Tuesday, 13 April 2010

கலாட்டா கல்யாணம் -பாகம் 2

அறுபதாம் கல்யாணத்துக்கு வேணும்ன்னு பொத்திப்பொத்தி வெச்சிருந்த ஒரு பொக்கிஷத்தை இப்போவே வெளிய எடுத்தாச்சு. பொழச்சிக்கெடந்தா அப்போ ஃப்ளாஷ்பேக்கா எழுதி உங்களையெல்லாம் டரியலாக்கலாம்ன்னு ரகசியமா வெச்சிருந்தேன். ம்ம்ம்.... விதி யாரை விட்டது?.. இப்பவே நாங்க டரியலாக தயார்ன்னு நீங்க சொன்னப்புறம்,..

அது ஒரு அழகிய எண்பதுகளின் பிற்பகுதி. அப்போ நாங்க எங்க படிப்புக்காக,.. நாகர்கோவிலில் இருந்தோம். எங்கேன்னு கேக்காதீங்க சொல்லமாட்டேன்.ஏன்னா இப்போ,..நாங்க நாகர்கோவிலை விட்டுவந்து ரொம்பவருஷம் ஆகிட்டுது,avvvvvvvvvvvvv.நான் படித்த கல்லூரியின் இன்னொரு வி.ஐ.பி. நம்ம எழுத்தாளர் ஜெயமோகன்.அவரோட நல்ல காலம், எங்களுக்கு பத்துவருஷம் முந்தியே அவர் காலேஜை விட்டு போயிருந்தார்.

டிகிரி கடைசி வருஷம்,..கடைசி செமஸ்டர்.. ஸ்டடி ஹாலிடேஸ் ஆரம்பிச்சி ரொம்ப மும்முரமா படிச்சிக்கிட்டிருந்தேன். கேரளா யூனிவர்சிட்டியில் வேலை என்பதில் இருந்து முன்னேறி, M.Sc., Phd. எல்லாம் பண்ண வேண்டும், ஆராய்ச்சி லேபில் வேலை செய்யவேண்டும் என்ற நிலைக்கு வந்திருந்தேன். அப்படியிருக்கும்போது, வீட்டில் கல்யாணப்பேச்சை எடுத்தா ஒத்துக்கொள்வேனா?....இவ்வளவுக்கும் அம்மா, 'படிப்பு முடிஞ்சதும் கல்யாணம்தான்' என்று மட்டும்தான் சொல்வார்கள்.வெறும் பேச்சுக்கே அடிக்கடி பனிப்போர் நடக்கும்.கடைசியில் அம்மாவும்,..'சரிதானே' என்று நினைக்கும் அளவில் ஒத்துக்கொள்ள வைத்துவிட்டேன்.

அப்போது பரீட்சைகள் நடந்துகொண்டிருந்தன.கடைசி பரீட்சைக்கு இன்னும் ஒரு நாள்தான் இடையில் இருந்தது. அப்போதுதான் பெரியப்பா, சாவகாசமாக'நாளைக்கு பெண் பார்க்க வருகிறார்கள்' என்று சொன்னார். அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்புதான் தெரிந்தது,.. இது ஆச்சியின் ஏற்பாடு என்று. ரங்க்ஸின் அண்ணிதான், என்னுடைய பெரியமாமாவின் கொழுந்தியார்(மனைவியின் தங்கை). அவர்கள் மூலமாக, துப்பு கிடைத்து, என் மாமியார் என்னுடைய ஆச்சியை அப்ரோச் செய்தார்கள். எனக்கு பரீட்சை நடப்பதால், இப்போது ஏதாவது பேச்சுவார்த்தை நடத்தி அதனால் எனக்கு கவனக்குறைவு வந்துடக்கூடாதுன்னு ஒத்திப்போட்டு வெச்சிருந்திருக்காங்க.
இப்போதான் பரீட்சை முடிஞ்சுபோச்சேன்னு ஏற்பாடு ஆகிடுச்சு.இதுக்கிடையில் லீவ் முடிஞ்சு ரங்க்ஸ் மும்பை திரும்ப வந்திட்டார்.

'பெரியப்பா,.. இன்னும் ஒரு பேப்பர் இருக்கு'ன்னு பலவீனமா சொன்ன என்குரலை
'நான் வரச்சொல்லி, நாளும் நேரமும் கொடுத்திட்டேனே.. இப்ப மாத்த முடியாதும்மா'ன்னுட்டார். 'இப்ப என்ன சும்மா பார்க்கத்தானே வர்றாங்க?.. கல்யாணமா உறுதி ஆயிடுச்சு'ன்னு அம்மா அவங்க பங்குக்கு சொல்லிட்டு அடுத்த வேலையை பார்க்க போயிட்டாங்க.

மறு நாள் அவங்க வீட்டிலிருந்து வந்து பாத்திட்டு, 'பிடிச்சிருக்கு'ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. அம்மாவை நெனச்சா பாவமா இருக்கு. அவங்களுக்குன்னு நான் கொடுக்க முடிஞ்ச சந்தோஷம், அவங்க ஏற்பாடு செய்ற கல்யாணம்.என் அம்மா எனக்கு நல்லதுதான் செய்வாங்க.சரி,.. நடப்பது நடக்கட்டும்ன்னு ஃப்ரீயா விட்டுட்டேன். மாப்பிள்ளையை மாமாவுக்கு தெரியும். இரண்டொருதடவை நேரில் பார்த்திருக்கார், அதுபோதும்ன்னு அம்மா சொல்லிட்டாங்க.ஒரு வழியா, ஆரம்பகால கட்டங்களெல்லாம் கடந்து நிச்சயதார்த்தம் என்ற நிலைக்கு ஒரே வாரத்தில் வந்துவிட்டது.

திருமணத்துக்கு நாலு நாள் முன்னாடிதான் ரங்க்ஸால் வரமுடிந்தது. வந்த அன்னிக்கு, என் மாமியார் 'பொண்ணை பாத்துட்டு வாயேன்'ன்னு சொல்ல அதுக்கு அவர்,' என்னம்மா நீங்க!!.. இப்ப போயி'..ன்னு நீட்டி முழக்கி கடைசியில் வர ஒத்துக்கொண்டார். வரப்போற தகவல் அறிந்ததும் எனக்கும் அப்படியே தோணியது.அப்பவே முடிவு செஞ்சுட்டேன், கல்யாணம் முடிஞ்சப்புறம் பாத்துக்கலாம்ன்னு. எங்க அத்தை காப்பி கொண்டுபோய் கொடுக்க, எங்கிட்ட கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்து அனுப்பினாங்க.கொண்டுபோறதுக்கு முன்னால அதுல ஒன்னை ஆட்டைய போட்டு, 'இது எனக்குத்தான், வேற யாருக்கும் கிடையாது'ன்னு ரிசர்வ் செஞ்சுட்டு போனேன்.இதுக்கிடையில, வாசல்ல மாப்பிள்ளைய பாக்க கூட்டம் கூடிட்டுது. வெக்கப்பட்டுக்கிட்டு இவர் நல்லா பின்னால சாஞ்சு உக்காந்துக்கிட்டார். நானும் தலைகுனிஞ்ச மாதிரிக்கே போய்,
கூல்ட்ரிங்க்ஸை கொடுத்துட்டு, அப்படியே திரும்பிட்டேன். பாக்கவேயில்லை. அவரும் அப்படித்தானாம்,.. வெக்கப்பட்டுக்கிட்டு என்னை பாக்கவேயில்லையாம். இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தெரியவந்ததும்,.. 'ஜாடிக்கேத்த மூடி'தான்னு நினைச்சுக்கிட்டோம்.

அப்புறம் எப்ப பாத்துக்கிட்டோம்ன்னு கேக்கிறீங்களா?... ரிசப்ஷன் டைம்ல என் உறவுக்கார தாத்தா ஒருவரை அறிமுகப்படுத்தி வைக்கும்போதுதான்.... நம்புங்கப்பா!!!..



18 comments:

Chitra said...

ரிசப்ஷன் டைம்ல என் உறவுக்கார தாத்தா ஒருவரை அறிமுகப்படுத்தி வைக்கும்போதுதான்.

...... நாங்க நம்பிட்டோம்.

he,he,he.... :-)

துபாய் ராஜா said...

நெஜம்ம்ம்ம்மா நம்பிட்டோம். :))

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

எல் கே said...

//வரப்போற தகவல் அறிந்ததும் எனக்கும் அப்படியே தோணியது.அப்பவே முடிவு செஞ்சுட்டேன், கல்யாணம் முடிஞ்சப்புறம் பாத்துக்கலாம்ன்னு. //
அடடே இது நல்ல இருக்கே

எல் கே said...

//ஆராய்ச்சி லேபில் வேலை செய்யவேண்டும் என்ற நிலைக்கு வந்திருந்தேன். அப்படியிருக்கும்போது, வீட்டில் கல்யாணப்பேச்சை எடுத்தா ஒத்துக்கொள்வேனா?....//

NTPL :D:D

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

அட.. நெசமாத்தானுங்க :-))

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துபாய்ராஜா,

அப்பாடா.. நீங்களாவது நம்பறீங்களே.. சித்ராக்காவை பாருங்க.. என்னா சிரிப்பு!!!

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே.

ஒரு சயின்டிஸ்டை நாடு இழந்திருச்சுப்பா :-))))))

வரவுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

அதேதான்:))!

நம்பிட்டோம்:)!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி மேடம்

ஆஹா.. கண்ணைக்கட்டுதே :-)))

நன்றிங்க.

வெங்கட் நாகராஜ் said...

பார்ட்-2 தான் பார்ட்-1-ஐ விட சூப்பர். இதைப் போய் தள்ளிப்போட நினைச்சீங்களே?

ரிசப்ஷன் அன்னிக்குத் தான் ரங்க்ஸை பார்த்தீங்கன்றதையும் நம்பித்தானே ஆகணும்.....

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

நெசமாத்தான்ப்பா.. நம்புங்க.

சூப்பர்ன்னு சொன்னதுக்கு நன்றி.

பனித்துளி சங்கர் said...

இது உண்மையா இல்லை பொய்யா என்று தெரியவில்லை . ஆனால் நான் நம்புகிறேன் .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

பனித்துளி சங்கர் said...

இது உண்மையா இல்லை பொய்யா என்று தெரியவில்லை . ஆனால் நான் நம்புகிறேன் .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பனித்துளி சங்கர்,

அக்மார்க் உண்மைப்பா.பாருங்க.. ஸ்மைலி கூட போடலை.

நம்புனதுக்கு நன்றி.

நானானி said...

அப்போ...தாலி கட்டும்போது என்ன செஞ்சிட்டிருந்தீங்க?

என்னால நம்ப முடியல.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நானானிம்மா,

மண்டபத்துக்கு போகும்போதே,குனிந்த தலை நிமிரக்கூடாது,யாரையும் பாத்து சிரிக்கக்கூடாதுன்னு ஏகப்பட்ட ரூல்ஸை மூளைக்குள் திணித்துத்தான் கூட்டிப்போனார்கள். என் காலேஜ் ஃப்ரெண்ட்சிடம் கூட நாலுவார்த்தை பேசமுடியல்லைன்னா பாருங்களேன் என் நிலைமையை.:-(((

போனவாரம் கூட என் சித்திபையன்(என் கல்யாண சமயம் அவனுக்கு 10 வயது இருக்கலாம்)என் கல்யாண சி.டி.யை பாத்துட்டு 'என்னக்கா அப்போ, அவ்வளவு நல்லபிள்ளையா இருந்திருக்கே'ன்னு கிண்டல் செய்றான்.

நன்றிம்மா.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அமைதிச்சாரல்னு பேர வெச்சுட்டு இப்படி போய் சொல்லலாமா? நெஜமாவே reception ல பாத்தீங்களா? எல்லாரையும் போல நானும் நம்பற மாதிரியே நடிச்சுகறேன் (சூப்பர் ஸ்டோரி....சொன்னதுக்கு நன்றி)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அடப்பாவி அப்பாவி...

விளக்கம் சொல்லியே விடிஞ்சுடுத்தே :D

நானானிம்மாவுக்கு சொல்லியிருக்கேன் பாருங்க.

நன்றிங்க.

LinkWithin

Related Posts with Thumbnails