Tuesday, 13 September 2011

கணபதி பூஜையில் கௌரி..(பதிவர் சந்திப்பு)


புள்ளைக்கு ஒரு நல்லது நடக்கறப்ப, புள்ளையை எல்லோரும் கொண்டாடற சமயங்கள்ல.. ஒரு ஓரமா நின்னாச்சும் அதைப் பார்த்து சந்தோசப்படாத அம்மாக்கள் உண்டா?? பூவுலகில் இருக்கும் அம்மாக்களாலயே அப்டி இருக்க முடியாதுங்கறப்ப இவங்க பெரிய இடத்து 'அம்மா'. முப்பெரும் தேவியரில் ஒருத்தங்க. இவங்களுக்குள்ள நடக்கற 'நம்பர் ஒன்' யாருங்கற போட்டி இன்னும் முடியாம, ஸ்டே ஆர்டர்ல இருக்கறதால, மூணில் ஒருத்தர்ன்னே அது வரைக்கும் சொல்லுவோம். யாரையாவது நீங்கதான் நம்பர் ஒன் அப்டீன்னு சொல்லப் போயி மத்தவங்க கோச்சுக்கிட்டாங்கன்னா!!.. எதுக்கு வம்பு J

ஆங்.. எங்கே நிறுத்தினேன்??.. 'பெரிய இடத்து அம்மா' அவங்க பையருக்கு நடக்கற கொண்டாட்டத்துல கலந்துக்காம இருப்பாங்களா??. முதல் நாள் பையர் வந்து ஜம்முன்னு உக்காந்தாச்சு. 'வீட்டை விட்டுப் போன புள்ளை எப்டி இருக்கார், நல்லா கவனிச்சுக்கறாங்களா?? அவருக்குப் பிடிச்ச மாதிரி மோதகம் செஞ்சு கொடுக்கறாங்களா'ன்னு பார்க்க அந்தம்மாவும் நாலாந்தேதியன்னிக்கு இன்ஸ்பெக்ஷன் வந்தாங்க. சில வீடுகள்ல கௌரியம்மா, ஒரு நாள் முன் கூட்டியே வருவாங்க. எப்போ வந்தாலும் சரி,.. டாண்ணு அஞ்சாம் நாளன்னிக்கு கிளம்பிடுவாங்க. சில இடங்கள்ல அம்மாவை தனியா அனுப்பக் கூடாதுன்னுட்டு புள்ளையும் சேர்ந்தே கிளம்பிடுவாராம்.

சுமங்கலிப்பொண்ணு தன்னோட தாய் வீட்டுக்கு வந்துருக்கறதா பாவிச்சு, அவங்களுக்கு சகலவித உபச்சாரங்களும் அமளிதுமளிப்படும். சில வீடுகள்ல கௌரியின் பிரதிமைக்கு புடவை, நகைன்னு அலங்காரம் செய்வாங்க. சில வீடுகள்ல கலசத்துல தேங்காயை வெச்சு, நாம வரலஷ்மி பூஜைக்கு செய்வோமே அது மாதிரி, தேங்காய்ல வெள்ளியிலோ அல்லது மஞ்சப்பொடியிலோ முகம் உருவாக்கி, அலங்காரம் செய்வாங்க.

நாள் முழுக்க பஜனை, பாட்டு, சுமங்கலிகளுக்கு விருந்துன்னு ஒரே அமர்க்களம்தான். சாயங்காலம் அக்கம் பக்கத்து பெண்களைக் கூப்பிட்டு ‘ஹல்திகுங்கும்’(தாம்பூலம்) கொடுப்பாங்க. அப்றம் மனசில்லா மனசோட கௌரியை  பிரியாவிடை கொடுத்து அனுப்புவாங்க. இதெல்லாம், எங்கூர்ல பத்து நாட்கள் நடக்கும் கணபதி பூஜையின் ஒரு அம்சமான ‘கௌரிகண்பதி’ பூஜையில் நடக்கும்.

