காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதேவீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தைய்யையோ
அன்பிலாள் இட்ட அமுது.”

இது ஔவையாருக்கு மட்டுமல்ல, நமக்கும் பொதுவானதுதான். “‘வா’ன்னு ஒரு வார்த்தை சொல்லலை பார்த்துக்கோ. இனிமே அவன் வீட்டுப் படியை மிதிப்பேனா?.. செத்தாலும் மிதிக்க மாட்டேன்..”ன்னு எத்தனை பேர் வீரசபதம் எடுத்திருப்போம். எத்தனை விஷேச வீடுகள்ல, “சாப்பிடுன்னு ஒரு வார்த்தை சொல்லலை”ன்னுட்டு உறவுகளுக்குள்ளே சண்டைகள் நடக்கறதைப் பார்த்திருப்போம்.

இதெல்லாம் எதுக்குங்க?..தேவையா?. மனுஷனாப் பிறந்தவர்கள் ஒருத்தரையொருத்தர் மதிக்கவும், அன்பா நடத்தவும் தெரிஞ்சுக்கணும். எடுத்திருக்கறது ஒரு பிறவி. அடுத்த பிறவின்னு உண்டா இல்லியான்னே மொதல்ல யாருக்கும் தெரியாது. அது அவங்கவங்க தனிப்பட்ட நம்பிக்கைகள். அப்டியே இன்னொரு பிறவி எடுத்தாலும், மறுபடியும் இதே உறவுமுறைகளோடப் பிறப்போம்ன்னோ ஒருத்தரையொருத்தர் சந்திச்சுக்குவோம்ன்னோ நிச்சயமில்லை. அப்றம் எதுக்காக ஒருத்தரையொருத்தர் தேவையில்லாம காயப்படுத்திக்கணும்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”ன்னு வள்ளுவர் தாத்தா பாடி வெச்சுருக்கறதைப் பின்பற்றி நம்மை மதிக்காதவங்களா இருந்தாலும், இந்த நல்ல நாளும் அதுவுமா நம்ம வீட்டுக்கு வந்தா, அவங்களையும் நல்லபடியா நடத்துவோம்.பழையன கழிக்கும் போகிப் பண்டிகையில் பொறாமை, போட்டி மனப்பான்மை, கெட்ட எண்ணங்கள்ன்னு எல்லாத்தையும் எரிச்சுட்டு, புதியன பெருகும் பொங்கல் பண்டிகையில் சந்தோஷங்களை மட்டுமே பொங்க வைப்போம்.


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் :-)

டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்..



53 comments:

Paleo God said...

பொங்கல் வாழ்த்துக்கள். :))

பால கணேஷ் said...

தோழி... நல்ல நாள்ல அரிய கருத்துக்களைப் பகிர்ந்திருக்கீங்க. ஒருத்தர் வீட்டுக்குப் போனப்போ அவங்க டிவியில கவனத்தை வெச்சுக்கிட்டு ஒப்புக்குப் பேசறதக் கேட்டு வெறுப்பாகி திரும்பி வந்த அனுபவம் எனக்குண்டு. (அப்புறம் அங்க போறதில்ல. உங்களுக்கும் அனுபவமோ? ஹி... ஹி...) உங்களுக்கும் உங்கள் வீட்டில் அனைவருக்கும் என் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

இனிய் பொங்கல் வாழ்த்துக்கள்,., கதையை பிறகு வந்து படிக்கிறேன்..சாந்தி

உணவு உலகம் said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள், சகோ.

உணவு உலகம் said...

நல்ல பகிர்வு. நான் ரசித்தேன். நன்றி.

Asiya Omar said...

மிக நல்ல பகிர்வு சாந்தி.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
//கோடி ரூபா கொடுத்தாக் கூட உன்னை மதிக்காதவர் வீட்டுக்குப் போகாதே, அவங்க அன்பில்லாம கொடுக்கறது அமிர்தமேயானாலும் அதைச் சாப்புடாதேன்னு நம்ம நாவப்பழப் பாட்டி, அதாங்க ஔவையாரே பாடி வைக்கலையா,..//

மிகச் சரிங்க.ஒருத்தங்க வீட்டூக்கு வாங்கன்னு கூப்பிட்டங்க,நானும் சரிங்கன்னு சொன்னேன்,உடனே பதிலுக்கு அவங்க,குடுகுடுன்னு இப்பவே வந்திடாதீங்க,போன் செய்திட்டு வாங்கன்னாங்களே பார்க்கணும்.திரும்ப அந்தப் பக்கம் நான் எட்டிக் கூட பார்க்கலை.

RVS said...

எவ்வளவு புத்திமதி சொல்லியிருக்கீங்க... ஓகே மேடம். பொங்கல் நல் வாழ்த்துகள். :-)

குறையொன்றுமில்லை. said...

சாந்தி இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள் பொங்கல் எல்லாம் நல்லா கொண்டாடினீங்களா? இனிய உளவாக இன்னாதகூறல் நல்லா சொல்லி இருக்கே. என்கிட்ட இப்படித்தான் சிலபேரு ஏன் தனியே இருக்கீங்க மறுமக கூட சண்டையான்னுதான் கேக்குராங்க என்னத்தைச்சொல்ல? மருமகள்கள் வேர வேர ஜாதி காரங்க இல்லியா அதுவேர வம்பு பேசுரவங்களுக்கு இன்னும் வசதி.

இராஜராஜேஸ்வரி said...

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று”

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பகிர்வு. நல்ல கருத்துகள்.

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

ஷைலஜா said...

..இன்னும் சில ரகங்கள் இருக்காங்க. பொதுச்சபையில் எப்போ எதைப் பேசணும்ன்னே ஒரு இங்கிதமில்லாம வார்த்தைகளை வெளியிட்டுடுவாங்க///

ரொம்ப கரெக்ட்டா சொன்னீங்க... ஆனா தான் தான் ரொம்ப சரியாப்பேசறமாதிரியும் சொல்லிப்பாங்க... இவங்களை பொருட்படுத்தாம விட்டா மேல மேல பொதுச்சபைல வந்து வார்த்தைகளை வெளியிடுவாங்க...அது சம்பந்தப்பட்டவருக்கு வேதனை தருவதை நினைச்சிம் பார்க்கமாட்டாங்க... பாதகம் செய்பவரைக்கண்டால் பயம் கொள்ளல் ஆகாதுபாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்று சொன்ன பாரதிக்கு ஜே! நான் பாரதி பக்தை.

ஹேமா said...

சாரல்...நல்லதொரு கதையோடு பொங்கலா.அன்பான பொங்கல் நாள் வாழ்த்துகள் !

மனோ சாமிநாதன் said...

//மனுஷனாப் பிறந்தவர்கள் ஒருத்தரையொருத்தர் மதிக்கவும், அன்பா நடத்தவும் தெரிஞ்சுக்கணும். எடுத்திருக்கறது ஒரு பிறவி. அடுத்த பிறவின்னு உண்டா இல்லியான்னே மொதல்ல யாருக்கும் தெரியாது. அது அவங்கவங்க தனிப்பட்ட நம்பிக்கைகள். அப்டியே இன்னொரு பிறவி எடுத்தாலும், மறுபடியும் இதே உறவுமுறைகளோடப் பிறப்போம்ன்னோ ஒருத்தரையொருத்தர் சந்திச்சுக்குவோம்ன்னோ நிச்சயமில்லை. அப்றம் எதுக்காக ஒருத்தரையொருத்தர் தேவையில்லாம காயப்படுத்திக்கணும்.//

அருமையான வரிகள் சாந்தி!

இந்த‌‌ ஞானோத‌ய‌ம் ம‌ட்டும் அனைவ‌ருக்கும் இருந்தால் உல‌க‌ம் எத்த‌னை சொர்க்க‌ பூமியாக‌ இருக்கும்!!

தமிழ் said...

வணக்கம் சாரல் அக்கா,

ரொம்ப நாளைக்கு அப்புறம் பாக்குறோம்! நலமா?? தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!
நிலையில்லாத மனிதர்களைப் பற்றி, நிலைத்த பாடல்களைக் கொண்டு நல்ல விளக்கம். தொலைக் காட்சி வந்த பிறகு எல்லாமே தொலைந்து விட்டது. யாரேனும் வந்தால் எங்கள் வீட்டில் நாங்கள் டீவியை நிறுத்தி விடுவோம். நன்றி!

சமுத்ரா said...

பொங்கல் வாழ்த்துக்கள்

pudugaithendral said...

ரொம்ப சரியான பகிர்வு.

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Anonymous said...

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று...பொங்கல் வாழ்த்துக்கள்...

RAMA RAVI (RAMVI) said...

//.பழையன கழிக்கும் போகிப் பண்டிகையில் பொறாமை, போட்டி மனப்பான்மை, கெட்ட எண்ணங்கள்ன்னு எல்லாத்தையும் எரிச்சுட்டு, புதியன பெருகும் பொங்கல் பண்டிகையில் சந்தோஷங்களை மட்டுமே பொங்க வைப்போம்.//

அருமையான கருத்து,திருக்குறள்களை மேற்கோள் காட்டி மிக அழகாக சொல்லியிருக்கீங்க.
வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷங்கர்,

ரொம்ப நாளு கழிச்சு வந்து வாழ்த்துனதுக்கு நன்றி :-))

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நண்டு,

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நண்டு,

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

காதால கேட்டதை இங்கே இடுகையில் போட்டதும், அது உங்களுக்கு கொசுவர்த்தியை கிளப்பிடுச்சு. இதுலேர்ந்தே நிறையப்பேர் நொந்து போயிருக்கீங்கன்னு தெரியுது :-))

உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜலீலாக்கா,

ஆஹா!!.. நிதானமா வாங்க. :-)

உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

வந்து ரசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

சேம் ப்ளட்ங்க.. எங்கூட்லேருந்து ரெண்டு தெரு தள்ளி ஒரு ஃப்ரெண்ட் இருக்காங்க. அவங்க வீட்டுக்கும் யாராச்சும் போகணும்ன்னா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டுத்தான் போகணும். இப்படியும் இருக்காங்கப்பா..

அவ்வ்வ்வ்வ்வ்.. முடியல :-)

சாந்தி மாரியப்பன் said...

புத்திமதியெல்லாம் தாத்தா பாட்டி எக்கச்சக்கமா சொல்லிட்டுப் போயிருக்காங்க. ஃபார்வேர்டு செஞ்சது மட்டுந்தான் நான் :-))

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

நரம்பில்லாத நாக்கு எப்டின்னாலும் பேசும். இப்டிக்கா காதுல வாங்கி, அந்தக் காது வழியா பை பாஸ்ல அனுப்பிட வேண்டியதுதான் :-))

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

உங்களுக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

சென்னையில இன்னோரு பழக்கமும் இருக்குப்பா. பொங்கல் வழ்த்து சொல்கிறதைக் கூட நிறுத்திட்டாங்க.
தொலைக் காட்சி காரணம்னு சொல்ல மாட்டேன்.
மனுஷ உணர்வுகளே மங்கிட்டு வருதோன்னு தோன்றுகிறது.ரொம்ப நாளைக்கப்புறம் எனக்குப் பிடித்த அவ்வைப் பாட்டியின் மொழிகளைப் படிச்சது மனதுக்கு ரொம்ப இதமாக இருந்தது.மன்னித்து மறந்தால்தான் வாழ்க்கை. இல்லாவிட்டால் மனம் புரையோடிப் போகும்.பொங்கல் வாழ்த்துகள் அன்பு சாரல்..

Yaathoramani.blogspot.com said...

மனம் கவர்ந்த அருமையான பதிவு
பேசும் விதம் குறித்து எழுத்தில் பேசியுள்ளது அருமை
அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய
கருத்தில் எப்போதும் கொள்ளவேண்டிய அருமையான
கருத்தைக் கொண்ட பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

தலைப்புல வர்ற தாத்தா-பாட்டியைக் கதையில காணோமேன்னு தேடிகிட்டே வந்தேன். ஓ, அவ்வைப் பாட்டியும், வள்ளுவர் தாத்தாவும்தானா அவங்க!! மீ லிட்டில் ட்யூப்லைட்... :-)))) - (உங்க மைண்ட் வாய்ஸ்: இதத் தனியா வேறச் சொல்லணுமா...)

முன்னாடியெல்லாம் எங்கூர்ப்பக்கம், யாராவது வெளிநாட்டில வேலை செய்றவங்க ஊருக்கு வந்தா, மொதக் கேள்வியே “ஆப்பமா, தோசையா”ன்னுதான்!! :-))))

நல்ல அறிவுரைகள். அறிவுரையைக் கூட போரடிக்காம சொல்றது உங்களாலத்தான் முடியும்.

ராமலக்ஷ்மி said...

தாத்தா பாட்டி சொன்னவற்றைப் பக்குவமா எடுத்துரைத்திருக்கும் பாங்கு சர்க்கரை பொங்கல் சாப்புட்டாப்ல இனிக்குது.

தாமதமான வாழ்த்துகள் சாந்தி!

கோமதி அரசு said...

போகிப் பண்டிகையில் பொறாமை, போட்டி மனப்பான்மை, கெட்ட எண்ணங்கள்ன்னு எல்லாத்தையும் எரிச்சுட்டு, புதியன பெருகும் பொங்கல் பண்டிகையில் சந்தோஷங்களை மட்டுமே பொங்க வைப்போம்.//

நல்ல கருத்தை தாத்தா, பாட்டி சொன்னாலும், சாந்தி சொன்னாலும் கேட்கனும்.
அருமையான பொங்கல் வாழ்த்து.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்டார்ஜன்,

வாழ்த்துகளுக்கும் வாசிச்சதுக்கும் நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷைலஜா மேடம்,

ரொம்ப சரியாச் சொன்னீங்க மேடம் :-)

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

உங்களுக்கும் தாமதமான பொங்கல் நல்வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோம்மா,

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முகில்,

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இளங்கோ,

நல்லதொரு காரியம் செய்யறீங்க.. வாழ்த்துகள்.

தொலைக்காட்சி எப்பவும்தான் இருக்கு. ஆனா, விருந்தினர் வருகை அப்படியில்லியே.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சமுத்ரா,

கால தாமதமான பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கும் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

உங்களுக்கும் காலதாமதமான இனிய வாழ்த்துகள் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரெவெரி,

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராம்வி,

வாழ்க்கையை ஒளிரச் செய்யும் மேஜிக் புத்தகமாச்சே அது. எந்த விஷயம்ன்னாலும், பிரச்சினைன்னாலும் அதுக்குத் தீர்வும் வெச்சிருக்காரே நம்ம தாத்தா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

இங்கே ஒவ்வொரு பண்டிகையின்போதும் இங்குள்ள மக்கள் நண்பர்கள், உறவுகள்ன்னு எல்லோரோட வீட்டுக்கும் விசிட் அடிக்காம இருக்க மாட்டாங்க. விசிட் அடிக்கிறதுக்குக் காரணமா ஏதாவதொரு சம்பிரதாயமாவது இருக்கும். நம்மூர்லயும் எல்லாம் இருக்கத்தான் செய்யுது. ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமா இதெல்லாம் விட்டொழிச்சுட்டு வரோம். வருத்தமாத்தான் இருக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

ஆப்பமோ, தோசையோ அந்த நேரத்துக்கு எது சுட்டுக் கொடுக்கறாங்களோ அதைத் திங்கத்தான் எனக்குத் தெரியும் ;-)

நாஞ்சில் பக்கத்துல வேற அர்த்தத்துல "அவலா.. தோசையா"ன்னு கேப்பாங்க, நீங்க சொல்றதுக்கு விளக்கம் ப்ளீஸ் ;-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

வரவுக்கும் வாசிச்சதுக்கும் நன்றி :-)

ஹுஸைனம்மா said...

//ஆப்பமோ, தோசையோ ...... விளக்கம் ப்ளீஸ்//

ஆப்பம்னா திருப்பிப் போட மாட்டாங்க; தோசைன்னா திருப்பிப் போடுவாங்க. அதாவது வெளிநாட்டு வேலைக்குத் திரும்பி போவியா, மாட்டியான்னு.... வெவரமானவங்க அந்தக் காலத்து ஆளுங்க.. :-))

/நாஞ்சில் பக்கத்துல வேற அர்த்தத்துல "அவலா.. தோசையா"ன்னு கேப்பாங்க/
விளக்க்கம் ப்ளீஸ்!! :-)))

Jaleela Kamal said...

முழ்வதும் படிச்ச்சாச்சு

இப்ப இருக்கிற டீவி மோகம் இப்படி தான்

Jaleela Kamal said...

நாள் பூரா சீரியல போட்டுவிடுகிறார்கள்

வீட்டில் உள்ளவர்களை கவனிப்பதே சிலருக்கு பெரிய விஷியமாக இருக்கு

/ஊரில் சில முக்கியமான சிரியல் ஓடும் போது தெருவே ஜோன்னு வெரிச்சோடி கிடக்குதாம்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_18.html) சென்று பார்க்கவும்...

LinkWithin

Related Posts with Thumbnails