Friday, 16 July 2010

குழந்தைகள் பலவிதம்..அந்த நீளமான கம்பியில் கைகளை கோர்த்துக்கொண்டு உடலையே ஊஞ்சலாக்கி ஆடிக்கொண்டிருந்தது அந்தக்குழந்தை. உற்சாகமிகுதியில் பாட்டு வேறு :-)).. வீசி வீசி ஆடும்போது, விலைமதிப்பில்லாத எதுவோ கிடைத்துவிட்ட சந்தோஷப்புன்னகை அதன் முகத்தில். நிம்மதி.. நிம்மதி என்று அலைபவர்கள் இந்தக்குழந்தையின் புன்னகையில் அதைக்கண்டுபிடிக்கலாம்.

ஆடிக்களைத்து விட்டதோ என்னவோ, 'தொப்' என்று கீழே குதித்தது. தவறி புல்வெளியில் விழுந்ததும் என்னவோ பெரிதாக அடிபட்டமாதிரி, 'ஆஆஆ' என்று பெரும் குரலெடுத்து கண்ணீர் வராமல் அழுதது. யாரும் கவனிக்கவில்லை என்றதும், தானே எழுந்து, இல்லாத மண்ணை தட்டிவிட்டுக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தது. ஒரு ஆள் உயரத்தில் நட்டு வைத்திருந்த, வரிசையாக இருந்த கம்பிகளில், டார்ஜான் போல் தன்னை நினைத்துக்கொண்டு, வினோதமான சப்தம் எழுப்பிக்கொண்டு அங்குமிங்கும் கைகளாலேயே பற்றிக்கொண்டு தொங்கியபடியே தாவியது. பக்கத்தில் தன்னுடைய வயதுள்ள குழந்தையும் இன்னொரு அங்கிளும் நிற்பதை பார்த்ததும் அதனுடைய விளையாடும் வேகம் அதிகமானது. 'நான் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறேன் பார்' என்று காண்பிப்பதுபோல் இருந்தது அதன் நடவடிக்கைகள். ஓரக்கண்ணால் அந்தக்குழந்தை இன்னும் அங்கேயே நிற்கிறதா.. இல்லை,.. ஆளில்லாத கடையில் டீ ஆத்துகிறோமா என்று உறுதிப்படுத்திக்கொண்டது அவ்வப்போது :-)

யாருமில்லாத தனிமையில் விளையாடும் குழந்தைகளை கவனித்திருக்கிறீர்களா?.. அதற்கு அதைச்சுற்றிலும் இருக்கும் எல்லாமே, விளையாட்டுப்பொருட்கள்தான். அது வீசும் காற்றாகவும் இருக்கலாம், தோட்டத்திலிருக்கும் செடியாகவும் இருக்கலாம், ஏன் வீட்டிலிருக்கும் பண்டபாத்திரங்களாகவே இருக்கலாம். தன்னுடனேயே பேசி, சிரித்து, சண்டைபோட்டு.. சமாதானமாகி என்று ஒரு காவியமே நடக்கும். யாரும் கவனித்துவிட்டால் ஒரு வெட்கப்புன்னகையுடன் பதுங்கி, மறுவினாடியே பழைய வேகத்துடன் பாய்வது நடக்கும் :-) நிமிடத்தில் சண்டையிட்டு, பின் அதே வேகத்தில் சமாதானமாகும் வித்தையை, எங்கிருந்துதான் கற்றுக்கொள்கிறார்களோ இந்த ஆசான்கள்!!!.

எங்கிருந்தோ வந்த அந்த சினிமாப்பாடல் அதற்கு பிடித்ததாக இருந்திருக்க வேண்டும்.. மெலிதான நடனத்துடன் அதன் உடல் அசைய ஆரம்பித்தது. தன்னையே அந்த கதாநாயகியாக நினைத்துக்கொண்டு, லேசாக ஆட ஆரம்பித்த குழந்தையின் கவனத்தை ஊஞ்சலும் அதில் வரைந்திருந்த யானைகளும் கவர்ந்தன. யானைகள் வானில் பறப்பதை இனிமேல் யாரும் பார்த்தால் அதிசயப்படவேண்டாம். அவற்றுக்கெல்லாம் விடுதலையையும், சிறகுகளையும் அந்த சிறுகுழந்தை அளித்துவிட்டது.

'டமடம' என்று அதிர்ந்த இடி அந்தக்குழந்தையை பயப்படுத்தி இருக்கக்கூடும். திடுக்கிட்டு கைகளை இறக்கைகளாக விரித்தபடி எழுந்து, அம்மாவைத்தேடியது. அடுத்தடுத்த இடிகள், ' அம்மா.. அம்மா..' என்று அலறின. புல்வெளியில் காணோம்.. பெஞ்சுகளில் காணோம்.. நடைபாதையில் கூட காணவில்லை. பார்க்கும் முகங்களில் எல்லாம் அம்மாவைத்தேடியது அந்தக்குழந்தை. 'நீ எங்கே போனே!!' தனிமை பயம் கொடுத்தது.. பலூன் விற்கும் மாமாவின் அருகே நின்ற ஒரு புடவையை நோக்கி ஓடிச்சென்று, அவள் முழங்காலைக்கட்டிக்கொண்டு சிரித்தது..

உலகத்திலேயே மிகவும் சிரமமானது டீச்சராக இருப்பதுதானாம்... நாலுவயசு மனிஷா சொல்கிறாள். மூன்று தலையணைகள், இரண்டு பாத்திரங்கள் மற்றும் எட்டுமாதமாகும் சார்மிஷாவுடன் ஆரம்பமாகும் அவளது வகுப்பில், யாருக்குமே a,b,c,d, சொல்லத்தெரியவில்லையாம்!!!. நாலுமாதமாக படித்தும்கூட, என்ன கேள்வி கேட்டாலும், 'ஈ..' என்று மட்டுமே சொல்லத்தெரிகிறதாம் சார்மிக்கு. 'அதைச்சொல்லும்போது வாய் ஏன் இந்தக்காதுக்கும் அந்தக்காதுக்குமாக விரிய வேண்டும்??' என்பது மனிஷாவின் கேள்வி..

'நான் போயி தண்ணி குடிச்சிட்டு வர்றேன்.. அதுவரை யாரும் அசையப்புடாது.. யாராவது எந்திரிச்சிப்போனா அடி' என்று எச்சரிக்கப்பட்டும், சார்மி அதை மீறுவதாக குற்றச்சாட்டு பெற்றோர்களுக்கு போயிருக்கிறது. அவளது மற்ற ஸ்டூடன்ஸ், ரூல்ஸை கொஞ்சமும் மீறுவதில்லை என்பதில் அவளுக்கு மகா பெருமை. யாரும் படிக்க இஷ்டப்படாமல் டீச்சரை ராகிங் பண்ணினால்,' உங்களுக்கு டீச்சரா இருக்கிறதை விட நான் ராஜினாமா செஞ்சுடலாம்'ன்னு சொல்லிட்டு கலர்டவல்களை சுருட்டி வைத்துக்கொண்டு, 'கனகாம்பரம்.. சம்பங்கி, ரோஜா.. பூவு.. பூவு' என்று, என் பெண் சின்னவயசில் செய்தது மாதிரியே, அவளும் பூவிற்கப்போய்விடுவதுண்டு :-))

குழந்தைகளின் விளையாட்டை கவனிப்பதென்பது, பால்யத்துக்கே திரும்பப்போய்விடுவதைப்போல் இருக்கிறது. நிபந்தனைகளற்ற மிகப்பிரியமான அன்பும், விட்டுக்கொடுத்தலும் நிறைந்த தனிஉலகத்தில் அவர்கள் வளையவருகிறார்கள். அது அப்படியே இருக்கவேண்டும்..
62 comments:

சந்தனமுல்லை said...

Juz Wonderful!! :-)

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆடிக்களைத்து விட்டதோ என்னவோ, 'தொப்' என்று கீழே குதித்தது. தவறி புல்வெளியில் விழுந்ததும் என்னவோ பெரிதாக அடிபட்டமாதிரி, 'ஆஆஆ' என்று பெரும் குரலெடுத்து கண்ணீர் வராமல் அழுதது. யாரும் கவனிக்கவில்லை என்றதும், தானே எழுந்து, இல்லாத மண்ணை தட்டிவிட்டுக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தது.//

எல்லா குழந்தைகளும் செய்றது நானும் நானும்...ஆள் இருந்திட்டா போச்சு கத்தி ஊரக்கூட்டிடும் பயபுள்ள..

ஒரு குழந்தையோட விளையாட்டு உலகத்தை நல்ல அவதானிப்போட கவனிச்சு எழுதியிருக்கீங்க..

சார்மிஷா வருங்கால டீச்சராயிடுவாங்க போல..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்களை கொள்ளை கொண்ட குழந்தை விளையாட்டை நீங்க சொன்னவிதம் எங்களை கொள்ளை கொண்டுவிட்டதுங்க சாரல்.. நன்றி..

LK said...

cutee

Balaji saravana said...

simply superb :)
i really enjoyed it...

வெங்கட் நாகராஜ் said...

Nice Post. Thanks for sharing the wonderful post.

ராமலக்ஷ்மி said...

ஆகா, அருமை. முத்துலெட்சுமி சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். நீங்கள் ரசித்ததை நாங்கள் ரசிக்கும் வண்ணம் தந்த விதம் கொள்ளை அழகே.

அம்பிகா said...

நல்ல ரசனையுடன் எழுதியிருக்கீங்க.\\குழந்தைகளின் விளையாட்டை கவனிப்பதென்பது, பால்யத்துக்கே திரும்பப்போய்விடுவதைப்போல் இருக்கிறது. நிபந்தனைகளற்ற மிகப்பிரியமான அன்பும், விட்டுக்கொடுத்தலும் நிறைந்த தனிஉலகத்தில் அவர்கள் வளையவருகிறார்கள். அது அப்படியே இருக்கவேண்டும்\\
எங்கள் பால்யத்தை எங்களுக்கு திருப்பி தந்ததுக்கு நன்றி

நாஞ்சில் பிரதாப் said...

அருமை குழந்தைகளை ரசித்துக்கொண்டே இருக்கலாம்

லதா ரஜினிகாந்தினி சின்னஞ்சிறு உலகம் படித்திருக்றீர்களா??

Anonymous said...

"குழந்தைகளின் விளையாட்டை கவனிப்பதென்பது, பால்யத்துக்கே திரும்பப்போய்விடுவதைப்போல் இருக்கிறது."

சரியா சொன்னிங்க நானும் திரும்பப்போய் வந்தேன் ...ரசித்தேன் ..

என் பையனும் இப்பிடி தனியா தான் விளையாடுவா .பார்க்காமல் இருந்தா என்னன்னம்மோ பேசுவா பார்த்தா அப்பிடி ஒரு வெக்கம் வரும் பாருங்க ஒ சொல்ல முடியலே ...

ஜெயந்தி said...

குழந்தைகளின் உலகம் சந்தோஷங்களால் மட்டுமே ஆனது. அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.

அமுதா said...

இரசிச்சு இரசனையோடு எழுதி இருக்கீங்க. அருமை

அமைதிச்சாரல் said...

வாங்க சந்தனமுல்லை,

நிச்சயம் நீங்கள் இதை ரசித்திருப்பீர்கள் :-))))

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வசந்த்,

அதென்னவோ யாரும் கவனிச்சாத்தான் கூடுதல் அழுகை வருது இந்தக்குழந்தைகளுக்கு:-)). சார்மி என்னவா வருவான்னு தெரியலை.. ஆனா, அவ அக்கா மனிஷா நிச்சயம் டீச்சரா வருவா :-))

வருகைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வசந்த்,

அதென்னவோ யாரும் கவனிச்சாத்தான் கூடுதல் அழுகை வருது இந்தக்குழந்தைகளுக்கு:-)). சார்மி என்னவா வருவான்னு தெரியலை.. ஆனா, அவ அக்கா மனிஷா நிச்சயம் டீச்சரா வருவா :-))

வருகைக்கு நன்றி.

கண்ணகி said...

அழகோ அழகு...உங்கள் வர்ணிப்பு..

வல்லிசிம்ஹன் said...

எப்படி லட்டு மாதிரி எழுதிட்டீங்க சாரல்.!! குழந்தைகளின் உலகத்துக்குள்ள சுலபமா நுழைஞ்சு எங்களுக்கும் கொடுத்திட்டிங்க. நிறைவா இருக்கு.

பத்மா said...

சாரல், உங்கள் வார்த்தை சாரலில் நனைந்தேன்
விவரித்த விதம் ஒரு குழந்தையாக என்னையும் அங்கே கொண்டு சென்று விட்டது ..
மிகவும் அருமை ..வாழ்த்துக்கள்

நசரேயன் said...

//ஆளில்லாத கடையில் டீ
ஆத்துகிறோமா//

ஆமா .. ஆமா

மாதவராஜ் said...

குழந்தைகள் என்றாலே அழகு. அற்புதம்.நல்ல பகிர்வுங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க முத்துலெட்சுமி,

அதுங்க விளையாடுறப்ப பாத்துக்கிட்டே இருக்கலாம்.. அவ்வளவு அழகு.

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க பாலாஜி சரவணா,

நன்றிப்பா.. வருகைக்கும் ரசிச்சதுக்கும்.

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க. லீவு முடிச்சுட்டு நிறைய படங்களோட வாங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க அம்பிகா,

நானும்கூட கொஞ்ச நேரம் என்னுடைய பால்யத்துக்கு போய்வந்தேன்..

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க நாஞ்சில்,

இங்கே வந்ததுக்கப்புறம் பொதுவா தமிழில் படிக்க எதுவும் கிடைக்கிறதில்லை. எப்பவாவது வார, மாதப்பத்திரிகைகள் கிடைக்கும். இதுல புத்தகங்களை நினைக்கக்கூட முடியாது. நீங்க சொல்ற புத்தகத்தை படிச்சதில்லை.. அடுத்ததடவை ஊருக்குப்போகும்போது கண்டிப்பா கிடைக்குதான்னு பார்ப்பேன்.

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க சந்தியா,

ஆமாம்ப்பா.. கவனிச்சிட்டா வர்ற வெக்கமும் ஒரு நிமிஷம்தான். அப்றம் மறுபடி விளையாட ஆரம்பிச்சுடுவாங்க.

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஜெயந்தி,

ஆமாங்க.. நமக்குக்கூட சிலசமயம் நாம குழந்தைப்பருவத்திலேயே இருந்திருக்கக்கூடாதான்னு தோணுதில்லையா :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க அமுதா,

உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோ அழகா இருக்குங்க..

முதல்வரவுக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

துளசி கோபால் said...

//உலகத்திலேயே மிகவும் சிரமமானது டீச்சராக இருப்பதுதானாம்... //

ரொம்பச்சரி. அந்த 'பிஞ்சு'க்குக்கூடத் தெரிஞ்சுருக்கு!!!!!

அஞ்சு வயசு வரைக்கும் குழந்தைகளின் கற்பனைக்கு எல்லையே இல்லை. பத்துவயசுவரை தேவதைகள்.

அதுக்கப்புறம்?

வெவ்வேறு அனுபவம்!!!!

நாடோடி said...

குழ‌ந்தைக‌ளின் உல‌க‌ம்.... விவ‌ரித்த‌ வித‌ம் அருமை..

மாதேவி said...

அருமை.அலாதியான உலகம்.

pinkyrose said...

சாரலில் நனைந்த அனுபவம்...

ஆனா இப்பல்லாம் இந்த சுதந்திரம் இல்லீங்க நெறைய பேருக்கு...

(:

அஹமது இர்ஷாத் said...

super Pic, Super Article.. Good..

மனோ சாமிநாதன் said...

இளந்தூறலில் அதன் சாரலில் நனைந்தது போலிருக்கிறது உங்கள் பதிவைப்படித்த பின்! குழந்தைகளின் உலகமும் அவர்களின் மென் சிரிப்பும் அசைவுகளும் புத்திசாலித்தனமும் மழலையும்-எல்லாமே அற்புதம்தான்! அருமையாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள் அமைதிச்சாரல்!!

அமைதிச்சாரல் said...

வாங்க கண்ணகி,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

நுழைய முடிஞ்சது.. ஆனா ஈஸியா வெளில வரமுடியலை. அங்கியே இருக்கலாம் போலிருக்கு :-))

நன்றிம்மா.

அமைதிச்சாரல் said...

வாங்க பத்மா,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க நசரேயன்,

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மாதவராஜ் அண்ணா,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க துளசியக்கா,

ஒரு டீச்சரின் கஷ்டம் இன்னொரு டீச்சருக்குத்தான் தெரிஞ்சிருக்கு :-)).

அதுவும் அவள் நெற்றியில் கை வைத்துக்கொண்டு போலியாக அலுத்துக்கொள்ளும்போது.. அடடா!!!

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க நாடோடி,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க பிங்கிரோஸ்,

எல்லாம் நாம பறிச்சிக்கிட்டதுதானே... திரும்ப கொடுத்தா சரியாயிடும் :-))

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க அஹமது,

நன்றி.

அப்பாவி தங்கமணி said...

So Cute...........

pinkyrose said...

பறிக்கவில்லை பறிகொடுத்து விட்டோம் மேடம்!

புதுகைத் தென்றல் said...

http://pudugaithendral.blogspot.com/2010/07/blog-post_21.html

தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன்

நானானி said...

சாரல்,
யானைகளுக்கு சிறகுகள் அளித்த சிறுமியின் வள்ளன்மை ரசிக்கக்கூடியது. மிகவும் ரசித்தேன்.

நானானி said...

குழந்தைகள் விளையாடுவதி தள்ளி நின்று அவர்களுக்குத் தெரியாமல் கவனிப்பதே சுவாரஸ்யம். அதை ஆழ்ந்து அனுபவித்து எங்களையும் அனுபவிக்க வைத்து எழுதியிருக்கிறீர்கள்!!

வாழ்த்துக்கள்!!!!!

ரிஷபன் said...

குழந்தைகளின் விளையாட்டை கவனிப்பதென்பது, பால்யத்துக்கே திரும்பப்போய்விடுவதைப்போல் இருக்கிறது.
நல்ல அப்சர்வேஷன்.. நல்லா இருக்கு

அமைதிச்சாரல் said...

வாங்க அப்பாவி,

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க பிங்கி,

ரெண்டும்தாம்ப்பா...

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

கடப்பாறை கூடிப்போச்சு.. அனேகமா இன்னிக்கே போட்டுடுவேன்..

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க நானானிம்மா,

ஆமாம்மா.. அந்த வயசிலேயே நின்னுடக்கூடாதான்னு இருக்கு :-)))

நன்றிம்மா..

அமைதிச்சாரல் said...

வாங்க ரிஷபன்,

நன்றிங்க.

Jaleela Kamal said...

குழந்தைகளின் விளையாட்டை கவனிப்பதென்பது, பால்யத்துக்கே திரும்பப்போய்விடுவதைப்போல் இருக்கிறது.
மிகச்சரியாக சொலி இருக்கீங்க

Jaleela Kamal said...

//ஆடிக்களைத்து விட்டதோ என்னவோ, 'தொப்' என்று கீழே குதித்தது. தவறி புல்வெளியில் விழுந்ததும் என்னவோ பெரிதாக அடிபட்டமாதிரி, 'ஆஆஆ' என்று பெரும் குரலெடுத்து கண்ணீர் வராமல் அழுதது. யாரும் கவனிக்கவில்லை என்றதும், தானே எழுந்து, இல்லாத மண்ணை தட்டிவிட்டுக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தது.//

இது எல்லா குழந்தைகளை யும் கவனிப்பேன், இது போல் செய்வதை,பார்துட்டு சிரித்து கொண்டே போவேன்

செந்தழல் ரவி said...

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

அமைதிச்சாரல் said...

வாங்க ஜலீலா,

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்..

நாம கவனிக்கிறதை அதுங்க பார்த்துட்டா, வருமே ஒரு சிரிப்பு அடடா :-))))))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க செந்தழல் ரவி,

தெரியப்படுத்தினதுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோ..

LinkWithin

Related Posts with Thumbnails