இப்படியொரு பூஜை அன்னிக்குத்தான், நம்ம லஷ்மிம்மாவை சந்திக்கும் வாய்ப்பு அமைஞ்சது. “ரெண்டு பேரும் மும்பைப் பகுதியில் தான் இருக்கோம்ன்னாலும் இது வரை சந்திச்சுக்க வாய்ப்பு அமையலை. இப்ப பிள்ளையார் சதுர்த்தி விழாவுக்காக தானாவிலிருக்கும் பையர் வீட்டுக்கு வந்திருக்கேன். சந்திக்கலாமா’ன்னாங்க. ஆஹா!! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா. பூஜையிலும் கலந்துக்கிட்ட மாதிரி இருக்கும். பதிவர் சந்திப்பும் நடத்துன மாதிரி இருக்கும். ஒரு சந்திப்புலயாவது கலந்துக்கலைன்னா, அப்றம் நாமளும் ரவுடியாவுறது எப்படி?? J.

அப்ப நம்ம நாராயணீயம் ஜெயஸ்ரீ கிட்ட இதைப் பத்தி சொன்னேன். ஜெயஸ்ரீ நாராயணீயம் தவிர சமையலுக்குன்னு ஒரு ப்ளாகும், எண்ணங்களைப் பகிர்ந்துக்கன்னு இன்னொரு ப்ளாகுமா மொத்தம் மூணு ப்ளாகை நடத்திட்டு வராங்க. அவங்களும் நானும் வரேன்ன்னாங்க. ‘மும்பையில் பெண் பதிவர்கள் சந்திப்பு' உறுதியாச்சு. ஆனா, உடனே போக முடியலை. எங்க பில்டிங்கிலும் புள்ளையார் உக்காந்திருக்காரே. ஞாயிற்றுக்கிழமை போகலாம்ன்னு நினைக்கிறப்பவே அன்னிக்கு கணபதி ஹோமம், இன்ன பிற பூஜைகளெல்லாம் இருக்குதுன்னு செய்தி வருது. 'போய்க்கோ.. ஆனா, உனக்கு மோதகம், சுண்டல் கிடைக்காது'ன்னுட்டார், எங்க குடியிருப்பின் புள்ளையார். ஆகவே அவருக்கும் ஒரு அட்டெண்டென்ஸ் போட வேண்டியதாப் போச்சு :-)

மஹாபூஜை, அதைத்தொடர்ந்த மஹாபிரசாதம்.. (அதாங்க.. லஞ்ச்) எல்லாம் முடிஞ்சு வர்றதுக்கு எப்டியும் சாயந்திரம் நாலு மணியாகிடும். அதுக்கப்றம் 'தானா'வுக்கு போய் வர்றதுன்னா கஷ்டம். ஏன்னா, ஒரு மணிக்கூருக்கு ஒருக்காதான் லோக்கல் உண்டு. போயிட்டு வரவே நேரம் சரியாயிருக்கும். ஆற அமர பேசக்கூட நேரமிருக்காது J. அதனால, மறுநாள் போனா, ஆற அமர சந்திச்சுட்டு வரலாமேன்னு நினைச்சு, கண்டிப்பா போயிட்டு வந்துடணும்ன்னு முடிவுமெடுத்து லஷ்மிம்மாக்கும் ஜெயஸ்ரீக்கும் மெயிலனுப்பியாச்சு.

மறுநாள், பசங்களுக்கு அறிவிப்பு கொடுத்துட்டு, கடமைகளெல்லாம் முடிச்சு, வேக வேகமா ஸ்டேஷனுக்கு வந்தா, 'தானா' போற லோக்கல் அப்பத்தான் ஸ்டேஷன்லேர்ந்து எனக்கு டாட்டா காமிச்சுட்டுப் போகுது. ஒரு மணி நேரம் கழிச்சு வந்த அடுத்த லோக்கலைப் பிடிச்சு தானா போய்ச் சேர்ந்தேன். லஷ்மிம்மா மகரோட அட்ரஸ் கொடுத்திருந்தாங்க. கூகிள்ல மேப் பார்த்து எங்கிருக்குன்னு தெரிஞ்சு வெச்சிக்கிட்டேன். ஏழெட்டு வருஷம் முன்னே அந்த சொஸைட்டியின் கட்டிடங்களை கட்டிக்கிட்டிருக்கறச்சே போயிருக்கோம். தானாவில் ரங்க்ஸின் நண்பர்கள் நிறையப்பேர் இருக்காங்க. அடிக்கடி அங்கெல்லாம் விசிட் அடிச்சிருக்கறதால பழகின இடம்தான். 
அவங்க வீட்டுக்குப் போனதும், எங்கூருக்கு போகும்போது எங்கம்மா கொடுக்கற மாதிரியே, ஒரு சந்தோஷமான வரவேற்பு கொடுத்தாங்க. இப்பத்தான் முதல் முறை நேர்ல சந்திக்கிறோம்ன்னாலும், ஏதோ ரொம்ப காலம் பழகின மாதிரியே ஒரு உணர்வு.. குடும்பத்தை அறிமுகம் செஞ்சுக்கிட்டேன். அளவான அழகான குடும்பம். அவங்க பையர் கிட்ட பேசறப்ப ஏதோ உடன் பிறந்த சகோதரன் கிட்ட பேசற மாதிரியே சகஜமா பேசினார். லஷ்மிம்மா எவ்ளோ ரிசர்வ்டோ, அவங்க பையர் அவ்ளோ லகலகலக. ச்சே.. கலகலகல J.

அவங்க கிட்ட நிறையப் பேசணும், நிறையக் கேக்கணும்ன்னு நினைச்சிருந்தேன். ஆனா, ஏற்கனவே என்னை ஆட்டிப் படைச்சிக்கிட்டிருந்த ஜலதோஷம் சரியாகாம, இருமல் பொங்கிப்பொங்கி வந்துக்கிட்டிருந்தது. விட்ருவோமா என்ன!!.. ஸ்ட்ரெப்ஸில்ஸை வாயில் அடக்கிட்டாவது பேசுவோம்ல J. பதிவர் சந்திப்புல பதிவுகள் பத்தி கொஞ்சம்தான் பேசியிருப்போம்ன்னு நினைக்கிறேன். அதான், கொஞ்சங்கொஞ்சமா குடும்ப சந்திப்பு ஆகிடுச்சே J. பேரக்குழந்தைகளும் வீட்ல இருந்தாங்க. சின்னவர் மூணாங்கிளாஸ் படிக்கிறாராம். செம துறுதுறு. அவர் என்னை வாரினதை இங்கே சொல்ல மாட்டேன் ;-)
லஷ்மிம்மா வீட்டுப் புள்ளையார்.
அவங்க வீட்டுப் புள்ளையார் ஜூப்பரா இருந்தார். அலங்காரமெல்லாம் அசத்தல். எல்லாம் மருமகளின் கைவண்ணமாம். சாயந்திரம் ஆரத்தி முடிஞ்சு கிளம்பலாம்ன்னு பார்த்தா, நேரமாகிட்டே இருக்கு. ரொம்பவும் நேரமாகிடுச்சுன்னா, அப்றம் ட்ரெயினை தவற விட்டுடக் கூடிய அபாயம். அவங்க கொடுத்த மஞ்சக்குங்குமத்தையும் கிஃப்டையும் வாங்கிக் கிட்டு ஸ்டேஷனுக்கு வந்தேன். கௌரி விஸர்ஜனுக்காக போக்குவரத்தை திருப்பி விட்டிருக்காங்க. ஸான்பாடா ரோட்டில் மட்டுமே எக்கச்சக்கமான திருப்பி விடப்படல்கள். வழி நெடுக அம்மாவையும் புள்ளையையும் தரிசிச்சுக்கிட்டே வீடு வந்து சேர்ந்தேன். நாங்க சந்திச்சுக்கிட்டதை லஷ்மிம்மாவும் இங்கே எழுதியிருக்காங்க.
48 comments:

ஆமினா said...

அருமையான சந்திப்பு ;-)

RAMVI said...

அருமையான பதிவர் சந்திப்பு.

லக்‌ஷ்மி அம்மாவும் , “மினி பதிவர் சந்திப்பு” என உங்களுடைய சந்திப்பை குறித்து பதிவிட்டிருந்தார்.

r.v.saravanan said...

அருமை

pagirvukku nandri

MANO நாஞ்சில் மனோ said...

நானும் மும்பை செட்டில்தாங்கோ, அடுத்தமுறை லீவுக்கு வரும்போது மும்பையில் ஒரு பெரிய பதிவர் சந்திப்பு நடத்துநீங்கன்னா நானும் கலந்துக்குறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் பதிவர் சந்திப்புக்கு எனது வாழ்த்துக்கள்.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

எவ்வளவு கஷ்டப்பட்டு போய் வந்துள்ளீர்கள்! கடைசியில் தங்களுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருந்திருக்குமோ ...

ஆங்காங்கே இதுபோல பதிவர் சந்திப்புக்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்குது. அவங்க பதிவையும் ஏற்கனவே படித்தேன்.

நீங்களும் நல்லவே எழுதியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள். vgk

Lakshmi said...

சாந்தி உன்பதிவு பார்த்ததும் என்பதிவுபாக்க எனக்கே ஷேமா இருக்கு. என்ன சூப்பரா சொல்லி இருக்கே. இதைப்படிக்கும்போது நாம திரும்பவும் ஒருமுறை சந்திச்சாப்போலவே இருந்துச்சு ஜெயஸ்ரீ கிட்டயும் போன்ல பேசினேன். அம்பர் நாத் வரேன்னு சொல்லி இருக்காங்க. போட்டோவும் சூப்பரா போட்டிருக்கே. நான் கலகல்ப்பா பேசினேன்னு நினைச்சேன் நீ இப்படி சொல்லிட்டியே? அடுத்தமீட்டிங்க எங்க, எப்போ வச்சுக்கலாம். ஆமியும் வரேன்னுருக்கா.

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

தொடரட்டும் இதுபோன்ற தோழமை!!!

வெங்கட் நாகராஜ் said...

மினி பதிவர் சந்திப்பு! அட நல்ல விஷயம்...

இங்கே தில்லியிலும் அடிக்கடி சந்திக்க நினைத்தாலும் முடிவதில்லை. சமீபத்தில் துளசி மேடம் வந்திருந்த போது நாங்கள் சந்தித்தோம்....

நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு சாந்தி.

//அவங்க வீட்டுப் புள்ளையார் ஜூப்பரா இருந்தார்.//

ஆம்:)!

Jaishree said...

அருமையான சந்திப்பு & அருமையான பதிவு கணபதி அலங்காரம் superb!

ஜெய்லானி said...

ஆஹா..அருமையான சந்திப்பு , கொழுக்கட்டை கொண்டுப்போனீங்களா..? ஹா..ஹா.. :-)

raji said...

மும்பையில பதிவர் சந்திப்பு வச்சா பறந்து வரணும்னு எங்கிட்ட சொல்லிப்போட்டு என்னியக் கூப்பிடாமலே என் மோதகத்தையும் சேத்து முழுங்கிருக்கீங்க!இது அநியாயம்!இத்தைக் கேக்க ஆருமில்லியா?
:(

இருந்தாலும் லக்ஷ்மிம்மா வீட்டு பிள்ளையாரோட அழகான படம் போட்டதால உங்களுக்கு நான் தமிழ்ல விஜயகாந்த்துக்கு பிடிக்காத வார்த்தையை வழங்கிடறேன்.போனா போகுது :)

அமைதிச்சாரல் said...

வாங்க லஷ்மிம்மா,

நீங்க சொன்னதை வெச்சு நானும் நீங்க ரொம்ப ரிசர்வ்டோன்னு நினைச்சிருந்தேன். அப்படியில்லாம ரொம்ப கலகலப்பாத்தான் பேசினீங்க. ஆனாலும் உங்க பையர் உங்களை விட கலகலப்பு கூடுதல்தானே ;-)

என் தம்பி கிட்ட பேசுன மாதிரியே இருந்தது. அவனுக்கு எஃப்.எம்ன்னு பேரே வெச்சிருக்கேன் :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ஆமி,

ரொம்ப அருமையாயிருந்துச்சுப்பா, நீங்க எப்போ வரீங்கன்னு சொல்லுங்க. இன்னொருக்கா சந்திக்கலாம் :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ராம்வி,

ஆமாம்ப்பா,. அவங்களைச் சந்திச்சது ரொம்பவே சந்தோஷம் எனக்கு :-)

அமைதிச்சாரல் said...

வாங்க சரவணன்,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு..

அமைதிச்சாரல் said...

வாங்க மனோ அண்ணாச்சி,

மும்பையில் வேற யாரெல்லாம் இருக்கறாங்கன்னு லஷ்மிம்மா கேட்டப்ப, மொதல்ல உங்க பேருதான் ஞாபகம் வந்துச்சு. அண்ணன் இப்போ ஊருக்கு கிளம்பி போயிட்டாங்க. அடுத்த தடவை ஊருக்கு வரச்சே சந்திக்கலாம்ன்னு சொன்னேன். நீங்கதான் எடுத்து நடத்தணும் சரியா :-)

நீங்க ஊர்லேருந்து மும்பைக்கு எப்ப வந்தீங்கன்னு கவனிக்கலை.. தெரிஞ்சுருந்தா சந்திப்பு ஏற்பாடு செஞ்சுருக்கலாம். மும்பையிலும் மக்கள்ஸ் நிறையப்பேர் இருக்காங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க வை.கோ ஐயா,

கஷ்டமெல்லாம் ஒண்ணுமில்லை. இந்த ஸ்டேஷன்ல ஏறி அந்த ஸ்டேஷன்ல இறங்க வேண்டியதுதான்.அது கூட நாமளா இறங்கத் தேவையில்லை, இறக்கி விட்டுடும் கூட்டம் :-))

ரொம்பவே சந்தோஷமான சந்திப்பு.

அமைதிச்சாரல் said...

வாங்க ரத்னவேல் ஐயா,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு.

அமைதிச்சாரல் said...

வாங்க ஷீ- நிசி,

ரொம்ப நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

இங்கியுமே இத்தனை நாள் கழிச்சுத்தான் சந்திக்க முடிஞ்சுருக்கு. துளசிக்கா மும்பை வந்தா பார்க்கலாம்ன்னு இருந்தேன். லஷ்மிம்மாவும் ஆவலா இருக்காங்க .. பார்க்கலாம் :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

இன்னும் நல்லா எடுத்துருக்கலாம்தான். என் சோனி அவ்ளோதான் ஒத்துழைச்சுது :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ஜெயஸ்ரீ,

ஆஹா!!.. தமிழ் வந்துடுச்சா. ஜூப்பருங்க :-))

லஷ்மிம்மா செஞ்ச லட்டை சாப்பிட உங்களுக்கு கொடுத்து வைக்கலை :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ஜெய்லானி,

கொழுக்கட்டைக்கு பதிலா, அவங்க வீட்ல செஞ்சுருந்தாங்கல்ல, அந்தக் கொழுக்கட்டையைத் திங்கிறதுக்கு ஆளைக் கூட்டிட்டுப் போனேன் :-))

அவரோட தொப்பை சைஸுக்கு எப்படியும் ஒரு டஜன் முழுங்கியிருப்பார் :-))

ரிஷபன் said...

உங்களைச் சந்திக்க வைத்த பிள்ளையாருக்கு ஸ்பெஷல் நன்றி..

ஹுஸைனம்மா said...

//இவங்களுக்குள்ள நடக்கற 'நம்பர் ஒன்' யாருங்கற போட்டி இன்னும் முடியாம, ஸ்டே ஆர்டர்ல இருக்கறதால//

இது என்னன்னு முதல்ல புரியலை. அப்புறந்தான், ‘அந்தப்’ பாட்டு ஞாபகம் வந்துச்சு!! கல்வியா, செல்வமா, வீரமா.... :-)))))

//இன்னும் நல்லா எடுத்துருக்கலாம்தான். என் சோனி அவ்ளோதான் ஒத்துழைச்சுது//
ஏன்ப்பா இப்படி ’சோனி’யா இருக்குது அது? நல்லா சோறு போட்டு, ‘புஷ்டி’யா ஆக்கிட வேண்டியதானே? ;-))))) (நற.. நற.... - இது நீங்க)

கோவை2தில்லி said...

