Tuesday, 20 November 2012

கடைசித் துருப்புச்சீட்டு..

  • புகழை ஏற்றுக்கொள்ள முன் வருவதைப்போன்றே அதற்கான தனது கடமையையும் பொறுப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  • எந்த விதப் போலித்தனமுமின்றி நாம் நாமாக இருக்க முடிவது உண்மையான நட்புகள் மற்றும் உறவுகளின் முன் மட்டுமே.

  • நேற்றைய சரித்திரங்களைப்பற்றியே எப்போதும் மலைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்றைய சரித்திரத்தின் ஒரு துளியாக நாளைய சரித்திரத்தில் பேசப்படப்போவதை அறியாமலே.

  • உதிர்ந்த இலையொன்று வியந்து கொண்டிருக்கிறது மரத்தின் பிரம்மாண்டத்தினைக்கண்டு. அதன் ஒரு பகுதியாகத் தானும் இருந்ததை அறியுமுன் அடித்துச் செல்கிறது காற்று.

  • எல்லாமே அற்புதங்களாகவும் அர்த்தமற்றும் ஒரே நேரத்தில் தெரியும் வாழ்க்கையை அதிகம் ஆராயாமல் அதன் போக்கில் விடுவதே அர்த்தப்படுத்திக் கொள்வதற்கான முதல் முயற்சி.

  • நம்பிக்கையே உணவாய், நற்செயல்களே நிழலாய், அறிவே பகலொளியாய், மனதின் வழிகாட்டல்களே இருளின் வழித்தடமாய்க் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கைப்பயணம்.

  • ஜெயித்து விட்ட நிம்மதியுடன் நிமிர்ந்து அமரும்போதுதான் கடைசித்துருப்புச் சீட்டை இறக்குகிறது விதியென்று சொல்லப்படும் ஒன்று.

  • பறவைக்குஞ்சின் திறந்த அலகினுள் வந்து விழும் உணவாய்ச் சில வெற்றிகள் தாமாகவே வாய்த்து விடுகின்றன, பிறர் உழைப்பை விழுங்கிக்கொண்டு.

  • வெற்றி பெற உழைப்பதை விட,தோற்று இருப்பைத் தொலைத்து விடாமலிருக்க அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது.

  • எதிர்பார்த்த சம்பவங்களாயினும் எதிர்பாரா சந்தர்ப்பங்களில் நிகழ்ந்து விடும்போது ஒரு சிறிய பரபரப்பு அலை பரவித்தணிகிறது.

27 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

அனைத்துக் கருத்துகளும் அருமை..

அதிலும்..

வெற்றி பெற உழைப்பதை விட,தோற்று இருப்பைத் தொலைத்து விடாமலிருக்க அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது.

மிக நன்று.

ஸ்ரீராம். said...

எல்லாமே அருமை. புகைப்படம் உட்பட! குறிப்பாக நாலாவதும் ஐந்தாவதும்.

அமுதா கிருஷ்ணா said...

கருத்துக்கள் நன்று.

கோவை2தில்லி said...

எல்லாமே அருமையான கருத்துகள். புகைபடம் அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை...

நன்றி...
tm3

Lakshmi said...

எல்லா கருத்துக்களுமே நல்லா இருக்கு.

ஹேமா said...

எல்லாமே வாழ்வியல் சொல்லுது.படம் நேரில கண்ணைக் கொத்துது சாரல் !

மகேந்திரன் said...

நெஞ்சில் உரமேற்றிக் கொள்ளவேண்டிய
பொன்மொழிகள்....

வல்லிசிம்ஹன் said...

எனக்கு மிகவும் பிடித்தது நேற்றைய சரித்திரம்,இன்றைய சரித்திரம்.
பழமையைப் பேசி இன்றைய சிறப்புகளைத் தொலைத்துவிடுகிறோமோ என்று நினைப்பதுண்டு.
மிக நன்றி சாரல்.

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் அருமை. நான்காவது கவிதை.

ஃப்ளிக்கரில் ஒற்றைக் காலைத் தூக்கிநின்ற மைனாவின் ப்ரொஃபைல் படமா? துல்லியம். வாழ்த்துகள்!

மாதேவி said...

அனைத்துக் கருத்துக்களும் நன்றாக இருக்கின்றது.

அமைதிச்சாரல் said...

வாங்க குணசீலன்,

ரசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்ரீராம்,

ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க அமுதா,

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆதி,

ரசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க தனபாலன்,

ரொம்ப நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க லக்ஷ்மிம்மா,

ரொம்ப நன்றிம்மா வாசிச்சதுக்கு.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹேமா,

ஆஹா!!.. மைனாவையும் ரசிச்சதுக்கு நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க மகேந்திரன்,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு.

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

நீங்க சொன்னதும் ரொம்பச்சரி :-)

வாசிச்சதுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

அவங்களேதான்,. அன்னிக்கு என்னவோ போஸ் கொடுக்கற மூட்ல இருந்தாங்க போலிருக்கு. ஆளைக்கண்டதும் பறந்து போயிராம கொஞ்ச நேரம் உக்காந்துருந்தாங்க :-)

வாசிச்சதுக்கு நன்றி.

மோகன்ஜி said...

நச்சென்று மனதில் பதியும் கருத்துக்கள் .

நாலைந்து முத்துக்களை மனசு அசைபோடும் சில நாள்.. இப்படி நிறைய எழுதுங்களேன்..

அமைதிச்சாரல் said...

வாங்க மோகன்ஜி,

ஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி. நிச்சயமா தொடர்ந்து எழுதுவேன்.

வரவுக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.

rishi said...

அனைத்து சாதுக்களுமே வியக்க வைக்கின்றன சகோதரி. வாழ்க வளமுடன் !

புதுகைத் தென்றல் said...

மறந்துவிடக்கூடாத விஷயங்கள்

அமைதிச்சாரல் said...

வாங்க ரிஷி,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

வாசித்தமைக்கு மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails