Wednesday, 22 June 2011

சோகமா ஒரு சொந்தக்கதை..

ஒரு வழியா லீவு முடிஞ்சு வந்துட்டேன்.  புது இடுகையை எதிர்பார்த்து தெனமும் ஆவலோட என் தளத்துக்கு வந்த(அப்டீன்னு நம்பறேன் :-)) கோடானு கோடி நல்ல உள்ளங்களுக்கு மொதல்ல நன்றி. திடீர்ன்னு காணாமப்போயிட்ட என்னைக்கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கற அளவுக்கு போயிட்டதா கேள்விப்பட்டதும், அப்படியே கண்ணுல தண்ணி வந்துடுச்சு. (வெங்காயம் நறுக்கினதாலதான் கண்ணீர் வந்ததுங்கற விவரம் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது :-)). அதான் ஓடியாந்துட்டேன். இந்த இடுகையையே என்னோட விடுமுறை விண்ணப்பமாவும், மருத்துவ சான்றிதழாவும் எடுத்துக்கணும்ன்னு தாழ்மையோட மிரட்டிக்கேட்டுக்கறேன்..

விடுமுறைன்னா விருந்தாளிங்க வர்றது சகஜம்தான்னாலும், இந்தத்தடவை எல்லோரும் ஒட்டுமொத்தமா வந்து அலற வெச்சுட்டாங்க. எப்பவும் தனியாவர்த்தனமா கச்சேரி நடத்தற இரத்த அழுத்தம், இந்தத்தடவை தன்னோட நண்பர்களையும் கூட்டு சேர்த்துக்கிட்டு நடத்துன அமர்க்களமான ஜூகல்பந்தியால, நிலைமை தாறுமாறாகி, பயங்கரமான மூச்சுத்திணறல்ல கொண்டுபோய் முடிஞ்சது. திடீர் திடீர்ன்னு அட்டாக் மாதிரி வந்து சுமார் இருபது நிமிடங்களுக்காவது படுத்தியெடுக்கும். அப்படியே படுத்துடுவேன். சும்மா உக்காந்திருக்கக்கூட முடியாது. எப்பவாவது இப்படின்னா சரி.. எப்பவுமே இப்படித்தான்னா எப்படி ?!! :-)))

ரங்க்ஸ்தான் கொஞ்சம் பயந்துட்டார். வேண்ணா என்னை ஆஸ்பத்திரியில அட்மிட் செஞ்சுடலாமான்னு ஒரு ஐடியா.. "நீ நல்லா ஹெல்த்தியா இருந்தாத்தானே எங்களுக்கு தைரியமா இருக்கும்"ன்னெல்லாம் அவர் பேசப்பேச, என்னை சக்கர நாற்காலியில உக்கார வெச்சு,"சுமை தாங்கி சாய்ந்தால்,.. சுமை என்ன ஆகும்.."ன்னு பாட்டுப்பாடிக்கிட்டே நாற்காலியை தள்ளிக்கிட்டு போறமாதிரியெல்லாம் ஒரு கற்பனை வெள்ளத்துல மூழ்கிட்டேன் :-)))

எனக்கு உடம்பு சரியில்லாத துக்கத்துல சிஸ்டமும் மண்டையை போட்டுடுச்சு.. அதையும் தட்டிக்கொட்டி, சரிபண்ணி ஒரு வழியா செட்டிலாயாச்சு.. இந்த களேபரத்துல, லீவுக்கு வைஷ்ணோதேவி கோயிலுக்கு போகணும்ன்னு போட்டு வெச்ச திட்டம் பணால்.. இன்னொரு லீவு கிடைக்காமலா போயிடும்!!.
48 comments:

ஹுஸைனம்மா said...

ஏய், என்னப்பா, இப்படி திகில் ஃபிலிம் ஓட்டுறீங்க? நானும் ஏதோ பசங்க லீவுக்கு அங்கேயிங்க போயிருப்பீங்கன்னு நினச்சுக் காத்திருந்தா, இப்படி பகீர் குண்டைத் தூக்கிப் போடுறீங்க?

என் முந்தின பதிவுல கூட, ஒரு பின்னூட்டத்துல, லீவுக்குப் போன எல்லாரும் வந்துட்டாங்க, அமைதிக்காவும், அம்பிகாவும்தான் காணோம்னு சொல்லிருந்தேன்!!

என்ன உடம்புக்கு? டாக்டர்ட்ட போனீங்களா இல்லியா? மெத்தனமா இருக்காதீங்க. இன்னும் தேவையான அளவு ரெஸ்ட் எடுத்துட்டு இந்தப் பக்கம் வந்தா போதுமாயிருந்துது. கவனமா இருங்க ப்ளீஸ்!!

வெங்கட் நாகராஜ் said...

அடாடா... இப்படி பயமுறுத்தறீங்களே சகோ... இப்ப உடல் நிலை எப்படி இருக்கு! பார்த்துக்கோங்க! வலைப்பக்கம் உலவினாலே எல்லா பிரச்சனையும் தீர்ந்துடும்...

கவலை விடுங்க... தொடர்ந்து எழுதுங்க.... சரியா...

நட்புடன்

வெங்கட், புது தில்லி.

ராமலக்ஷ்மி said...

எத்தனை ஸ்மைலி நீங்க போட்டாலும் கவலை எங்களையும் தொத்திக் கொள்கிறது. தேறி வந்து விட்டதில் நிம்மதி. வைஷ்ணோதேவி அருள் எப்பவும் கூட இருக்கும். பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல நகைச்சுவையான பதிவு.
பாராட்டுக்கள்.

உடம்பையும் அவ்வப்போது
கவனித்துக் கொள்ளுங்கோ.

புதுகைத் தென்றல் said...

பீபி அங்கயும் சதிராட்டமா!!! கடவுளே.

இப்ப எப்படி இருக்கு? சகோ வெங்கட் சொன்னாப்ல வலைப்பக்கம் உலாவ ஆரம்பிச்சா கொஞ்சம் தெம்பா இருக்கும்.

A.R.ராஜகோபாலன் said...

தயை கூர்ந்து
உடல்நலனில் கவனம் கொள்ளுங்கள்
உடலின் ஆரோக்கியம் மிக முக்கியம் எதனையும் விட

துளசி கோபால் said...

அட ராமா............ உடம்பைப் பார்த்துக்குங்க.

எனக்கும் இந்த முறை ராஜஸ்தான் பயணத்துலே பி பி கொஞ்சம் ஆட்டத்தை அவுத்துவுட்டு.....பேஜாராப் போச்சு:(

அமுதா கிருஷ்ணா said...

ஹலோ வைஷ்ணவியெல்லாம் மெதுவா நல்லா குணமான பின்னால் பாத்துக்கலாம்.மேடம் வருத்த படமாட்டாங்க.டேக் ரெஸ்ட்..

வல்லிசிம்ஹன் said...

Please take care Saaral.
you may not believe it.
But I visited yr site almost evry other day.

Viahnudhevi kaappaaththattum.

கோவை2தில்லி said...

இப்ப உடம்பு தேவலையா? கவனித்துக் கொள்ளுங்கள். அடுத்த லீவுக்கு வைஷ்ணோ தேவி பார்க்கலாம்.

அமைதி அப்பா said...

//எத்தனை ஸ்மைலி நீங்க போட்டாலும் கவலை எங்களையும் தொத்திக் கொள்கிறது. தேறி வந்து விட்டதில் நிம்மதி.//

ஆம், உண்மைதான்.

//வலைப்பக்கம் உலவினாலே எல்லா பிரச்சனையும் தீர்ந்துடும்... //

அதானே... இனி கவலையை விடுங்க.

vanathy said...

Take care of your self first.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

உடல் உபாதைகளையும் நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அனுராதா ரமணன் நினைவு வருகிறது. பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்.

சுந்தரா said...

விரைவில் முழுமையான உடல்நலம்பெற வைஷ்ணவதேவி அருளட்டும்.

உடம்பைப் பத்திரமா பாத்துக்கோங்க சாரல்.

அப்பாவி தங்கமணி said...

//புது இடுகையை எதிர்பார்த்து தெனமும் ஆவலோட என் தளத்துக்கு வந்த(அப்டீன்னு நம்பறேன் :-)) //
நான் உண்மைய சொல்றேன்... தெனமும் வர்ல... ஆனா நாலு வாட்டி வந்து எட்டி பாத்து ஏமாந்து போனேன்...:)

//திடீர் திடீர்ன்னு அட்டாக் மாதிரி வந்து சுமார் இருபது நிமிடங்களுக்காவது படுத்தியெடுக்கும்//
அடப்பாவமே... டேக் கேர் அக்கா... கெட் வெல் சூன்...

துளசி கோபால் said...

நான்கூட தினமும் வரலை. கூகுள் ரீடரில் போட்டு வச்சுருப்பதால் புதுசு வந்தா அதுவே 'காட்டி'க்கொடுக்கும்:-)

நானானி said...

how sad. i thought you were enjoying a holiday-out. anyway get well soon and come with fresh energy. how was your birthday.

Lakshmi said...

இப்போ உடல் நலம் தேவலாமா?
நானும் வைஷ்னவி யாத்திரைன் போனப்போ கோவில் வாசல் வரை
தான் போக முடிந்தது. அம்மன்
தரிசனம் பண்ணக்கிடைக்கலை.
வேர என்ன ஹெல்த் ப்ராப்லம்தான்

ஹேமா said...

சாரல்... இப்ப உடம்பு சுகம்தானே. அதானே ரொம்ப நாளாக் காணோம்ன்னு யோசிச்சேன் !

RVS said...

உடம்பை பார்த்துக்கோங்க சகோ. ;-))

எல் கே said...

என்னது இது ? இப்படியா உடம்ப கவனிச்சிக்கமா இருக்கறது ? உடம்பை பார்த்துகோங்க. டேக் ரெஸ்ட்

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

விசாரிப்புக்கு ரொம்ப நன்றிப்பா.. டாக்டர்ட்ட போய் சிகிச்சையும் நடந்துக்கிட்டிருக்கு. இப்ப ரொம்பவே தேவலை..

வலைப்பக்கம் வந்து நம்ம மக்களையெல்லாம் பார்த்ததே தெம்பாயிருக்கு :-))

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

வலைப்பக்கத்துல உலாவர்றப்ப க'வலை'யெல்லாம் காணாமப்போறது என்னவோ உண்மைதான்.

விசாரிப்புக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

இதுவும் கடந்துபோகும் :-)))))))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,

ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

அத்தனை கஷ்டப்பட்டதுக்கு, வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்குமா லோலோன்னு அலைஞ்சதுக்கு,... ஜஸ்ட் லோ பீபிதான்னு சொல்லிட்டார். நம்ம ரேஞ்சுக்கு ஒரு ஹை பீபின்னு சொல்லியிருக்கவேணாமோ!!. என்னவோ போங்க :-))))))

வருகைக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜகோபாலன்,

ரொம்ப நன்றிங்க..

சுவரில்லாம சித்திரமில்லைன்னு சும்மாவா சொல்லிவெச்சாங்க!!

அமைதிச்சாரல் said...

வாங்க துளசியக்கா,

பயணத்தின்போதுன்னா இன்னும் ரொம்பவே அவஸ்தையாயில்ல இருந்திருக்கும். ரெஸ்டும் எடுக்க மனசில்லாம, சுத்தவும் முடியாம ரொம்ப கஷ்டப்படுத்திடும்.

அமைதிச்சாரல் said...

வாங்க அமுதா,

அவளா அழைச்சாத்தான் தரிசனம் கிடைக்கும்ன்னு சொல்லுவாங்க.. ரெண்டொருவருஷமா இப்படித்தான் தட்டிப்போயிட்டே இருக்கு. பார்க்கலாம் :-))

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

உங்க அன்புக்கு ரொம்ப நன்றிம்மா :-)

அமைதிச்சாரல் said...

வாங்க கோவை2தில்லி,

இப்ப தேவலைப்பா.. லீவு நேரமா இருந்ததால கூடுதல் பிரச்சினையில்லை. எல்லோரும் என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க வான்ஸ்,

உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க வித்யா சுப்ரமணியம்,

எனக்கும் அவங்களை ரொம்ப பிடிக்கும்..

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க சுந்தரா,

ரொம்ப நன்றிங்க..

அன்புடன் அருணா said...

அச்சச்சோ பார்த்து....உடம்பைக் கவனிங்க!!!

மாதேவி said...

லீவில் என்ஜோய் பண்ணுவீங்க என்று பார்த்தால் இப்படி ஆகிவிட்டதே. நலனில் கவனம் செலுத்துங்கள்.

நாஞ்சில் பிரதாப் said...

தீதி என்னாச்சு? இவ்ளோ மேட்டர் நடந்திருக்கா? நானும் ஒரு மாச்ம் ஊருக்கு போய்ட்டு வந்துட்டேன்... நீங்களும் லீவுல இருக்கிங்கன்னு நினைச்சேன். இப்போ நல்லாருக்கிங்களா?
சுவர் இருந்தாந்தான் பதிவு எழுத முடியும் ? :))

Anonymous said...

How are you now? Get well soon.

அமைதிச்சாரல் said...

வாங்க அப்பாவி,

எல்லோரையும் சத்தியப்பிரமாணம் எடுக்க வெச்சிட்டேன் போலிருக்கு :-)))

இப்ப நல்லாயிருக்கேன்ப்பா.. உங்க அன்புக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க நானானிம்மா,

பிறந்தநாளுக்கு ரங்க்ஸோட ஸ்பெஷல் சமையலோட ஜமாய்ச்சாச்சு. பசங்க கேக் வெட்டித்தான் ஆகணும்ன்னு வற்புறுத்தினதால ப்ளாக் ஃபாரஸ்ட், பைனாப்பிள்ன்னு ரெண்டு கேக் வெட்டினேன் :-)))

அமைதிச்சாரல் said...

வாங்க லஷ்மிம்மா,

தரிசனம் பண்ணக்கிடைக்கலையா!! அடடா!!.. இதைத்தான் எடுத்துவெச்சிருந்தாலும் கொடுத்துவெச்சிருக்கணும்ன்னு சொல்லுவாங்களோ!. அடுத்த தடவையாவது நமக்கு அழைப்பு வருதான்னு பார்க்கலாம் :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ஹேமா,

நீங்கல்லாம் என்னை மறக்காம இருந்ததே எனக்கு உற்சாகம் கொடுக்குது. இதுக்கெல்லாம் நிச்சயமா கொடுப்பினை வேணும் :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ஆர்.வி. எஸ்,

ரொம்ப நன்றி சகோ :-)

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

என்னதான் கவனிச்சாலும் சிலசமயங்கள்ல ப்ரேக் டவுன் ஆகிடறது :-))

அமைதிச்சாரல் said...

வாங்க அருணா,

இப்ப நல்லாருக்கேங்க.. உங்க அன்புக்கு நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

ஒருவகையில் இதுவும் எஞ்சாய்தான்.. ஃபுல் ரெஸ்ட்டாச்சே :-)))))))

அமைதிச்சாரல் said...

வாங்க பிரதாப்,

ஊர்ல எல்லோரும் நல்லாருக்காங்களா?. நாரோயில் போட்டோவை போட்டு கொதியை கிளப்பறீங்க, குமாரகோயில்,வெள்ளிமலைன்னு ஒரு ரவுண்ட் அடிக்கணும் போல தோணுது :-))

இப்ப ரொம்ப நல்லாருக்கேன்ப்பா..

அமைதிச்சாரல் said...

வாங்க சுனாமி,

ரொம்ப நல்லாருக்கேன்ப்பா.. நன்றி :-))

LinkWithin

Related Posts with Thumbnails