அருமையான பதிவர் சந்திப்பு.
அவங்க வீட்டு பிள்ளையார் அழகாய் இருக்கார். நல்ல அலங்காரம்.

மனோ சாமிநாதன் said...

பிள்ளையார் பூஜையைப்பற்றியும் லக்ஷ்மியம்மாவைச் சந்தித்தது பற்றியும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சாந்தி! லக்ஷ்மியம்மாவும் ஃபோன் செய்து சொன்னார்கள். எனக்கு மிகவும் பிடித்த ஊரில் [ பன்வேல் ]இருக்கிறீர்கள் என்பது தெரிந்ததும் மனதிற்கு மகிழ்வும் மனதிற்கு நெருங்கிய ஒருத்தரைப்பற்றித் தெரிந்த உணர்வும் ஏற்பட்டது.

Ramani said...

பதிவர் சந்திப்பு தொடர்ந்து தொடர
மனமார்ந்த வாழ்த்துக்கள்
படங்களுடன் பதிவும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

உங்கள் சந்தோஷச் சந்திப்பு எங்களுக்கும் சந்தோஷத்தைத் தருகிறது.

FOOD said...

பதிவர் சந்திப்பா, கலக்குங்க சகோ.

FOOD said...

பதிவர் சந்திப்பா, கலக்குங்க சகோ.

Anonymous said...

GOOD POST KEEP IT UP.

மாதேவி said...

லஷ்மி தேவியை சந்தித்து விட்டீர்களா :) ஆகா....

இனிய சந்திப்பு.

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜி,

நன்றிங்கோ :-)))))

அமைதிச்சாரல் said...

வாங்க ரிஷபன்,

வாசிச்ச உங்களுக்கும் நன்றி :-)))

அமைதிச்சாரல் said...

வாங்க ஹூஸைனம்மா,

சமைக்கிற ஸ்பெஷல் அயிட்டங்களை முதல்ல அதுக்குத்தான் படையல் வைக்கிறேன். ஆனாலும், சோனியாவே இருக்குப்பா :-))

அமைதிச்சாரல் said...

வாங்க கோவை2தில்லி,

ஆமாம்ப்பா,.. ரொம்பவே அழகுப்புள்ளையார் அவர்.

அமைதிச்சாரல் said...

வாங்க மனோம்மா,

நீங்களும் இங்கேதான் இருந்தீங்கன்னு ஒருக்கா பின்னூட்டத்தில் படிச்ச ஞாபகம். நீங்க இங்கே வர்றதா ஐடியா இருந்தா இன்னொரு கச்சேரி நடத்தலாம் :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ரமணி,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு.

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்ரீராம்,

ரொம்ப நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

இழப்பின் வலியிலிருந்து மீண்டு வருவது குறித்து மகிழ்ச்சி.

நீங்க நடத்துன பதிவர் சந்திப்பை பத்தி படிக்கிறப்ப 'வடை போச்சே'ன்னு இருந்துச்சு. இந்த வருஷம் ஊருக்கு வர்றதா ப்ளான் செஞ்சு கேன்சல் ஆகிடுச்சு. வந்திருந்தா, நானும் ஜோதியில் ஐக்கியமாகியிருப்பேன். பரவால்லை இன்னொருக்கா சந்தர்ப்பம் கிடைக்காமயா போயிடும் :-)

அமைதிச்சாரல் said...

வாங்க அழகி,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு.

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

நல்லாருக்கீங்களா.

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு.

இராஜராஜேஸ்வரி said...

ஒரு சந்திப்புலயாவது கலந்துக்கலைன்னா, அப்றம் நாமளும் ரவுடியாவுறது எப்படி??

.இனிய சந்திப்பு.

படங்களுடன் பதிவும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வரிகளில் மட்டுமே சந்திச்சுட்டிருந்தவங்களை நேர்ல சந்திக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க :-)

வாசிச்சதுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails