Friday, 27 August 2010

ப்ரெட் ஊத்தப்பம்ன்னே சொல்லலாம்...

சமையல் செய்யும்போது, மீதமாக்கி வீணாக்காம அளவா சமைக்கணும். நாட்டுல இப்போ விலைவாசி இருக்கிற நிலைமைல எந்த ஒரு பொருளையும் வீணாக்குறதே தேசத்துரோகம்தான். அதிலும், சாப்பாடு இல்லாம, எத்தனையோ பேர் கஷ்டப்படுறப்போ... உணவுப்பொருளை வீணாக்கலாமா??...அதுக்குத்தான் ஃப்ரிஜ் இருக்கே.. வெச்சிருந்து சூடாக்கி சாப்பிடலாமேங்கிறீங்களா!! ஒருதடவைக்கு மேல சாப்பாட்டை சூடாக்கினாலே, அதோட டேஸ்டும், பயனும் போயிடுது. திரும்பத்திரும்ப சூடாக்கப்படற உணவு கண்டிப்பா விஷத்துக்கு சமம்தான்.

அதுக்காக,..மிஞ்சிக்கிடக்குதேன்னு சாப்பிட்டு வைக்கமுடியுமா.. அது தேவையில்லாத உடல்பருமனைத்தான் கொண்டு வரும். ரெண்டே கரண்டி தோசைமாவு மிச்சம் வந்துடுச்சு,.. சாப்பிடவும் முடியல்லை, வீணாக்கவும் மனசு வரல்லையா!!! கவலையே வேண்டாம்,  ஊத்தப்பம் செய்யலாம். சாயந்திர டிபன் ரெடி..

தேவையானவை;

தோசைமாவு - 1 கப். (கூடுதலா இருந்தாலும் தப்பில்லை :-))
கடலைமாவு-1/2 கப்.
வறுத்த ரவை-2 டீஸ்பூன்.
நறுக்கின வெங்காயம்-1/2 கப்.
நறுக்கின கொத்தமல்லி இலை-ஒரு கைப்பிடி.
மிளகாய்த்தூள்(ருசிக்கேற்ப)-1 டீஸ்பூன் தாராளம்.
உப்பு- ருசிக்கேற்ப.
எண்ணெய்- தேவையான அளவு.
ப்ரெட்-6 ஸ்லைஸ்.
வெண்ணெய்- கொஞ்சூண்டு.

எப்படி சமைக்கிறது!!!

சின்ன வாணலி ஒண்ணை அடுப்பில் வெச்சு, ஒரு ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, வெங்காயத்தை, லேசா வதக்கி எடுத்துக்கோங்க.

ப்ரெட், வெண்ணெய், எண்ணெய் தவிர மிச்சமிருக்கிற பொருட்களை கலந்துக்கோங்க. உப்பு, உறைப்பு சரி பார்த்துக்கலாம்.
தோசைக்கல்லை அடுப்பில் வெச்சு சூடாக்குங்க.
ப்ரெட் ஸ்லைஸ்களின், ரெண்டு பக்கமும் லேசா வெண்ணெய் தடவி, தோசைக்கல்லில் வெச்சு, லேசா வாட்டி எடுத்துக்கோங்க. லேசா பொன்னிறம் வந்தாப்போதும். எல்லா ஸ்லைசுகளையும் இப்படியே தயார் செஞ்சு எடுத்துக்கோங்க.

இப்போ ஒரு ஸ்லைசை தவாவில் வெச்சு அதுமேலே, மாவுக்கலவையை கொஞ்சூண்டு ஊத்தி நல்லா பரத்தி விடுங்க. அப்புறம், அதை திருப்பிப்போட்டு, மறுபக்கத்திலும் மாவுக்கலவையை பூசிவிடுங்க. இப்ப,.. ஸ்லைசை சுத்தி கொஞ்சூண்டு எண்ணெய் விடுங்க. நார்மலா தோசைக்கு ஊத்துவோமில்லையா!! அதுமாதிரி போதும்.

இப்ப... மூடிபோட்டு வேகவிடுங்க. தீ நிதானமா எரியட்டும்.. ஒண்ணும் அவசரமில்லை.

லேசா பஜ்ஜிவாசனை வந்ததும், ஸ்லைசை திருப்பிப்போடுங்க. மறுபடியும் எண்ணையை ஊத்தி, மூடிவிட்டு வேகவிடுங்க. ரெண்டு பக்கமும் நல்லா வேகணும். கொஞ்சம் பொன்னிறமாக்கூட சமைச்சுக்கலாம். கடலைமாவும், வெங்காயமும் சேர்ந்து லேசா பஜ்ஜி வாசனை வரும். ஆஹா!!.. சர்ர்ர்ரியான பதம்.

சும்மா அப்படியே வெச்சு பரிமாறிடக்கூடாது.. ஒவ்வொரு ஸ்லைசையும், கத்தியால குறுக்கு நெடுக்கா துண்டு போட்டு அழகா பரிமாறணும். இங்கே அப்படி இல்லையேன்னு கேக்குறீங்களா!!!. கடிச்சுத்தானே சாப்பிடப்போறோம்ன்னு அப்படியே வெச்சுட்டேன். ஹி..ஹி..ஹி. அடை, பெசரட்டுகளுக்கான மாவு மிஞ்சிடுத்துன்னா இன்னும் வசதி. அப்படியே ப்ரெட்டுல தடவி சுட்டெடுத்துடலாம். தேவையான எல்லாம்தான் ஏற்கனவே அதுல இருக்கே..... ஒரே மாவுல ரெண்டு டிபன் :-)))))) எப்பூடி..........

46 comments:

LK said...

dhooolll

சசிகுமார் said...

கலக்கல் நண்பா

வெங்கட் நாகராஜ் said...

எப்படிங்க! இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க! பார்க்கும்போது சாப்பிடலாம்னு தோணுது! வீட்டுல அம்மிணிகிட்ட சொல்லிட வேண்டியதுதான்! :)

வெங்கட்.

வெறும்பய said...

கலக்கல்.. தூள்.. சூப்பர்..

கோவை2தில்லி said...

பார்க்கவே ஆசையா இருக்கு. அனுப்பி வெச்சுடுங்க.

Vidhoosh said...

மிஞ்சிப் போனது ஒரு வேளை ஸ்வீட் வைட் பிரட் ஆக இருந்தா சுவை ரொம்ப அசட்டு தித்திப்பா திராபையா இருக்குமே.. அதுக்கு ரெண்டு பச்ச மிளகாய கடிச்சுக்கலாமா.. :))

jokes apart, nice recipe.

ராமலக்ஷ்மி said...

அருமை:)! வித்தியாசமா இருக்கு.

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

ப்ரெட் ஊத்த‌ப்ப‌ம்.பெய‌ரே ந‌ல்லாயிருக்கு.
முடிந்தால் ந‌ம்ம‌ த‌ள‌த்துக்கும் கொஞ்ச‌ம் வ‌ந்துட்டுப் போங்க‌.
வாழ்த்துக்க‌ள்
http://libastrichy.blogspot.com

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

ப்ரெட் ஊத்த‌ப்ப‌ம்.பெய‌ரே ந‌ல்லாயிருக்கு.
முடிந்தால் ந‌ம்ம‌ த‌ள‌த்துக்கும் கொஞ்ச‌ம் வ‌ந்துட்டுப் போங்க‌.
வாழ்த்துக்க‌ள்
http://libastrichy.blogspot.com

அப்பாவி தங்கமணி said...

//எப்படி சமைக்கிறது!!!//
இதானே பிரச்சனை... ஹி ஹி ஹி

வாவ்... சூப்பர் ஐடியாவா இருக்கே... இதை வெச்சே ஒரு நாள் ஓட்டிடலாம்... பட் ரங்க்ஸ்கிட்ட நானே யோசிச்சு புது recipe கண்டுபிடிச்சேன்னு டூப் விட போறேனே... இது இன்னும் சூப்பர் ஐடியா இல்ல... ஹி ஹி ஹி... (அமைதி அக்கா திட்டாதீங்க... )

Chitra said...

அப்படியே ப்ரெட்டுல தடவி சுட்டெடுத்துடலாம். தேவையான எல்லாம்தான் ஏற்கனவே அதுல இருக்கே..... ஒரே மாவுல ரெண்டு டிபன் :-)))))) எப்பூடி..........


...... Super!!!

Anonymous said...

பார்க்கவே சூப்பர் ஆ இருக்கு அப்போ சாப்பிட சூப்பர் ஒ சூப்பர் ..எனக்கும் ஒரு பார்சல் ..நன்றி

துளசி கோபால் said...

மீந்துபோகும் ப்ரெட் ஊத்தப்பத்தை வேற என்னவா மாத்தலாமுன்னு சொல்லுங்க:-))))

நாஞ்சில் பிரதாப் said...

//இப்போ விலைவாசி இருக்கிற நிலைமைல எந்த ஒரு பொருளையும் வீணாக்குறதே தேசத்துரோகம்தான். //

அட அட அட... உங்க தேசப்பத்து ச்சே பற்று புல்லரிக்க வைக்குது...

அப்ப உங்கவீட்டுக்கு விருந்தாளியா வந்தா இதுமாதிரித்தான் ஏதாச்சும் சாப்பிட தருவீங்க போல... நாங்க வரலை...:)

நசரேயன் said...

அணிப்பு வையுங்க எனக்கு

வடுவூர் குமார் said...

செய்து பார்த்திட வேன்டியது தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சூப்பரா இருக்கே.. :)

மனோ சாமிநாதன் said...

பிரெட் ஊத்தப்பம் அருமை! ஏற்கனவே செய்வதுதான் இருந்தாலும் கடலை மாவு, ரவா என்று சேர்ப்பது வித்தியாசமாக இருந்தது. செய்து பார்த்து விட வேண்டியதுதான்!
சொல்லும் முறை இன்னும் பிரமாதம்!!

ஜெய்லானி said...

//. ஒரே மாவுல ரெண்டு டிபன் :-)))))) எப்பூடி..........//

இன்னும் என்னென்னெ ஐடியா இருக்குன்னு சொல்லிடுங்க .. அப்புறம் வீட்டுக்கு வரும் போது பார்ஸல் வெளியிலிருந்து நாங்களே கொண்டு வந்துடுவோம்..

:-))))))..

நல்லாதான் தெரியுது..:-)

பத்மா said...

yummmyyyyyyyyy

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

பிரெட் ஊத்தப்பம்..சூப்பர்....

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

புதுவீடு குடிபுகுந்தாச்சா....

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க சசிகுமார்,

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

இப்படி ஏதாவது மாத்திச்செஞ்சா, சாப்டுறவங்களுக்கும் போரடிக்காது, அதான் :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வெறும்பய,

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க கோவை2தில்லி,

அனுப்பியாச்சு :-))))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க விதூஷ்,

எந்த ப்ரெட்டா இருந்தாலும் காரத்தை அட்ஜஸ்ட் செஞ்சு போடுங்க. அசட்டு தித்திப்பா வராது :-)))))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க விதூஷ்,

எந்த ப்ரெட்டா இருந்தாலும் காரத்தை அட்ஜஸ்ட் செஞ்சு போடுங்க. அசட்டு தித்திப்பா வராது :-)))))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க செஃப்,

நம்ம தளத்துக்கு வந்ததுக்கு நன்றி. உங்க தளத்துக்கு சீக்கிரமே வரேன்.

கோமதி அரசு said...

ப்ரெட் ஊத்தப்பம் ரொம்ப நல்லா இருக்கும் போல இருக்கே !

செய்து பார்த்து விடுகிறேன்.

அமைதிச்சாரல் said...

வாங்க அப்பாவி,

செம சூப்பர் ஐடியா..வை, சுட்டுக்கோங்க :-)))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க சித்ரா,

நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க சந்தியா,

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க துளசியக்கா,

மீந்து போகாது.. டேஸ்ட் அப்படி :-))))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க நாஞ்சில்,

நல்லாவே சமைப்பேன்.. பயப்படாதீங்க :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க நசரேயன்,

வந்துட்டே இருக்கு :-)

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வடுவூர் குமார்,

கண்டிப்பா செஞ்சு பாருங்க.

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க முத்துலெட்சுமி,

நன்றிங்க. முக்கியமா குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்துவிடலாம். அப்படி ஒரு பொழுதில்தான் இது உருவானது :-))

அமைதிச்சாரல் said...

வாங்க மனோ சாமிநாதன்,

கடலைமாவு சேர்ப்பது இன்னும் கொஞ்சம் வாசனையா இருக்கும். அதான் :-)))

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஜெய்லானி,

நாங்கல்லாம் என்னத்த ஐடியா செஞ்சாலும், நீங்க செஞ்ச சுடுதண்ணியோட டேஸ்ட்டுக்கு பக்கத்துல கூட வரமுடியாது :-)))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க பத்மா,

நன்றிங்க :-))))

அமைதிச்சாரல் said...

வாங்க ஆர்.ஆர்.ஆர்,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க கோமதி அரசு,

செஞ்சு, டேஸ்ட் பாத்துட்டு சொல்லுங்க :-)))

நன்றி.

நானானி said...

சூ...ப்பர்!!

இன்றே...இன்னே...செஞ்சிடலாம், மழை நேரத்துக்கேத்த டிபன், ரங்ஸ் வேறே வூட்டிலே இருக்காரு, ஆபீஸ் லீவு. நேரம் நல்ல நேரம்.

//மீந்துபோகும் ப்ரெட் ஊத்தப்பத்தை வேற என்னவா மாத்தலாமுன்னு சொல்லுங்க:-))))//

இதான் துள்சி.....!!!???

அமைதிச்சாரல் said...

வாங்க நானானிம்மா,

ஒண்ணே ஒண்ணு செஞ்சு, மறுபாதியை சரிபாதிகூட பகிர்ந்துக்கோங்க... மிச்சமே வராது :-)))))))

நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails