Wednesday, 25 January 2012

நினைவுச்சின்னங்கள்- என் காமிராப் பார்வையில்.

அமெரிக்காவை மனசுல நினைச்சதும் ஜுவாலை ஏந்தி நிக்கிற சுதந்திரதேவியும், டில்லியை நினைச்சதும் செங்கோட்டையும், மதுரைன்னதும் மீனாட்சியும், ஆக்ரான்னதும் தாஜ்மஹாலும்தான் ஞாபகம் வருது. (வடக்கே உள்ளவங்களுக்கு ஆக்ரான்னதும் வேற ஒரு 'வில்லங்கமான' ஞாபகமும் வர்றதுண்டு). அந்தந்த இடங்களை ஞாபகப்படுத்தற விஷயங்களைத்தானே நினைவுச்சின்னங்கள்ன்னு சொல்றோம். அதுக்காக, திருனேலின்னதும் 'அல்வா'தானே ஞாபகம் வருது. அப்டீன்னா அல்வாதான் திருனேலியோட நினைவுச்சின்னமான்னு வில்லங்கமால்லாம் யோசிக்கப்டாது. பின்னே இருட்டுக்கடை எதுக்கு இருக்குதாம்?? காலப்போக்குல அதுவும் நினைவுச் சின்னமா ஆனாலும் ஆகலாம், சொல்ல முடியாது :-) 

ஒவ்வொரு ஊர்லயும் எந்தவொரு கட்டிடத்தைக் கட்டும் போதும், எந்த நோக்கத்துல கட்டப்பட்டாலும் நாட்பட அந்த ஊரைப் பத்தி நினைக்கும் போதே சம்பந்தப்பட்ட கட்டிடமும் நினைவுக்கு வர்ற மாதிரி அந்த ஊரோட வரலாற்றுல இரண்டறக் கலந்துடுது. சம்பந்தப்பட்ட கட்டிடத்தோட படத்தைப் பார்க்கிறப்பவும் "அட!!.. இது அந்த ஊராச்சே.."ன்னு சட்டுன்னு அந்த ஊரோட ஞாபகமும் வந்துரும். அதுவும் அந்த ஊர் நாம போய் வந்த ஊராயிருந்தா கேக்கவே வேணாம். அங்கே தங்கியிருந்த நாட்கள், அனுபவங்கள்ன்னு சரசரன்னு கொசுவத்தி பத்திக்கும். இதுல சில கட்டிடங்களைக் கட்டும் போதே அறிஞர்கள், நிகழ்வுகளோட ஞாபகார்த்தமா நினைவுச்சின்னங்களா கட்டினாலும், சில கட்டிடங்கள் மொதல்ல வெறுமே கல்லு மண்ணாலான கட்டிடமா இருந்துட்டு காலப்போக்குல நினைவுச் சின்னங்களாப் ப்ரமோஷன் வாங்கிக்கும். அப்படி என்னோட காமிராவில் பிடிச்சிட்டு வந்த சில நினைவுச்சின்னங்களை, ஃப்ளிக்கரோட நிறுத்திக்காம இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-))

கன்னியாகுமரி: இந்தப் பேரைச் சொன்னதும் குமரியம்மனுக்கு அடுத்தபடியா மனசுல வர்றது விவேகானந்தரோட ஞாபகார்த்தமா கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவுச் சின்னம்தான். அமெரிக்கா போறதுக்கு முந்தி அவர் இந்தப் பாறையில் அமர்ந்துதான் தியானம் செஞ்சாராம். அந்த ஞாபகார்த்தமா 1970ல் கட்டப்பட்ட இந்த மண்டபம் அரிச்செடுக்கும் உப்புக் காத்தையும் சுனாமியையும் சமாளிச்சுக் கிட்டுக் கம்பீரமா நிக்குது.

மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா: கிட்டப் பார்வையில்..


விவேகானந்தரும், ஸ்ரீபாத மண்டபமும் ஒரு தொலை நோக்குப் பார்வையில்.. 
இந்த காந்தி மண்டபத்தோட படத்தைப் பார்த்த அப்றமும் இது கன்னியாகுமரிதானேன்னு தெரிஞ்சுக்காதவங்க ஒரு நடை கன்னியாரி போயிட்டு வந்துருங்க. கன்னியாகுமரிக் கடல்ல கரைக்கிறதுக்கு முன்னாடி அவரோட அஸ்தியை வெச்சிருந்த ஞாபகார்த்தமா கட்டப்பட்ட இந்த மண்டபத்துல,   மேல் விதானத்துல இருக்கற ஒரு துளை வழியா அஸ்தியை வெச்சிருந்த இடத்துக்கு ஒவ்வொரு வருஷமும் காந்தி ஜெயந்தி தினத்தன்று, அதாவது அக்டோபர் 2-ம் தேதி அன்னிக்கு சரியா நடுப்பகல் 12 மணிக்கு சூரிய பகவான் ஒளியபிஷேகம் செஞ்சு அஞ்சலி செலுத்தறதைப் பார்க்கக் கூட்டம் நெரியும். எள்ளு போட்டா எண்ணெய்தான் விழும். 

மும்பையில் மலபார் பகுதியில் தொங்கும் தோட்டத்துக்குப் பக்கத்துல இருக்கற கமலா நேரு குழந்தைகள் பூங்காவில் இருக்குது இந்த பாட்டிம்மாவின் ஷூ.. (பாவம்.. ஒரு ஷூவை இங்கே தொலைச்சுட்டு என்ன சிரமப் படறாங்களோ :-))

மும்பையின் தாஜ் ஹோட்டல்: 565 அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டல் திரு. ஜாம்ஷெட்ஜி டாடாவால் கட்டப்பட்டு,  1903-ம் வருஷம் டிசம்பர் 16-ம் தேதியன்னிக்கு விருந்தினர்களுக்காக திறந்து விடப்பட்டிருக்கு. முதலாம் உலகப்போர் சமயத்துல இதை 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையா மாத்தி உபயோகப் படுத்தியிருந்துருக்காங்க.  இதுல படத்தோட இடது பக்கம் இருக்கறது பழைய ஹோட்டல். இதுல நடுவே இருக்கும் வெங்காயக்கூம்பு பகுதியில் ஈஃபில் டவர்ல உபயோகப் படுத்தியிருக்கற அதே வகை இரும்பை வெளிநாட்லேருந்து தருவிச்சுப் பயன்படுத்திக் கட்டியிருக்காங்களாம். 

1980-85 கால கட்டத்துல உலகத்துலயே சிறந்த ஐந்தாவது ஐந்து நட்சத்திர ஹோட்டல்ங்கற இடத்தை அடைஞ்ச பெருமை இதுக்குண்டு. 2008-ல் 26 நவம்பர் அன்னிக்கு நடந்த தாக்குதல்ல கொஞ்சம் கலகலத்தாலும் மறுபடியும் மீண்டு வந்து, அழிவின் சுவடுகளையெல்லாம் துடைச்சுப் போட்டுட்டுத், தனக்காக உயிர் கொடுத்தவர்களின் நினைவையும் சுமந்துக்கிட்டுத் தலை நிமிர்ந்து நிக்குது. தாக்குதலுக்கு அப்புறம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படமே அதுக்குச் சாட்சி.

மும்பையின் புகழ்பெற்ற கேட் வே ஆஃப் இந்தியா: இது வெள்ளைக்காரங்க அவுங்க பாஷையில் வெச்ச பேரு. நாம தமிழ்ல இந்தியாவின் நுழைவாயில்ன்னு சொல்லிக்கலாமே. இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துல அப்போதைய ராஜாவும் ராணியுமா இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், மேரியம்மா தம்பதியினரின் இந்திய வருகையைக் குறிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கு. 1911-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1924-ல் பணிகள் முடிவடைஞ்சு, அதே வருஷம் டிசம்பர் 4-ம் தேதி திறந்து வைக்கப் பட்டிருக்கு. இதோட உசரம் 85 அடிகளாம். ஜெய்ப்பூர்லேருந்து கொண்டு வரப்பட்ட துளையிட்ட ஜன்னல்கள்(இதுகளை ஜாலின்னு சொல்லுவாங்க) பார்க்கவே பிரமிக்க வைக்குது. இந்திய மற்றும் முகலாயக் கட்டிடக்கலையின் கலவை கட்டிடம் முழுசும் பிரதிபலிக்குது. மும்பைக்கு முதன்முதல்ல வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகள் தவறாம பார்வையிட்டு அதிசயிக்கும் இடங்கள்ல இதுக்குத்தான் முதலிடம். மும்பைக்கு வந்துட்டு கேட்வே ஆஃப் இந்தியாவைப் பார்க்கலைன்னா ஜென்ம சாபல்யம் கிடைக்காது தெரியுமோ :-). எதிர்த்தாப்ல இருக்கற தாஜ் ஹோட்டல்ல தங்கிக்கிட்டா நாள் முழுசும் பார்த்துட்டே இருக்கலாம். (சில வருந்தத்தக்க நிகழ்வுகளால இப்ப தாஜும் நினைவுச்சின்னமாகிடுச்சு ) 

மும்பையின் பாந்திரா-வொர்லி கடல் இணைப்பு: 1999-ல் பால் தாக்கரேயால் அடிக்கல் நாட்டப்பட்டு 2010-ல் மக்கள் உபயோகத்துக்காக முழுவதும் திறந்து விடப்பட்டது. போக்குவரத்து நெரிசலுக்குப் பேர் போன மும்பையில் இந்தப் பாலம் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம். இந்தப் பாலம் வர்றதுக்கு முந்தி, இங்கேருந்து அங்கே போகறதுக்குச் சுமார் ஒன்னரையிலேர்ந்து ரெண்டு மணி நேரம் எடுக்குமாம். இப்பல்லாம் பாந்திராவுலேர்ந்து வொர்லிக்கு வெறும் ஏழே நிமிஷத்துல போயிடலாம். போக்குவரத்து நெரிசல் இருந்தா சுமார் பத்துப்பதினஞ்சு நிமிஷங்களாகும். அவ்ளோதான்.  டோல் வசூல் கொஞ்சம் கூடுதல்தான்னாலும் நல்லாவே பராமரிக்கிறாங்க.

டிஸ்கி: ஊர் சுத்தப் போயிருந்தப்ப விவரங்கள் சொன்ன கைடுக்கும், மேல் விவரங்கள் கொடுத்த விக்கியண்ணனுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம் :-))

54 comments:

Ramani said...

அருமையான படங்களும்
அழகான விளக்கமும்
நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற
பிரமிப்பை ஏற்படுத்திப் போகின்றன
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

Lakshmi said...

சாந்தி கன்யாகுமாரி, மும்பை ரெண்டுமே நமக்கு பழகிய நெருங்கிய ஊராச்சே. நல்லா போட்டோ பிடிச்சு போட்டிருக்கே. நல்லா சுத்தி பாத்தாச்சு இப்படி சுத்திப்பார்ப்பதில் ஒரு வசதி கால் வலியே வராது.

ராமலக்ஷ்மி said...

தகவல்களுடனான படங்களின் பகிர்வு வெகு சிறப்பு.

மீண்டும் தலைநிமிர்ந்த தாஜ் ஹோட்டலின் அமைதியான அழகுக்குப் பின் மெளனமாக உறைந்திருக்கிறது அந்த வருத்தம் தரும் நிகழ்வு.

Asiya Omar said...

புகைப்ப்டங்கள், செய்திகள் பகிர்வு அருமை.

இராஜராஜேஸ்வரி said...

நினைவுச்சின்னங்கள் மனதில் நிற்கின்றன.. பாராட்டுக்கள்..

Chitra said...

lovely.....

ஸாதிகா said...

அருமையான தத்ரூபமான படங்கள்!

kothai said...

தகவலுடன் படங்களும் நேர்த்தியாய் உள்ளன. நன்று.

கோவை2தில்லி said...

புகைப்படங்களும், இடங்களை பற்றிய தகவல்கள் இரண்டுமே அருமை....

RVS said...

படங்கள் ஜூப்பரு. :-)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .

கோமதி அரசு said...

படங்களும், செய்திகளும் அருமை சாந்தி.

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அழகு... அதற்கான விளக்கங்கள் சூப்பர்.....

goma said...

பாந்த்ரா வொர்லி கட்டுமானப்பணி துவக்கத்தில் நாங்கள் மும்பைக்கு bye bye சொல்லி கிளம்பிவிட்டோம் ...மற்ற நினைச் சின்னங்கள் அனைத்தும் நினைவில் நீங்கா சின்னங்கள்
அருமையான தொகுப்பு

ஹேமா said...

சாரல்...பாட்டியம்மா தொலைச்ச சப்பாத்து ரொம்ப அழகாயிருக்கு !

வித்யா said...

நேர்ல சுத்தி பார்த்த திருப்தி..

துரைடேனியல் said...

Neril paarththa anupavam pola unaru. Arumai Sir!

Tamilmanam 9.

MANO நாஞ்சில் மனோ said...

மும்பையையும் எங்கள் ஊர் கன்யாகுமரியையும் விவரித்தமைக்கு நன்றி, கன்யாகுமரி பஸ் நிலையத்தை நீங்கள் பார்க்கவில்லை போலும் ஹா ஹா ஹா ஹா ரொம்ப படுமோசமா இருக்கும்....!!!

Anonymous said...

தகவல்களுடனான படங்களின் பகிர்வு வெகு சிறப்பு....வாழ்த்துக்கள்...

அமைதிச்சாரல் said...

வாங்க ரமணி,

நினைவுச் சின்னங்களைச் சுத்திப் பார்த்ததுக்கு நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க லஷ்மிம்மா,

போயிட்டு வந்த இடங்களைக் காமிராவுல சிறையெடுத்துடு வந்துட்டா மறுபடி எப்போ வேண்ணாலும் பார்த்துக்கலாம். மறுபடியும் அங்கியே போயி சுத்திப் பார்க்கற ஃபீலிங்குக்கு இணையேது.. இல்லையா :-))

சுத்திப் பார்த்ததுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

அங்கே போய் நிக்கிறப்ப.. என்னன்னு சொல்றது அந்தக் கலவையான உணர்வை!!!!. இப்படியொரு சம்பவம் நடந்த சுவடே தெரியாம அத்தனையும் அழிச்சுப் போட்டுட்டு தலை நிமிர்ந்து நிக்குது தாஜ், மும்பை மக்களின் மன உறுதியைப்போலவே..

அமைதிச்சாரல் said...

வாங்க ஆசியா,

நினைவுச் சின்னங்களை ரசிச்சதுக்கு நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

சுத்திப் பார்த்ததுக்கும் ரசிச்சதுக்கும் நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க சித்ரா,

வருகைக்கும் ரசிச்சதுக்கும் நன்றிங்க :-)

dhanasekaran .S said...

புகைப்படங்களும் அருமை எழுத்துகளும் அருமை

FOOD NELLAI said...

ஆஹா, கன்னியாகுமரி பக்கம் வந்து படங்களை அருமையா எடுத்துப்போட்டிருக்கீங்களே. நினைவலைகள் அருமை.

RAMVI said...

படங்களும் விளக்கமும் அருமை.

ஹுஸைனம்மா said...

எங்க போனாலும், திருனேலியையும், அல்வாவையும் வம்புக்கிழுக்காம இருக்க முடியலை பாருங்கோ, இதுதான் நாஞ்சில் குசும்புங்கிறது!! :-)))))

நல்லா படம் காட்டுறீங்க; அழகான படங்கள். ஷூ படமும், பாலம் படமும் வித்தியாசமானவை. ஷூவுக்குள்ள என்ன இருக்கு? சறுக்குமரமா? அந்த பாலம் கட்டிமுடிக்க 11 வருஷம் ஆச்சா?

//ஸ்ரீபாத மண்டபமும் //
இது என்ன? புதுசா இருக்கே?

S.Menaga said...

அருமையான புகைப்படங்களும்,விளக்கங்களும்..நன்றிக்கா!!

பாச மலர் / Paasa Malar said...

தாஜ்மகால் நினைவுச்சின்னம் என்றெண்ணும்போது நெகிழ்வு..

தாஜ் நினைவுச்சின்னம் ஆகிய போது நெருடல்...

பகிர்வுக்கு நன்றி..

அப்பாவி தங்கமணி said...

ஆஹா...உங்க நினைவுகள சொல்லி எனக்கும் அந்த இடத்தை பத்தின நினைவுகள கிளப்பி விட்டுடீங்க அக்கோய்... சூப்பர் போஸ்ட்...;)

அமைதிச்சாரல் said...

வாங்க ஸாதிகா,

வருகைக்கும் சுத்திப்பார்த்ததுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க கோதை,

படங்களையும் தகவல்களையும் ரசிச்சதுக்கு நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ஆதி,

ரொம்ப நன்றிங்க ரசிச்சதுக்கு :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ஆர்விஎஸ்,

ரொம்ப தாங்கீஸ் ரசிச்சதுக்கு :-)

அமைதிச்சாரல் said...

வாங்க நண்டு,

ரொம்ப நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க கோமதிம்மா,

ரசிச்சதுக்கும் வரவுக்கும் நன்றிம்மா :-)

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

விளக்கங்கள் கொடுத்தாத்தான் மறக்காம இருக்கும்.... எனக்கு :-))

வரவுக்கும் ரசிச்சதுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க கோமாக்கா,

சரியாக் கட்டி முடிச்சுருக்காங்களான்னு பார்க்கவாவது ஒரு எட்டு மும்பைப் பக்கம் வரலாமில்லே :-))

ரசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹேமா,

அவுங்க வேற சப்பாத்து வாங்கிட்டாங்களாம். இதை அவங்க நினைவா வெச்சுக்கச் சொல்லிட்டாங்க..

'சப்பாத்து'... இந்த வார்த்தையைக் கேட்டு எத்தனை வருஷமாச்சு!!!! மறுபடி நினைவு படுத்துனதுக்கு நன்னிங்கோ :-)

அமைதிச்சாரல் said...

வாங்க வித்யா,

சுத்திப் பார்த்ததுலே டயர்டாகலைன்னு நினைக்கிறேன்.

வருகைக்கும் ரசிச்சதுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க துரை டேனியல்,

'எல்லாத்துக்கும்' நன்றிங்க :-))

அமைதிச்சாரல் said...

வாங்க மனோ,

கன்னியாரி பஸ் நிலையத்தை யாரும் பாக்காண்டாம்ன்னுதானே கன்னியாரி நுழைஞ்சதுமே எல்லாரையும் இறக்கி விட்டுடறாங்க :-(

அதை விட நம்ம வடசேரி பஸ் ஸ்டாண்டு எத்றையோ கொள்ளாம் :-)))

வருகைக்கும் ரசிச்சதுக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ரெவெரி,

சிறப்புன்னு சொன்னதுக்கு நன்றிகள் :-)

அமைதிச்சாரல் said...

வாங்க தனசேகரன்,

வருகைக்கும் ரசிச்சதுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

வருகைக்கும் படங்களை ரசிச்சதுக்கும் நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ராம்வி,

ரசிச்சதுக்கு நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

அல்வாவுல நிஜமாவே ஏதோ மந்திரசக்தி இருக்குதுங்க.. உங்களை இழுத்துட்டு வந்திருக்குதே :-))))

ஷூவுக்குள்ள படிக்கட்டுகள் இருக்குது. ஏறிப்போயி பால்கனியில் நின்னு டாட்டா காமிக்கலாம் பசங்க :-)

புதுசு இல்லீங்க.. நம்ம கன்னியாரி ஆத்தா அங்கே நின்னு தவம் செஞ்சா நாளா அந்தப் பாதம் அங்கியேதான் இருக்குது. மண்டபம் மட்டும் அப்றமாக் கட்டிக்கிட்டாங்களாம் ;-)

அமைதிச்சாரல் said...

வாங்க மேனகா,

ரொம்ப நாளுக்கப்புறம் சந்திக்கிறோம். நல்லாருக்கீங்களா?.

வரவுக்கும் ரசிப்புக்கும் நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க பாசமலர்,

இனிமே எவ்வளவோ அப்பாவிகளின் நினைவைக் காலம் காலமாச் சொல்லிக்கிட்டு நிக்கும் இந்தத் தாஜ் :-(

வரவுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க அப்பாவி,

மீண்டு வந்துட்டீங்களா?.. நல்லதுங்க. நாலு இடங்களுக்குப் போயி சுத்திப் பார்த்தாலே மனசு லேசாயிரும்.

நன்றிங்கோவ் ;-)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், பார்த்த ரசித்த மும்பைக் காட்சிகள் மீண்டும் உங்கள் காமிராக் கண்களில் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. வொர்லி சீ ஃபேஸ் ரொம்பப்பிடிச்ச இடம். மிகமிக நன்றி. படங்கள் அருமை.

வெங்கட் நாகராஜ் said...

அழைப்பிதழ்:

உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து உள்ளேன்.

மனோரஞ்சிதம் - புகைப்படச் சரம்

http://www.blogintamil.blogspot.in/2012/04/blog-post_06.html

வருகை புரிந்து உங்கள் கருத்துகளைச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

LinkWithin

Related Posts with Thumbnails