Tuesday, 6 April 2010

யோசிப்போர் சங்கம்...

மாடுபோல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? தெரியலையா?


அது கன்னுக் குட்டி! கடவுளே!!! ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?

நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!

போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா?

அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆன்ட்டி பேரு என்னம்மா?

சரோஜா!... ஏன் கேக்குற?

அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?


பல்ப் - எடிசன்

ரேடியோ - மார்கோனி

பை-சைக்கிள் - மேக் மில்லன்

போன் - க்ராஹாம் பெல்

க்ராவிடி - நியூட்டன்

கரண்ட் - பாரடே

எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!


காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல! ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ பரவாயில்லை என்று!!

மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு! அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?


டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேஷண்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!

ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்ல உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு பொண்ணு தெரியுமா? ------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடிப்போய்ட்டாங்க!!

கொடூர மொக்கை!!!

என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்' வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி...


டிஸ்கி: மக்களே.. கொலைவெறியோட ஆட்டோ அனுப்பிடாதீங்க. இது சத்தியமா நான் எழுதலை.. ஈ.. கொண்டு வந்தது.

40 comments:

LK said...

enna saaral, nan mokkai pottaduku pali vanguthala ithu

துபாய் ராஜா said...

ஹா...ஹா..ஹா. :))

முகிலன் said...

உங்களூக்கு ஈ கொண்டு வந்தது எனக்கு பஸ் கொண்டு வந்திச்சி

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

இதுல எங்கப்பா பழி வாங்கல் இருக்கு???

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க துபாய் ராஜா,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க முகிலன்,

ஆஹா!!..ஒரு க்ரூப்பாத்தான் கிளம்பி இருக்காங்களா!! :-)))

நன்றி.

சந்தனமுல்லை said...

ஆகா...ஆரம்பிச்சுட்டீங்களா! :-))))

பித்தனின் வாக்கு said...

ஆகா எல்லாரும் இப்படி மெயிலைச் சுட்டுப் போட ஆரம்பிச்சுட்டாங்கப்பா. இருந்தாலும் நல்ல நகைச்சுவையாக இருந்தது. நன்றி.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////////மாடுபோல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? தெரியலையா?

அது கன்னுக் குட்டி! கடவுளே!!! ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே? //////


இதர்க்கு மேல என்னால முடியலங்க அழுதுடுவேன் ஆமா !

புதுகைத் தென்றல் said...

சாமி ரங்கா காப்பாத்து

ராமலக்ஷ்மி said...

நல்லா யோசிக்கிறீங்கப்பா:)))!

நானானி said...

எக்ஸாம் கண்டுபிடித்தவனை கண்டுபிடித்தால் சொல்லுங்கள் ரெண்டு பேரும் சேர்ந்தே கொல்லுவோம்.

காதலில் ஜெயிப்பது எவ்வளவு கொடுமைன்னு ஜெயிச்சவங்களுக்குத்தான் தெரியும்.

நல்லா சிரிச்சேன்!!

அமைதிச்சாரல் said...

வாங்க ஆச்சி,

ஜஸ்ட் இப்பத்தான்...

இன்னிக்கு உங்க பிறந்தநாளில்லையா!!
வாழ்த்துக்கள்.

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க பித்தனின் வாக்கு,

ஆமாம்.. வெய்யில் ஆரம்பிச்சுட்டது இல்லையா.. அதான் சுட்டு,காய வெக்கிறேன்.

முதல் வரவுக்கு நன்றிங்க.

பட்டாபட்டி.. said...

ரைட்டு.. நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சு..!!

அமைதிச்சாரல் said...

வாங்க பனித்துளி சங்கர்,

முதல் வரிகளிலேயேவா!!.. மிச்சத்தையும் படிச்சிட்டு மொத்தமா காதுல புகைவிடுங்க :-)))

நன்றிங்க.

punitha said...

எப்ப தாங்க முடியலப்பா.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

மதார் பட்டாணி said...

http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/03/blog-post_30.html

இதை இங்கேயும் போய் படிக்கலாம் . இதுக்குத்தான் பார்வர்ட் ஆகி வர மெயில் கன்டென்ட் பப்ளிஷ் பண்ணக்கூடாதுன்னு சொல்றது .

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி மேடம்,

இதுல டிஸ்கி மட்டும்தான் யோசிச்சி போட்டுட்டேன். முழுசும் என்னோட கற்பனைன்னு நினைச்சுக்கிட்டு டின்னு கட்டீட்டிங்கன்னா... :-)))

வந்ததுக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

நிறைய பேர் போட்டுட்டாங்கன்னாலும், மீண்டும் ரசிக்கலாம்!!

அமைதிச்சாரல் said...

வாங்க நானானிம்மா,

சிரிச்சு சிலாகிச்சதுக்கு நன்றிம்மா.

ராமலக்ஷ்மி said...

//இதுல டிஸ்கி மட்டும்தான் யோசிச்சி போட்டுட்டேன். முழுசும் என்னோட கற்பனைன்னு நினைச்சுக்கிட்டு டின்னு கட்டீட்டிங்கன்னா... :-)))//

அப்படியெல்லாம் பயப்படாதீங்க:), நான் பதிவின் தலைப்பையும் மனசில் வச்சுக்கிட்டு சொல்லியிருந்தேன்:))!

அக்பர் said...

நல்ல நகைச்சுவை.

அமைதிச்சாரல் said...

வாங்க பட்டாபட்டி,

இப்பவும் நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு. :-))).

முதல் வருகைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க புனிதா,

கொஞ்சம் கொடுமையாத்தான் இருக்கு இல்லையா :-))).

முதல்வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மதார்,

உங்க வீட்டுக்கு வந்து படிச்சேன்.ஹுஸைனம்மா சொல்லியிருக்கிறமாதிரி நகைச்சுவையை எத்தனை தடவை வேண்டுமானாலும் ரசிக்கலாம்.

முதல்வருகைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

ராமலஷ்மி மேடம்,

நம்ம சங்கமும் ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டுமே :-D.

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க அக்பர்,

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தாராபுரத்தான் said...

சாரல்..சூப்பருங்கோ.

அமைதிச்சாரல் said...

வாங்க தாராபுரத்தான்,

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

வல்லிசிம்ஹன் said...

kadinnaalum kadi super kadi:)
nallaa irunthathuppaa.
manasaara siricchen.

அம்பிகா said...

\\எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!\\
சுட்டதில் பிடித்தது.

அமைதிச்சாரல் said...

வாங்க அம்பிகா,

சீசனுக்கு ஏத்த ஜோக் இல்லையா!!..

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

உடல்நிலை இப்ப தேவலையா?..

சிரிச்சதிலேயே சரியா போயிருக்கும்ன்னு நினைக்கிறேன் :-)

நன்றிம்மா.

Dr.P.Kandaswamy said...

ஏனுங்க, யோசிக்கிறதுக்கு எதோ வேணும்னு சொல்வாங்களே, அது இருக்குதுங்களா?

அமைதிச்சாரல் said...

வாங்க கந்தசாமி ஐயா,

முதல் தடவையா நம்மூட்டுக்கு வந்திருக்கீங்க.

தேடிக்கிட்டிருக்கேன்,.. கிடைச்சதும் கொடுத்தனுப்பறேன். :-)

வரவுக்கு நன்றி.

இரசிகை said...

:)

அமைதிச்சாரல் said...

வாங்க இரசிகை,

நன்றிங்க.

LinkWithin

Related Posts with Thumbnails