அழகைத் தூரத்துல தள்ளி நின்னு பார்க்கறது ஒரு வகைன்னா, கிட்டக்க, அதான் க்ளோஸ்-அப்புலே பார்க்கறது இன்னொரு ரசனை. சொல்லப்போனா, கிட்டக்கப் போய்ப் பார்த்தாதான் அழகுன்னு நினைச்சுட்டு இருக்கும் விஷயங்களின் விகாரங்கள் பல்லை இளிக்கிறதும், ஸோ அண்ட் ஸோன்னு நினைப்பவை அசத்த வைக்கும் அழகுடன் இருப்பதும் தெரியுது. இந்த மாசத்துக்கான பிட் போட்டியின் தலைப்பும் அதான்...
ஸோ அண்ட் ஸோ வா இருப்பதை க்ளோஸ்- அப்புலே பார்த்தா எப்படியிருக்கும்???.. இப்படித்தான் இருக்கும். படங்களைப்பார்த்து எஞ்சாயுங்க :-)
வாங்கோ.. வாங்கோன்னு வரவேற்கும் வரவேற்'பூ'..
கூடச் சேர்ந்து வரவேற்கும் இன்னொரு பூ..
ம்ம்ம்ம்.. ஐ.. பப்பு மம்முவை விட இது ஜூப்பரா இருக்கே :-)))
டக்கரான இந்தப்பூவோட பேரு சோன் டக்கா. பூவுக்கு ஏத்த பேருதான். நவராத்திரி சமயத்துல பூக்க ஆரம்பிச்சு ரெண்டு மூணு மாசம் வரைக்கும் இதோட சீசன் இருக்கும். சாயந்திரம் மலர ஆரம்பிச்சு ராத்திரிதான் முழுசாப் பூத்திருக்கும். வீட்ல ஒரு பூ பூத்துக் கிடந்தாலே வாசனை கும்முன்னு ஆளையே தூக்கிரும்.
எலி வாலில் கட்டிய வைரம்ன்னு முக நூலில் இதுக்கு எக்கச்சக்க பாராட்டுகள் கிடைச்சது..
சட்னி அரைக்கறதுக்காக தங்க்ஸ் என்னவோ வாங்கியாரச் சொன்னாங்க.... மறந்துருச்சே !!. என்னை சட்னியாக்குறதுக்குள்ளே இங்கே ஒளிஞ்சிக்கிறேன்.
திருஷ்டிப் பொட்டால அழகு கூடுதா?.. குறையுதா?.. பட்டிமன்றக்கேள்வி.
மருதாணி வைக்காமயே செவந்திருக்காங்க.. எங்க வீட்டுப் பொன்னாங் கண்ணியம்மா :-)
யோசிச்சேன்.. யோசிக்கிறேன்.. யோசிச்சிட்டிருக்கிறேன்.. .தங்க விலை குறையுமாங்க???.
அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அழகு மங்கலை இந்தத் தங்கப்பூவுக்கு..
கோபுரத் தரிசனம் கோடிப்புண்ணியமாம்.. எல்லோரும் கன்னத்துலே போட்டுக்கோங்க.
இவர் ச்சும்மா.. காவலுக்கு. கண்காட்சிக்கு வந்தவங்களுக்கு நன்றி சொல்லிக்கிறாராம் :-)
பிட் போட்டியில் கலந்துக்கிட்டு ரொம்ப நாளாச்சு. அதான் இந்தத் தடவை களத்துல இறங்கிட்டேன். உங்கள் பொன்னான வாக்குகளை "....." புகைப்படத்துக்கே அளிக்குமாறு கேட்டுக் கொல்கிறேன். கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பிக்கலாம் :-)
29 comments:
Wow... wonderful clicks akka... onrai onru minjugiradhu... all the best to win..;)
தாயும் குழந்தையும் கொள்ளை அழகு! இருவரின் புன்னகையையும் ரசனையோடு புகைப்படத்தில் பதித்திருக்கிறீர்கள்!!
Nice..esp #2 is too good...வாழ்த்துக்கள் சகோதரி...
ரொம்ப அருமையான படங்கள். அதை எடுத்திருக்கும் நேர்த்தி வியக்க வைக்கிறது. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சாந்தியக்கா.
அத்தனை படங்களும் மிக மிக அருமை
பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது
பகிர்வாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
அழகு மங்கா தங்கப்பூ:)!!!
படங்கள் அனைத்தும் ரசிக்கும் படி அருமை.
அருமையான புகைப்படங்கள்...
அத்தனை படங்களும் மிக மிக அருமை
பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது ஒவ்வொரு பூவுக்கும் நீ கொடுத்திருக்கும் பிட் சூப்பர்
சாரல். அவுட்ஸ்டாண்டிங் ஃபோட்டோக்ராஃபி. வாவ். ஒண்ணை செலக்ட் செய்தா இன்னோண்ணு வருத்தப் படப் போறதேன்னு எல்லாத்துக்கும் ''ஓ'' போட்டுடறேன்.
ஃபோட்டோஸ் சூப்பர். ரசித்தேன்.
அட்வான்ஸா வாழ்த்துக்களை சொல்லிடறேன்.
அனைத்துமே கொள்ளை அழகு
அழகான படங்கள் சிறந்த வர்ணனைகளுட...என்னுடைய சாய்ஸ் எலிவாலில் வைரம்...
அருமை வாழ்த்துகள்
அனைத்து படங்களுமே அழகு.....
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
மிக அருமையான அழகான படங்கள்.....
வாழ்த்துகள்...
எனது பதிவில் தங்களுக்கு VERSATILE BLOGGER AWARD அளித்துள்ளேன்.ஏற்றதற்கு அடையாளமாக தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி
புகைப்படங்கள் அனைத்துமே சூப்பர்.
பகிர்வுக்கு நன்றி.
எல்லாப் படங்களுமே அழகு. குறிப்பாக எலிவால் வைரம், தங்கப்பூ....! பரிசு கிடைத்ததா?
அற்புதமான புகைப்படங்கள்
வரவேற்பூ, எலிவால், பொன்னாங் கண்ணி அருமையான படங்கள்.
அழகழகான படங்களும், ரசிக்க வைக்கும் கமெண்ட்டுகளும் மனதைக் கொள்ளை கொண்டன. அங்கத்தில் குறையிருந்தாலும் ஜொலி்க்கும் அந்தப் பூவும், எலிவாலில் கட்டிய வைரமும் ஸம்திங் ஸ்பெஷல்!
கண்கள் கவரும் அற்புத கலை வண்ணம்...
வாழ்த்துக்களுடன்,
ஆர்.ஆர்.ஆர்.
கருத்துரையிட்டு ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி..
[im]http://www.orkutscraps.orkutscraps.in/v4/tamil/thanks/4.gif[/im]
அருமையான படங்கள் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.அருமையான படங்கள்.
உங்களோட ப்ளாக் குக்கு நான் புதுசு. படிக்கும் போது ரொம்ப சந்தோசமா உணர்ந்தேன். படங்கள் எல்லாம் அருமை அருமை.
வாங்க ஸாதிகா,
ரொம்ப நன்றிங்க..
வாங்க திலீபன்,
ரொம்ப நன்றிங்க சந்தோஷமா வாசிச்சதுக்கு,..முதல் வரவுக்கும் நன்றி.
Post a Comment