Wednesday, 26 May 2010

மனசுக்குள்.. மனசுக்குள்...

அப்போதுதான் கல்லூரி விட்டிருக்க வேண்டும்.. வகுப்பறையில் அடித்த அரட்டை போதாதென்று.. பேருந்து நிறுத்ததிலும், குழுமியிருந்த சிட்டுக்கள் சள சளவென்று பேசிக்கொண்டிருந்தனர்.

"டீ... பஸ் வந்திட்டது. வா போகலாம்"

"இருடி.. அடுத்த பஸ்ஸில் போய்க்கலாம் . இதுல கூட்டமா இருக்கு"

"இதோட ரெண்டு பஸ் போயாச்சு.. கூட்டமே இல்லாத பஸ்தான் வேணும்ன்னா.. பஸ்ல பாம் இருக்குன்னு புரளி கிளப்பினாத்தான் உண்டு . சௌகரியமா மாமியார் வீட்டுக்கே கொண்டுபோய் விட்டுடுவாங்க.. எப்படி வசதி?.."

பதில் பேச வாயெடுத்தவள், விஷாகா வருவதைப்பார்த்ததும் அப்படியே வார்த்தைகளை விழுங்கிக்கொண்டாள்.

விஷாகா அவள் கல்லூரித்தோழன். நல்ல நண்பன்... அதுதான் இப்போ அவளுக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. நாலைந்து மாதங்களாக அவனிடம் ஏதோ மாற்றத்தை உணர்கிறாள். முன்பைவிட இன்னும் நெருங்கிப்பேசுகிறான் . அவளைக்கண்டதும் , அவன் முகத்தில் ஒரு வித்தியாசமான உணர்ச்சிக்கலவை தெரிவது மாதிரி இருக்கிறது. அவன் தோழர்கள் கூட அவளிடம் இன்னும் மரியாதையாக நடந்து கொள்கிறார்கள்.

'ஒருவேளை என்னுடைய பிரம்மையாக இருக்குமோ. ஏதாவது கேட்கப்போய் அவன் தப்பாக எடுத்துக்கொண்டால்... நல்ல நட்பை நானே கெடுத்துவிடுவேனோ'
எப்போதும் போல் இயல்பாக பேசவும் முடியாமல் , ஒதுங்கிச்செல்லவும் இயலாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

"ஹாய் ஷீல், இன்னும் வீட்டுக்கு போகலியா?" என்று கேட்டவாறே அங்கு வந்தான் விஷாகா.

"இல்ல.. வந்து.."

"அடுத்த பஸ்ஸுக்கு டைம் இருக்கு. வாயேன்,.. கான்டீன்ல ஒரு காப்பி சாப்பிட்டு வரலாம்"

ஷீலாவும் அவனும் கான்டீனில் வழக்கமான ஜன்னலோர டேபிளில் அமர்ந்தார்கள். மெனுகார்டில் தேடி,.. ஆர்டர் கொடுத்துவிட்டு நிமிர்ந்தவன் அவளைப்பார்த்து ,"கொஞ்சம் தனியாப்பேசணும்ன்னுதான் இங்க கூட்டிட்டு வந்தேன்" என்றான்.

"சரி,.. தனியா பேசிமுடிச்சதும் சொல்லு, நான் ஸ்னாக்ஸ் இருக்கான்னு பாத்துட்டு வரேன்"

"ஹா..ஹா.. ஜோக்கடிக்கறதாருந்தா முதல்லயே சொல்றதில்லையா.. லூஸு . எவ்ளோ கஷ்டப்பட்டு சிரிக்க வேண்டியிருக்கு.. ஓ.கே. சீரியஸாவே உங்கிட்ட பேசணும்ன்னுதான்.."

"சரி சொல்லு" அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை. அவன் என்ன சொல்ல வருகிறான் என்று ஒருமாதிரி ஊகித்துவிட்டிருந்தாள்.

கொஞ்ச நேரம் தலைகுனிந்து , விரல் நகங்களையே பார்த்துக்கொண்டிருந்தவன் மெதுவாக நிமிர்ந்தான். "ரொம்ப நாளா உங்கிட்ட சொல்லணும்ன்னு நினைப்பேன். நீ ஏதாவது திட்டிட்டா என்ன பண்றதுங்கிற பயத்துல சொல்ல முடியாம போயிடுவேன். ரொம்ப யோசிச்சிதான் இதை சொல்றேன்.... என் வாழ்க்கையில் நீ வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன். I think i'm in love with you "

அவள் ஒன்றும் சொல்லாமல் தம்ளரிலிருந்து சிந்திய நீரில் விரலால் கோலமிட்டுக்கொண்டிருந்தாள் .

"ப்ளீஸ்.. ஏதாவது சொல்லேன்"

"என்ன சொல்றது.. நீ திடீர்ன்னு இப்டி சொல்வேன்னு நான் எதிர்பார்க்கலை"

"ஆனா,.. நான் ரொம்ப நாளா உன் நினைப்பாவே இருக்கேன் தெரியுமா?? . நம்ம காலேஜ்ல ஸ்ட்ரைக் நடந்தப்ப பசங்களை மட்டும் வகுப்புக்கு வரக்கூடாதுன்னு தள்ளி வெச்சிருந்தாங்களே, அப்ப நான் மட்டும் லைப்ரரிக்கு வரதா சொல்லிட்டு காலேஜுக்குள்ள வருவேனே, ஞாபகம் இருக்கா,மொத்த காலேஜும் பெங்களூருக்கு டூர் போனப்ப நான் மட்டும் ஏன் காலேஜ் வந்திட்டிருந்தேன் தெரியுமா?? , எல்லாம் உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும்ன்னுதான்"

அவன் ஒவ்வொன்றாய் லிஸ்ட் போடப்போட அவள் மனக்கண் முன் ஒவ்வொன்றாய் காட்சியாய் விரிந்து , புது அர்த்தங்கள் புரிந்தது. கோவிலில், தியேட்டரில் சந்தித்துக்கொண்டது , மணிக்கணக்காய் அவளிடம் பேசிக்கொண்டிருந்தது, வீட்டிலிருந்து 'உனக்குப்பிடிக்குமே' என்று ஏதாவது கொண்டு வருவது , கூடவே வந்த பஸ்பயணங்கள் ... தற்செயலாய் நடந்தது என்று நினைத்த ஒவ்வொன்றுக்கும் பின் இருந்ததெல்லாம் அவனுடைய மனசுதானா!!!!

லேசாக செருமிக்கொண்டவள் அவனை ஏறிட்டுப்பார்த்தாள். " ஸாரிப்பா.. இது நடக்காது. வேண்டாம்.. என் மனசுல அந்த மாதிரி எண்ணம் எதுவுமில்லை."

லேசாக கண்ணீர் திரையிட்ட கண்களை சிரமப்பட்டு மறைத்து சமாளித்துக்கொண்டான்.

"ஏன்?.. என்னைப்பிடிக்கலையா!!!"

"நான் அப்படிச்சொல்லலியே.. பிடிக்காமலா உன்னை என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்னு சொல்றேன்?. எனக்கு மேற்படிப்பெல்லாம் படிக்கணும். இந்த லவ்வு, ஜவ்வு மேட்டரெல்லாம் மூளைக்குள்ள புகுந்திடுச்சின்னா அப்றம் அவ்ளவுதான். அதுலயும் நாம இன்னும் படிப்பையே முடிக்கலை. எங்க வீட்டுல இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டாங்க"

"வீட்டுல இதுக்கு இப்ப ஏன் சம்மதம் கேக்கணும். நாம ரெண்டு பேருக்கும் வேலைகிடைச்சப்புறம் நானே உங்க வீட்டுல வந்து பேசறேன்"

"ஸாரிப்பா... அந்த சிரமம் உனக்கு வேண்டாம். எனக்கு இந்த காதல், கத்தரிக்காயிலெல்லாம் நம்பிக்கையில்லை. சும்மா ஊர் சுத்துறதுக்காகத்தான் காதல்ன்னா , அது எனக்கு தேவையில்லை... லவ்வை சொல்றதுக்கே இப்படி பயப்படுறியே,.. நாளைக்கே ஒரு பிரச்சினைன்னா சமாளிக்க தைரியம் இருக்கா உனக்கு?.. காபி வந்துட்டுது. எடுத்துக்கோ".

"இதப்பார்.. எதுவுமே பார்க்காம வர்றதுதான் காதல். உன்னைவிட அழகான பெண் கிடைக்காம நான் உங்கிட்ட காதல் சொல்லலை. ஃப்ரெண்ட்ஸ் கூடவும் ஊர் சுத்தலாம் ... அதுக்கு காதலி தேவையில்லை . மதம், மொழி, நிறம் இதையெல்லாம் பார்த்து வந்தா அதுக்கு பேரே வேற. உன்னை எப்போலேர்ந்து , ஏன் காதலிக்க ஆரம்பிச்சேன்னு கேட்டா எனக்கு பதில் தெரியாது. எந்த வினாடியில் நீ என் மனசுக்குள் நுழைஞ்சேன்னு எனக்கு சொல்லத்தெரியலை . ஆனா,. உன்னை என் மனசுக்குள் சிம்மாசனத்தில் உக்காத்தி வெச்சு அழகு பாத்துக்கிட்டிருக்கேன் , அது நிஜம். சொல்றதை நினைச்சு பயப்படலை. அதனால உன்னோட நட்பையும் இழந்துடுவேனோன்னுதான் ..... ஓ.கே.. உன்னை கட்டாயப்படுத்த விரும்பல. ஆனா,.. என் நினைவுகளிலிருந்து உன்னை தூக்கி எறிய என்னால் முடியாது. என் சாம்பலோடுதான் அதுவும் கரையும். ஹேய்... ஹேய்... ஏன் சிரிக்கிற!!! "

புரையேறியதால் லேசாக தலையை தட்டிக்கொண்டே... விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

" ஹா..ஹா.. ஹா.. நீ எப்போடா சொல்வேன்னுதான் நான் காத்துட்டு இருந்தேன். இன்னிக்கு மட்டும் நீ சொல்லாம இருந்திருந்தேன்னு வையி.. நானே உன் சட்டையை பிடிச்சு டீலா நோ டீலான்னு கேட்டுருப்பேன் . சும்மா நூல் விட்டு பார்த்தேன்... பரவாயில்ல, நல்லாவே பேசற. வீட்டுல உள்ளவங்களை நிச்சயமா பேசிப்பேசியே கழுத்தறுத்து ... ஐ மீன்.. சம்மதிக்க வெச்சுடுவே. ஆமா... உங்க வீட்டுக்கு காபி சாப்பிட ஒருதடவை கூப்பிட்டியே ஞாபகம் இருக்கா!!!"

அவன் நம்ப முடியாமல் நின்று கொண்டிருந்தான், ஆச்சரியத்தாலும் சந்தோஷத்தாலும்.... பின்,.

"இன்னிக்கே... இப்பவே போலாம்."டிஸ்கி: நிஜமாவே சிறுகதை எழுத முயற்சி பண்ணியிருக்கேன். ஏப்ரல்,மே, ஜூன், ஃபூலெல்லாம் பண்ணலை. குறைகளிருந்தா மெதுவாவே குட்டுங்க ... , மீ பாவம்....28 comments:

LK said...

நல்ல முயற்சி சாரல்

ராமலக்ஷ்மி said...

இளம்பூங்குயில்கள் மனசுக்குள்.. மனசுக்குள்..

அருமை சாரல்.

இன்னும் கதைகள் எதிர்பார்க்கிறோம். தொடருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

ஐ.. நல்லா இருக்கே இந்த முதல் முயற்சி. தொடருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

ஐ.. நல்லா இருக்கே இந்த முதல் முயற்சி. தொடருங்கள்.

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

முயற்சி செய்யலாம்ன்னு சொல்றீங்க :-)
நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

நன்றிப்பா.

முகிலன் said...

அனுராதா ரமணன் படிக்கிற மாதிரி இருக்குங்க

சந்தனமுல்லை said...

நல்ல ப்ளோ! அப்புறம், உங்க பொண்ணு நம்ம ஃப்ரெண்ட் எனன் சொல்றாங்க ..இந்த கதைக்கு! :-))))

சந்தனமுல்லை said...

:-)
நீங்க யூத்துதான்!
நீங்க யூத்துதான்!
நீங்க யூத்துதான்!

நசரேயன் said...

நல்லா இருக்கு .. வாழ்த்துக்கள்

LK said...

//நீங்க யூத்துதான்!
நீங்க யூத்துதான்!
நீங்க யூத்துதான்!/

ஹ்ம்ம் ஒத்துகொள்கிறேன்

நாஞ்சில் பிரதாப் said...

ஆமா...அது ஏன் எல்லாப் பொண்ணுங்களும் பசங்களா வந்து லவ்வை சொல்லனும்னு எதிர்பார்க்குறாங்க...

கதை சூப்பர்...கடைசில பெரிய ட்விஸ்ட் இருக்கும்னு எதிர்பார்த்தேன்...எனினும் ஓகே..

Lingesh said...

குட்டுவதற்கு ஒரு கை போதும். வாழ்த்துவதற்கு இரண்டு கை வேண்டும். உங்கள் முயற்சிக்கு நிச்சயம் இரண்டு கைகள் வேண்டும். தொடரவும்.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

Chitra said...

முதல் முயற்சியே நல்லா வந்து இருக்குங்க.... தொடர்ந்து எழுதுங்க... வாழ்த்துக்கள்!

அமைதிச்சாரல் said...

வாங்க முகிலன்,

எனக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர்களில் அவரும் ஒருத்தர். குப்பை கூட்டுறதைக்கூட சுவாரஸ்யமா நகைச்சுவையோட எழுதக்கூடியவர். ஞாபகப்படுத்திட்டீங்களே...நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க முல்லை,

பொண்ணு லீவை d.m.g., டிஸ்னி சேனல் பாத்து எஞ்சாய்.. நம்ம பக்கம் வர்றதுக்கெல்லாம் மேடத்துக்கு நேரமில்லை அதனால அர்ச்சனையிலிருந்து தப்பிச்சேன் :-)))))

நான் யூத்துதான்னு ரொம்ப காலமா சொல்லிக்கிட்டிருக்கேன் வீட்டுல யாரும் ஒத்துக்க மாட்டேங்கிறாங்க, நீங்களாவது நம்புறீங்களே :-)))

நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க நசர்,

நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

வேற வழியில்லை :-))))))))))))

நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க பிரதாப்,

அது ஆதிகாலம் தொட்டே இருந்துவரும் பழக்கம். மீறினா சாமிகுத்தமாயிடும் :-)))))).

ட்விஸ்ட் நானும் எதிர்பார்த்தேன். இந்தப்பொண்ணு இப்படி சட்னு ஒத்துக்குவான்னு யாரு கண்டா :-)))))

நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க லிங்கேஷ்,

ஆஹா...ஜூப்பரு.. வாழ்த்துக்களுக்கும் முதல்வருகைக்கும் நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க தல,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க சித்ரா,

அப்டீங்கறீங்க... நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

நல்ல நடைங்க (உங்க கதைக்கு)!! படிக்கணும், அதுக்கு லவ் தடைன்னு சொன்னதும், அட, நல்ல முடிவாருக்கேன்னு நினைச்சா, படக்னு அந்தப் பொண்னு ட்ராக் மாறிடுச்சு!! நல்ல ட்விஸ்ட்!!

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான் :-)))))

நன்றிப்பா.

அப்பாவி தங்கமணி said...

சூப்பர் அம்மணி... கலக்கறீங்க... வாழ்த்துக்கள்...

(உங்களுக்கு ஒரு ஐடியா குடுக்கறேன்... //அவள் ஒன்றும் சொல்லாமல் தம்ளரிலிருந்து சிந்திய நீரில் விரலால் கோலமிட்டுக்கொண்டிருந்தாள்// இதோட முடிச்சு ஒரு "தொடரும்" போட்டு எல்லாரையும் டென்ஷன் பண்ணி இருந்தா இன்னும் சுவாரஸ்யமா இருந்து இருக்கும் இல்லையா....ஹி ஹி ஹி... பழக்க தோஷம் அப்படியே வந்துடுச்சு....திட்டாதீங்க...)

அமைதிச்சாரல் said...

வாங்க அப்பாவி,

சிறுகதைக்கெல்லாம் தொடரும் போட்டா புல்டோசரே தேடி வரும் :-))))

நன்றிப்பா.

LinkWithin

Related Posts with Thumbnails