Friday, 24 February 2012

அதிர்ச்சி வைத்தியம் பலனளிக்குமா?..

கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கணும். விதை விதைச்சதும் முளைச்சு, விளைஞ்சு அறுவடையாகிரும்ன்னு அவசரப்பட முடியுமோ?.. குறைஞ்ச பட்சம் வேரூன்றித் தழைக்க ஆரம்பிச்சாலாவது எப்படியும் பிழைச்சுரும்ன்னு நம்பிக்கையோட இருக்க முடியும். அது வரைக்கும் பொறுமை.. பொறுமை.. அண்ட் பொறுமை தேவை. பொறுமை எருமையை விடப்பெரியதுன்னு சும்மாவா சொல்லி வெச்சிருக்காங்க பெரியவங்க.

எப்பவும் போல அன்னிக்கும், பொறுமையா ஒரு சிகரெட் புகைக்கலாம்ன்னு பொட்டிக் கடைக்கு வந்து ஒரு சிகரெட் வாங்கிக்கிட்டு, கடையிலிருந்த லைட்டரோட பட்டனை அமுக்கினா, அது..ராம் நாம் சத்ய ஹை"அப்டீன்னு சவுண்டு விடவும் பதறியடிச்சுப் பின் வாங்கிய மக்களுக்கு, ஒரு இயக்கம் கொடுக்கற அதிர்ச்சி வைத்தியம் அதுன்னு மொதல்ல புரியலை..
காமிராவில் பிடிச்சாந்தது..
வடக்கே இந்துக்களின் இறுதி ஊர்வலத்தும்போது, கூடவே நடக்கறவங்க "ராம் நாம் சத்ய ஹை" அப்படீன்னு மெதுவான குரல்ல உச்சாடனம் செஞ்சுட்டே போவாங்க. போற உசுரு கடவுள் நாமத்தைக் கேட்டுக்கிட்டே போகட்டுமேங்கற நினைப்புத்தான். அதைத்தவிர வீண் அரட்டையோ அல்லது வேறு எந்த நிகழ்வுகளோ இருக்காது. அந்த உச்சாடனத்தைக் கேக்கறப்ப கொஞ்சம் நம்ம உசுரையே அசைச்சுப் பார்த்துடற மாதிரி இருக்கும். பொதுவாவே இறுதிச்சடங்கு நிகழ்வுல கலந்துக்கறவங்களுக்கு ஒரு விதமான பற்றற்ற மனநிலை இருக்கும். பூமியில உசிரோட இருக்கறவரைக்கும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய மனுஷன் கடைசியில் என்னத்தைக் கொண்டு போறான். நாமளும் அப்படித்தானே போகப்போறோம்,.. அதனால இருக்கறவரைக்கும் மத்தவங்களுக்குப் பிரயோசனமா இருக்கணும், அன்பா இருக்கணும்ன்னு ஒரு வைராக்கியமே வரும். இதைத்தானே மயான வைராக்கியம்ன்னு சொல்றோம். அந்த இடத்தை விட்டு வெளியில வந்தப்புறம், "பழைய குருடி கதவைத்திறடி"ன்னு பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பறது தனிக்கதை :-) இங்கெல்லாம் இறுதி யாத்திரை போகுதுன்னா, கிட்டக்கப் போயி இறந்தவங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுட்டு அவங்கவங்க வழியில போவாங்க.

மனுசன் உலகத்துக்கு வந்தது ஒரே வழியில் ஆனா, உலகத்தை விட்டுப் போறது வெவ்வேறு வழிகளில்ன்னு சொல்லுவாங்க. அங்கே இறுதியாத்திரை செஞ்சுட்டிருக்கறவரும் அப்படித்தான் ஏதாவதொரு வழியில், ஏன் கான்சராலக் கூட உலகத்தை விட்டுப் பிரிய நேர்ந்துருக்கலாம்.

ஆனாலும் நம்ம அரசாங்கத்துக்கு மக்கள் மேல அபார நம்பிக்கைதான். முதியோர் கல்வி, அறிவொளி இயக்கம், இது போக வழக்கமான கல்வி நிலையங்கள்ன்னு எக்கச்சக்கமா ஏற்படுத்திக் கல்வியை ஊட்டறோமே.. அது வீணாப் போகுமா?. எப்படியும் மைக்ராஸ்கோப் வெச்சுப் படிச்சாவது தெரிஞ்சுக்குவாங்க என்ற அசாத்திய நம்பிக்கை அவங்களுக்கு இருக்கு. அதனாலதான் கடுகை விடச் சின்னதா "Cigarette is Injurious to Health"ன்னு சிகரெட் பொட்டியில் எழுதி வெச்சிருக்காங்க. ஒரு வேளை இங்க்லீஷ் படிக்கத் தெரியலைன்னா என்னா செய்யறதுன்னுதான் "புகை பகை".. "புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு"ன்னு தமிழ்லயும் எழுதி வெச்சிருக்காங்க.

ஆனாலும் மக்கள் இந்த வெண்சுருட்டை(தமிழ்ல இந்தப் பேருதானே?.. தெரிஞ்சவங்க சொல்லுங்க) விடறதா இல்லை. பொது இடங்கள்ல புகை பிடிச்சா அபராதம்ன்னும் ஒரு சட்டம் வந்துச்சு. ஆனாலும் ஓரளவுக்கு குறைக்க முடிஞ்சுதே தவிர முழுசும் இதை தடுக்க முடியலை. சிகரெட்டால புற்று நோய் வர வாய்ப்பிருக்குன்னு சொன்னாக்கூட மக்கள் சட்டை செய்யறதா இல்லை. இதுக்கு மேல ஒரு அரசாங்கம் மக்களை எப்படித்தான் எச்சரிக்கை செஞ்சு பாதுகாக்க முடியுமாம்.. யக்கா நீ சொல்லேன்!! அண்ணாத்தை நீங்க சொல்லுங்களேன் :-)

நடமாடும் புகை போக்கிகள் அதான் சிகரெட் பிடிக்கிறவர்கள் தங்களோட வீட்ல தனியிடத்துலயோ, இல்லைன்னா, மறைவா எங்கியாவதோ பிடிச்சா மத்தவங்களுக்குப் பிரச்சினையில்லை. அட்லீஸ்ட் வாங்குன கையோட கடை மறைவுல நின்னு கதையை முடிச்சுட்டுக் கிளம்புனாக்கூட தொந்தரவில்லை. ஆனா, இரு சக்கரத்துலயோ நாலு சக்கரத்துலயோ போற போக்குலயும், நடந்து போகறச்சயும் புகையை மத்தவங்களுக்கும் சப்ளை செய்யறவங்களை என்னன்னு சொல்றது. சிலருக்கு அந்த வாசனை விருப்பமானதா இருக்கலாம். ஆனா, ரோட்டுல குழந்தைகளும் நடமாடுது, அவங்களுக்கு இந்தப் புகை அலர்ஜியாக் கூட இருக்கலாம்ங்கறதையும் இவங்க யோசிக்கிறது நல்லது.

புகை பிடிக்கிறவங்களை விட அதைச் சுவாசிக்கிறவங்களுக்குப் பாதிப்பு கூடுதல்ன்னு கண்டு பிடிச்சிருக்காங்க. சமீபத்தில் பையருக்கு உடம்பு சரியில்லாம மருந்து வாங்கப் போயிருந்தப்ப, கடையில் ஒரு குடும்பம் நின்னுட்டிருந்தது.கடைப்பையரும் அவங்க குடும்பமும் நண்பர்கள் அதனால மனசு விட்டுப் பேசிக்கிட்டிருந்தாங்க. கசமுசன்னு கடைப்பையன் கிட்ட பேசிக்கிட்டு இருந்ததைக் கவனிச்சதும் காதை அந்தப் பக்கம் அனுப்புனேன். ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகியிருக்கும் அவங்களோட மூத்த பையருக்கு கான்சராம். கல்யாணம் நிச்சயமாகி ஒரு மாசமே ஆகியிருந்த நிலையில் ரொம்ப சீரியஸான கட்டத்துல அட்மிட் ஆகியிருக்கார். ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லாத அவருக்கு, செயின் ஸ்மோக்கரான அவங்கப்பா மூலமா கான்சர் பரவியிருக்குது. பாதிக்கப்பட்ட பையருக்கு வயசு இருபத்தஞ்சைக் கூட தாண்டலைங்கறதுதான் கொடுமை.

சிகரெட்டை முடிச்சுட்டுக் கனிஞ்சுட்டிருக்கற துண்டை, அப்படியே வீசிட்டுப் போறவங்களையும் சொல்லணும். நம்ம நாட்ல கிராமங்கள்லயும், நகரங்கள்லயும் செருப்பில்லாம வெறுங்காலோட நடக்குற நிலைமையில் இன்னும் கூட ஆட்கள் இருக்கத்தான் செய்யறாங்க. இங்கேயும் எத்தனையோ ஏழைக்குழந்தைகள் வெறுங்காலோட சிக்னல்கள்ல அங்கியும் இங்கியும் ஓடறதைப் பார்த்திருக்கேன். ஏதாவதொரு ஆட்டோ, அல்லது காரிலிருந்து விழும் கனல்துண்டு அதுங்க பாதத்தைப் பதம் பார்க்கவும் வாய்ப்பிருக்கே.

திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு நம்மூரு வாத்தியார் பாடி வெச்சது இங்கேயிருக்கும் Cancer Patients Aid Association- (சுருக்கமா)CPAA-க்கு எப்படித்தான் தெரிஞ்சதோ.. திருடங்களைத் திருத்தணும்ன்னா அதிர்ச்சி வைத்தியம்தான் சரிப்படும்ன்னு துணிஞ்சு இறங்கிட்டாங்க. மொதல்ல குறிப்பிட்ட சிகரெட் லைட்டர்தான் அந்த அதிர்ச்சி வைத்தியம். இது மின்சாரத்துல இயங்கறதால ஷாக் ட்ரீட்மெண்டுன்னும் இங்க்லீஷ்ல சொல்லிக்கலாம்.

மும்பையில் பான் கடைகள் ரொம்பவே பிரபலம். பான் வகைகளும், குட்கா போன்ற வஸ்துகளோட சிகரெட்டும் இருக்கும். இதான் சரியான களம்ன்னு களமிறங்கிய CPAA மும்பையில் மட்டும் மொத்தம் 25 இடங்கள்ல இந்த லைட்டர்களை கடைக்காரங்களோட அனுமதியோட வெச்சிருக்கு. நிறையப்பேர் இதை வெச்சுக்க எதிர்ப்பு தெரிவிக்கறாங்கதான். சரிதானே?.. தன்னோட காலைத் தானே கோடரியால வெட்டிக்க யாருக்குத்தான் விருப்பமிருக்கும்?. இதை வெச்சுக்க அனுமதிச்சா எங்க பொழைப்பு என்னாகறதுன்னு கேக்கறாங்க. உங்க பொழைப்புக்காக மத்தவங்க வாழ்க்கையில் விளையாடறது ஞாயமான்னு கேக்குற CPAA  இந்தத்திட்டத்தை கட்டாயமாக்க வேணப்பட்ட சட்ட பூர்வமான முயற்சிகளையும் எடுத்துட்டு வருதுன்னு இதோட இயக்குனர் தெரிவிச்சுருக்கார். கான்சருக்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் கிட்ட பரப்பும் முறைகளில் இந்தத் திட்டமும் ஒன்னு..

யூடியூப்ல ச்சும்மா வலை மேய்ஞ்சுட்டிருந்தப்ப கிடைச்ச புதையல் இது. மேற்கொண்டு தகவல் தேடுனப்ப இவங்களுக்குன்னு தளமும் இருக்கறதைக் கண்டு பிடிச்சேன். சேவைகள், கான்சருக்கான சிகிச்சை முறைகள்ன்னு ஒரு தகவல் சுரங்கமே இருக்குது அங்கே. லைட்டரோட ஸ்விட்சை அமுக்கினதும் எப்படி ஷாக் அடிச்சு, ஓரோருத்தரும் ஜெர்க்காகுறாங்கங்கறதை நீங்களே வீடியோவில பாருங்க ..

ஒரு சிலர் மட்டும் இந்த உச்சாடனத்தை தனக்கான எச்சரிக்கை ஒலிக்கிறதா எடுத்துக்கிட்டு , "இந்த சிகரெட் பழக்கம் இனிமேலும் அவசியமா"ன்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க. மத்தபடி மெஷினைக் கண்டு பின் வாங்குனாலும் சிகரெட்டை விடமுடியாத சிலர் வத்திப் பொட்டி கேக்க ஆரம்பிச்சுருக்காங்களாம். இன்னும் சில துணிஞ்ச மனசுள்ளவங்க அந்த லைட்டரைத் தைரியமா உபயோகப் படுத்தறாங்களாம். வழக்கமா அரசாங்கம், ஜோரா ஆரம்பிச்சு ஆரம்ப ஜோர்ல கொண்டாடப்பட்டு, கடைசியில காயலாங்கடைக்குப் போற நல்ல திட்டங்கள் மாதிரி இல்லாம, பொது நல சேவை மனப்பான்மையோட தனியார் ஆரம்பிச்சுருக்கும் இதுவாவது நீடிச்சு நின்னு நல்ல பலனைத்தரணும்..

இப்போ தீர்ப்பு மக்கள் கையில்....


32 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பகீர்ன்னு ஆகிடுச்சு அந்தப்பையன் பாவம்..ம்.. தியேட்டரில் பஸ் ல் ..எங்குமே இந்த புகை தொந்திரவு இருந்தால் தலைவலி வந்து நாள் முழுதும் படாத பாடு படுவேன்..

Asiya Omar said...

மிக நல்ல விழிப்புண்ர்வூட்டும் பகிர்வு.நீண்ட நாட்களாய் வந்து பார்த்து விட்டு பதிவு காணாமல் திரும்பியதுண்டு.

இராஜராஜேஸ்வரி said...

பொது நல சேவை மனப்பான்மையோட தனியார் ஆரம்பிச்சுருக்கும் இதுவாவது நீடிச்சு நின்னு நல்ல பலனைத்தரணும்..

Lakshmi said...

ஆமா சாந்தி நீ சொல்ராப்ல அதை சுவாசிக்கிரவங்களுக்குத்தான் பாதிப்பு அதிகமா இருக்கு. தன்னையும் பிறரயும் அழிச்சுக்கர இந்தபழக்கத்லேந்து இவங்களை எப்படித்தான் மாத்துரது?

ராமலக்ஷ்மி said...

அந்த மகனுக்கு நேர்ந்த கொடுமை மற்றவருக்குப் பாடமாக அமையும்.

(வீடியோவில்) தெனவெட்டாகப் பேசுகிற ஆசாமிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

//பின் வாங்குனாலும் சிகரெட்டை விடமுடியாத சிலர் வத்திப் பொட்டி கேக்க ஆரம்பிச்சுருக்காங்களாம்.//

குச்சியைக் கிழிக்கும் போதெல்லாம் கேட்ட உச்சாடனம் மண்டைக்குள் ஒலிக்காமலா போகும்?

அதிர்ச்சி வைத்தியம் நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

மிக நல்ல பகிர்வு சாந்தி.

RAMVI said...

மிகவும் அருமையான விழிப்புணர்வு விஷயத்தை பகிர்ந்திருக்கீங்க..

அந்த காணொளியில் ராம் நாம் சத்ய ஹை என்கிற குரலை கேட்டதும் அவர்கள் பின் வாங்குவதே அந்த சேவை நிறுவனத்திற்கு நல்லதொரு வெற்றி.

கோமதி அரசு said...

பொது நல சேவை மனப்பான்மையோட தனியார் ஆரம்பிச்சுருக்கும் இதுவாவது நீடிச்சு நின்னு நல்ல பலனைத்தரணும்..//


நல்ல பலனைத்தர வாழ்த்த வேண்டும்.

மக்கள் நல்ல தீர்ப்பை தர வாழ்த்த வேண்டும்.


புகை உடம்புக்கு பகை, உடன் இருபோருக்கும் தீங்கு.

உணர்ந்து திருந்த வேண்டும் மக்கள்.

நல்ல விழிப்புணர்வு கட்டுரை சாந்தி.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

கோவை2தில்லி said...

விழிப்புணர்வு பதிவு.

அந்த பையன் ரொம்ப பாவம்....

புகைப்பிடிக்கறவங்க என்றைக்கு திருந்துவார்களோ?

இந்த அலாரமாவது அவர்களை திருத்தட்டும்....

Ramani said...

எச்சரிக்கை மணிதான் அடிக்கமுடியும்
கையைப்பிடித்து இழுக்கவா முடியும்
புரிந்து திருந்துகிறவர்கள் புத்திசாலிகள்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு....

ராம் நாம் சத்ய ஹே.... கேட்டாவது திருந்தினால் சரிதான்.... ஆனால் பொதுவாக உங்கள் பதிவில் சொன்னது போல மயான வைராக்கியம் இருக்கத்தான் இருக்கிறது....

அவர்களாகத்தான் திருந்த வேண்டும்... இந்த வழியையும் முயற்சி செய்வது நல்லதுதான்....

S.Menaga said...

மிகவும் விழிப்புணர்வுள்ள பதிவு!!

ஹேமா said...

எங்க வீட்ல கிட்டத்தட்ட 40-45 வருஷமா அப்பாக்கும் அம்மாக்கும் நடந்துகிட்டிருக்கிற பிரச்சனையைப் பதிவாப் போட்டிருக்கிறமாதிரி இருக்கு சாரல்.திருந்தச் சான்சே இல்லப்பா !

அம்பிகா said...

நல்ல விழிப்புணர்வு பதிவு.
இந்த `எச்சரிக்கை. ஓரளவு பலன் தந்தாலும் சந்தோஷமே!

ஸ்வர்ணரேக்கா said...

ராம் நாம் - விஷயம் தெரியாததினால் முதல் பத்தியில் என்னமோ இருக்கு, அப்பறம் என்னவோ இருக்கேன்னு நினைச்சுட்டேன்.. அப்பறம் புரிஞ்சது..

நல்ல விழிப்புணர்வு சேவை தான்.. நல்லதோர் பதிவு சாரல்...

குச்சியைக் கிழிக்கும் போதெல்லாம் கேட்ட உச்சாடனம் மண்டைக்குள் ஒலிக்காமலா போகும்?
-- சரியாக சொன்னார்கள் ராமலட்சுமி.. கண்டிப்பாய் கேட்கும்.. 5 - 10% பலன் கிடைத்தாலும் நல்லதுதானே!!!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அன்பின் சாந்தி,

நல்ல விழிப்புணர்வு ஊட்டும் பதிவு. வாழ்த்துகள்.

ஜெய்லானி said...

எனக்கு இந்த சிகரெட் பிடிப்பவர்களை கண்டாலே ஆகாது ...மனசுக்குள் அவங்க பரம்பரையையே திட்டுவேன் வேற என்ன சொல்றது :-(

அப்பா செய்த தவறு பிள்ளைக்கு :-(
..கண்னதாசன் சொன்ன மாதிரி
வழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்டகடன் பிள்ளைகளை சேருமடி...

ஹுஸைனம்மா said...

நல்ல பதிவுப்பா. ஊதுற சங்கை ஊதி வைப்போம். திருந்துறவங்க திருந்தட்டும். மத்தவங்களை, அந்த “லைட்டர் மந்திரம்” மாதிரி ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்துதான் வழிக்குக் கொண்டுவரணும்.

//வெண்சுருட்டை(தமிழ்ல இந்தப் பேருதானே?.. தெரிஞ்சவங்க சொல்லுங்க) //

”வெண்குழல்வத்தி”னு படிச்ச ஞாபகம்!! :-))))

புதுகைத் தென்றல் said...

http://pudugaithendral.blogspot.in/2012/02/blog-post_26.html

விருது பெற அழைக்கிறேன்

பாச மலர் / Paasa Malar said...

விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புவோமாக..

FOOD NELLAI said...

இதுபோல இன்னும் நிறைய வரவேண்டும். அதன்மூலம் ஒரு சிலரேனும் திருந்தினால் நல்லதுதானே.

Geetha6 said...

விழிப்புண்ர்வூட்டும் பகிர்வு!Thanks.

அமைதிச்சாரல் said...

வாங்க முத்துலெட்சுமி,

ரொம்பவே பாவங்க அந்தப்பையன். வாழ்க்கையை இன்னும் ஆரம்பிக்காத நிலையில் இப்படியொரு முடிவு. வேறெந்த பழக்கங்களையும் விட கூடுதல் கெடுதி இந்தப் பழக்கத்தாலத்தான் வருது. கருவிலிருக்கும் சிசுவைக் கூட விட்டு வைக்கிறதில்லைன்னு தெரிஞ்சப்புறமும் இதை விட சிலருக்கு மனசு வர மாட்டேங்குதே.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆசியா,

கொஞ்சம் பணிச்சுமைகள் கூடிப்போனதால எழுதறது குறைஞ்சுருந்தது, ஆனாலும் நேரம் கிடைக்கிறப்பல்லாம் தமிழ்மணத்தை (சு)வாசிக்கிறதுதான் :-))

வாசிச்சதுக்கும் வருகைக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

புற்று நோய் வருமுன் காப்பது நல்லதுதானே. அதுக்கு இந்த ஏற்பாட்டுக்கு மக்களும் ஒத்துழைக்கணும்.

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க லஷ்மிம்மா,

என்னதான் மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டாலும் சுயக் கட்டுப்பாடுன்னு ஒரு மருந்தை எடுத்துக்கிட்டா குணமாகாதா என்ன!!

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

ஒலிக்கும்... வத்திக்குச்சி கொள்ளிக்கட்டையாகவும் தெரிய ஆரம்பிக்கும்.

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ரமா,

பின் வாங்குறவங்க இப்பல்லாம் தீப்பொட்டியும் கேட்டு வாங்குறாங்களாமேப்பா..

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க கோமதிம்மா,

வாசிச்சதுக்கும் வரவுக்கும் நன்றிம்மா.

மக்களுக்கு நல்ல புத்தியைக் கொடுன்னு ஆண்டவனை வேண்டிப்போம்.

அமைதிச்சாரல் said...

வாங்க ரத்னவேல் ஐயா,

வாசிச்சதுக்கு மிக்க நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க ஆதி,

ஆமாம்ப்பா.. வாழ்க்கைப் பயணத்துல முதல் படியே கடைசிப் படியுமாகியிருச்சு. பழி ஓரிடம் பாவம் ஓரிடம்ன்னு சொல்லுவாங்க. அந்தப் பையன் நிலையும் அப்படித்தான்..

arul said...

true words

LinkWithin

Related Posts with Thumbnails