Wednesday, 3 October 2012

இரண்டாமிடமும், முத்துகளில் கோர்க்கப்பட்டவையும்.. இந்த வாரம் மகிழ்ச்சி வாஆஆஆரம் :-)))

பிட்டில் மாசா மாசம் நடக்கும் போட்டிக்கு நானும் அசராம பிட்டு பிட்டா போட்டுட்டிருந்தேன், என் சில படங்களும் அசராம முதல் சுற்று வரைக்கும் ஜெயிச்சு வந்துட்டு, அதுக்கப்புறம் வெற்றி கரமா வெளியேறிட்டிருந்தன. ஆர்வம் இருந்தாலும் நேரம் ஒத்துழைக்காததால இடையிடையே 'டூ' விட்டுட்டு ஒதுங்கியிருந்தாலும் காமிரா பிடிச்ச கை சும்மாயிருக்குமா என்ன?.. மறுபடி போட்டியில கலந்துக்க ஆரம்பிச்சேன். "இதனால் தாங்கள் சொல்ல வருவது என்னவோ?"ன்னுதானே கேக்கறீங்க. சொல்றேன்... அதுக்குத்தானே இவ்ளோ பில்டப்பு :-))

ஆகவே நண்பர்களே,.. 'பிட்' நடத்தும் போட்டிகளில், செப்டம்பர் மாதப் போட்டிக்கான  தலைப்பான வெற்றிடத்துக்காக நான் அனுப்பிய ஊஞ்சல் இரண்டாமிடத்தை வென்றிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடையும் அதே நேரத்தில், என்னை வாழ்த்திய நல்ல உள்ளங்களான உங்களுக்கும் படத்தைத் தேர்வு செய்த நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்கும் அதே சமயத்தில், மகிழ்ச்சியான தருணங்கள் இரண்டொன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை இந்த மேடையில் நான் சொல்லிக்கொள்கிறேன்.

இரண்டாம் இடம் பிடிப்பது அமைதிச்சாரல்...
ஜெயித்த மற்றவர்களுக்கும் வாழ்த்தை இங்கே சொல்லிக்கலாம்.

ஃபேஸ்புக்கில் புகைப்படப்பிரியன் குழுமத்தில் வாராவாரம் ஏதாவதொரு தீமில் புகைப்படப் போட்டி நடக்கும். ஒருவர் தினமும் ஒரு படம் வீதம் ஏழு படங்களை இதில் பதிந்து போட்டியிடலாம். எந்தப் படத்துக்கு நிறைய லைக் விழுதோ அது அந்த வாரத்தோட கிங் அல்லது குயினாகத் தேர்ந்தெடுக்கப்படும். அது போக சிறந்த பத்துப் படங்கள் முத்துக்களாகவும் தேர்ந்தெடுக்கபடும்.

"அலைகள்" என்ற தலைப்பில் அனுப்பிய இந்தப் படம் அந்த வாரத்தோட பத்து முத்துகளில் ஒன்றாக ஜொலித்தது.
"பாலங்கள்"என்ற தலைப்பில் அனுப்பிய பாந்திரா-வொர்லி பாலத்தின் இந்தப்படம் சென்ற வார முத்துகள் பத்தில் ஒன்றாகக் கோர்க்கப்பட்டது.
இந்தப் பாலத்துக்கு ஃப்ளிக்கரிலும் நல்ல வரவேற்பு கிடைச்சது :-)

புகைப்படப்பிரியனில் இந்த வாரப் போட்டியோட தலைப்பு "ரோஜா(கள்). நிறையப்பேர் விதவிதமான ரோஜாக்களைப் பதிந்து ஆல்பமே கமகமன்னு மணக்குது. உங்களுக்கும் ஆர்வமிருந்தா கலந்துக்கலாம்.. கலக்கலாம்.

34 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனமார்ந்த அன்பு வாழ்த்துகள்.

எல்லாப்படங்களும் அருமையோ அருமை தான்.

கீழ்க்கண்ட வலைச்சரப்பதிவினைப் பார்த்து விட்டு தங்களின் மேலான கருத்துக்களைத் தாருங்கள்.

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

அன்புடன்
VGK

ஸ்ரீராம். said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். கீழே உள்ள பாலங்கள் படமும் அழகாக இருக்கிறது.

ராமலக்ஷ்மி said...

தொடரட்டும் சாந்தி வெற்றிகள்:)! மனமார்ந்த வாழ்த்துகள்!

Ramani said...

அசத்தலான படங்கள்
தொடர்ந்து வெல்ல மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

FOOD NELLAI said...

வெற்றிகள் பல குவியட்டும். வாழ்த்துக்கள் சகோ.

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

போட்டிகளில் கலந்து கொள்வதே உற்சாகமான விஷயம்தான். அதிலும் வெற்றி பெற்றுவிட்டால் சந்தோஷத்திற்கு அளவேது? PIT நடத்திய போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்!

Lakshmi said...

வாழ்த்துக்கள். வெற்றிகள் தொடரட்டும்

மோகன் குமார் said...

மகிழ்ச்சி வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

அட, அப்படியா. வாழ்த்துகள்.

பால கணேஷ் said...

எனக்கும் கேமராவுக்கும் ரொம்ப தூரம்கறதால மனசு நிறைய மகிழ்ச்சியோட உங்களுக்கு என்னோட இதயம் நிறைஞ்ச நல்வாழ்த்துக்களைச் சொல்லிக்கறேன். ஊஞ்சல் படம் அருமையா இருந்தது. கடைசியில் வெளியிட்டிருக்கற பாலம் படம் மனசைக் கொள்ளையடிச்சுட்டுது. அருமை.

மாதேவி said...

மிக்கமகிழ்ச்சி. வாழ்த்துகள்.

Easy (EZ) Editorial Calendar said...

எல்லா படங்களும் மிக மிக அருமையாக உள்ளன..பகிர்வுக்கு மிக்க நன்றி...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

கோவை2தில்லி said...

வாழ்த்துகளும் பாராட்டுகளும்....

தொடர்ந்து கலக்குங்க.....

புதுகைத் தென்றல் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சியாய் இருக்கு

Nithi Clicks said...

வாழ்த்துக்கள் அமைதிசாரல் :) தொடரட்டும் உங்களின் வெற்றிகள், மனமார்ந்த வாழ்த்துக்களுடன்,
நித்தி

Thiruvattar Sindhukumar said...

இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி வை.கோ ஐயா

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்ரீராம்,

ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

ரொம்ப நன்றிங்க, வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.

அமைதிச்சாரல் said...

வாங்க ரமணி,

வாழ்த்துகளுக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தனபாலன்,

ரொம்ப நன்றிங்க வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.

அமைதிச்சாரல் said...

வாங்க அண்ணா,

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க துபாய் ராஜா,

ராஜாவே வாழ்த்தினது ரொம்ப சந்தோஷமா இருக்கு :-)

அமைதிச்சாரல் said...

வாங்க இளங்கோ,

நீங்க சொன்னது ரொம்பச்சரி. ஜெயிக்கிறோமோ இல்லையோ நம்ம படைப்பை மத்தவங்க ரசிக்கற மாதிரி கொடுக்கறதே ஒரு திருப்திதானே :-)

ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க லக்ஷ்மிம்மா,

ரொம்ப நன்றிம்மா.

அமைதிச்சாரல் said...

வாங்க மோகன் குமார்,

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க கணேஷ்,

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க கோவை2தில்லி,

வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க திருவட்டார் சிந்துகுமார் அண்ணா,

நீங்க வந்து வாழ்த்தினது ரொம்ப சந்தோஷம்.

நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails